இந்த ஆண்டின் முதல் விண்வெளி திட்டத்தை பிப்ரவரி 14-ஆம் தேதி அன்று நடைமுறைப் படுத்தியது இஸ்ரோ. ஊஞந-04 என்று பெயரிடப் பட்ட புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் மற்றும் இரண்டு சிறிய ரக செயற்கைக்கோள்கள் பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. இது இஸ்ரோவின் 54-வது பி.எஸ்.எல்.வி. ராக்கெட் பயணம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏவுகலங்களும் செயற்கைக்கோள்களும் செயற்கைக்கோள்கள் தானாகவே விண்வெளிக்கு செல்வதில்லை. பிஎஸ்எல்வி போன்ற ஏவுகணைகள் அல்லது ராக்கெட்டுகள் மூலம் அவற்றை அங்கு கொண்டு செல்ல வேண்டும். ராக்கெட்டுகள் சக்திவாய்ந்த உந்துவிசை அமைப்புகளைக் கொண்டுள்ளன, அவை பூமியின் ஈர்ப்பு விசையை முறியடித்து, செயற்கைக்கோள்கள் போன்ற கனமான பொருட்களை விண்வெளிக்கு அனுப்ப தேவையான அதிக அளவிலான ஆற்றலை உருவாக்குகின்றன.
பேலோடுகள் என்று அழைக்கப்படும் செயற்கைக் கோள்கள் ராக்கெட்டில் வைக்கப்பட்டு, அதனுடைய இலக்காக நிர்ணயிக்கப்படும் சுற்றுவட்டப்பாதை அல்லது பகுதியை அடைந்தவுடன் அவைகள் ராக்கெட்டில் இருந்து வெளியேற்றப் படுகின்றன. பெரும்பாலான செயற்கைக் கோள்கள் சிறிய அளவிலான உந்துவிசை அமைப்புகளையும், அதனை இயக்கு வதற்கு தேவையான எரிபொருள் களையும் கொண்டுள்ளன. ஏனெனில் அவை விண்வெளியில் மிகக் குறைந்த இழுவை அல்லது சக்தியை எதிர்கொள்கின்றன.
ராக்கெட்டுகள் மற்றும் செயற்கைக்கோள்கள் இரண்டுமே விண்கலங்களாகும். விண்வெளிக்கு செல்லும் எந்த பொருட்களையுமே விண்கலம் என்ற பொதுப்பெயரில் தான் அழைக்கின்றோம்.
செயற்கைக்கோள்கள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட, அறிவியல் ஆராய்ச்சி செய்யும் கருவிகளை கொண்டு செல்கின்றன.
அவைகளின் வாழ்நாள் என்பது சில தசாப்தங்களாக நீடிக்கும். ஆனால் ஏவுகலங்கள் அல்லது ராக்கெட்டுகள் விண்ணில் ஏவப்பட்டவுடன் அதன் பயன்பாடு முடிவுக்கு வந்துவிடுகிறது. தேர்வு செய்யப்பட்ட சுற்றுவட்டாரப் பாதையில் செயற்கைக்கோள்களை நிலை நிறுத்துவது மட்டுமே அதன் பணியாகும்.
ராக்கெட்டுகள் பல பிரிக்கக் கூடிய, ஆற்றலை வழங்கக் கூடிய உதிரி பாகங்களைக் கொண்டவை. அவை ராக்கெட்டுகளுக்கு தேவையான எரிசக்தியை வழங்க மாறுபட்ட எரிபொருள்களை எரிக்கின்றன. எரிபொருள்கள் தீர்ந்தவுடன் அவை தானாகவே ராக்கெட்டில் இருந்து பிரிந்து கீழே விழுந்துவிடுகின்றன. பல நேரங்களில் விண்வெளியில் ஏற்படும் காற்று – உராய்வு காரணமாக எரிந்து சாம்பலாகிவிடுகிறது.
