இந்திய அணுசக்தி திட்டம்!

/idhalgal/general-knowledge/indian-nuclear-program

ணுசக்தி உலகில் இந்தியா வலுவாக கால் பதித்துவிட்டது. சரியாக சொல்வது என்றால் இந்தியாவின் அணு வயது தொடக்கம் 1956-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4-ஆம் தேதியாகும். அன்றைய தினம் இந்தியாவின் அப்சரா எனும் முதலாவது அணுஉலை செயல்பாட்டுக்கு வந்தது. இங்கிலாந்தின் அணு எரிபொருள் வினியோக குத்தகை ஒப்பந்தத் துடன் இந்தியாவே இந்த அணு ஈனுலையை கட்டி உருவாக்கியது.

நமது இரண்டாவது அணுஉலை சைரஸ் (CIRUS)ஆராய்ச்சி பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்டது.

அது கனடாவின் ஒத்துழைப்புடன் கட்டப்பட்டு 1960 முதல் செயல்பாட்டுக்கு வந்தது.

இந்த ஆய்வு அணு உலைகள் நியூட்ரான் இயற்பியல் குறித்த ஆய்வுக்கு அடித்தளமாக அமைந்தன. அதாவது நியூட்ரான் கதிர்வீச்சு மற்றும் ரேடியோ ஐசோடோப் (அயனி) உற்பத்தி சார்ந்த படிப்புகள் பற்றிய ஆய்வுக்கு உதவியது. பின்னாளில்இது புற்றுநோய், போன்ற நோய்களை கண்டறிந்து குணப்படுத்தவும், தொழில்துறை சார்ந்த பயன்பாட்டுக் களுக்கும் குறிப்பாக அழிவுதராத ஆய்வுப் பணிகளுக்கும் பயன்பட்டது.

மின் உற்பத்தி சார்ந்த அணுசக்தி திட்டங்கள் 1969-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கியது. தாராபூரில் இதற்காக இரண்டு அணுஉலைகள் அமைக்கப்பட்டன. தாராபூர் அணு உலையை அமெரிக்காவின் ஜெனரல் எலக்டிரிக் நிறுவனம் கட்டித்தந்தது. அது தற்போது 48-வது ஆண்டாக சேவை வழங்கி வருகிறது. தாராபூர் மின் உற்பத்தி நிலையம் நாட்டிலேயே நீர் மின்உற்பத்தி சாராத மின் உற்பத்தியை மிக குறைந்த செலவில் உற்பத்தி செய்து தருகிறது.

atomicpowerstation

இந்தியாவின் 2-வது மின் உற்பத்தி அணு உலை ராஜஸ்தானில் கோட்டா அருகே அமைக்கப்பட்டது. இதன் முதலாவது அணு உலை 1972-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் செயல்பாட்டிற்கு வந்தது. இந்த அணு உலையின் இரு உற்பத்தி பிரிவுகளும் கனடாவின் ஒத்துழைப்போடு உருவாக்கப்பட்டன.

இந்த அணு உலைகளில் இயற்கை யுரேனியம் எரிபொருளாக பயன்படுத்தப்படுகிறது. இந்த அணு உலைக்கு கன நீரும் தேவை. சாதாரண நீரை அனுப்பி தொடர் வினைகள் மூலம் கன நீர் பிரித்து எடுத்துக் கொள்ளப்படுகிறது.

இந்தியாவின் 3-வது அணு உலை சென்னையைஅடுத்த கல்பாக்கத்தில் முற்றிலும் இந்தியாவின் வடிவமைப்பில் உருவாக்கப்பட்டது. இங்குள்ள அனைத்து கரு

இந்தியாவின் 3-வது அணு உலை சென்னையைஅடுத்த கல்பாக்கத்தில் முற்றிலும் இந்தியாவின் வடிவமைப்பில் உருவாக்கப்பட்டது. இங்குள்ள அனைத்து கருவிகளும், தளவாடங்களும் இந்திய தயாரிப்பாகும். இதுபோன்ற அணு உலைகளுக்கு தேவையான கருவிகளை உற்பத்தி செய்யக்கூடிய தகவமைப்புகள் அப்போது இந்திய தொழிற்சாலைகளுக்கு இல்லை என்பதால் அதனை உற்பத்தி செய்வது சவாலாக இருந்தது.

