இஸ்ரோவின் ஆதித்யா திட்டம்

/idhalgal/general-knowledge/isros-aditya-project

கஸ்ட் 12, 2018 அன்று நாசாவால் ஏவப்பட்ட பார்கர் சோலார் புரோப் ஆய்வு, 2020-ஆம் ஆண்டு ஜனவரி 29-ஆம் தேதியன்று பெரிஹேலியன் என்று சொல்லப்படும் அதன் நான்காவது நெருங்கிய அணுகுமுறையை (flybys) அடைந்தது.

அடுத்த ஆண்டு சந்திரனை நோக்கி மீண்டும் ஒரு விண்வெளி பயணம், 2022-இல் திட்டமிடப்பட்ட முதல் இந்தியர்கள் விண்வெளி பயணம் (உள்நாட்டு கட்டமைப்பால்) போன்ற திட்டங்களுடன் இஸ்ரோ சூரியன் பற்றி ஆய்வுக்கு அதன் முதல் அறிவியல் பயணத்தை அனுப்பத் தயாராகி வருகிறது.

ஆதித்யா-எல் 1 என பெயரிடப்பட்ட இந்த திட்டம், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சூரியனை மிக நெருக்கமான தூரத்தில் இருந்து கவனித்து, அதன் வளிமண்டலம் மற்றும் காந்தப்புலம் பற்றிய தகவல்களைப் பெற முயற்சிக்கும்.

இஸ்ரோ இந்த ஆதித்யா-எல் 1 ஐ 400 கிலோ வகுப்பு செயற்கைக்கோள் என்று குறிப்பிடுகிறது. இது எக்ஸ்எல் உள்ளமைவில் (லக ஈர்ய்ச்ண்ஞ்ன்ழ்ஹற்ண்ர்ய்) துருவ செயற்கைக்கோள் ஏவுவாகனத்தை (பிஎஸ்எல்வி) பயன்படுத்தி ஏவப்படும்.

இந்த விண்வெளி அடிப்படையிலான ஆய்வகத்தில் ஏழு கருவிகள் அமைக்கப் பட்டிருக்கும். இதன் மூலம் சூரியனின் கொரோனா, சூரிய உமிழ்வு, சூரிய காற்று, கொரோனல் மாஸ் எஜெக்சன்ஸ் (சிஎம்இ) ஆகியவற்றைப் படிக்கமுடியும் இந்திய வானியற்பியல் நிறுவனம் (IIA),, வானியல் மற்றும் விண்வெளி இயற்பியல் பல்கலைக்கழக மையம்(IUCAA), இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகங்கள் (IISER) போன்ற நிறுவனங் களுடன் இணைந்து இஸ்ரோ இந்த பணிகளை மேற்கொள்கிறது.

பங்கேற்கும் அனைத்து அறிவியல் நிறுவனங்களும் தற்போது அந்தந்த கருவிகளை உருவாக்குவதற்கான இறுதி கட்டத்தில் உள்ளன. ச

பங்கேற்கும் அனைத்து அறிவியல் நிறுவனங்களும் தற்போது அந்தந்த கருவிகளை உருவாக்குவதற்கான இறுதி கட்டத்தில் உள்ளன. செப்டம்பர் 2015 இல் ஏவப்பட்ட ஆஸ்ட்ரோசாட் செயற்கைகோளிற்கு (AstroSat) பின் இஸ்ரோவின் இரண்டாவது விண்வெளி அடிப்படையிலான ஆய்வகப் பணி இதுவாகும்.

isro

இந்த ஆதித்யா-எல் 1 திட்டத்திற்கு மிகவும் சவாலாக இருப்பது இரண்டு விஷயங்கள். ஒன்று தூரம் (பூமியிலிருந்து சூரியனின் தூரம் 149 மில்லியன் கி.மீ, பூமியிலிருந்து சந்திரனின் தூரம் 3.84 லட்சம் கி.மீ மட்டுமே) இரண்டா வது, சூரிய வளிமண்டலத்தில் இருக்கும் அதீத வெப்ப வெப்பநிலையும், கதிர்வீச்சும்.

சூரிய மண்டலத்தில் உள்ள ஒவ்வொரு கோள்களின் பரிணாமங்களையும் (நமது பூமி உட்பட), சூரிய மண்டலத்தை தாண்டி இயங்கும் கோள்களையும் சூரிய விண்மீன் தான் நிர்வகிக்கின்றது.

சூரிய வானிலை,சுற்றுச்சூழல், சூரியனுக்கு உள்ளேயும் அதைச் சுற்றியும் நடக்கும் செயல்முறைகளால் ஒட்டு மொத்த சூரிய மண்டலத்தின் வானிலையைப் பாதிக்கும்.

