சேவையை மையமாகக் கொண்ட தனது பொருளாதாரத்தின் வரையறைகளை மாற்றியமைக்கத் தயாராகவுள்ள பெருமளவிலான இளம் மக்கள்தொகையினரைக்கொண்டதாக இந்தியா இன்று உள்ளது. எவ்விதத் தடையுமின்றி இது நிகழ வேண்டுமெனில், வளர்ச்சிக்கான வேகத்தைநீடித்திருக்கவும், தூண்டிவிடவும் வகையிலான வேகத்தின் அதன் மக்கள் அம்சத்தின் உற்பத்தித் திறனை உறுதிப்படுத்த, நவீனமான, உயிரோட்டமான, போட்டித் திறன் கொண்ட உழைக்கும் சக்தி என்பது முன் நிபந்தனையாக அமைகிறது.
2009-ஆம் ஆண்டின் தேசிய திறன் மேம்பாட்டுக் கொள்கையின் பகுதியாக மேற்கொள்ளப்பட்ட எண்ணற்ற திறன் மேம்பாட்டுத் திட்டங்களில் இருந்து பெறப்பட்ட அனுபவங்களுடன் தொழில்முனைவிற்கான சுற்றுச்சூழல், திறன் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள முன்னுதாரணமான மாற்றங்களின் பின்னணியில் 2015-ஆம் ஆண்டு ஜூலையில் புத்தம்புதியதொரு திறன்மேம்பாடு மற்றும் தொழில்முனைவிற்கான கொள்கையை அரசு வெளியிட்டது.
இந்தக் கொள்கையின் மையமான நோக்கம் என்பது நம்பத்தகுந்த சான்றளிக்கும் முறைகள், சேர்த்து வைக்கப்பட்டுள்ள நன்மதிப்பு, பரிமாற்றம் போன்ற வடிவங்களின் மூலம் வாழ்நாள் முழுவதுமான கல்வியின் மூலம் சேகரிக்கப்பட்டுள்ள முழுத்திறமையையும் ஒரு தனிநபர் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் அவருக்கு அதிகாரம் அளிப்பதே ஆகும். நாடு முழுவதிலும் தொழில்முனைவின் வளர்ச்சிக்கு அவசியமான அம்சங்களை ஒருங்கிணைக்கவும், வலுப்படுத்தவுமான தொழில்முனைவு வடிவமைப்பிற்கு பெரும் உந்துதல் அளிப்பதே ஆகும்.
திறன் மேம்பாடு என்பது படிப்படியாகவே உருப்பெறுவது என்ற வகையில் பிரிவு வாரியாகவும், வேலையின் அடிப்படையிலும் உள்ள தேவைகளைப் பொறுத்தவரையில், மத்திய அரசால் வரையறுக்கப்பட்டுள்ள பொதுவான விதிமுறைகளை பின்பற்றும் அதே நேரத்தில் தங்கள் சொந்த பகுதிகளில் நிலவும் திறனுக்கான இடங்களில் நிலவும் முக்கிய இடைவெளிகள் குறித்த முக்கியமான ஆய்வையும் மாநிலங்கள் மேற்கொள்ளக் கூடும்.
எனவே திறன் மேம்பாட்டிற்கான தேசிய அளவிலான இயக்கம் என்பது மத்திய மாநில அரசுகள் திறன் குறித்த நடவடிக்கைகளை அமல்படுத்துவதற்கான உயிரோட்டமான, நிறுவன ரீதியானதொரு கட்டமைப்பே ஆகும். திறன் மேம்பாட்டிற்கான தேசிய கமிஷன் ஏற்கனவே ஏற்கொண்ட பிரிவு வாரியான ஆய்வுகளின் அடிப்படையில் புதுமையானதொரு பொது தனியார் கூட்டுத்திட்டம் உருவாக்கப்பட்டது. இந்தத் திட்டமானது 34 வகையான பிரிவுகளில் மேம்படுத்தக் கூடிய, லாப நோக்குடன் கூடியசெயல்முறை பயிற்சிக்கான முன்முயற்சிகள், புதிய பயிற்சி, திறன் மேம்பாடு ஆகியவற்றுக்கான திறனுடையவர்களின் கூடுதல் திறன் தேவைகள், பயிற்சிக்கான தேவைகள் ஆகியவற்றை நிறைவேற்றுவதற்கான நிதியுதவியை வழங்கக் கூடிய வகையில் பெரிய அளவிலான, தரமான, லாபம் தரக்கூடிய செயல்முறை அமைப்புகளை 2022-ஆம் ஆண்டிற்குள் ரூ. 12.68 கோடிமதிப்பில் உருவாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
திறன் வளர்ச்சியை விரைவுபடுத்த செயலூக்கம் நிறைந்த பல திட்டங்களை அரசு உருவாக்கி வருகிறது. திறன்மேம்பாடு, தொழில்முனைவிற்கான அமைச்சகத்தின் முன்னோடி திட்டமான பிரதமர் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்ட பயிற்சிக்கான கூட்டாளிகள்/மையங்களின் மூலம் தங்கள் வாழ்க்கைக்கானதேவைகளைப் பெற இளைஞர்கள் வேலை பெறுவதற்கு உதவும் வகையில் குறுகிய கால பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. நான்காண்டு காலப்பகுதியில் ஒரு கோடிக்கும் மேற்பட்டோருக்கு திறனுக்கான பயிற்சியை வழங்க ரூ. 