2018-ஆம் ஆண்டு சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் திருப்புமுனை ஆண்டு. தனது 15 ஆண்டுகால கல்வி சேவையின் நிறைவு ஆண்டும், நிறுவனர் சங்கர் சேவையின் இறுதி ஆண்டும் கூட. கடந்த ஆண்டில் சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் அனைத்து பயிற்சி மையங்களிலும் பயிற்சி பெற்ற 21 பெண்கள் உட்பட 74 மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இதில் தமிழக மாணவர்கள் மட்டும் 35 பேர். சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் பயிற்சி பெற்ற கீர்த்திவாசன், அகில இந்திய அளவில் 29-வது இடத்தை பிடித்துள்ளார். இவர் தமிழக அளவில் முதலிடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

அகில இந்திய அளவில் 12-வது இடம் பெற்ற அஷிமா மிட்டல் சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் படித்து வெற்றி பெற்றவர். அதேபோல கர்நாடக மாநிலத்தை சேர்ந்த எம். ஸ்வேதா அகில இந்திய அளவில் 119-வது ரேங்க் பெற்றுள்ளார். ""நான் 2014-லிருந்து சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு தயார் செய்து வருகிறேன். முதலிலிருந்து முழுமையாக மீண்டும் மீண்டும் பயிற்சி செய்வது மிக கடினமாக தான் இருந்தது. இருந்தாலும் இந்த முறை வெற்றி பெற்றேன். ஒவ்வொரு வருடமும் புதிய அணுகுமுறை யுடன் தயார் செய்ய வேண்டும். தொடர்ந்து மாற்றம் செய்து படிப்பது மூலம் கடந்த ஆண்டை விட இன்னும் சிறப்பாக தயார் செய்ய முடியும்'' என்றார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பிரதீபா ராணி ""எனது மாநிலத்தில் சிவில் சர்வீசஸ் தேர்வு பற்றி சிறந்த ஆலோசனை பெற்றேன் அதற்கேற்ப திட்டமிட்டு படித்தேன்'' என்றார். பிரதீபா ராணி அகில இந்திய அளவில 78-வது ரேங்க் பெற்றுள்ளார்.

shankarIAS

Advertisment

இவர்களை போலதான் வினோத் படேல், விந்தியா, சிவநேரியா, கோபால் கிருஷ்ணா, சாகர் சச்சார் என அனைவரும் சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் பெங்களூரு பயிற்சி மையத்தில் படித்து வெற்றி பெற்றவர்கள். இந்தாண்டை போல கடந்த ஆண்டுகளிலும் பல சாதனைகளை படைத்துள்ளது சங்கர் ஐஏஎஸ் அகாடமி. இதன் மூலம் சிவில் சர்வீசஸ் பணிகளில் உள்ள அனைத்து துறைகளிலும் பணி வாய்ப்பு களை பெற்று தந்துள்ளது. குறிப்பாக ஒவ்வொரு ஆண்டும் வெற்றி பெற்ற முதன்மை மாணவர்களை எடுத்துக்கொண்டால், 2010 -இல் அபிராம் சங்கர் அகில இந்திய அளவில் 4-வது ரேங்க், 2011-இல் நிராஜ் குமார் அகில இந்திய அளவில் 11-வது ரேங்க், 2012 அருண் தம்புராஜ் 16-வது ரேங்க், 2013-இல் அபி பிரசாத் 13-வது ரேங்க், 2014-இல் சாரு ஸ்ரீ 6-வது ரேங்க், 2015-இல் சரண்யா அரி 7-வது ரேங்க், 2016-இல் பிரதாப் முருகன் 21-வது ரேங்க், 2017-இல் அஷிமா மிட்டல் 12-வது ரேங்க் என அனைவரும் சங்கர் ஐஏஎஸ் அகாடமி மூலம் வெற்றி பெற்ற முதன்மை மாணவர்கள். 2004-இல் ஆரம்பிக்கப்பட்ட சங்கர் ஐஏஎஸ் அகாடமி, இதுவரை 900-க்கு மேற்பட்ட ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ். பணிகளில் பணி வாய்ப்புகளை பெற்று தந்துள்ள ஒரே இந்திய பயிற்சி நிறுவனமாகும். அதேபோல 1500 மேற்பட்டவர்களுக்கு பசடநஈ தேர்வு மூலம் அரசு பணி வாய்ப்பையும், 1000 -த்திற்கும் மேல் வங்கி பணியாளர்களையும் உருவாக்கி சாதனை படைத்துள்ளது.

