"இந்தியாவும் பாகிஸ்தானும் காஷ்மீர் மூலம் அணுசக்தி யுத்தத்தை நடத்துவதற்கு எல்லா சாத்தியங்களும் உள்ளன'' என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அண்மையில் கூறியுள்ளார்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அல்ஜசீரா தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ""இந்தியாவும் பாகிஸ்தானும் காஷ்மீர் மீது அணுசக்தி யுத்தத்தை நடத்துவதற்கு எல்லா சாத்தியங்களும் உள்ளன.- இது இந்திய துணைக் கண்டத்திற்கு அப்பால் செல்லக்கூடிய ஒரு பேரழிவாகும்'' என்று கூறினார்.
ஒரு அணு ஆயுத நாடு மரணங்களை ஏற்படுத்துவதற்கு போராடுகிறது என்று எச்சரித்த இம்ரான் கான் ""பாகிஸ்தான் என்று சொன்னால் கடவுள் தடுப்பார். நாங்கள் ஒரு வழக்கமான போரை எதிர்த்துப் போராடுகிறோம். நீங்கள் சரணடைய வேண்டும் அல்லது உங்கள் சுதந்திரத்திற்காக மரணம் அடையும் வரை போராட வேண்டும் என்ற ஒரு நாடு தேர்வுக்கு இடையில் சிக்கிக்கொண்டால் பாகிஸ்தானியர்கள் தங்கள் சுதந்திரத்திற்காக மரணம் வரையில் போராடுவார்கள் என்பது எனக்குத் தெரியும்'' என்று கூறினார்.
பாகிஸ்தான்

பாகிஸ்தான் ஒருபோதும் இந்தியாவுடன் ஒரு போரை தொடங்காது என்ற தனது முந்தைய கூற்றை மீண்டும் வலியுறுத்திய இம்ரான் கான், ""நான் தெளிவாக இருக்கிறேன்: நான் ஒரு சமாதானவாதி, நான் போருக்கு எதிரானவன். போர்கள் எந்தவொரு பிரச்சினையையும் தீர்க்காது என்று நான் நம்புகிறேன். இரண்டு அணு ஆயுத நாடுகள் சண்டையிடும்போது, அவர்கள் ஒரு வழக்கமான போரை எதிர்த்துப் போராடினால், அது அணுசக்தி யுத்தத்தில் முடிவடையும் சாத்தியம் உள்ளது. அது யோசிக்க முடியாதது.'' என்று கூறினார்.
அணு ஆயுதத்தை முதலில் பயன்படுத் துவது இல்லை (சஎம) என்ற அடல் பிஹாரி 2003 கோட்பாடை இதுவரை இந்தியா கண்டிப்புடன் கடைபிடித்து வந்துள்ள நிலையில், தற்போதைய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்தக் கோட்பாடு எதிர்காலத்தில் என்ன ஆகிறது என்பது சூழ்நிலைகளைப் பொறுத்தது தான் அமையும் என்று அண்மையில் தெரிவித்தார்.
அணு ஆயுதத்தை முதலில் பயன்படுத் துவது இல்லை என்ற கோட்பாடு வந்தவிதம் ஜனவரி 4, 2003 அன்று, வாஜ்பாய் இந்தியாவின் பிரதமராக இருந்தபோது, நாட்டின் அணுசக்தி கொள்கையை ஆய்வு செய்ய பாதுகாப்பு அமைச்சரவைக் குழு (சிசிஎஸ்) கூடியது. மேலும், அன்றே ஒளிவு மறைவுமின்றி இந்திய அணு ஆயுதக் கொள்கையில் உள்ள முக்கிய சாராம்சங்களை இந்தியாவின் குடிமக்களுக்கு உரைத்தது.
அந்தக் அணு ஆயுதக் கொள்கைகளில் மிக முக்கியமாக இருப்பது முதலில் பயன்படுத்துவது இல்லை என்ற கோட்பாடே ஆகும்.
அதாவது இந்திய பிரதேசத்தின் மீது அல்லது இந்தியப் படைகள் மீது அணுசக்தி தாக்குதல் பிற நாடுகள் நடத்தினால் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மட்டுமே இந்திய அரசு தனது அணு ஆயுதங்களை அந்நாட்டின் மீது பயன்படுத்தப்படும்.