12,000 கோடி நிதி ஒதுக்கீட்டுடன் கூடிய பிரதமர் திறன் மேம்பாட்டுத் திட்டத்திற்கு (2016-2020) ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் முக்கியமான அம்சங்கள் என்பது குறுகிய காலப் பயிற்சி, திறமைஅடிப்படையிலான குறைந்தபட்சம்200 மணி நேரங்களுக்கான பயிற்சி, முன்கூட்டியே அறிந்த விஷயங்கள் பற்றி மதிப்பீடு செய்து அவற்றை அங்கீகரிப்பது, சிறப்புத் தேவைகளாக உள்ள, அரசும் பங்குபெறுகின்ற, எந்தவொரு புதுமையான/ பொதுத்துறைக்கான சிறப்புத் திட்டங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். இந்தப் பிரதமர் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின்25 சதவீத திட்டங்கள் மாநில அரசுகளால் நிறைவேற்றப்பட வேண்டியவை ஆகும். இத்தகைய திறனுக்கான பயிற்சிகளில் பெண்களின் பங்கேற்பிற்கு ஊக்கமளிக்கும் வகையில் பிரதமர் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் குறிப்பிட்ட சில தூண்டுதல் களும் உண்டு என்பதும் கவனத்திற்குரியதாகும். இத்திட்டத்தின் கீழ் பயிற்சி பெறும் அனைத்துப் பெண்கள் ஒவ்வொருவருக்கும் போக்குவரத்துப் படியாக ரூ. 1000/1500 மாதந்தோறும் வழங்கப்படுவதுடன், பயிற்சியாளரின் வசிக்கும் மாவட்டத்திற்குஉள்ளேயோ அல்லது வெளியிலோ வேலை கிடைப்பதைப் பொறுத்து பயிற்சிக்குப் பிந்தைய காலத்தில் 2 அல்லது 3 மாதங்களுக்கு பெண்கள் உள்ளிட்ட சிறப்புக் குழுக்களுக்கு ஒவ்வொரு பயிற்சியாளருக்கும் மாதத்திற்கு ரூ. 1450/- பயிற்சிக்குப் பிந்தைய உதவித் தொகையாக வழங்கப்படும். இந்தப் பிரதமர் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் சூழலுக்குள் பயிற்சியாளருக்கான பயிற்சியை அனுமதிக்கின்ற இரட்டைத் திட்டமும் துவங்கப்படுவதற்கான தயார் நிலையில் உள்ளது.
திட்டத்திற்கான வரையறுப்பிற்கு உட்பட்ட வகையில் செயல்படும் தனியான பயிற்சி மையங்களிலிருந்து விடுபட்டு ஓரளவிற்கு நிரந்தரமான பயிற்சி மையங்கள் என்ற நிறுவன வகையில் மாறுவதற்கான மற்றொரு குறிப்பிடத்தக்க முன்முயற்சியாக பிரதமர் திறன் மேம்பாட்டு மையங்கள் துவங்கப்பட்டன. இதில் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு திறன் பயிற்சியை வழங்குவதற்கென ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதிரி திறன் பயிற்சி மையங்களைநிறுவ அரசு திட்டமிட்டுள்ளது. இதுவரையில் சுமார் 150 பிரதமர் திறன் மேம்பாட்டு பயிற்சி மையங்கள் ஏற்கனவே செயல்பட்டு வருகின்றன. நாடு முழுவதிலும் பல்வேறு வகையான பயிற்சிகளை வழங்குவதற்கென மொத்தம் 452 பிரதமர் திறன் பயிற்சி மையங்களுக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தேசிய திறன் மேம்பாட்டுக் கழகத்தினால் உற்பத்தி, கட்டுமானம், மொத்த வணிகம், சில்லறை வணிகம், மருத்துவ சேவை ஆகிய நான்கு முக்கிய பிரிவுகளில் வெளிநாடுகளில் வேலைவாய்ப்புகளை உள்ளடக்கிய வகையில் 20 முக்கிய நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட விரிவான ஆய்வினைத் தொடர்ந்து இந்திய பன்னாட்டு திறன் மேம்பாட்டு மையங்களை உருவாக்குவது என திட்டமிடப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் உடலுழைப்பு சார்ந்த வேலையைத் தேடி நாட்டை விட்டு வெளியே செல்வோர் போட்டியை துணிவுடன் எதிர்நோக்கும் வகையிலும், புதிய சூழலில் வெற்றி பெறும் வகையிலும் போதிய திறன் பெற்றவர்களாக வெளியே செல்வதை உறுதிப்படுத்துவதை இந்த மையங்கள் நோக்கமாகக் கொண்டிருக்கும்.
