சீனாவை மிஞ்சும் இந்தியா

/idhalgal/general-knowledge/india-surpasses-china

லக மக்கள்தொகை தினம் சென்ற மாதம் கொண்டாடப்பட்டது. இதையடுத்து ஐ.நா பொருளாதார மற்றும் சமூக விவகாரங்கள் துறையின் மக்கள்தொகைப் பிரிவு, உலக மக்கள்தொகை கணிப்பு குறித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

அந்த அறிக்கையில், “இந்த ஆண்டு மக்கள்தொகை தினம் மைல்கல் ஆண்டாக வருகிறது. இந்த ஆண்டு நவம்பர் 15-ஆம் தேதி உலக மக்கள்தொகை 800 கோடியாக உயரும். 2030-ஆம் ஆண்டு, 850 கோடியாகவும், 2050-ஆம் ஆண்டு 970 கோடியாகவும் உயரக்கூடும். மேலும் 2080-களில் உலக மக்கள்தொகை 1,040 கோடியாக உயரும். 2100-ஆம் ஆண்டு வரை அதே அளவில் தொடரும்.

தற்போது இந்திய மக்கள்தொகை 141 கோடியே 20 லட்சமாக இருக்கிறது. ஆனால், அடுத்த ஆண்டு இந்திய மக்கள்தொகை சீன மக்கள்தொகையை முந்திவிடும். தற்போதைய சீனாவின் மக்கள்தொகை 142 கோடியே 60 லட்சமாக இருக்கிறது. 2050-ஆம் ஆண்டு இந்திய மக்கள்தொகை 166 கோடியே 80 லட்சமாக உயரும். மேலும், 2050-ஆம் ஆண்டு வரை காங்கோ, எகிப்து, எத்தியோப்பியா, இந்தியா, நைஜீரியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், டான்சானியா ஆகிய எட்டு நாடுகளில் உலக மக்கள்தொகையில் எவ்வளவு உயர்வு இருக்குமோ அதில் பாதிக்கும் மேல் மேற்கண்ட நாடுகளில் மக்கள்தொகை அதிகரிக்கும். உலக அளவில் மனிதர்களின் சராசரி ஆயுள் காலம் 2019-ஆம் ஆண்டின் கணக்கீட்டின்படி 72.8 வயதாக இருந்தது. ஆனால் 2050-ஆம் ஆண்டு 77.2 வயதாக உயரும்.

தற்போது உலக மக்கள்தொகையில் 65 மற்றும் அதற்கு மேற்பட்ட வயது உடையவர்கள் எண்ணிக்கை இந்த ஆண்டு 10 சதவிகிதமாக இருக்கிறது. 2050-ஆம் ஆண்டில் இது 16 சதவிகிதமாக அதிகரிக்கும்.

அதாவது ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கைபோல 65 வயது முதியவர்கள் எண்ணிக்கை இரண்டு மடங்காக இருக்கும்” என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்திய மக்கள்தொகை பெருக்கம்

மக்கள்தொகையில் உலகில் இரண்டாவது இடத்தில் இருக்கும் இந்தியா, 2027-இல் சீனாவை மிஞ்சிவிடும் என்று ஐக்கிய நாடுகள் அவையின் பொருளாதாரம், சமூக நடவடிக்கைகளுக்கான துறை மதிப்பிட்டிர

லக மக்கள்தொகை தினம் சென்ற மாதம் கொண்டாடப்பட்டது. இதையடுத்து ஐ.நா பொருளாதார மற்றும் சமூக விவகாரங்கள் துறையின் மக்கள்தொகைப் பிரிவு, உலக மக்கள்தொகை கணிப்பு குறித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

அந்த அறிக்கையில், “இந்த ஆண்டு மக்கள்தொகை தினம் மைல்கல் ஆண்டாக வருகிறது. இந்த ஆண்டு நவம்பர் 15-ஆம் தேதி உலக மக்கள்தொகை 800 கோடியாக உயரும். 2030-ஆம் ஆண்டு, 850 கோடியாகவும், 2050-ஆம் ஆண்டு 970 கோடியாகவும் உயரக்கூடும். மேலும் 2080-களில் உலக மக்கள்தொகை 1,040 கோடியாக உயரும். 2100-ஆம் ஆண்டு வரை அதே அளவில் தொடரும்.