இந்த சூரிய வானிலை மாறுபாடு களினால் நாம் அனுப்பியிருக்கும் செயற்கைக்கோள்களின் சுற்றுப்பாதை களை மாற்றியமைக்கலாம், அல்லது அவற்றின் ஆயுளைக் கூட குறைக்கலாம்.

செயற்கைக்கோளில் இருக்கும் மின்னணு கருவியிலை சேதப்படுத்தலாம். இதன்மூலம் உலகில் மின்சாரம் இருட்டடிப்பு போன்ற பிற இடையூறு களும் ஏற்படுத்தும். எனவே, சூரிய வானிலை புரிந்து கொள்ள சூரிய நிகழ்வுகளின் அறிவு முக்கியமானது.

பூமியை நோக்கி வரும் சூரியப்புயல் களைப் பற்றி அறிந்து கொள்ளவும், அவற்றின் தாக்கத்தை கணிக்கவும், தொடர்ச்சியான சூரிய ஆய்வுகள் தேவை.

பூமியை நோக்கி சூரியனில் இருந்து வெளிவரும் ஒவ்வொரு சூரிய புயலும் லாக்ரேஞ்ச் புள்ளி ஒன்றின் (எல்-1) வழியாக செல்லும். மொத்தம் ஐந்து லாக்ரேஞ்ச் புள்ளிகள் உள்ளன. எனவே ஆதித்யா-எல் லாக்ரேஞ்ச் புள்ளி ஒன்றில் இருந்து சூரியனைப் படம் பிடித்து ஆய்வு செய்யும். ஒரு விண்கலம் நிலையாக இருக்க தேவையான எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்க இந்த லாக்ரேஞ்ச் புள்ளி பயன்படுத்தப் படுகிறது.

பார்க்கர் சோலாரின் ஜனவரி 29 சுழற்சி யின் மூலம் சூரியனுக்கு அருகில் சென்ற விண்கலம் என்று பெயரெடுத்துள்ளது.

கம்ப்யூட்டர் மாடலிங் மதிப்பீடுகள், ஆய்வின் விண்கலத்தில் அமைந்திருக்கும் வெப்பக் கவசத்தின் வெப்பநிலை 612 டிகிரி செல்சியஸை எட்டியுள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும், வெப்பக் கவசத்தின் பின்னால் இருக்கும் கருவிகள் சுமார் 30ளி ஈ ஆக உள்ளது என்று நாசா தெரிவித்துள்ளது. 2024-25 ஆம் ஆண்டில் சூரியனை மிகவும் நெருங்கிய நிலையில் செல்லும்போது, கவசத்தின் வெப்பநிலை 137ளிஈ வெப்பநிலை இருக்கும்யென்று கணக்கிடப்பட்டுள்ளது.

இஸ்ரோவின் திட்டங்கள் ஒரு பார்வை

ஸ்பேஸ் கிரேட் லித்தியம் ஐயன் பேட்டரிகள், மினி சின்த்தெடிக் ரேடர், ஆப்டிக்கல் இமேஜிங் சிஸ்டம், எம்.எம்.எஸ் டெர்மினல் போன்றவற்றை உருவாக்கி உள்ளது இஸ்ரோ. இந்த தகவல் சமீபத்தில் பாராளுமன்றத் தில் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய அமைச்சர் ஜித்தேந்திர சிங் இஸ்ரோ கடந்த மூன்று ஆண்டுகளில் உருவாக்கிய பல்வேறு டெக்னாலஜிகள் குறித்து எழுத்துப்பூர்வமாக அறிவித்தார். அதில் தான் மேலே கூறிய ஆராய்ச்சிக் கருவிகள் இடம் பெற்றுள்ளது.

2025-ஆம் ஆண்டுக்கான தொலை தூர திட்டங்களை கொண்டிருக்கும் இஸ்ரோ வருகின்ற காலங்களில் சந்திராயன் 3, எக்ஸ்ரே போலாரிமீட்டர் சேட்டிலைட், ஆதித்யா-எல் 1, ககன்யான், வீனஸ் ஆர்பிட்டர், டிஷா ஏரோனாமி மிஷன்ஸ் மற்றும் லூனார் போலார் எக்ஸ்ப்ரோரேஷன் போன்ற திட்டங் களை செயல்படுத்த உள்ளது குறிப் பிடத்தக்கது. இவை மட்டுமில்லாமல் சந்திராயன் 1-ன் டேட்டா யுட்டிலைசேசன் கீழ் 17 திட்டங்களையும், மார்ஸ் ஆபிர்ட்டர் மிஷன் திட்டத்தின் கீழ் 28 புதிய திட்டங்களையும் வகுத்துள்ளனர். ஆஸ்ட்ரோசாட் டேட்டாவின் கீழ் 12 திட்டங்களும் வகுக்கப்பட்டுள்ளது.

