சீனாவின் மக்கள்தொகை குறைந்து வரும் அதே நேரத்தில் இந்தியாவின் மக்கள்தொகை அதிகரித்து வருவதாக தரவுகள் கூறுகிறது. 2022-ஆம் ஆண்டு சீனாவின் மக்கள்தொகை 141 கோடியாக உள்ளது. இதுவே 2021-இல் 141 கோடியாக உள்ளது. ஆனால் இந்தியாவில் 2011-க்கு பிறகு மக்கள்தொகை கணக்கெடுப்பு எடுக்கப்படவில்லை.

ஆனால் ஐ.நா.சபையின் கணிப்புகள் படி 2022-ஆம் ஆண்டு, 141.7 கோடியாக இருந்தது என்று கூறப்படுகிறது. 2023-ஆம் ஆண்டில் மக்கள்தொகை 143 கோடி இருக்கும் என்று கூறப் படுகிறது. இது சீனாவைவிட அதிகம். சீனாவின் மக்கள்தொகை குறைவ தற்கும், இந்தியாவின் மக்கள்தொகை அதிகரிப்பதற்கும் முக்கிய காரணிகள் இருக்கிறது.

ஒரு நாட்டின் இறப்பு சதவிகிதம் குறைந்தால், அந்நாட்டின் மக்கள்தொகை அதிகமாகும். அதுபோல குழந்தை பிறப்பு சதவிகிதம் குறைந்தால், நாட்டின் மக்கள்தொகை குறையும். உதாரணமாக சீனாவின் மக்கள்தொகை குறைந்ததற்கு இதுதான் காரணம். இறப்பின் சதவிகிதம் குறைவதற்கு கல்வி தகுதியில் வளர்ச்சி யடைவதும்,பொது சுகாதாரம், சரியான உணவு மற்றும் மருத்துவம், சுத்தமான தண்ணீர், கழிப்பறை வசதிகள் தேவை.

1950-சீனாவில் ஒரு வருடத்தில் இறக்கும் மக்களின் எண்ணிக்கை ஆயிரம் பேரில் 23 பேர் மரணமடைந்துள்ளனர். இந்தியாவில் இது 22 பேராக இருந்தது. 2020 சீனாவில் 7.3 ஆகவும். இந்தியாவில் 7.4 ஆகவும் உள்ளது.

Advertisment

இந்நிலையில் குழந்தை பிறக்கும் விகிதம் சீனாவில் 1991-ஆம் ஆண்டு வீழ்ச்சியடைய தொடங்கியது. இந்தியாவை விட 30 வருடங்களுக்கு முன்பே இது தொடங்கிவிட்டது. மேலும் சீனாவின் மக்கள்தொகையை கட்டுப்படுத்த ஒரு குழந்தைதான் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற கொள்கையை 1980-களில் சீனா நடைமுறைக்கு கொண்டு வந்தது.

இந்நிலையில் சீனா சந்திக்கபோகும் முக்கிய பிரச்சனைகளில் ஒன்று. பணியாற்றும் மக்களின் சதவிகிதம் குறைய வாய்ப்பிருக்கிறது. பணிபுரியும் மக்கள்தொகை 2045-இல் பாதியாக குறையும். இதனால் கடும் பொருளாதார நெருக்கடியை சீனா சந்திக்கும் என்று கூறப்படுகிறது.

ஆனால் இந்தியாவில் தற்போது மக்கள் தொகை அதிகரித்தாலும். பணிபுரியும் மக்கள்தொகை குறையாது. ஆனால் அதிகரிக்கும் இளைஞர்களின் தொகைக்கு ஏற்றவாறு வேலை வாய்ப்புகள் ஏற்படுத்த வேண்டும் என்று கூறப்படுகிறது.

Advertisment

இந்திய மக்கள்தொகையின் இயல்பு

உலக மொத்த நிலப்பரப்பில் 2.4 சதவீத பரப்பளவு மட்டுமே இந்தியா கொண்டுள்ளது. ஆனால் உலக மக்கள் தொகையில் 16.84 சதவீதத்தை வாழ வைக்க வேண்டியுள்ளது. இந்திய மக்கள்தொகையானது 1901-இல் 238.5 மில்லியனாக இருந்தது 2001-இல் 1,027 மில்லி-யனாக அதிகரித்துள்ளது. ஒரு நூற்றாண்டில் இந்திய மக்கள்தொகை யானது 788.5 மில்லியனாக அதிகரித் துள்ளது. உண்மையிலேயே இந்த அதிகரிப்பு இந்தியாவின் ஒட்டுமொத்த முன்னேற்றத்தை அச்சுறுத்துவதாக உள்ளது.