தற்போது இந்திய மக்கள்தொகை 141 கோடியே 20 லட்சமாக இருக்கிறது. ஆனால், அடுத்த ஆண்டு இந்திய மக்கள்தொகை சீன மக்கள்தொகையை முந்திவிடும். தற்போதைய சீனாவின் மக்கள்தொகை 142 கோடியே 60 லட்சமாக இருக்கிறது. 2050-ஆம் ஆண்டு இந்திய மக்கள்தொகை 166 கோடியே 80 லட்சமாக உயரும். மேலும், 2050-ஆம் ஆண்டு வரை காங்கோ, எகிப்து, எத்தியோப்பியா, இந்தியா, நைஜீரியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், டான்சானியா ஆகிய எட்டு நாடுகளில் உலக மக்கள்தொகையில் எவ்வளவு உயர்வு இருக்குமோ அதில் பாதிக்கும் மேல் மேற்கண்ட நாடுகளில் மக்கள்தொகை அதிகரிக்கும். உலக அளவில் மனிதர்களின் சராசரி ஆயுள் காலம் 2019-ஆம் ஆண்டின் கணக்கீட்டின்படி 72.8 வயதாக இருந்தது. ஆனால் 2050-ஆம் ஆண்டு 77.2 வயதாக உயரும்.

தற்போது உலக மக்கள்தொகையில் 65 மற்றும் அதற்கு மேற்பட்ட வயது உடையவர்கள் எண்ணிக்கை இந்த ஆண்டு 10 சதவிகிதமாக இருக்கிறது. 2050-ஆம் ஆண்டில் இது 16 சதவிகிதமாக அதிகரிக்கும்.

அதாவது ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கைபோல 65 வயது முதியவர்கள் எண்ணிக்கை இரண்டு மடங்காக இருக்கும்” என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்திய மக்கள்தொகை பெருக்கம்

மக்கள்தொகையில் உலகில் இரண்டாவது இடத்தில் இருக்கும் இந்தியா, 2027-இல் சீனாவை மிஞ்சிவிடும் என்று ஐக்கிய நாடுகள் அவையின் பொருளாதாரம், சமூக நடவடிக்கைகளுக்கான துறை மதிப்பிட்டிருக்கிறது; இது நாம் பெருமைப்படக்கூடிய சாதனை அல்ல. அத்துடன் இதனால் அரசு நிர்வாகத்துக்கு சமூக, பொருளாதாரத் துறைகளில் கடும் சவால்கள் ஏற்படப்போவதும் நிச்சயம். கட்டுப் படுத்தியே தீர வேண்டியது இது.

நிலப்பரப்பு குறைவானதாகவும் மக்கள்தொகை அதிகமானதாகவும் உள்ள இந்தியாவுக்கு, மக்கள்தொகைப் பெருக்கம் என்பது மேன்மேலும் சவால்தான். கல்வி, சுகாதாரத்துக்கு அதிக நிதியை அரசும் தனியாரும் முதலீடு செய்ய வேண்டும். உணவு தானிய விளைச்சலை அதிகரிக்க வேண்டும். கோடிக்கணக்கானவர் களுக்குக் குடியிருப்புகள் வேண்டும். சாலைகள், போக்குவரத்து, மின்னுற்பத்தி, கழிவுநீர் அகற்றல் போன்ற அடித்தளக் கட்டமைப்புகளை மேலும் விரிவுபடுத்தியாக வேண்டும். ஆண்டுதோறும் புதிதாக 50 லட்சம் பேர் வேலை தேடி சந்தைக்கு வருவதால் அவர்களுக்கு நியாயமான ஊதியத்தில் வேலைவாய்ப்பை உருவாக்குவது எளிதான செயல் அல்ல. வறுமைக்கோட்டுக்கும் கீழே வாழும் அனைவருக்கும் மாதாந்திர ஊதியம் வழங்குவது சமூகப் பதற்றத்தைக் குறைக்கும் நடவடிக்கை என்றாலும் அதற்கு மேலும் நிதியாதாரம் தேவைப்படும். அத்துடன் வன வளங்களையும் நீர் வளங்களையும் எதிர்கால சந்ததிக்காகப் பாதுகாத்துப் பெருக்கி வைக்க வேண்டும். எனவே, வளர்ச்சி என்பதற்கான அர்த்தமே மாறுகிறது.

1970-இல் 55.52 கோடியாக இருந்த இந்திய மக்கள்தொகை 2019-இல் 136.64 கோடியாக உயர்ந்தது. இது 146% அதிகரிப்பு. இதே காலத்தில் சீன மக்கள்தொகை 82.76 கோடியிலிருந்து 143.37 கோடியாக உயர்ந்தது. சீனாவில் பொதுவுடைமை அரசு ஆட்சியில் இருப்பதால், ஒரு குழந்தைக்கு மேல் பெற்றுக்கொள்ளக் கூடாது என்று அரசால் நெருக்கடி தரப்பட்டு, மக்கள்தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த முடிந்தது. பிள்ளைப்பேறு விகிதம் சீனாவில் 1965-70-களில் 6.3 ஆக இருந்தது, 1970-75-களில் 5.4 ஆகக் குறைக்கப்பட்டது. அப்போது ‘நாமிருவர்-நமக்கிருவர்’ கொள்கை பின்பற்றப்பட்டது. பிறகு ‘நாமிருவர்- நமக்கு ஒருவர்’ என்று சுருக்கப்பட்டது.