அணு எரிபொருள் சிர்கோனியம் கூட்டுப் பொருட்கள், கன நீர் உற்பத்தி, போன்றவவை பாபா அணு ஆராய்ச்சி மைய ஆய்வகங்களில் பெரும் சவாலான பணியாக இருந்தது. இங்கு முதல் அணுஉலை மையங்கள் கட்டப்பட்டு பிறகு தொழிற்சாலை சார்ந்த சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. எனவே சென்னை அணுமின் நிலையம் 1983-ஆம் ஆண்டு ஜூலை மாதம் உற்பத்தியை தொடங்கியது. இதன் மூலம் சொந்த நாட்டின் தொழில்நுட்பத்தில் மின் உற்பத்தி செய்யும் திறன் பெற்ற சில நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம் பிடித்தது.

நமது நான்காவது அணு உலை கங்கை நதிக்கரையோரம் உள்ள நரோராவில் அமைக்கப்பட்டது. இந்த இடம் பூகம்ப தாக்குதல் இலக்குள்ள பகுதி என்பதால் எத்தகைய வலுவான பூகம்பத்தினையும் தாங்கும் தொழில்நுட்ப தகவமைப்புகளுடன் இந்த உலை அமைக்கப்பட்டது. அத்துடன் 220 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட தரமான வடிவமைப்புடன் கூடிய அணு உலையையும் இங்கு அமைக்கப்பட்டது.

அதுதான் பின்னாளில் நாட்டின் பிறபகுதிகளில் அணு மின்உற்பத்தி நிலைய வடிவமைப்புகளாக இருந்தது. நரோரா அணுஉலையின் முதலாவது பிரிவு 1989-ஆம் ஆண்டு உற்பத்தியை தொடங்கியது.

அடுத்த 20 ஆண்டுகளில் இந்தியா 220 மெகாவாட் திறன்கொண்ட 11 அணுஉலைகளை நாட்டின் பல்வேறு இடங்களில் அமைத்தது. மேலும் இரண்டு 540 மெகாவாட் திறன் கொண்ட இரு உலைகளும் அமைக்கப்பட்டன. இந்த அனைத்து அணுஉலைகளும் உள்நாட்டு தொழில்நுட்பமான அழுத்தப்பட்டகன நீர் ஈனுலைகள் தொழில்நுட்பத்தில் அமைக்கப்பட்டன. இத்துடன் இந்தியா கன நீர் உற்பத்தி மற்றும் எரிபொருள் உற்பத்திக்கான வலுவான கட்டமைப்பையும் உருவாக்கி கொண்டது. அத்துடன்ஜார்க்கண்டில் யுரேனியம் சுரங்கத்தையும் அமைத்தோம்.

மேலும் இந்திய தொழிற்சாலைகள் அணு உலை களுக்கு தேவையான அனைத்து உபகரணங்களையும் தயாரிக்கும் திறனையும் பெற்றது.

அணு மின் உற்பத்தி நிலையங்கள் அமைப்பதில் இந்தியா பரவலாக தன்னிறைவை எட்டிய நிலையில் 1988-ஆம் ஆண்டு அப்போதைய சோவியத் யூனியனுடன் இணைந்து தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை எரிபொருளாக கொண்ட இரண்டு அணுஉலைகளை அமைப்பதற்கான உடன்பாட்டில் இறங்கினோம். ஆனால் சோவியத் யூனியனில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் மற்றும் 1990-இல் இந்தியாவில் ஏற்பட்ட பொருளாதார மாற்றங்கள் காரணமாக இந்த திட்டங்கள் செயல்படுவதில் பின்னடைவு ஏற்பட்டது.

எனினும் இந்த கூட்டுத் திட்டம் 1998-ஆம் ஆண்டு மீண்டும் புத்துயிர்பெற்றது. இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து அணுமின் உற்பத்தி நிலையம் அமைப்பதற்கான கட்டுமானப்பணிகள் 2003-ஆம் ஆண்டு தொடங்கியது. இதன் முதலாவது அணுஉலை உற்பத்திக்கு தயாராக இருந்த நிலையில், ஜப்பானில் 2011-ஆம் ஆண்டு புகிஷிமாவில் உள்ள அணு உலையில் விபத்து நேரிட்டது. இதனால் இந்த அணு உலைக்கு (கூடங்குளம் உலை) எதிர்ப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து கூடங்குளம் அணு உலையின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து பொதுமக்களுக்கு நீண்ட விளக்கங்கள் பொறுமையுடன் போதிய கால அவகாசத்துடன் கொடுக்கப்பட்டன. ஜப்பான் அணுஉலையை விட இது மிகுந்த பாதுகாப்பானது என்று விளக்கம் அளிக்கப்பட்டது. இதனால் கூடங்குளம் முதலாவது அணு மின் நிலையம் 2014-ஆம் ஆண்டு உற்பத்தியைத் தொடங்க, இரண்டாவது அணுஉலை 2016-ஆம் ஆண்டு உற்பத்தியைத் தொடங்கியது.

