திரைப்படத்துறையில் சிறந்து விளங்கும் கலைஞர்களை தேர்ந்தெடுத்து ஆண்டுதோறும் ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.
ஆஸ்கர் விருதுக்குழுவில் சுமார் 6100 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்கள் சிறந்த கலைஞர்களை ஒட்டுபோட்டு தேர்ந்தெடுப்பார்கள்.
95-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் ஹாலிவுட்டில் உள்ள டால்பி தியேட்டரில் நடந்தது.
மொத்தம் 24 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன.
சிறந்த படம் - எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்
சிறந்த நடிகர் - பிரெண்டன் ஃப்ரேசர் (த வேள்)
சிறந்த நடிகை - மிச்செல் யோ (எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்)
சிறந்த துணை நடிகர் - கே ஹுய் குவான் (எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்)
சிறந்த துணை நடிகை - ஜேமி லீ கர்டிஸ் (எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்)
சிறந்த இயக்குனர் - டேனியல் கிவான் மற்றும் டேனியல் ஸ்கினெர் (எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்)
சிறந்த திரைக்கதை - டேனியல் கிவான் மற்றும் டேனியல் ஸ்கினெர்ட் (எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்)
சிறந்த ஒரிஜனல் பாடல் - கீரவாணி இசையில் சந்திபோஸ் வரிகளில் உருவான 'நாட்டு நாட்டு' பாடல்
சிறந்த படத்தொகுப்பு - பால் ரோஜர்ஸ் (எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்)
சிறந்த தழுவல் திரைக்கதை - சாரா பா-லி (உமன் டாக்கிங்)
சிறந்த ஒரிஜனல் திரைக்கதை - எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்
சிறந்த பின்னணி இசை - ஆல் குயிட் ஆன் தி வெஸ்டர்ன் ஃப்ரண்ட்
சிறந்த விஷுவல் எபெக்ட்ஸ் - ஜோ லெட்டரி, ரிச்சர்ட் பனேஹாம், எரிக் சைண்டன் மற்றும் டேனியல் பாரெட் (அவதார் : தி வே ஆஃப் வாட்டர்)
சிறந்த ஒரிஜனல் ஸ்கோர் - வோல்கர் பெர்டெல்மேன் (ஆல் குயிட் ஆன் தி வெஸ்டர்ன் ஃப்ரண்ட்)
சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு - ஆல் குயிட் ஆன் தி வெஸ்டர்ன் ஃப்ரண்ட்
சிறந்த சர்வதேச திரைப்படம் - ஆல் குயிட் ஆன் தி வெஸ்டர்ன் ஃப்ரண்ட்
சிறந்த ஆடை வடிவமைப்பு - ருத்.இ.கார்டர் (பிளாக் பாந்தர் : வகாண்டா ஃபாரேவர்)
சிறந்த ஒளிப்பதிவு - ஜேம்ஸ் ஃப்ரண்ட் (ஆல் குயிட் ஆன் தி வெஸ்டர்ன் ஃப்ரண்ட்)
சிறந்த லைவ் ஆக்ஷன் குறும்படம் - அன் ஐரீஷ் குட்பை
சிறந்த ஆவணப்பட திரைப்படம் - நாவ்லனி
சிறந்த ஆவண குறும்படம் - தி எ-ஃலிபெண்ட் விஸ்பரர்ஸ்
சிறந்த ஒப்பனை - ஜூடி சின், அட்ரியன் மோரோட், அன்னே மேரி பிராட்லி (தி வேல்)
சிறந்த அனிமேஷன் திரைப்படம் - கில்லர்மோ டெல் டோரோஸ் பினோச்சியோ
சிறந்த அனிமேஷன் குறும்படம் - தி பாய், தி மோல், தி பாக்ஸ், தி ஹார்ஸ்
சிறந்த ஒ-லி அமைப்பு - மார்க் வீங்கார்டன், ஜேம்ஸ் எச். மாதர், அல் நெல்சன், கிறிஸ் பர்டன் மற்றும் மார்க் டெய்லர் (டாப் கன்: மாவ்ரிக்)
‘எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்’(Everything Everywhere All at Once) திரைப்படம் 7 விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளது.
சிறந்த நடிகையாக தேர்வு செய்யப்பட்ட மிச்செல் யோ, ஆசியாவில் இருந்து சிறந்த நடிகைக்கான விருதினை பெற்றுள்ள முதல் பெண் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆல் குயிட் ஆன் தி வெஸ்டர்ன் ஃப்ரண்ட் திரைப்படம் 4 விருதுகளை வென்றது.