1921 வரை மக்கள்தொகை வளர்ச்சியானது குறைவான வீதத்தில் இருந்தது. ஆனால் அதன் பிறகு மக்கள்தொகை மிக வேகமாக அதிகரிக்கத் தொடங்கியது.

எனவே தான் 1921-ஆம் ஆண்டு “பெரும்பிரிவினை ஆண்டு' எனப் படுகிறது. 1921-ஆம் ஆண்டிற்கு பிறகு இந்தியா, மக்கள்தொகை வளர்ச்சிக் கட்டத்தின் எல்லா நிலைகளையும் வெற்றிகரமாக கடந்த, தற்போது “மிகக் குறைவான செழுமைக்காலமாக'' கருதப்படும் ஐந்தாவது நிலையில் உள்ளது.

மக்கள்தொகை வளர்ச்சி வீதமானது.

பிறப்பு, வீதம், இறப்பு வீதம் ஆகிய இரு காரணிகளைப் பொருத்து அமையும். இந்திய மக்கள்தொகை அதிகரிப்பு பிறப்பு மற்றும் இறப்பு வீதங்களுக்கிடையேன வேறுபாட்டைப் பொருத்தது. இந்தியாவில் 1901-இல் ஆயிரத்துக்கு 49.2 ஆக இருந்த பிறப்புவீதம் 2001-இல் 25.8 ஆக குறைந்துள்ளது. அதே காலக்கட்டத்தில் ஆயிரத்துக்கு 42.6 ஆக இருந்த இறப்பு வீதம் 8.5 ஆக குறைந்துள்ளது.

இயல்பான வளர்ச்சி வீதமானது (குறிப்பிட்ட காலத்தில் பிறப்பு வீதம் - இறப்பு வீதம்) 1901-1911ல் 6.6 ஆக இருந்தது. 1991-2001-இல் 17.3 ஆக அதிகரித்துள்ளது. இறப்பு வீதத்தில் ஏற்பட்டுள்ள குறைவானது பிறப்பு வீதத்தில் ஏற்பட்டு குறைவைவிட அதிகமாக உள்ளதாக இயல்பான வளர்ச்சி வீதம் விளக்குகிறது. மருத்துவ வசதிகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், தொற்று நோய்கள் மற்றும் கொள்ளை நோய்கள் கட்டுப்படுத்தப்பட்டதும் இறப்பு வீதம் குறைந்ததற்கான காரணமாகும். இது முன்னேற்றத் திற்கான ஒரு நல்ல அறிகுறியாகும்.

குடும்ப நலதிட்டங்கள் கிராமப்புறத்தை நல்ல முறையில் சென்று அடைய வேண்டும். அப்பொழுது தான் பிறப்பு வீதம் இன்னும் குறையும் என்று மக்கள்தொகை கணக்கெடுப்பின் பிறப்பு வீதம் காட்டுகிறது.

உறுதியான முன்னேற்றம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றைக் கொண்ட ஒரு நிலையான மக்கள்தொகையை 2045க்குள் அடைவதையே நீண்டகால நோக்க மாகக் கொண்டு சமீபத்தில் இந்திய அரசால் தேசிய மக்கள்தொகை ((National Population Policy)கொள்கை (2000) நடைமுறைப்படுத்தப்பட்டது.

cc

மக்கள்தொகை கொள்கை

வளரும் நாடுகளுள், மக்கள்தொகைக் கொள்கையை செயல்படுத்திய முதல் நாடு இந்தியாவாகும். மேலும் இது 1952-இல் நாடு தழுவிய அளவில் குடும்ப நலதிட்டத்தையும், அறிமுகப்படுத்தியது. இறப்பு, பிறப்பு வீதங்களின் குறைப்பில் ஒரு குறிப்பிடத்தக்க வேறுபாடு இருத்தல் வேண்டும் என்பதே மக்கள்தொகை கொள்கையின் முக்கிய நோக்கமாகும்.

எந்த ஒரு அரசும் மக்கள்தொகை அமைப்பில் மாற்றத்தையும், கட்டுப்படுத்துவதற்குரிய முயற்சி களையும் மேற்கொள்ள வேண்டும் என்று மக்கள்தொகை கொள்கை கூறுகிறது.