இந்தியாவில் இதே காலத்தில் 5.7 என்பதிலிருந்து 4.85 ஆகக் குறைந்தது. இப்போது 2.24 ஆக இருக்கிறது. ஆனால், எல்லா மாநிலங்களிலும் இது சமமாக இல்லை. தமிழ்நாடு, வங்கத்தில் 1.6 ஆகவும் பிஹாரில் 3.3, உத்தர பிரதேசத்தில் 3.1 ஆகவும் இருக்கிறது. இந்நிலை மாற்றப்பட வேண்டும்; ஆனால், கட்டாயப்படுத்தி அல்ல. தென்னிந்திய மாநிலங்களை முன்னுதாரணமாகக் கொண்டாலே அடுத்த 25 ஆண்டுகளுக்குள் பெரிய மாற்றத்தை வட இந்திய மாநிலங்களில் கொண்டுவந்துவிட முடியும்.

census

பொருளாதார வளர்ச்சிக்கு தடை

இந்தியாவில் மக்கள்தொகை வெடித்து, பெருகி காணப்படுகிறது. பொருளாதார வளர்ச்சிக்கு உழைப்பின் அளிப்பு அதிகமாக தேவைப்பட்டாலும் நமது மக்கள்தொகை தொடர்ந்து வளர்வதால் பொருளாதார வளர்ச்சி பாதிப்புக்குள்ளாகிறது. கீழ்க்கண்ட வழிகளில் மக்கள்தொகை பெருக்கம் பொருளாதார வளர்ச்சியை பாதிக்கின்றது.

இந்திய மக்கள்தொகை அதிகரித்துக் கொண்டே இருப்பதால், அதற்கேற்ற விவசாய உற்பத்தியில் சமவிகித வளர்ச்சி இல்லையெனில் கடுமையான உணவுப் பற்றாக்குறை பிரச்சினையை சந்திக்க வேண்டி நேரிடும்.

மக்கள்தொகை எவ்வளவு அதிகரிக் கிறதோ, குழந்தைகளும், முதியோரின் எண்ணிக்கையும் அவ்வளவாக உயர்கிறது. குழந்தைகளும் முதியோரும் உற்பத்தியில் ஒரு பங்கினையும் வகிக்காமல், பொருள்களை மட்டும் நுகர்கிறார்கள். இவ்வாறாக குழந்தைகள் மற்றும் முதியோரின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது சத்துணவு, மருத்துவ வசதி, பொது சுகாதாரம் மற்றும் கல்விப் போன்ற அடிப்படை தேவைகள் கவனம் செலுத்தப்படாமலேயே பெருமளவில் கிடக்கின்றன.

அதிகவேகமாக வளரும் மக்கள்தொகை தலா வருமானம் மற்றும் நாட்டு வருமானத்தின் சராசரி வளர்ச்சி வீதத்தை தடைச் செய்கிறது. நாட்டு வருமானத்தில் ஏற்பட்ட அதிகரிப்பை நிலையாக வளர்ந்து வரும் மக்கள்தொகை நுகர்ந்துவிடுகிறது.

அதிவேக மக்கள்தொகை வளர்ச்சி சேமிப்பையும் மற்றும் முதலீட்டின் திறனையும் குறைக்கிறது என்பது மிக ஆபத்தான விளைவாகும். நாட்டு வருமானம் மற்றும் தலா வருமானம் இந்தியாவில் குறைவாக உள்ள இந்நிலையில் சேமிப்பிற்கு என்று பணத்தை ஒதுக்க வாய்ப்பில்லை. இதன் விளைவாக உறுதித் தேவை குறைந்து, மக்களின் வாங்கும் சக்தியும் குறைகிறது. இந்த மக்கள்தொகையின் விரிவான வளர்ச்சி, உச்ச உற்பத்தி திறனையும், நாட்டின் வருமானத்தையும் தீர்மானிக்கும் காரணியான சேமிப்பு வளர்ச்சி வீதத்தை பாதிக்கிறது.

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இன்றியமையாதது மூலதன ஆக்கம் ஆகும். அதிலும் இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளுக்கு மூலதன ஆக்கம் மிக மிக முக்கியம். மூலதன ஆக்கம், சேமிப்பு மற்றும் முதலீட்டை சார்ந்துள்ளது. அதிகவேக மக்கள் தொகை வளர்ச்சி இருக்கும்போது, இம் மூலதன ஆக்கம் ஏற்பட வாய்ப்பில்லை. இதன் விளைவாக வேலையின்மையும், குறைவேலை வாய்ப்பும் அதிகரிக்கிறது. இவ்வாறாக அதிவேக மக்கள்தொகை வளர்ச்சி அந்நாட்டின் மூலதன ஆக்கத்தை மிக மோசமான பாதிப்புக் குள்ளாக்குகிறது.