இந்தியாவிடம் இப்போது 21 அணுமின் உற்பத்தி நிலையங்கள் உள்ளன. ராஜஸ்தானில் கனடா ஒத்துழைப் புடன் உருவாக்கப்பட்ட முதலாவது அணுஉலை தொழில்நுட்ப கருவிகள் குறைபாடு மற்றும் இதர காரணங்களினால் சேவையை நிறுத்திக்கொண்டது.

பிற அணுமின் உலைகள் மூலம் நம் நாட்டில் தற்போது 6,700 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. அணுஉலை அதிகரிப்பு செயல்பாட்டு காலம் 2011-ஆம் ஆண்டு முதல் 2016-ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் 78 சதவீதமாக இருந்தது. அணு மின் உற்பத்தி நிலையங்கள் மூலம் ஒரு யூனிட் (ஒரு கிலோவாட் ஒரு மணிநேரத்திற்கு) மின்சாரம் உற்பத்தி செய்ய ரூ.2 முதல் ரூ.3.50 வரை விலையாக உள்ளது. உண்மையில் சொல்லப்போனால் தாராபூர் மின் நிலையத்தில் ஒரு யூனிட் மின்சாரம் ஒரு ரூபாய்க்கும் குறைவாகவும், கூடங்குளத்தில் ஒரு யூனிட் 4 ரூபாய்க்கும் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்திய அணுஉலைகளை விட ரஷ்ய உலைகளுக்கான எரிபொருள் செலவு குறைவாகும். ஆனால் இருநாட்டு அணுஉலைகளும் உற்பத்தி செய்யும் மின்சாரத்திற்கான உற்பத்தி செலவு யூனிட் ஒன்றிற்கு 5 ரூபாய் என்ற அளவிலேயே உள்ளது.

2023-24-ஆம் ஆண்டுகளில் இந்த உற்பத்தி செலவு யூனிட்டுக்கு ரூ. 6.50 ஆக உயரும். நிலக்கரி சார்ந்த மின் உற்பத்தி நிலையங்கள் நிலக்கரி உற்பத்தி தளத்தில் இருந்து தொலைவில் உள்ளதால் அவற்றின் உற்பத்தி செலவு அதிகம். ஆனால் அண்மை காலமாக செயல்படுத்தப்பட்டு வரும் சூரிய மின் உற்பத்திக்கு யூனிட் ஒன்றுக்கு ரூ. 2.50 தான் செலவு பிடிக்கிறது. ஆனால் இந்த மின்சாரத்தை மின் வழித்தடத்தில் அதாவது பவர் கிரிட் எனப்படும் மின் தொகுப்பில் கொண்டு சேர்ப்பதற்கான செலவு யூனிட் ஒன்றுக்கு 2 ரூபாய் ஆகிவிடுகிறது. இதனால் இந்த சூரிய மின் உற்பத்தி முறையில் ஒரு யூனிட் மின்சாரம் தயாரிக்க ரூ. 4.50 செலாவகிறது.

அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் நாடுகளுடன் 2008-ஆம் ஆண்டு இந்தியா செய்துகொண்ட உடன்படிக்கைபடி இந்த நாடுகள் இந்தியாவில் அணுஉலைகளை அமைத்து கொடுக்கும். ,இதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. அமெரிக்காவின் முன்னோடிஅணுஉற்பத்தி நிறுவனமான வெஸ்டிங்ஹவுஸ் அண்மைகாலத்தில் திவால் நிலையை எட்டிவிட்டது.

பிரான்சின் அரிவா (AREVA) புகிஷிமா அணு உலை விபத்தை தொடர்ந்து எரிபொருள் செலவினங்களுக்காக அதிக நிதி இழப்பை சந்தித்து உள்ளது. பிரான்ஸ் அரசாங்கம் அணு மின் உற்பத்தி நிலை உற்பத்தியாளர்களை தங்கள் நாட்டு உற்பத்திக்காக ஒதுக்கீடு செய்துவிட்டது. இதனால் அங்கும் நிச்சயமற்ற தன்மை இருப்பதால அமெரிக்கா, பிரான்சுடனான ஒப்பந்தம் செயல்பாட்டிற்கு உகந்ததாக இல்லை.

