மின்சார உற்பத்தி, பகிர்மானம், வழங்குதல் ஆகியவை உள்பட அனைத்துப் பணிகளிலும் மின்சாரத் துறையை சீர்திருத்தி, வலுப்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன.
சவுபாக்கியா
அனைவருக்கும் மின்சார வசதி அளிக்கும் நோக்கத்துடன் 2017, செப்டம்பரில் கொண்டுவரப்பட்டது.
குறைந்த ஆவணங்கள் போதும் என்ற நிலையில் கிராமங்களில் முகாம்கள் நடத்தப்பட்டன.
கிராம சுவராஜ்ய அபியான் திட்டம்
கீழ் நலிவடைந்த பிரிவினருக்காக சிறப்பு இயக்கம்
இரண்டு கோடியே பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகளுக்கு 2017 அக்டோபர் 11-ஆம் தேதி முதல் மின்சாரம் அளிக்கப் பட்டது மத்தியப் பிரதேசம், திரிபுரா, பிகார், ஜம்மு-காஷ்மீர், உத்தராகண்ட், மிஜோரம், சிக்கிம், தெலங்கானா, மேற்கு வங்கம் ஆகிய 9 மாநிலங்களில் 100 சதவீத வீடுகளுக்கு மின்சார வசதி அளிக்கப்பட்டுள்ளது.
தீனதயாள் உபாத்யாயா கிராம ஜோதி திட்டம்
100 சதவீத
மின்சார உற்பத்தி, பகிர்மானம், வழங்குதல் ஆகியவை உள்பட அனைத்துப் பணிகளிலும் மின்சாரத் துறையை சீர்திருத்தி, வலுப்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன.
சவுபாக்கியா
அனைவருக்கும் மின்சார வசதி அளிக்கும் நோக்கத்துடன் 2017, செப்டம்பரில் கொண்டுவரப்பட்டது.
குறைந்த ஆவணங்கள் போதும் என்ற நிலையில் கிராமங்களில் முகாம்கள் நடத்தப்பட்டன.
கிராம சுவராஜ்ய அபியான் திட்டம்
கீழ் நலிவடைந்த பிரிவினருக்காக சிறப்பு இயக்கம்
இரண்டு கோடியே பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகளுக்கு 2017 அக்டோபர் 11-ஆம் தேதி முதல் மின்சாரம் அளிக்கப் பட்டது மத்தியப் பிரதேசம், திரிபுரா, பிகார், ஜம்மு-காஷ்மீர், உத்தராகண்ட், மிஜோரம், சிக்கிம், தெலங்கானா, மேற்கு வங்கம் ஆகிய 9 மாநிலங்களில் 100 சதவீத வீடுகளுக்கு மின்சார வசதி அளிக்கப்பட்டுள்ளது.
தீனதயாள் உபாத்யாயா கிராம ஜோதி திட்டம்
100 சதவீத கிராமங்களுக்கும் மின்சாரம் வழங்கப்பட்டது அதற்கான மொத்த மதிப்பீடு ரூ. 75,893 கோடி 2,58,870 கி.மீ. நீளத்திற்கு உயர் அழுத்தக் கம்பிகள், குறைந்த அழுத்தக் கம்பிகள் அமைக்கப்பட்டன.
மின்சார ஏற்றுமதியில் மொத்த ஏற்றுமதியாளராக இந்தியா உருவாகியுள்ளது. அதன்படி நேபாளம், வங்கதேசம், மியான்மார் ஆகிய நாடுகளுக்கு 2017-18-ஆம் ஆண்டில் 720.3 கோடி யூனிட் வழங்கப்பட்டது. நடப்பு ஆண்டில் கடந்த அக்டோபர் வரையிலான 7 மாதத்தில் 462.8 கோடி யூனிட் மின்சாரம் வழங்கப் பட்டுள்ளது.
ஒற்றை மின்னிணைப்பு ஒரே தேசம்
மின்சாரப் பகிர்மானம் 2014-15-ஆம் ஆண்டிலிருந்து 2018-19-ஆம் ஆண்டில் 1,11,433 சர்க்கியூட் கிலோமீட்டர் (CKM) அதிகரித்துள்ளது. நடப்பு நிதியாண்டில் இதுவரை 11,799 சர்க்கியூட் கிலோமீட்டர் (CKM) உயர்ந்துள்ளது.