முழுமையான ராக்கெட்டிற்கு பதிலாக, ராக்கெட்டின்

முழுமையான ராக்கெட்டிற்கு பதிலாக, ராக்கெட்டின் குறிப்பிட்ட பாகம் மட்டுமே இறுதி செய்யப்பட்ட இலக்கு வரை செயற்கைக்கோளை எடுத்துச் செல்லும். செயற்கைக்கோள் விண்ணில் நிறுவப்பட்டவுடன் இந்த கடைசி பகுதியும் விண்ணில் குப்பையாக மாறிவிடும் அல்லது எரிந்து சாம்பலாகிவிடும்.
ஏவுகலங்களின் வகைகள்
பல்வேறு வகையான ராக்கெட்டுகள் இஸ்ரோவில் பயன்படுத்தப்படுகின்றன. உருவாக்கப்படும் சக்தி, எடுத்துச் செல்லும் எடை மற்றும் அது பயணிக்கும் தூரம் ஆகியவற்றின் அடிப்படையில் ராக்கெட்டுகள் மாறுபடுகின்றன.
இவை அனைத்தும் உருவாக்கப்படும் ஆற்றலுக்குக் கீழே வருகின்றன, இது எஞ்சின் மற்றும் எரிபொருள் எவ்வளவு திறமையானது என்பதை குறிக்கிறது.
சில செயற்கைக்கோள்கள் குறைந்த சுற்றுப் பாதையில் நிலைநிறுத்தப்பட வேண்டியவை.
அவை புவியின் மேற்பரப்பில் இருந்து 180 கி.மீ முதல் 2000 கி.மீ வரை இருக்கும் விண்வெளி பகுதியாகும். இங்கே தான் பெரும்பான்மையான புவி கண்காணிப்பு செயற்கைக்கோள்கள், தொலைத் தொடர்பு செயற்கைக்கோள்கள், சர்வதேச விண்வெளி மையம், விண்வெளி வீரர்களை உள்ளடக்கிய விண்வெளியில் உள்ள ஒரு முழு அளவிலான ஆய்வகமும் கூட இந்த பகுதியில் தான் அமைக்கப்பட்டுள்ளது.
குறைந்த சுற்றுப்பாதைக்கு செயற்கைக் கோள்களை எடுத்துச் செல்ல குறைந்த அளவிலான எரிசக்தியே தேவைப்படுகிறது. இதற்கு சிறிய அளவிலான, குறைந்த எரிசக்தி அம்சங்களைக் கொண்ட ராக்கெட்டுகள் இதற்காக பயன்படுத்தப்படுகின்றன.
சில செயற்கைக்கோள்கள் வெகு தூரம் பயணிக்கக் கூடியவை. புவிசார் செயற்கைக் கோள்கள் (ஏங்ர்ள்ற்ஹற்ண்ர்ய்ஹழ்ஹ் ள்ஹற்ங்ப்ப்ண்ற்ங்ள்) இதில் முக்கியமானவை ஆகும். இவை புவியின் மேற்பரப்பில் இருந்து தோராயமாக 36 ஆயிரம் கி.மீக்கு அப்பால் நிறுத்தப்படுகிறது. விண்ணில் கோள்களை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்படும் ராக்கெட்டுகளும் மிக அதிக தூரம் செல்லும் திறன் கொண்டவையாக இருக்க வேண்டும். இதற்கு மிகவும் சக்தி வாய்ந்த ராக்கெட்டுகளை விண்ணில் ஏவ பயன்படுத்துகின்றனர்.
பொதுவாக செயற்கைக்கோளின் எடை மற்றும் அது பயணிக்க வேண்டிய தூரத்திற்கு இடையே ஒரு தொடர்பு உள்ளது. பெரிய செயற்கைக் கோள்களுடன் ஒப்பிடுகையில் சிறிய செயற்கைக் கோள்களை அதிக தூரத்திற்கு ராக்கெட்டுகள் எடுத்துச் செல்கின்றன.
