உலக சாதனை படைக்கும் இந்திய ராக்கெட்

/idhalgal/general-knowledge/indian-rocket-world-record

1966-இல் முதன்முதலில் விண்ணுக்கு ஏவப்பட்ட சோயூஸ் வகை ராக்கெட்டுகள்தான் இதுவரை வடிவமைக்கபட்ட ராக்கெட்டுகளிலேயே மிகவும் நம்பகமான ராக்கெட் என பெயரெடுத்துள்ளது.

இன்றுவரை அமெரிக்க விண்வெளி வீரர்கள் உட்பட மனிதர்கள் அனைவரை யும் சர்வதேச விண்வெளிக் குடிலுக்கு ஏந்தி செல்ல பயன்படுத்தப்படுவது இந்த வகை ராக்கெட்டுகள்தாம்.

சோயூஸ்(SOYUZ) ராக்கெட்டின் புதுப்பித்த வடிவமைப்பான "சோயூஸ் யூ' கடந்த 1976-ஆம் ஆண்டு ஏவப்பட்டது. அதிலிருந்து 2017-இல் ஓய்வு கொடுக்கும் வரை "சோயூஸ் யூ' ராக்கெட் மொத்தம் 786 தடவை ஏவப்பட்டுள்ளது. அதில் வெறும் 22 தடவை மட்டுமே தோல்வி. எனவே இந்த ராக்கெட்டின் திறம் 97.3%.

தற்போது சர்வதேச விண்வெளிக் குடிலுக்கு விண்வெளி வீரர்களை ஏந்தி செல்லும் இதன் மற்றொரு வடிவம்தான் 2001-இல் உருவாக்கபட்ட "சோயூஸ்-FG'. இதுவரை மொத்தம் 65 தடவை ஏவப்பட்டுள்ள இந்த ராக்கெட், கடந்த அக்டோபர் மாதத்தன்று முதல் விபத்தை சந்தித்தது. எனவே இதன் திறம் 98.4% இதனை மேலும் செழுமைப்படுத்திய வடிவமான "சோயூஸ்-2' கடந்த 2006-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதன்முதலில் விண்ணில் ஏவப்பட்டது. இதுவரை 80 முறை ஏவப்பட்ட இந்த ராக்கெட்டில் 73 வெற்றியடைந்துள்ளது. எனவே, இதன் வெற்றி விகிதம் 91.3%. வரும் 2019-ஆம் ஆண்டு முதல் இந்த ராக்கெட்தான் அமெரிக்க வீரர்கள் உட்பட எல்லா விண்வெளி வீரர்களையும் விண்ணுக்கு எடுத்து செல்லும்.

சோவியத் பொறியியலாளர் சேர்கே கொரோலேவ் (Sergei Korolev) என்பவரால் வடிவமைக்கப்பட்டு "ஸ்புட்னிக் 1' செயற்கைகோளை முதன்முதலில் விண்வெளிக்கு எடுத்து சென்ற "த-7' ராக்கெட் குடும்பத்தைச் சேர்ந்த சோயூஸ் தான் இன்றளவும் பயனில் இருக்கிறது. அப்படியென்றால், அந்த வடிவ மைப்பின் மகத்துவம் நமக்கு பிரமிப்பை ஏற்படுத்துகிறது.

அந்த வடிவமைப்பே மேலும் மேலும் புத்தாக்கம் செய்யப்பட்டு இன்றளவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது ஆண்டுதோறும் சுமார் 60 சோயூஸ் ராக்கெட்டுகள் ஏவப்பட்டு வருகின்றன.

ரஷ்யாவின் இந்த ராக்கெட் ஏற்படுத்திய சாதனைக்கு வேறு நெருக்கமாக இஸ்ரோவின் பிஎஸ்எல்வி ராக்கெட்

ரஷ்யாவின் இந்த ராக்கெட் ஏற்படுத்திய சாதனைக்கு வேறு நெருக்கமாக இஸ்ரோவின் பிஎஸ்எல்வி ராக்கெட் செயல்படுகிறது.

இஸ்ரோவில் 1970-களில் உருவாக்கப் பட்ட எஎஸ்எல்வி எனும் ராக்கெட்டின் செழுமை வடிவம் தான் இந்த பிஎஸ்எல்வி ராக்கெட். IRS-1E என்ற தொலைஉணர்வு செயற்கைகோளை ஏவ 1993-இல் முதன்முதலில் பிஎஸ்எல்வி பயன்படுத்தப்பட்டபோது அது தோல்வியை சந்தித்தது.