ஆனால், பதிலடி மிகவும் அபாயகர மாகவும், கடும் சேதத்தை உருவாக்கும் தன்மையில் இருக்கும் என்பது அக்கோட்பாடின் இன்னொரு அம்சமாகும்.
மேலும், இந்தியாவின் அணு ஆயுதக் கோட்பாடு இதையும் சொல்கின்றன:
1) பிற நாடுகளின் மேல் அணு ஆயுத தாக்குதலுக்கான முடிவுகளை இந்தியா வின் வெளிப்படையான குடிமை அரசியலுக்குள் கொண்டுவரப்படும். அது, ராணுவத்தின் கையில் விடப்படாது. பிரதம மந்திரியின் தலைமையின் கீழ் செயல்படும் அணு கட்டளை ஆணையம் என்ற அமைப்பின் மூலமே, அணு ஆயுத தாக்குதல் தொடர்பான முடிவுகள் அங்கீகரிக்கப்படும்.
2) இந்தியா தனது அணுத் தாக்குதலை, அணு ஆயுதம் இல்லாத நாடுகள் மீது பயன்படுத்தாது.
3) அணுசக்தி மற்றும் ஏவுகணை தொடர்பான பொருட்கள் மற்றும் தொழில்நுட்பங்களை ஏற்றுமதி செய்வதில் இந்தியா தொடர்ந்து கடுமை யான கட்டுப்பாடுகளை பின்பற்றும்.
அணுவைப் பிளக்க உதவும் பிஸ்ஸைல் மெட்டீரியல் கட்டுப்படுத்தும் ஒப்பந்த பேச்சுவார்த்தைகளில் தொடர்ந்து பங்கேற்கும். மேலும், அணுசக்தி சோதனைகள் தொடர்பான தடைகளை கவனத்தில் வைத்திருக்கும்.
4) அணு ஆயுதம் இல்லாத உலகை உருவாக்க இந்திய தொடர்ந்து போராடும். உலக நாடுகள் அனைவருக்கும் பொருந்தக்கூடிய நியாயமான மற்றும் பாகுபாடற்ற அணு ஆயுதக் குறைப்பு நடவடிக்கையில் ஈடுபடும்.
வாஜ்பாயின் அணு ஆயுதக் கோட்பாடை அடுத்தடுத்து வந்த இந்திய அரசுகள் நேரடியாகவோ, மறைமுகமாகவும் ஒத்துக்கொண்டிருந்தலும், இந்தக் கோட்பாடை மறு ஆய்வு செய்யப்படவேண்டும் என்ற கோரிக்கை பல சமயங்களிலும், பல சூழ்நிலைகளிலும் எழுப்பப்பட்டு தான் வருகிறது.
கடந்த 2014-ஆம் ஆண்டு, அப்போது பிரதமர் வேட்பாளராக இருந்த நரேந்திரமோடியும் தனது தேர்தல் வாக்குறுதியில் இந்தியாவின் அணு ஆயுதக் கோட்பாடு புதிப்பிக்க வேண்டும், தேவைப்பட்டால் மாற்றப்பட வேண்டும் என்று சொல்லி இருந்தார். இருந்தாலும், பதவிக்கு வந்த பின்னர் அதே பிரதமர், தற்போது நடைமுறையில் இருக்கும் அணு ஆயுதக் கோட்பாடு இந்தியாவின் கலச்சாரத் தன்மையை பிரதிபலிப்ப தாகவே உள்ளது, என்று தெரிவித்தார்.
2016-இல் மறைந்த இந்தியாவின் முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் ""இந்தியாவின் அணு ஆயுத கோட்பாடு கேள்வியாக்கப்பட வேண்டும்.
எல்லா சூழ்நிலைகளிலும் இந்த கோட்பாடு பயன்படாது'' என்று தெரிவித்தார்.
மேலும், இது அரசின் கொள்கை இல்லை, எனது தனிப்பட்ட கருத்து. நாம் ஏன் நமக்கே கட்டுப்பாடு வைக்க வேண்டும். நாம் ஏன் அணு ஆயுதத்தை முதலில் பயன்படுத்தமாட்டேன் என்ற வாக்குறுதியைக் கொடுக்க வேண்டும், என்பது போல் அவரது வாதங்கள் இருந்தன .