இஸ்ரோ பயன்படுத்தும் ஏவுகலங்கள் இஸ்ரோ தற்போது இரண்டு வகையான பி.எஸ்.எல்.வி. மற்றும் ஜி.எஸ்.எல்.வி. ஏவுகலங் களை பயன்படுத்துகின்றது. ஆனால் அதில் பல்வேறு வகைகள் உள்ளன. இஸ்ரோவால் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஏவுகலம் என்பது பி.எஸ்.எல்.வி தான். இதுவரை அனுப்பப்பட்ட 54 ராக்கெட்டுகளில் 52 வெற்றி பெற்றுள்ளது. ஜி.எஸ்.எல்.வி என்பது மிகவும் சக்தி வாய்ந்த ராக்கெட் ஆகும். அதிக எடை கொண்ட செயற்கைக்கோள்களை நீண்ட தூரத்திற்கு எடுத்துச் செல்ல இவை பயன்படுத்தப் படுகிறது. இன்று வரை 18 ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகள் விண்ணில் ஏவப்பட்டன.
அவற்றில் 4 தோல்வி அடைந்துள்ளது.
முதன்முறையாக இஸ்ரோவால் உருவாக்கப் பட்ட ராக்கெட்டுகள் எஸ்.எல்.வி என்று அழைக்கப் பட்டன. அதன் பிறகு ஆகுமெண்ட்டட் சேட்டிலைட் லாஞ்ச் வேக்கில் அல்லது எ.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகள் உருவாக்கப்பட்டது. இவை இரண்டும் 150 கிலோ எடை கொண்ட சிறிய ரக செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவ பயன்படுத்தப்பட்டன. பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகள் பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்பு வரை 1990 வரை ஏ.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகள் பயன்படுத்தப்பட்டன. 1994-ஆம் ஆண்டு முதன்முறையாக பி.எஸ்.எல்.வி. ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. இன்று வரை இந்த ராக்கெட் இஸ்ரோவில் பிரதானமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இன்றைய பிஎஸ்எல்வி, 1990-களில் பயன்படுத்தப்பட்டதை விட மிகவும் மேம்பட்டது மற்றும் பல மடங்கு சக்தி வாய்ந்தது.
ஜி.எஸ்.எல்.வி. சந்திராயன் 2 மிஷனுக்கு பயன்படுத்தப்பட்டது. ககன்யான் திட்டத்திற்கும் இது பயன்படுத்தப்பட உள்ளது. எம்.கே. 3 வகை ஏவுகலங்கள் 4000 கிலோ எடை கொண்ட செயற்கைக்கோள்களை ஜியோசின்க்ரனஸ் சுற்றுப்பாதை வரை எடுத்துச் செல்கிறது. இது புவியின் மேற்பரப்பில் இருந்து 36 ஆயிரம் கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. அதே நேரத்தில் குறைந்த சுற்றுப்பாதையில் 10 ஆயிரம் கிலோ எடை கொண்ட செயற்கைக்கோள்களையும் இதனால் எடுத்துச் செல்ல இயலும். எம்.கே. 3 வகை இந்தியாவை செயற்கைக்கோள் ஏவும் தளத்தில் தன்னிறைவு அடைய வைத்துள்ளது. இதற்கு முன்பு ஐரோப்பாவின் ஏரியன் ஏவுகணை வாகனத்தையே சார்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சிறிய மற்றும் நுண் செயற்கைக்கோள் களுக்கான ஏவுகணை வாகனத்தையும் இஸ்ரோ உருவாக்கியுள்ளது. இது Small Satellite Launch Vehicle, அல்லது எஸ்.எஸ்.எல்.வி. என அழைக்கப்படுகிறது, மேலும் இதுபோன்ற செயற்கைக்கோள்களை ஏவுவதற்கான உலகளாவிய தேவையை இலக்காகக் கொண்டு உருவாக்கப்பட்டது. எஸ்.எஸ்.எல்.வி. என்பது 500 கிலோ எடையுள்ள செயற்கைக்கோள்களை. குறைந்த செலவில் செலுத்த ஏவுதள சேவைகளை வழங்குகிறது. அடுத்த மாதம் முதல் எஸ்.எஸ்.எல்.வி. ஏவப்பட உள்ளது. இது உள்நாட்டு புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் EOS-03-ஐ விண்வெளிக்கு எடுத்துச் செல்ல பயன்படுத்தப்பட உள்ளது.