செலவு, நேரம் மற்றும் அபாயத்தைப் பகிர்ந்து கொள்வதற்காக விண்வெளி அறிவியல் மற்றும் ஆராய்ச்சியில் 55 நாடுகளுடனும் ஐந்து பலதரப்பு அமைப்புகளுடனும் இஸ்ரோ புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. விண்வெளி அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் பயன்பாடுகளில் தசஉ-யை ஊக்குவிப் பதற்கான திட்டங்கள், ஆராய்ச்சி ஸ்பான்சர் செய்யப்பட்ட திட்டங்கள், விண்வெளி தொழில்நுட்பம் ஐ.ஐ.டி, ஐ.ஐ.எஸ்.சி மற்றும் எஸ்.பி.பி.யு, புனே, பிரீமியர் நிறுவனங்களின் செல், விண்வெளிக்கான பிராந்திய கல்வி மையங்கள் ஆகியவற்றை (ஆர்.ஏ.சி) கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு, மத்திய மற்றும் வட கிழக்கு பகுதிகளில் உள்ள முக்கிய பல்கலைக்கழகங்களில் நிறுவ பல்வேறு திட்டங்கள் போடப்பட்டு வருகிறது.

ககன்யான் திட்டம்

இந்தியா, விரைவில் விண்வெளிக்கு ஆட்களை அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதற்காக, இந்திய விண்வெளி கட்டுப்பாட்டு அமைப்பான இஸ்ரோவின் ஹியூமன் ஸ்பேஸ்பிளைட் மையம், ரஷ்யாவின் காகரின் ஆராய்ச்சி மற்றும் சோதனை விண்வெளி வீரர்கள் பயிற்சி மையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த பயிற்சி, பிப்ரவரி 10-ஆம் தேதி முதல் துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பாக, காகரின் விண்வெளி பயிற்சி மையத்தின் தலைவர் பவேல் விலசோவ் தெரிவித்துள்ளதாவது, விமானப்படை வீரர்கள், விமானங்கள் மட்டுமல்லாது பறக்கும் விதத்தினால நுட்பங்களை தெளிவாக அறிந்துள்ள நிலையில், விண்வெளி தொழில்நுட் பமும் அவர்கள் எளிதாக கற்கும் வகையிலானதாகவே இருக்கும்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது, விண்வெளி ஆய்வுகளில் இந்தியா எப்போதுமே மற்ற நாடுகளுக்கு தொடர்ந்து முன்னோடியாக உள்ளது. விண்வெளி தொடர்பான ஆய்வுகளில் ஏற்கனவே உங்களுக்கு பரிச்சயம் உள்ளது. எங்களது மையத்தில் வெளிநாட்டு விண்வெளி வீரர்கள் எவ்வாறு பயிற்சி பெறுகின்றனர் என்பதை அறிய தாங்கள் அறிய உள்ளீர்கள்.

ஒரு வருடம் கால அளவு கொண்ட வகையிலான இந்த பயிற்சி முகாமில், இந்திய விமானப்படை வீரர்களுக்கு வழக்கமான உடற்பயிற்சிகள் மட்டுமல்லாது பயோ மெடிக்கல் பயிற்சியும் வழங்கப்பட உள்ளது.

அவர்கள் சோயுஸ் விண்கலம் மூலம், சர்வதேச விண்வெளி மையத்திற்கு அழைத்து சென்று பயிற்சி அளிக்கப்பட உள்ளனர்.

இந்திய வீரர்களுக்கு,special Il-76 MDK விமானத்தில், குறுகிய கால எடையில்லா நிலையை அடைவதற்கான பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

அதுமட்டுமல்லாது, விண்வெளி ஓடத்தில், எத்தகைய நிலையிலும் தரையிறங்கும் வசதியிலான பயிற்சியும் அளிக்கப்பட உள்ளது.

இந்த பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள 4 இந்திய விமானப்படை வீரர்களும், விண்வெளியில் 526 நாட்கள் தங்கியிருந்து உலக சாதனை படைத்துள்ள ஓலெக் வலேரியாவிச் கொடொவால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். கொடோவ், சமீபத்தில், பெங்களூருவில் உள்ள இந்திய விமானப்படையின் ஏரோஸ்பேஸ் மெடிசின் மையத்திற்கு விஜயம் செய்தார். அங்கு அவர் நடத்திய பல்வேறு சோதனைகளின் அடிப்படை யில் இவர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர். இவர்களுக்கு ரஷ்யாவில் விண்வெளி பயணம் குறித்த முழுமை யான பயிற்சி வழங்கப்பட உள்ளது.

gk010420
இதையும் படியுங்கள்
Subscribe