இந்தளவில் சிறந்த பயிற்சி நிறுவனமாக திகழ்வதற் கான காரணங்களை கேட்டதற்கு வெற்றி பெற்ற மாணவர்கள் எல்லோரும் சொல்லும் பதில் ""மிக சிறந்த பயிற்சியாளர்கள் குழுவை கொண்டு மிக சிறப்பான பயிற்சியை வழங்குவதுதான்''என்றனர்.

Advertisment

புவியியல், இந்திய அரசியலமைப்பு, இந்திய பொருளாதாரம், பொது நிர்வாகம், சுற்றுச்சூழல் பாடங்களுக்கு மிக சிறந்த பயிற்சி வழங்கப் படுகிறது.

சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் நான்கு தளங்களும் மிக சரியான இணைப்புகளை கொண்டு கட்டமைக்கப் பட்டுள்ளன. அதேபோல தான் அதன் தொழில்நுட்பமும், ஒரே இடத்திலிருந்து அனைத்து தளங்களில் அமர்ந் திருக்கும் மாணவர்களுக்கும் மிக சிறப்பாக பயிற்சி வழங்கப்படுகிறது.

ஒரு தளத்தில் பயிற்சியாளர் வகுப்பு எடுக்கும் போது புரொஜக்டர்கள் கொண்ட திரை மூலம் மற்ற தளங்களில் உள்ள வகுப்புகளுக்கு பாடம் நடத்தப் படுகிறது. இந்த பயிற்சி வகுப்பு அப்படியே ஆன்லைன் பயிற்சி வகுப்பாக மாற்றமடைந்து இந்தியாவில் மட்டுமல்லாது வெளிநாட்டு மாணவர்களுக்கும் சென்று சேருகிறது.

அதனால் தான் ஐஏஎஸ் தேர்வுக்கு நேரடியாக பயிற்சி வழங்குவதிலும் முதன்மை ஆன்லைன் மூலம் பயிற்சி வழங்குவதிலும் இந்திய அளவில் முதன்மை இடத்தை சங்கர் ஐஏஎஸ் அகாடமி பெற்றுள்ளது. இந்த பயிற்சி மையம்தான் இரண்டு முறையிலும் பயிற்சி வழங்கும் முதன்மையான இந்திய நிறுவனமும் கூட. பயிற்சியாளர் உரையா டலுடன் இந்தியா மட்டுமல்லாமல் குறிப்பாக துபாய், லண்டன், நேபாளம் நாடுகளில் வசிக்கும் மாணவர்களும் சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு எளிதாக தயாராக முடிகிறது. ஒரு சிறந்த பயிற்சி மையத்தை கண்டுபிடிக்க மிக எளிய வழி அதன் இணையதளம் தான். அதிலும் சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் இணையத்தளம் அதன் பயிற்சி மையத்தை போலவே சிறந்த கட்டமைப்புடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தற்போது சங்கர் ஐஏஎஸ் அகாடமியினை டாக்டர் வைஷ்ணவி சங்கர் மிக திறம்பட நடத்தி வருகிறார்.

மத்திய குடிமைப்பணி தேர்வாணையத்தால் நடத்தப்படும் அகில இந்திய குடிமைப்பணி தேர்வின் முதன்மை தேர்வின் (UPSC Civil Service Main Exam) முடிவு வெளியிடப்பட்டது. இதில் இந்திய அளவில் சுமார் 1994 மாணவர்கள் நேர்முகத் தேர்விற்கு தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழ்நாட்டிலிருந்து சுமார் 131 பேர் தேர்வாகி உள்ளனர். இதில் சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் சென்னை பயிற்சி மையத்தில் 91 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் மற்றும் சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் அனைத்து பயிற்சி மையங்களிலும் (சென்னை, பெங்களூரு, திருவனந்தபுரம்) பயிற்சி பெற்ற 192 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மூன்று நிலைகளை கொண்ட இந்த தேர்விற்கு இந்திய அளவில் கடந்த 2018 ஜூன் 3-ஆம் தேதி நடைபெற்ற முதல் நிலை தேர்வை சுமார் 6.5 லட்சம் மாணவர்கள் எழுதினார்கள். இதிலிருந்து சுமார் 10,468 மாணவர்கள் முதல் நிலை தேர்வில் இருந்து முதன்மை தேர்விற்கு தேர்ச்சி பெற்றனர்.