ஆர்.ஆர்.ஆர். படத்தில் சந்திரபோஸ் எழுதி கீரவாணி இசையமைத்த நாட்டு நாட்டு பாடல் சிறந்த ஒரிஜனல் பாடலுக்கான விருதை வென்றது.
மரகதமணி என்ற பெயரில் தமிழில் ஏராளமான படங்களுக்கு இசையமைத்த கீரவாணி ஆஸ்கர் விருதை பெற்றுக் கொண்டார்.
2009-ஆம் ஆண்டில் ஏ.ஆர். ரகுமான் இசையமைத்து, குல்சார் எழுதிய ஸ்லம்டாக் மில்லி-யனர் படத்தின் ஜெய் ஹோ பாடலுக்கு பிறகு இந்தியாவின் பாடலுக்காக கிடைத்த இரண்டாவது ஆஸ்கர் விருது இதுவாகும்.
சிறந்த ஆவண குறும்படத்துக்கான விருதை தி எலி-ஃபெண்ட் விஸ்பரர்ஸ் வென்று தமிழ்நாட்டுக்கு பெருமை தேடி தந்துள்ளது.
ரகு என்ற அனாதை யானைக் குட்டியை பராமரித்த முதுமலை தம்பதியரான பொம்மன் - பெள்ளி வாழ்க்கையை பற்றிய படம் இது. கார்த்திக்கி கோன்சால்வஸ் என்ற பெண் இயக்குனர் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
தமிழ்நாட்டில் படமாக்கப்பட்ட தி எலி-ஃபெண்ட் விஸ்பரர்ஸ் ஆவணப் படம், தெலுங்கில் உருவான ஆர்.ஆர்.ஆர்.
திரைப்படத்தில் இடம் பெற்ற நாட்டு நாட்டு ஆகியன, திரையுலகில் மிக உயரிய விருதான ஆஸ்கரை வென்றுள்ளன.
தமிழகத்தின் முதுமலை பகுதியில் படமாக்கப்பட்ட "எலி-ஃபெண்ட் விஸ்பரர்ஸ்'' ஆவணப்படம் ஆஸ்கர் விருது வென்றுள்ளது.
தமிழகத்தின்ஜ் முதுமலை பகுதியில் யானை பராமரிப்பில் ஈடுபட்டு வரும் பழங்குடி மக்களான பொம்மன், பெள்ளியின் கதை இன்று உலகம் முழுக்க பேசுப்பொருள் ஆகியிருக்கிறது. ஷஎலி-ஃபெண்ட் விஸ்பரர்ஸ்ஷ என்னும் ஆவணப்படம் மூலம் வெளியுலகிற்கு தெரியவந்த இவர்களின் கதை, இன்று உலகின் அத்தனை ஓரங்களிலும் பொம்மன், பெள்ளி என்ற பெயர்களை முணுமுணுக்க வைத்திருக்கிறது.
காட்டுநாயக்கர் பழங்குடிகளான பொம்மன், பெள்ளியின் வாழ்வி யலையும், அவர்களுக்கு யானைகளுடன் இருக்கும் உறவையும் ஷஎலி-ஃபெண்ட் விஸ்பரர்ஸ்ஷ படத்தில் மிகவும் உணர்வுப்பூர்வமாக பதிவு செய்திருந்தார் இந்த ஆவணப் படத்தின் இயக்குநர் கார்த்திக்கி கோன்சால்வஸ்.
சென்னையில் உள்ள அரசு தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலி-ன் இந்த தம்பதியை அழைத்து இருவருக்கும் பொன்னாடை அணிவித்து வாழ்த்தினார். அத்துடன் ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை யையும் அவர் வழங்கினார்.
முதுமலை யானைகள் காப்பகத்தில் பராமரிப்பாளர்களாகப் பணியாற்றும் பொம்மன், பெள்ளி, இதுவரை நீலகிரி மலையை தவிர பிற வெளியூர்களுக்கு அதிகம் சென்றதில்லை என்றும் முதன் முறையாக சென்னை நகர்ப்புறத்துக்கு வந்து முதல்வரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றது மிகவும் வியப்பைத் தந்தாக கூறுகின்றனர்.
"நாங்கள் யானை குட்டியை வளர்த்த கதையை உலகம் முழுவதும் பலரும் பார்க்கிறார்கள். எங்களைப் பற்றிய படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது என்பது மிகவும் பெருமையாக உள்ளது. மகிழ்ச்சியைச் சொல்ல வார்த்தைகளே இல்லை. சென்னை நகருக்கு முதல் முறையாக வந்திருக்கிறோம். முதல்வரை நேரில் சந்திப்போம் என்பதை நாங்கள் கனவில் கூட நினைத்ததில்லை,'' என்று இருவரும் கூறினர்.