அதன் பின்னர், மேலும் பிழை திருத்தங்கள் செய்யப்பட்டு செழுமை அடைந்த பிஎஸ்எல்வி (PSLV-D2) ராக்கெட் 1994-லிலும், 1996-லிலும் ஏவப்பட்டது. அப்போது அவை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டன. இந்த வெற்றிகளுக்கு பிறகு கடந்த 1996-ஆம் ஆண்டு செப்டம்பர் 29-ஆம் தேதி IRS-1D செயற்கைகோளை ஏவி, அது பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.

அதுமுதல் இதுவரை ஒரு தோல்வியும் இல்லாமல் நிலவுக்கு சென்ற சந்திராயன், செவ்வாய்க்கு சென்ற மார்ஸ் ஒர்பிடர் மிஷன் உட்பட அடுத்தடுத்த 43 தொடர் வெற்றியை சந்தித்து உலகை வியக்க வைத்துள்ளது.

அதுமட்டுமல்ல சிறு மற்றும் நுண் செயற்கைகோள் களை ஏவவும் இந்த ராக்கெட்தான் பொருத்த மானது என சர்வ தேச அளவில் ஏற்றுக்கொள்ளப் படும் படியாக, ஒரே ஏவுதலில் நூறு சிறு மற்றும் நுண் செயற்கைகோள்களை பல்வேறு சுற்றுப்பாதையில் ஏவி சாதனை புரிந்துள்ளது. உலகில் மற்றொமொரு நம்பிக்கையான ராக்கெட் என்ற பெயரை எடுத்துள் ளது. நான்கு கட்ட நிலை கொண்ட பிஎஸ்எல்வி ராக்கெட்டின் முதல் நிலையானது, திட எரிபொருள் கொண்டு இயங்குகிறது.

இரண்டாம் நிலை, இந்தியாவிலேயே வடிவமைக்கப் பட்ட விகாஸ் எஞ்சினால் திரவ எரிபொருள் கொண்டு இயங்குகிறது. மூன்றாவது நிலை மறுபடியும் திட எரிபொருள். பொதுவாகவே, விண்வெளியில் இயங் கும் நான்காவது நிலை திரவ எரிபொருள்.

மற்ற உயர் திறன் கொண்ட ராக்கெட்டுகள், 4 அல்லது 5 டன் சுமையை 45,000 கிமீ உயரத்துக்கு எடுத்து செல்ல வல்லவை. ஆனால், 600 கிமீ உயர தாழ் விண்வெளி பாதைக்கு சுமார் 3,800 கிலோ சுமையையும் பூமியிலிருந்து சுமார் 45,000கிமீ உயரத்தில் உள்ள புவி நிலைப்பு சுற்றுப்பாதைக்கு 1,200 கிலோ பொதியும் தான் ஏந்தி செல்ல முடியும்.

ஆயினும், தற்போது பெருகி வரும் நானோ மற்றும் நுண் செயற்கைகோள்களை தாழ் விண்வெளி பாதையில் செலுத்த நம்பகமான மற்றும் செலவு குறைந்த வாய்ப்பாக பிஎஸ்எல்வி ராக்கெட்டை உலகம் பார்க்கிறது.

மின்னணு கருவிகள் வெகுவேகமாக வளர்ந்து வரும் நிலையில், 20, 30 ஆண்டுகள் பழைய செயற்கைகோளை இயக்கினால் அதில் உள்ள மின்னணுக் கருவிகள் பழமை அடைந்துவிடும்.

எனவே, வெறும் 4 அல்லது 5 ஆண்டுகள் பயன்படும் வகையில் தாழ் உயரத்தில் சிறு அல்லது நுண் செயற்கைகோள்களை அனுப்புவதில் பலரும் ஆர்வம் காட்டிவருகின்றனர். இந்த விண்வெளி சந்தையில், நம்பகமும் விலைமலிவும் கொண்ட பிஎஸ்எல்வி அனைவரையும் ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3

அதிநவீன தகவல் தொடர்பு செயற்கைக்கோளான ஜிசாட்-29 செயற்கைக்கோளை ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 டி-2 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டா வில் உள்ள சதீஷ்தவண் விண்வெளி ஆய்வு மையத்தின் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது இந்திய விண்வெளி ஆய்வு மையம்.

