ந்தியாவின் தரை, கடல் மற்றும் வான்வழி போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு பயன்பாட்டுக்கு உதவும் ‘இந்திய மண்டல வழிகாட்டுதல் செயற்கைக்கோள் அமைப்பு’-ஐ (ஐஆர்என்எஸ்எஸ்) உருவாக்க இஸ்ரோ முடிவு செய்தது. இதற்காக ரூ.1,420 கோடி செலவில் ஐஆர்என்எஸ்எஸ் 1ஏ, 1பி, 1சி, 1டி, 1இ, 1எப், 1ஜி என 7 செயற்கைக்கோள்கள் 2013 முதல் 2016-ஆம் ஆண்டு வரையான காலக்கட்டங்களில் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டன. இதன் மூலம் இந்தியாவுக்கு பிரத்யேக வழிகாட்டியாக நாவிக் தொழில்நுட்பம் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. இந்த நாவிக் மூலம் நாட்டின் கண்காணிப்பு பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதற்கிடையே ஐஆர்என்எஸ்எஸ் திட்டத்தில் பழுதான, ஆயுட்காலம் முடிந்த செயற்கைக்கோள்களுக்கு மாற்றாக வேறு ஒன்றை அனுப்பி பணிகளை தொடருவது அவசியமாகும். ஏனெனில், 7 செயற்கைக்கோள்களும் சிக்கலி-ன்றி இயங்கினால் மட்டுமே அதன் பலன்களை நாம் முழுமையாக பெறமுடியும். அந்த வகையில் ஐஆர்என்எஸ்எஸ் வரிசையில் 1ஏ-வுக்கு மாற்றாக 1ஐ செயற்கைக்கோள் 2018-ஆம் ஆண்டு விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது. அதேபோல், ஐஆர்என்எஸ்எஸ் 1ஜி-க்கு பதிலாக என்விஎஸ்-01 செயற்கைக்கோள் 2023 மே 29-இல் விண்ணில் செலுத்தப்பட்டது. தொடர்ந்து ஐஆர்என்எஸ்எஸ் 1-இ-க்கு மாற்றாக அதிநவீன வசதிகளுடன் தயாரிக்கப்பட்ட என்விஎஸ்-02 செயற்கைக்கோளை ஜிஎஸ்எல்வி எப்-12 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்த இஸ்ரோ முடிவு செய்தது.

Advertisment

ss

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் மையத்தின் 2-வது ஏவுதளத்தில் இருந்து ஜிஎஸ்எல்வி எப்-15 ராக்கெட் ஜனவரி 29 அன்று காலை 6.23 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது. தரையில் இருந்து புறப்பட்ட 19 நிமிட பயணத்துக்கு பின்னர் 322 கி.மீ. உயரத்தில் திட்டமிடப்பட்ட புவிவட்டப் பாதையில் செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. அடுத்த சில நிமிடங்களில் பெங்களூர் ஹசன் மையத்தின் கட்டுப்பாட்டில் என்விஎஸ்-2 வந்தது. இனி இது பூமியில் இருந்து குறைந்தபட்சம் 170 கி.மீ தூரமும், அதிகபட்சம் 36,577 கி.மீ தொலைவும் கொண்ட சுற்றுப்பாதையில் சுற்றிவரும்.

என்விஎஸ் செயற்கைக்கோள் 2,250 கிலோ எடை உடையது. இதன் ஆயுட்காலம் 10 ஆண்டுகள். இதில் எல்1, எல்5, சி மற்றும் எஸ் பேண்ட் டிரான்ஸ்பான்டர்கள், உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரான ரூபிடியம் அணு கடிகாரம் உட்பட பல்வேறு அதிநவீன தொழில்நுட்ப கருவிகள் இடம்பெற்றுள்ளன. இதன் மூலம் இடமறிதல், வழிகாட்டுதல், நேரம் ஆகிய தகவல்களை சிறப்பாக பெற முடியும். இது மற்ற செயற்கைக்கோள்களுடன் சேர்ந்து தரை, கடல், வான்வெளி போக்குவரத்தை கண்காணிக்கும். மேலும், ஜிபிஎஸ்போல் செல்போன் செய-லி வழியாக ஓரிடத்தின் தகவல்கள், வழித்தடங்கள் அளித்தல், பேரிடர் மேலாண்மை போன்ற அவசர சேவைகள், இணைய மற்றும் நேரச் சேவைகள் உள்ளிட்ட வசதிகளுக்கும் பயன்படும்.