தேசிய மக்கள்தொகை கொள்கை (2000)

"தேவையான கருத்தடை சாதனங்கள் வழங்கியும், சுகாதார கட்டமைப்பு வசதிகள், சுகாதார பணியாளர்கள் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட பணிகள் மூலம் குழந்தை பராமரிப்பை மேம்படுத்துதலே தேசிய மக்கள்தொகை கொள்கை (2000)யின் உடனடி நோக்கமாகும்.

மேலும் இது, மொத்த செழுமை காலத்தை 2010-க்குள் மாற்றி அமைப்பதில் முக்கிய கவனம் செலுத்தியது. மொத்த செழுமைக் காலம் 21 என்பது செழுமைகாலத்தை மாற்றி அமைத்தல் என்பதாகும். 2045-ஆம் ஆண்டிற்குள் மக்கள்தொகையை நிலைப்படுத்துதலே இக்கொள்கையின் நீண்டகால நோக்கமாகும்.

தேசிய மக்கள்தொகை குழுவானது, பிரதம மந்திரி, எல்லா மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் உறுப்பினர் களால் தலைமை தாங்கி தொடங்கப்பட்டு பின் மறுபரிசீலனை செய்யப்பட்டது. தேசிய மக்கள்தொகை குழு போன்று, மாநில அளவிலான குழு, மாநில முதலமைச்சர்களால் தலைமை தாங்கி துவக்கப்பட்டு அதே நோக்கங்களை நடைமுறைப்படுத்தியது.

நிலைப்படுத்துவதற்கான முறைகள்

ஒரு நிலையான மக்கள்தொகையை 2045-க்குள் அடைய கீழ்க்கண்ட முறைகளை தேசிய மக்கள்தொகை கொள்கை கூறுகிறது. குழந்தைகள் இறப்பு வீதத்தை 1,00,000 குழந்தைகளுக்கு 30-க்கு கீழ் குறைத்தல்.

மகப்பேறு காலத்தில் இருக்கும் (ம்ங்ற்ங்ழ்ய்ஹப் ம்ர்ழ்ற்ஹப்ண்ற்ஹ் ழ்ஹற்ங்) தாய்மார்கள் வீதத்தை 1,00,000 குழந்தைகளுக்கு 100-க்கும் கீழ் (தாய்மார்கள்) கொண்டு வருதல்.

80 சதவீத மகப்பேறானது, முறையான மருந்தகம், மருத்துவமனை மற்றும் மருத்துவ நிறுவனங்களில் முறையான பயிற்சியுடைய பணியாளர்கள் மூலம் நடைபெறச் செய்தல் (ஆஒஉந) எய்ட்ஸ் நோய், தொற்று நோய்களை தடைப்படுத்துதல் மற்றும் கட்டுப்படுத்துதல் போன்ற தகவல்களை கொடுத்தல்.

இரு குழந்தைகள் - கொண்ட சிறு குடும்ப கொள்கையை பின்பற்றுபவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்குதல்.

குழந்தைகள் திருமணத்தை தடை செய்யும் திட்டம் மற்றும் குழந்தை பேறு காலத்திற்கு முன் குழந்தையை கண்டறியும் திட்டம் ஆகியவற்றை சீரிய முறையில் செயல்படுத்துதல்.

பெண்கள் திருமண வயதை 18--லிருந்து 20 ஆக உயர்த்துதல்.

21 வயதிற்கு பின் திருமணம் செய்யும் பெண் களுக்கு சிறப்பு வெகுமதி வழங்குதல்.

கிராம பஞ்சாயத்து அளவில் வீட்டிலுள்ள பெண்களை, சுகாதார பணியாளர்களோடும், கிராம பஞ்சாயத்து மக்களோடும் கலந்துரையாடி செயல்படும் சுய - உதவி குழுக்களை செயல்பட செய்தல்.

இலவச மற்றும் கட்டாயமான தொடக்கக் கல்வியை வழங்குதல். பிறப்பு - இறப்பு பதிவு செய்தல் போன்று திருமணத்தை பதிவு செய்தல், கருவுறுதலை பதிவு செய்தல் வேண்டும். 2045-க்குள் நிலைப்படுத்தப்பட்ட மக்கள்தொகையை அடைய முடியுமென அரசு நம்புகிறது.