மீண்டும் பயன்படுத்தப்படும் ஏவுகலங்கள்
வருங்காலத்தில் பயன்படுத்தப்பட உள்ள ராக்கெட்டுகள் மீண்டும் பயன்படுத்தப்பட கூடியவையாக இருக்கும். இலக்கை நோக்கி பயணிக்கும் போது ஒரு சிறிய பகுதி மட்டுமே ராக்கெட்டில் இருந்து பிரிந்து செல்லும். இதர பாகங்கள் முழுமையாக புவியின் வளிமண்டலத்திற்குள் நுழைந்து, விமானம் போன்றே தரையிறங்கும். இத்தகைய விமானங்கள் செலவீனம், சக்தி மற்றும் விண்ணில் சேகராமாகும் குப்பைகளின் அளவையும் குறைக்கிறது.
முழுமையாக மீண்டும் பயன்படுத்தப்படும் வகையிலான ராக்கெட்டுகள் உருவாக்கும் பணி இன்னும் ஆரம்பமாகவில்லை. ஆனால் பாதி மட்டும் மீண்டும் பயன்படுத்தப்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இஸ்ரோவும் ஆர்.எல்.வி –
டி.டி. என்ற ராக்கெட்டை உருவாக்கி அதனை 2016–ஆம் ஆண்டில் சோதனை செய்து வெற்றியும் பெற்றது.
செயற்கைக்கோள் ஏவுகணை
இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் புதிய தலைவர் டாக்டர் எஸ். சோமநாத், விண்வெளித்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங்கை சந்தித்து பேசினார்.
அப்போது, சிறிய செயற்கைக்கோள் ஏவுகணை வாகனம் (எஸ்எஸ்எல்வி) எனப்படும் இஸ்ரோவின் உள்நாட்டு புதிய ஏவுகணைகள் லான்ச் தாமாதமாகிவிட்டது. ஏப்ரல் 2022-இல் எஸ்எஸ்எல்வி-டி1 மைக்ரோ சாட் லான்ச் இருக்கும் என குறிப்பிட்டதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
அண்மை காலமாக வளரும் நாடுகள், தனியார் நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங் களிடையே ஏற்பட்டிருக்கும் சிறிய செயற்கைக்கோள் தேவைக்காக, குறைந்த புவி சுற்றுப்பாதையில் செலுத்தப்படும் சிறிய செயற்கைக்கோள்கள் தான் எஸ்எஸ்எல்வி-இன் நோக்கமாகும்.
சிறிய செயற்கைக்கோள்களின் ஏவுதலானது, பெரிய செயற்கைக்கோள்களுக்கான ஏவுகணை ஒப்பந்தங்களை இஸ்ரோ இறுதி செய்வதை குறித்து சார்ந்துள்ளது.
2018-ஆம் ஆண்டு முதல் திருவனந்தபுரத் தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குநராக இருந்த சோமநாத் தான், SSLV-யின் வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டிற்கு முழு காரணம் ஆகும். எஸ்எஸ்எல்வியின் முதல் லான்ச் ஜூலை 2019-இல் திட்டமிடப்பட்டது. ஆனால், கொரோனா பெருந்தோற்று மற்றும் பிற சிக்கல்கள் காரணமாக, ஏவுகணை லான்ச் தள்ளிவைக்கப்பட்டது.
எஸ்எஸ்எல்வி 500 கிலோ எடையுள்ள செயற்கைக்கோள்களை குறைந்த புவி சுற்றுப்பாதைக்கு கொண்டு செல்ல முடியும். அதே நேரத்தில் பிஎஸ்எல்வியின் சோதனை முயற்சியில் 1000 கிலோ எடையுள்ள செயற்கைக்கோள்களை ஏவ முடிந்தது.
