விண்வெளிக்கும், வேற்று கிரகங் களுக்கும் மனிதர்களை அனுப்பும் பயணத்திட்டத்தின் ஒரு பகுதியாக, லடாக்கில் புதிய அனலாக் ஆய்வு மையத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் (இஸ்ரோ) தொடங்கியுள்ளது.

இஸ்ரோ சார்பில் விண்வெளிக்கு வீரர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தின் ஆய்வுகள் தொடங்கி சிறப்பான முறையில் நடைபெற்று வருகின்றன. அதேபோல், விண்வெளி மையம் ஒன்றை அமைக்கவும் இந்தியா முயற்சி மேற்கொண்டுள்ளது. வேற்று கிரகங்களுக்கு விண்வெளிக் கலன்களை அனுப்பவும் அடுத்தடுத்து திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

ss

மேலும், ககன்யான் திட்டத்தில் விண்வெளிக்கு அனுப்புவதற்காக விமானப்படையை சேர்ந்த 6 வீரர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு சிறப்பான பயிற்சியை இஸ்ரோ அளித்து வருகிறது. அதுமட்டுமல்லாமல், விண்வெளியிலும், அதற்கு அப்பால் வேற்று கிரகங்களிலும் மனிதர்கள் உயிர் வாழ்வதில் இருக்கும் சிக்கல்களை கண்டறியும் நோக்கத்திலும், இஸ்ரோ ஆய்வுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. அந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, லடாக்கில் உள்ள லே பகுதியில் சிறப்பு ஆய்வை இஸ்ரோ விஞ்ஞானிகள் தொடங்கியுள்ளனர்.

இதற்காக அங்கு அனலாக் ஆய்வு மையத்தை இஸ்ரோ அமைத்துள்ளது.

Advertisment

ககன்யான் திட்டம் இஸ்ரோவின் மற்றொரு மைல்கல். இந்தியாவின் முதல் மனித விண்வெளிப் பயணத் திட்டத்தை விண்வெளிக்கு அனுப்பு வதற்கு முன், அனலாக் மிஷன் விண்வெளிப் பயணத்தைச் சோதித்து, சாத்தியமான தோல்விப் புள்ளிகளை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

வேற்று கிரகங்களில் இருப்பது போன்ற சூழல் கொண்ட கலன்களை அமைத்து, அங்கு ஆய்வுகளை இஸ்ரோ விஞ்ஞானிகள் தொடங்கியுள்ளது இஸ்ரோ. விண்வெளி அல்லது வேற்று கிரகத்தில் இருப்பது போன்ற தட்பவெப்பம் கொண்ட இடங்களில் இத்தகைய சோதனையை நடத்துவதற்கு முடிவு செய்த இஸ்ரோ விஞ்ஞானிகள் அந்த அடிப்படையில் இந்த, ‘அனலாக்’ சோதனையை லே பகுதியில் நடத்தி வருகின்றனர்.

இந்த அனலாக் ஆய்வு மையத்தில் புதிய தொழில்நுட்பம், ரோபோடிக் கருவிகள், வாகனங்கள், வேற்று கிரகம் அல்லது விண்வெளியில் பயன்படுத்தப்படும் வசிப்பிடங்கள், தகவல் தொடர்பு சாதனங்கள், மின் உற்பத்தி சாதனங்கள், இடம் பெயர் சாதனங்கள், இருப்பு வைக்கும் சாதனங்கள் ஆகியவை பரிசோதிக்கப்பட உள்ளன. லடாக் மலை மேம்பாட்டுக் குழுமம், மும்பை ஐஐடி, லடாக் பல்கலை ஆகியவற்றுடன் இணைந்து இஸ்ரோ இந்த சோதனையை நடத்துகிறது.

Advertisment

sdd

செவ்வாய் கிரகம் மற்றும் நிலவின் நிலப்பரப்புகளை நெருக்கமாக ஒத்திருக்கும் அதன் தனித்துவமான புவியியல் பண்புகளுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட லடாக்கில் இந்த அனலாக் ஆய்வு பணியை நடத்த இஸ்ரோ முடிவு செய்தது. அதன்படி இங்கு ஆராய்ச்சி தொடங்கியுள்ளது.

லடாக்கின் குளிர், வறண்ட நிலைகள் மற்றும் அதிக உயரம் ஆகியவை நீண்ட கால விண்வெளிப் பயணங்களுக்குத் தேவையான தொழில்நுட்பங்கள் மற்றும் உத்திகளைச் சோதிக்க சிறந்த சூழலை வழங்குவதாக கூறப்படுகிறது. மேலும் லடாக் ஒரு குளிர் பாலைவனம் மற்றும் காலநிலை பாலைவனம் மற்றும் ஆர்க்டிக் பகுதிகளின் கலவையாகும். இப்பகுதியில் வெப்பநிலை கோடையில் 3 முதல் 35 ளிஈ வரையிலும், குளிர்காலத்தில் 20 முதல் -35 ளிஈ வரையிலும் இருக்கும். இப்பகுதி குளிர்காலத்தில் கடுமையான பனிப்பொழிவை அனுபவிக்கிறது. இந்த முயற்சியானது, இந்திய விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட ககன்யான் திட்டம் உட்பட, மனித விண்வெளிப் பயணம் மற்றும் கிரகங்களுக்கு இடையேயான ஆய்வுகளில் அதன் திறன்களை மேம்படுத்துவதற்கான ஒரு பகுதியாக இருக்கும் என்று தெரியவந்துள்ளது.

இந்த அனலாக் ஆய்வில் வேற்று கிரகங்களில் இருப்பது போன்ற சூழல் கொண்ட கலன்கள் அமைக்கப் பட்டுள்ளன. இந்த ஆய்வில் வாழ்விட வடிவமைப்பு மதிப்பீடுகள், வீரர்கள் மீதான தனிமைப்படுத்தல் விளைவுகளின் உளவியல் மதிப்பீடுகள் ஆகியவையும் அடங்கும். இந்த அனலாக் ஆய்வு இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் முக்கிய மைல் கல்லாக பார்க்கப்படுகிறது.

2047-ஆம் ஆண்டுக்குள் விண்வெளியில் இந்திய ஆராய்ச்சி நிலையத்தை நிறுவுதல், 2035-ஆம் ஆண்டுக்குள் பாரதிய அன்ரிக் ஷா ஸ்டேஷன் (பிஏஎஸ்) அமைத்தல், 2040-ஆம் ஆண்டுக்குள் நிலவுக்குப் பயணம் என்பதே இஸ்ரோவின் இலக்குகளாகும் என்பது குறிப்பிடத்தக்கது.