செயற்கைக்கோளை தாங்கிச் சென்ற ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 டி-2 ராக்கெட் முற்றிலும் உள்நாட்டிலேயே இந்திய விண்வெளி ஆய்வு மையத்தால் வடிவமைக்கப்பட்டதாகும்.

இந்த ராக்கெட் 4 ஆயிரம் கிலோ எடைக் கொண்ட செயற்கைக்கோளை தாங்கிச் சென்று விண்ணில் புவியின் நீள்சுற்று வட்டப்பாதையில் நிலைநிறுத்தக் கூடியது. இந்திய விண்வெளி ஆய்வு மையம் உருவாக்கிய இரண்டாவது மேம்படுத்தப்பட்ட ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 டி-2 ராக்கெட் இது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 டி-2 (GSLV MK III)

ராக்கெட் 3 அடுக்குகளைக் கொண்டது. இதில் 2 அடுக்குகளில் திட எரிபொருளும், ஒரு அடுக்கில் திரவ எரிபொருளும் நிரப்பப்பட்டுள்ளன. இந்த எரிபொருளை தவிர மிகவும் திறன் வாய்ந்த கிரியோஜெனிக் எரிபொருள் நிரப்பப்பட்ட அடுக்கு இவற்றிற்கு மேல் உள்ளது. இந்த ராக்கெட் 26.2 மீட்டர் உயரம் கொண்டது.

rocket

விண்ணில் செலுத்தப்பட்ட ஜிசாட்-29 செயற்கைக்கோள் பூமத்திய ரேகை பகுதியில் மேற்கிலிருந்து கிழக்காக பூமியை சுற்றி வரும்.

ராக்கெட்டிலிருந்து செயற்கைக்கோள் செலுத்தப்பட்ட பின் செயற்கைக்கோளில் பொருத்தப் பட்டுள்ள சிறிய உந்து சக்தி கருவி இயக்கப்பட்டு செயற்கைக்கோள் நிர்ணயிக்கப்பட்ட அதன் சுற்று வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்படும். செயற்கைக்கோள் தொடர்ந்து 10 ஆண்டுகள் செயல்பாட்டில் இருக்கும். இந்த செயற்கைக்கோளில் நவீன கே.யு. மற்றும் கே.ஏ. பாண்டுகள் மற்றும் தகவல் தொடர்புக்கான கியூ.வி. பாண்டுகள் இடம் பெற்றுள்ளன. இவைத் தவிர உயர்த் திறன் கொண்ட கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த செயற்கைக்கோள் நாட்டில் கிராமப்புறங்களில் தகவல் தொடர்பு தேவையை பூர்த்தி செய்வதோடு அதிவேக இணையதள வசதியையும் அளிக்கும்.

ஜி.எஸ்.எல்.வி.-எப் 11

ஜிசாட்-7ஏ செயற்கைக்கோளுடன் ஜி.எஸ்.எல்.வி.-எப் 11 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டா சதிஷ் தவண் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் இரண்டாவது ஏவுதளத்திலிருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. மூன்று நிலைகளைக் கொண்ட இந்த ராக்கெட்டின் முதல் நிலையில் திட எரிபொருள் என்ஜின்களும் இரண்டாவது நிலையில் ஒரு திரவ எரிபொருள் என்ஜினும், மூன்றாவது நிலையில் அதிக திறன் கொண்ட கிரையோஜெனிக் என்ஜினும் பொருத்தப்பட்டிருந்தன.

ராக்கெட் ஏவப்பட்ட 18 நிமிடங்கள் 21 விநாடிகளில் அதில் இணைக்கப்பட்டிருந்த செயற்கைக்கோள் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டு திட்டமிட்டபடி பூமிக்கு அருகே 170 கிலோமீட்டர் தூரத்திலும், பூமிக்கு தொலைவில் 33,190 கிலோமீட்டர் தூரத்திலும் நீள்வட்டப் பாதையில் புவியை சற்றிவரும் வகையில் தற்காலிக சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.

நிலைநிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து செயற்கைக் கோளில் இடம்பெற்றிருக்கும் அப்போஜி திரவ என்ஜின் தரைக் கட்டுப்பாட்டு அறை மூலம் இயக்கப்பட்டு படிப்படியாக அடுத்த சில தினங்களில் செயற்கைக்கோள் உயர்த்தப்பட்டு திட்டமிடப்பட்ட இறுதி புவிசுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்படும்.

பின்னர் செயற்கைக்கோளில் உள்ள சூரியசக்தித் தகடுகள் விரிக்கப்பட்டு இயக்கத்துக்கு கொண்டு வரப்பட்டு, தகவல்கள் அனுப்பப்பட உள்ளன.

இந்த செயற்கைக்கோள் முழுவதும் இந்திய விமானப் படையின் பயன்பாட்டுக்காக அனுப்பப் பட்டுள்ளது. இதன் மூலம் விமானப்படைக்குச் சொந்தமான அனைத்து தரவுகளும் தகவல்தொடர்பு மூலம் இணைக்கப்பட உள்ளன. குறிப்பாக விமானப்படைக்குச் சொந்தமான விமானங்கள், விமானங்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் திட்டம், ஆளில்லா விமானங்கள், தரைக்கட்டுப்பாட்டு அறை என விமானப்படைக்குச் சொந்தமான அனைத்தும் இந்த செயற்கைக்கோள் மூலம் தகவல்தொடர்பில் இணைக்கப்பட உள்ளன என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

இஸ்ரோ தலைவர் கே.சிவன் பேசியதாவது ஜிசாட்-7ஏ செயற்கைக்கோள் திட்ட வெற்றி இஸ்ரோவுக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும். இது இந்தியா சார்பில் கடந்த 35 நாட்களில் அனுப்பப்பட்டுள்ள மூன்றாவது தகவல்தொடர்பு செயற்கைக்கோள் திட்டமாகும்.

கடந்த நவம்பர் 14-இல் ஜி.எஸ்.எல்.வி. மார்க்3-டி-2 ராக்கெட் மூலம் ஜிசாட்-29 தகவல்தொடர்பு செயற்கைக்கோள் திட்டமும், நவம்பர் 29 அன்று பி.எஸ்.எல்.வி-சி43 ராக்கெட் மூலம் ஹைசிஸ் தகவல்தொடர்பு செயற்கைக்கோள் திட்டமும், இப்போது ஜிசாட்-7ஏ தகவல்தொடர்பு செயற்கைக்கோள் திட்டமும் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளன. இந்த திட்டத்தை பொருத்தவரை ஜி.எஸ்.எல்.வி ராக்கெட், செயற்கைக்கோள் இரண்டிலும் பல்வேறு மேம்பாடுகளை இஸ்ரோ கொண்டுள்ளது. மூன்று நிலைகளைக் கொண்ட இந்த ராக்கெட்டின் இரண்டாவது நிலை எரிபொருள் நிரப்பும் திறன் 37.5 டன் என்ற அளவிலிருந்து 40 டன் அளவாக உயர்த்தப்பட்டுள்ளது. அதுபோல கிரையோஜெனிக் நிலையில் எரிபொருள் நிரப்பும் திறன் 12 டன் எடை அளவிலிருந்து 15 டன் என்ற அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது.

அதுபோல செயற்கைக்கோளிலும் அதிநவீன ஆன்டனாக்கள் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங் கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதுபோல புதிய தொழில்நுட்பங்கள் சேர்க்கப்பட்டிருப்பதால், நாங்கள் எதிர்பார்த்ததைக் காட்டிலும் 2,000 கிலோமீட்டர் கூடுதல் தூரத்தில் செயற்கைக்கோளை நிலைநிறுத்த முடிந்துள்ளது. எனவே, இந்த வெற்றி இஸ்ரோவுக்கு மிக முக்கியமான வெற்றியாகும்.

வருகிற 2019-ஆம் ஆண்டில் முக்கியமான பல ராக்கெட் மற்றும் செயற்கைக்கோள் திட்டங்களை இஸ்ரோ செயல்படுத்த உள்ளது. ராக்கெட், செயற்கைக்கோள் திட்டங்கள் என மொத்த 32 திட்டங்களை 2019-இல் செயல்படுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது என்று சிவன் கூறினார்.

gk010119
இதையும் படியுங்கள்
Subscribe