இதில் தமிழகத்தில் இருந்து சுமார் 530 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இதில் சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் பயிற்சி பெற்ற சுமார் 290 மாணவர்கள் முதன்மை தேர்வை எழுதினார்கள். இவர்களுக்கான இரண்டாம் நிலை தேர்வான முதன்மை தேர்வு கடந்த 2018 செப்டம்பர் 28-ஆம் தேதி முதல் அக்டோபர் 7-ஆம் தேதி வரை நடைபெற்றது.

இந்நிலையில் முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு வரும் 2019 பிப்ரவரி 4-ஆம் தேதியிலிருந்து டெல்லியில் நேர்முகத் தேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்காக சங்கர் ஐஏஎஸ் அகாடமி அகில இந்திய அளவில் மிகச்சிறந்த ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃஎஸ் அதிகாரிகளையும் தலைசிறந்தபல்கலைக்கழகங்களின் பேராசிரியர் களையும் மற்றும் பிற துறைகளை சார்ந்த சான்றோர் களையும் கொண்டு மாதிரி நேர்முகத் தேர்வை நடத்த உள்ளது. இதில் நேர்முகத் தேர்வை எதிர்கொள்ளும் அனைத்து போட்டியாளர்களும் கட்டணம் இன்றி இலவசமாக பங்கேற்கலாம் என சங்கர் ஐஏஎஸ் அகாடமி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இலவச நேர்முகத் தேர்வு பயிற்சியில் பங்குபெற விரும்பும் மாணவர்கள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கும், 6379784702 என்ற அலைபேசி எண்ணிற்கும் தொடர்பு கொள்ளுமாறு சங்கர் ஐஏஎஸ் அகாடமி சார்பில் தெரிவித்துக் கொள்ளப் படுகிறது.

_______________________________________

ஏழை மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சங்கர் அறக்கட்டளை

shankarIAS

2004-ஆம் ஆண்டு டிசம்பர் 4-இல் டி. சங்கர் அவர்களால் தொடங்கப்பட்ட சங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமி, சிவில் சர்வீசஸ் தேர்வுகளுக்கான பயிற்சி யளித்தலில் இந்தியா முழுவதும் மிகவும் போற்றத் தக்கதாகவும், நம்கபத்தன்மை வாய்ந்ததாகவும் திகழ்கிறது.

சங்கர் ஐஏஎஸ் அகாடமியானது அதன் 15-ஆம் ஆண்டு நிறுவன நாளில் "சங்கர் நினைவு கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளை' ஒன்றினைத் தொடங்கியுள்ளது.

"சங்கர் நினைவு கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளையினை" ஐஐடி பேராசிரியர் பத்மஸ்ரீ டாக்டர் அசோக் ஜூன்ஜூன்வாலா தொடங்கிவைத்தார். நியூஸ் 18 தொலைக்காட்சி யின் மூத்த ஆசிரியர் குணசேகரன் முன்னிலை வகித்தார். நக்கீரன் ஆசிரியர் நக்கீரன்கோபால் சிறப்புரை ஆற்றினார்.

""நாடெங்கிலும் உள்ள பொருளாதாரத்தில் பின்தங்கிய கிராமப்புற, நகர்ப்புற மாணவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் அவர்களின் லட்சியக் கனவான சிவில் சர்வீசஸ் தேர்வுகளில் வெற்றியடைவதற்கான ஆதரவினையும் பொருளாதார உதவிகளையும் இந்த அறக்கட்டளை யானது வழங்க உள்ளது'' என சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமி இயக்குனர் டாக்டர் வைஷ்ணவி சங்கர் தெரிவித்தார்.

இந்த அறக்கட்டளை வழங்க உள்ள ஆதரவுகள் மற்றும் உதவிகள் பற்றிய தகவல்களை shankariasacademy.com எனும் இணையதளத்தில் பெறலாம்.