தாயைப் பிரிந்த குட்டி யானைகளை இந்தத் தம்பதி எப்படி பராமரித்தனர் என்பதை மையமாகக் கொண்டதுதான் தி எலி-ஃபெண்ட் விஸ்பரர்ஸ் ஆவணப் படம். அதில் யானைகளுக்கும் இவர் களுக்கும் இடையிலான உறவை வெளிப்படுத்தும் காட்சிகளை பலரும் வியந்து சமூகவலைத்தளத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
யானை ரகுவை பற்றிப் பேசிய பொம்மன், "முதலி-ல் எங்களிடம் யானை குட்டி வந்தபோது மோசமாக காயமடைந்த நிலையில் இருந்தது. மருத்துவர்கள், அதிகாரிகள் எங்களிடம் யானையை எப்படி பார்த்துக் கொள்ளவேண்டும் என விளக்கினார்கள். எங்கள் குடும்ப உறுப்பினராகத்தான் ரகுவை பார்த்தோம். நாங்கள் டீ குடித்தால், ரகுவுக்கு ஒரு டப்பாவில் பாலை ஊற்றிக் கொடுப்போம். எங்களில் ஒருவராக யானை குட்டி வளர்ந்ததால், எங்கள் பேரன், பேத்திகள் எங்களை பார்க்க வரும்போது, யானைக் குட்டி அவர்களுடன் விளையாடும்,'' என யானையுடன் இருந்த நினைவுகளை பகிர்ந்தார்.
இந்தி, தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் சேர்ந்த ஒரு கலவையான மொழியில் யானையுடன் பேசியதாகவும், அதற்கு யானை கட்டுப்படும் என்றும் கூறுகிறார் பெள்ளி.
"ஆஸ்கர் விருது கிடைக்கும் என்று எங்களுக்கு தெரியாது. நாங்கள் யானையை எப்படி பராமரிக்கிறோம் என்று அவ்வப்போது வந்து படம் எடுப்பார்கள், அதுதான் படமாக வரப்போகிறது, அந்த படத்திற்கு விருது கிடைக்கப்போகிறது என்று அப்போது தெரியாது. இந்த படம் விருது பெற்ற பின்னர், எங்களை போன்ற யானை பராமரிப்பாளர்களின் வாழ்க்கையைப் பற்றி பொதுமக்கள் தெரிந்து கொள்கிறார்கள் என்பது கூடுதல் மகிழ்ச்சி,'' என்கிறார் பெள்ளி.
பொம்மன், பெள்ளியை கௌரவித்த துடன், முதுமலை மற்றும் தெப்பக்காடு யானை காப்பகத்தில் உள்ள 91 பணியாளர்களுக்கும் ரூபாய் ஒரு லட்சம் வழங்கப்படும் என்றும் யானை பராமரிப்பாளர்களுக்கு புதிய வீடு கட்டுவதற்கு ரூ. 9.10 கோடி நிதி ஒதுக்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மேலும், ஆனைமலையில் உள்ள யானைகள் முகாமை மேம்படுத்த ரூபாய் ஐந்து கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அரசு அறிவித்துள்ளது.
கோல்டன் குளோபைத் தொடர்ந்து ஆஸ்கர் விழா மேடையிலும் ஆர்ஆர்ஆர் படத்தில் இடம் பெற்ற நாட்டு நாட்டு பாடல் வெற்றிக் கொடி நாட்டியுள்ளது. சிறந்த ஒரிஜினல் இசைக்கான ஆஸ்கர் விருதை அந்த பாடல் வென்றுள்ளது. இதன் மூலம் கோடிக்கணக்கான இந்தியர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளது.
கீரவாணி இசையில் உருவான இந்த பாடலுக்கு சந்திரபோஸ் வரிகள் கொடுத்துள்ளார். இந்திய மொழித் திரைப்படங்களில் ஆஸ்கர் விருதுக்குத் தேர்வான முதல் முழு நீளப் படம் என்ற பெருமையை ஆர்ஆர்ஆர் பெற்றுள்ளது.
நாட்டுக்கூத்து பாட-லின் காணொளி உக்ரைன் அதிபர் வொலோதிடிர் ஜெலென்ஸ்கியின் அதிகாரப்பூர்வ இல்லத்தின் முன்பாக இந்தப் பாடல் 2021-ஆம் ஆண்டில் ஒளிப்பதிவு செய்யப்பட்டது.