திறன் மேம்பாடு, தரம் உயர்த்தல் ஆகிய அமைச்சகத்தின் கவனத்திலுள்ள திட்டங்கள் தரமான விளைவுகளை ஏற்படுத்துவதை உறுதிப்படுத்தும் நோக்கத்துடன் பயிற்சி மையங்களுக்கு அங்கீகாரம் வழங்கும் ஏற்பாடுகளும் துவங்கியுள்ளன. 221 வேலைகளுக்கான பாடதிட்டங்களுக்கான மாதிரி வடிவங்களை அமைச்சகம் ஏற்கனவே வெளியிட்டுள்ளது. பல்வேறு வேலைகளுக்கான பரிசோதனைச் சாலைகள் தொடர்பான தர அடிப்படையிலான தேவைகள் குறித்தவெளியீடுகள், பயிற்சியாளருக்குத் தேவையான பயிற்சி ஏற்பாடுகள் ஆகிய திட்டங்களை கட்டாயமாக்குவதற்கான திட்டங் களும் உருவாக்கப்பட்டு வருகின்றன.
அதே நேரத்தில் வடிவமைப்பில் உள்ள புதிய திட்டங்களை நடைமுறைக்குக்கொண்டு வரும் வகையில் இந்தச் செயல்முறைக்கான உண்மையான சீர்திருத்தங்களிலும் அமைச்சகம் இறங்கியுள்ளது. இதன் மூலம் திறன் மேம்பாட்டிற் கென பல்வேறு இதர அமைச்சகங்களாலும் தற்போது நடத்தப்பட்டு வரும் எண்ணற்ற திட்டங்களை ஒருங்கிணைப்பதன் மூலம் நகலெடுக்கும் முயற்சியைத் தவிர்க்கவும், சக்தியை ஒரே திசையில் ஒழுங்குபடுத்தவுமான முயற்சிகளில் அமைச்சகம் இறங்கியுள்ளது.
தற்போது மத்திய அரசின் 22-க்கும் மேற்பட்ட அமைச்சகங்கள் பல்வேறு வகையான திறன் மேம்பாட்டு திட்டங்களை நடத்தி வருகின்றன. இதன் விளைவாக தரப்படுத்தல் இல்லாத நிலை, கவனம் சிதறுவது, அபரிமிதமான செலவுகள்,பல்வேறு திறன் மேம்பாட்டு திட்டங்களுக்கிடையே ஒன்றோடொன்று போட்டியிடும் போக்கு ஆகிய சூழ்நிலை நிலவுகின்றன. எனவே, ஒரே மாதிரியான பயிற்சிகளுக்கு பல்வேறு திட்டங்களுக்கு என வழங்கப்படும் தொகைகளுக்கு பொதுவான செலவு விதிமுறைகளை திறன் மேம்பாட்டு அமைச்சகம் உருவாக்கியுள்ளது. அதைப் போன்றே, பல்வேறு திறன் மேம்பாட்டு திட்டங்களை ஒன்றுபடுத்துவதன் பகுதியாக நாட்டின் செய்முறை பயிற்சிக்கான ஒழுங்குமுறை விதிகளை வகுத்து வரும் பயிற்சிக்கான தலைமை அலுவலர் அலுவலகத்தை இந்த அமைச்சகம் தனதுவரம்பிற்குள் கொண்டு வந்துள்ளது. விரைவிலேயே செய்முறைப் பயிற்சிக் கல்லூரிகளையும் தனது வரம்பிற்குள் கொண்டு வருவதற்கான முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன.
பல்வேறு துறைகளிலும் திறன்பெற்ற நபர்களை வேலைக்கு அமர்த்துவதற்கென தொழில் துறையுடனும் திறன் மேம்பாட்டு அமைச்சகம் தீவிரமாக ஒருங்கிணைப்பை மேற்கொண்டு வருகிறது என்பதை இங்கு குறிப்பிடுவதும் இன்றியமையாததாகும்.
இதற்கான நிர்வாக கவுன்சிலின் பகுதியாக தொழில்துறை தலைவர்கள், ஒரே மாதிரியான வரம்புள்ள அமைச்சகங்கள் ஆகியவற்றுடன் இணைந்து பகுதி வாரியான திறன் குறித்த கவுன்சில்களும் உருவாக்கப்பட்டுள்ளன. உற்பத்திக்கு வெளியேயும் பயிற்சிப்பருவத்தின் வரம்பை விரிவுபடுத்துவதற்கென 1951-ஆம் ஆண்டின் பயிற்சிப் பருவத்திற்கான சட்டம் குறித்த திருத்தம் 2014-ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்டது.
திறன்களில் நிலவும் இடைவெளிகளை நிரப்ப வேண்டிய அவசியம் உள்ள நிலையில், இந்தியாவின் இளைய உழைப்பாளிகள் தொழில்துறையில் பணிபுரிவதற்குத்தகுதியானவர்களாக, முன்னேற்றப் பாதையில்தங்கள் வலிமைக்கேற்ப பங்களிப்பு செய்பவர்களாக மாறுவதை உறுதிப்படுத்த அமைச்சகத்தின் அதிகாரிகள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர்.