இந்த சூழ்நிலையில் தான் இந்தியா உள்நாட்டு தொழில்நுட்பத்தில் அதாவது அழுத்தப்பட்ட கன நீர் தொழில்நுட்பத்தில் 700 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட பத்து அணுஉலைகளை அமைக்க கடந்த ஜூன் மாதம் திட்டமிட்டது. இந்திய அணுசக்தி கழகமான என்.பி.சி. 540 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு உலைகளை காக்ரபாராவிலும் (யூனிட்,3, மற்றும் 4) ராஜஸ்தானில் இரண்டு உலைகளையும் அமைக்கத் திட்டமிட்டது. 2011-ஆம் ஆண்டு புகிஷிமா அணுஉலை விபத்திற்கு பிறகு இந்தியா மேற்கொண்ட மிகப்பெரிய அணுமின் திட்டம் இதுவாகும். இந்த திட்டங்கள் மூலம் இந்திய தொழில் நிறுவனங்கள் நீடித்த தொழில் வாய்ப்புகளை பெறுவதுடன் இந்த துறையில் இந்தியா முக்கியமான அங்கமாக மாறும்.

அதே நேரத்தில் கூடங்குளத்தில் 3-வது, 4-வது 5-வது மற்றும் 6-வது அணு உலைகளை அமைப்பதற்கான பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன. இந்தியா விரும்பும் இடத்தில் 1200 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 6 உலைகளை அமைக்க ஒப்புதல் அளித்துள்ளது. அதே நேரத்தில் அழுத்தப்பட்ட கன நீர் தொழில்நுட்பத்துடன் இந்தியாவும் 900 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட செறிவூட்டப் பட்ட அணுஉலை அமைப்பதற்கான பணிகளையும் தொடங்கி உள்ளது.

இந்த இரு அணுஉலைகளுக்கான கட்டுமான பணிகளும் விரைவில் தொடங்கும். கல்பாக்கத் தில் முதல்மாதிரி 500 மெகாவாட் திறன் கொண்ட அதிவேக ஈனுலை விரைவில் செயல்பாட்டுக்கு வர உள்ளன. அதைத் தொடர்ந்து மேலும் 600 மெகாவாட் திறன்கொண்ட இரண்டு இத்தகைய அணுஉலைகளும் விரைவில் அமைக்கப்பட உள்ளன. அதே நேரத்தில் பாபா அணு ஆராய்ச்சி மையம் 300 மெகாவாட் திறன் கொண்ட அதிநவீன அனல் ஈனுலையை உருவாக்கி உள்ளது. இதில் தோரியம் எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. நமது நீண்டகால திட்டம் தோரியத்தை எரிபொருளாக பயன்படுத்தும் விரைவு ஈனுலைகளை அமைப்பதுதான்.

இந்திய அணுசக்தி கழகம் ரேடியோ ஐசோடோப்பு களை மருத்துவமனைகளுக்கும், தொழிற்சாலைகளுக்கும் வினியோகித்து வருகிறது. கதிர்வீச்சு தொழில்நுட்பத்தை கடல்வளம் சார்ந்த உணவுகள் கெட்டுப் போகாமல் தடுத்தல், வெங்காயத்தின் ஆயுளை அதிகரித்தல், மாங்காய் உள்ளிட்ட உணவு பதார்த்தங்களை மேம்பாடு செய்தல் மற்றும் மருத்துவ பொருட்களை சுத்திகரித்தல் போன்ற பணிகளிலும் பயன்படுகிறோம்.

இனிவரும் காலங்களில் கார்பன் இல்லா எரிசக்திக்கு அணுசக்தி முக்கிய பங்காற்றும் என்பது உறுதி.

அத்துடன் அணு தொழில்நுட்பம் இந்திய மக்களின் வாழ்க்கை தரத்தினை உயர்த்தவும் உதவும் என்பது உறுதி.

 இந்தியாவில் ஆறு அணு மின் நிலையங்கள் உள்ளன. அவை கைகா, சுக்ரபார், கல்பாக்கம், நரோரா, ரவத்பாட்டா, தாராபூர்.

இதையும் படியுங்கள்
Subscribe