மின்மாற்றித் திறன் 2014-15-ஆம் ஆண்டி லிருந்து 2018-19-ஆம் ஆண்டில் கூடுதலாக 3,38,202 மெகாவோல்ட் ஆம்ப்(Mega Volt Amp) அதிகரித்துள்ளது. (நடப்பு ஆண்டில் இதுவரை 41,790 மெகாவோல்ட் ஆம்ப் (MVA) அதிகரித்துள்ளது.
ஒருங்கிணைந்த மின்சார மேம்பாட்டுத் திட்டம் (UJALA))
மொத்த செலவு ரூ. 65,424 கோடி 1378 நகரங்களில் தகவல் தொழில்நுட்ப வசதி 1900 கூடுதல் நகரங்களில் செயல்படுத்தப் பட்டு வருகிறது உயர் அழுத்த மற்றும் குறைந்த அழுத்த கம்பிகள் அமைப்பதற்கு மொத்தம் 1,30,348 கி.மீ. தூரத்துக்கு பணி ஒப்படைக்கப்பட்டு, 43,449 கிமீ தூரத்திற்கு போடப்பட்டுவிட்டன.
மின்சக்தி திறன் மற்றும் மின்சக்தி சேமிப்பு
எல்இடி விளக்குடன் கூடிய அனைவருக்கும் உன்னத ஜோதி திட்டம் (மஓஆகஆ) உஜாலா திட்டத்தின் கீழ் நாடு முழுதும் 31.68 கோடி எல்இடி பல்புகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ஆண்டுக்கு ரூ. 16,457 கோடி மிச்சப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆண்டுக்கு 4114 கோடி கிலோ வாட் மின்சாரம் மிச்சப்படும். மேலும், பசுமை வீட்டு வாயு வெளியேற்றம் (GHG emission) 3.322 கோடி டன் கரியமிலவாயு (கார்பன் டை ஆக்ஸைடு) குறையும்.
தெருவிளக்குக்கான தேசிய திட்டம் (SLNP)
தற்போதைய பழங்காலத்திய 1.34 கோடி தெருவிளக்குகள் மாற்றப்பட்டு, திறன்மிக்க செலவு குறைந்த எல்இடி பல்புகள் பொருத்திய தெருவிளக்குகள் 2019 மார்ச் மாதத்துக்குள் போடப் பட்டுவிடும்.
டிஜிட்டல் முன்முயற்சிகள்
மின்சாரக் கட்டணத்தைச் செலுத்து வதற்கு டிஜிட்டல் பணப் பரிமாற்றத் துக்கு உதவும் பீம்(Bharat Interface for Money) செயலி, பாரத பில் பணப் பட்டுவாடா முறை (BBPS), ஒருங்கிணைந்த பணம் வழங்கல் திட்டம் (Bharat QR) உள்ளிட்ட தேசிய பணம் வழங்கல் கழகம் திட்டத்தின் (National Payments Corporation of India) தளங்கள் 2017-18-ஆம் நிதியாண்டில் மொத்தம் 24 கோடிக்கும் மேல் டிஜிட்டல் முறை பணப் பரிமாற்றங் களை மேற்கொண்டுள்ளன.
மாசு ஒழிப்பு
அனல் மின் நிலையங்களில் மின்சார உற்பத்தியில் 5 முதல் 10 சதவீதம் வரையில் உயிரி துகள்களைப் பயன்படுத்தலாம் என்பது குறித்த ஒரு கொள்கை குறித்த குறிப்பினை மின்சார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
சீர்திருத்தங்கள்
புதுப்பிக்கத் தக்க மின்சார உற்பத்தியை ஊக்குவிக்க மத்திய மின்சார அமைச்சகம் மாநிலங்களுக்கு இடையிலான மின்சாரப் பகிர்மானத்தில் (ISTS) கட்டணத்துக்கு மார்ச் 2022-ஆம் ஆண்டு வரையில் தள்ளுபடி அளிப்பதாக அரசு அறிவித்துள்ளது. நீட்டித்துள்ளது. அதுபோல் சூரிய சக்தி, காற்றாலை சக்தி ஆகியவற்றிலும் இழப்புகள் ஈடு செய்யப்படும்.
புதுப்பிக்கத் தக்க மின்சக்தி உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்கிலும், மாசினைக் கட்டுப்படுத்தவும் மத்திய மின்சார அமைச்சகம் ஒரு திட்டத்தை அறிவித்துள்ளது. மின்சார உற்பத்தியில் தளர்வு நிலை, அனல் மின்நிலைய உற்பத்தியில் ஒழுங்குமுறை ஆகியவை குறித்து இந்த அறிக்கை அமைந் துள்ளது.