முன்னாள் இஸ்ரோ தலைவர் கே.சிவன் 2019-இல் இஸ்ரோ தலைமையகத்தில் வருடாந்திர செய்தியாளர் சந்திப்பில் பேசியதாவது, “இஸ்ரோவில் 110 டன் எடை கொண்ட மிகச்சிறிய வாகனம் எஸ்எஸ்எல்வி. மற்ற வாகனங்கள் ஒருங்கிணைக்க 70 நாள்கள் ஆகும் நிலையில், எஸ்எஸ்எல்விக்கு வெறும் 72 மணி நேரம் மட்டுமே ஒருங்கிணைக்க தேவைப்படும். இந்த பணியை 60 பேருக்குப் பதிலாக ஆறு பேர் மட்டுமே செய்ய வேண்டும்.
மிகக் குறுகிய காலத்தில் முழுப் பணியும் முடிவடையும். இதன் மொத்த செலவு ரூ. 30 கோடி மட்டுமே. இது, எதிர்காலத்தில் மிகவும் தேவையான வாகனமாக மாறக் கூடும்.
தேசிய தேவையை மட்டும் பூர்த்தி செய்ய ஒவ்வொரு ஆண்டும் சுமார் 15 முதல் 20 எஸ்எஸ்எல்விகள் தேவைப்படும்” என்றார்.
2019-ஆம் ஆண்டிலேயே US விண்வெளி ஏவுதள சேவைகளின் இடைத்தரகர் Spaceflight Inc. இடமிருந்து வணிகரீதி யான முன்பதிவைப் எஸ்எஸ்எல்வி பெற்றது. SSLV ராக்கெட்டின் இரண்டாவது வாகன லான்சை பயன்படுத்துவதற்காக ISRO வணிகப் பிரிவுடன் ஒப்பந்தம் செய்துள்ளதாக ஆகஸ்ட் 8, 2019 அன்று Spaceflight நிறுவனம் அறிவித்தது.
இதுகுறித்து 2019-இல் பேசிய Spaceflight சிஇஓ கர்ட் பிளேக், “ஒரு நேரத்தில் பல மைக்ரோசாட்லைட்களை ஏவுவதற்கு SSLV மிகவும் பொருத்தமானது. மேலும், பல சுற்றுப்பாதை டிராப்-ஆஃப்களை ஆதரிக்கிறது. SSLV ஐ எங்களின் ஏவுகணை போர்ட்ஃபோலியோவில் சேர்ப்பதிலும் பல ஏவுதல்களை ஒன்றாக நிர்வகிப்பதிலும் மகிழ்ச்சி அடைகிறோம்” என்றார்.
SSLV -இன் வளர்ச்சி மற்றும் உற்பத்தி யானது விண்வெளித் துறை மற்றும் தனியார் தொழில்களுக்கு இடையே அதிக ஒருங்கிணைப்பை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இது விண்வெளி அமைச்சகத்தின் முக்கிய நோக்கமாகும்.
இந்திய தொழில்துறையானது பிஎஸ்எல்வி தயாரிப்பதற்கான கூட்டமைப்பைக் கொண்டுள்ளது.
அது சோதனை செய்யப்பட்டவுடன் எஸ்எஸ்எல்வியையும் தயாரிக்க ஒன்றிணைய வேண்டும் என்று இஸ்ரோ கடந்த காலத்தில் கூறியது குறிப்பிடத்தக்கது.
புதிதாக உருவாக்கப்பட்ட இஸ்ரோவின் வணிகப் பிரிவான நியூ ஸ்பேஸ் இந்தியா லிமிடெட்டின் ஒரே நோக்கம், பல ஆண்டுகளாக இஸ்ரோவால் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை இந்திய தொழில் கூட்டாளிகள் மூலம் வணிக நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவது தான். தற்போது ஒநதஞ திட்டங்களுக்கு 500-க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் பங்களிக்கின்றன.