Advertisment

இது இஸ்ரோவின் 100-வது ராக்கெட்டாகும். ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள 2 ஏவுதளங்களில் இருந்து மட்டும் மொத்தம் 100 ராக்கெட்கள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன. இவற்றில் 91 வெற்றி பெற்றுள்ளன. நாவிக் செயற்கைக்கோள்கள் மூலமாக நாட்டின் 1,500 கி.மீ பரப்புடைய தெற்காசியப் பகுதிகளின் கடல் மற்றும் எல்லைப்பகுதிகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. மலைப் பகுதிகள்,

பாலைவனங்கள் போன்ற தகவல்தொடர்பு வசதியற்ற பகுதிகளில் ஜிபிஎஸ் முழுமையான தகவல்களை தராது. ஆனால், தெற்காசிய எல்லைக்குட் பட்ட அனைத்து பகுதிகளிலும் 20 மீட்டர் தூரத்துக்கு துல்லி-யமான தகவல்களை நாவிக் தொழில்நுட்பம் வழங்கும். நாவிக் திட்டத்துக்காக இன்னும் என்விஎஸ் வரிசையில் 3 செயற்கைக்கோள்கள் இந்தாண்டுக்குள் செலுத்தப்பட உள்ளன.

_______________

இஸ்ரோவின் புதிய தலைவர்

பெங்களூருவை தலைமையகமாக கொண்டு செயல்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக 2 ஆண்டு காலம் பதவி வகித்து வந்த எஸ்.சோம்நாத் (ஜனவரி 13) பணி ஓய்வு பெற்றார்.

Advertisment

இதைத் தொடர்ந்து, இஸ்ரோவின் புதிய தலைவராக வி. நாராயணன் ஜனவரி 15-ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார்.

இவர் இந்த பதவியை 2 ஆண்டு காலம் வகிப்பார்.

அவர், கன்னியாகுமரி மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர் ஆவார். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள திரவ உந்து அமைப்பு மையத்தின் (எல்பிஎஸ்சி) இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

கரக்பூர் ஐஐடி-யில் பட்டம் பெற்ற இவர், 1984-ஆம் ஆண்டு இஸ்ரோவில் சேர்ந்தார்.

இந்திய விண்வெளித் துறையில் 40 ஆண்டு அனுபவமுள்ள இவர் ராக்கெட் மற்றும் விண்கல திரவ உந்து விசையில் நிபுணத்துவம் பெற்றவர்.

இஸ்ரோவின் பிஎஸ்எல்வி சி57, சூரிய ஆய்வுக்கான ஆதித்யா எல்1 திட்டம், ஜிஎஸ்எல்வி மாக்-3 வகை ஏவுகணைக்கான சிஇ20 கிரையோஜெனிக் இன்ஜின் தயாரிப்பு, சந்திரயான்-2 மற்றும் சந்திரயான்-3 உள்ளிட்ட பல திட்டங்களில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்துள்ளார்.

சந்திரயான்-2 நிலவில் தரையிறங்குவதில் ஏற்பட்ட பின்னடைவு குறித்து ஆய்வு செய்ய தேசிய அளவில் அமைக்கப்பட்ட குழுவின் தலைவராகவும் நாராயணன் பணிபுரிந்துள்ளார். அதன் விளைவாக சந்திரயான்-3 மென்மையாக நிலவில் தரையிறங்கி சாதனை படைத்தது.