வளரும் மக்கள்தொகை வேலையில்லா திண்டாட்டத்தை மேலும் அதிகரிக்கிறது. மக்கள்தொகை வளரும்போது, உழைப்பும் அதிகரிக்கிறது. இந்த அதிகரிக்கும் உழைப்பு சக்தியை நிலவும் பற்றாக்குறையான வேலை வாய்ப்புக்கள் முழுமையாக ஈர்த்துக் கொள்ள இயலவில்லை. இதன் விளைவாக நிறைய மக்கள் வேலையில் அமர்த்தப்படாமலும், குறைவான வேலையில் அமர்த்தப்பட்டும் இருக்கிறார்கள்.

அடிக்கடி குழந்தை பெறுவதால், நீண்ட காலத்தில், உற்பத்தி நடவடிக்கைகளில் பெருமளவு மகளிரால் வேலை செய்ய இயலவில்லை. இதனால் மனிதவளம் வீணாகிறது. மேலும் பொருளாதார வளர்ச்சிக் குன்றுகிறது.

மக்கள்தொகை பெருக்கமானது நாட்டு வருமானம் மற்றும் தனி நபர் வருமானத்தை பெருமளவில் பாதிக்கின்றது. இதன் காரணமாக மக்களின் வாழ்க்கைத் தரமானது குறைகிறது. இது உற்பத்தித் திறனை குறையச் செய்கிறது. இத்தடைகள் பொருளாதார வளர்ச்சியை பாதிப்படையச் செய்கிறது.

மக்கள்தொகை அதிகரிப்பானது, குழந்தைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. இதன் காரணமாக மருத்துவ பராமரிப்பு, பொது சுகாதாரம், குடும்ப நலன், கல்வி, வீட்டுவசதி போன்ற சமூக செலவுகளின் தேவையானது அதிகரிக்கிறது.

இந்தியாவில் மக்கள்தொகை வளர்ச்சி யானது, சிக்கனமற்ற முறையாகிய நிலம் மற்றும் வீடுகள் துண்டு துண்டுகளாக பிரிக்கப்படுகின்ற நிலையை உருவாக்குகிறது. நிலங்கள் மிகச் சிறிய அளவானதாக இருப்பதால் இயந்திரமயமாக்கப்பட்ட உழவு முறையை கையாள இயலவில்லை. ஐந்தாண்டு திட்டங்கள் மூலமாக வேளாண்மையில் பல வெற்றிகரமான முன்னேற்றங்களை செய்திருந்தாலும் விவசாய உற்பத்தி யானது, மக்கள்தொகை வளர்ச்சியோடு ஒப்பிடும்போது மிக குறைவான நிலையிலேயே இருந்து வருகிறது.

மக்கள்தொகை வளர்ச்சி வேகம், தொழில் துறை வளர்ச்சியை அதிகமாக பாதிக்கின்றது. இதன் காரணமாக குடிசை மற்றும் சிறுத்தொழில்களும் மேலும் பெரும் தொழில்களும் போதுமான அளவில் வளர்ச்சி அடையவில்லை. பெரும் மற்றும் சிறிய தொழிற்சாலைகளுக்கு தேவையான மூலதனம் பெருமளவில் தேவைப்படும் போது இந்திய மூலதன ஆக்க வீதமோ மிகக் குறைவாக உள்ளது. நம் நாட்டின் தொழில் துறை வளர்ச்சிக்கு ஒதுக்கீடு செய்ய பொது முதலீடு போதுமானதாக இல்லை.

அதிவேக மக்கள்தொகை அதிகரிப்பு, நிதிச் சுமையாக அரசுக்கு அமைகிறது. சமூக நலத் திட்டங்களுக்காகவும், வறுமையை அகற்றுவதற்காகவும் வளங்களைத் திரட்டி வறுமையை அகற்றுவதற்கு நிதியாக்கம் செய்ய வேண்டியுள்ளது. தூய்மையான குடிநீர் வழங்குவதற்கும், குடியிருப்பு வசதி ஏற்படுத்தி தருவதற்கும் நல்ல சுகாதார சூழ்நிலையை உருவாக்குவதற்கும், மருத்துவ வசதி செய்துதருவதற்கும் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவும் பெரும் பொருள் செலவை அரசு மேற்கொள்ள வேண்டியுள்ளது. மக்கள் தொகை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டால் அரசு அதிக உற்பத்தி நோக்கங்களுக்காக செலவு செய்யக் கூடும். இதன் வாயிலாக நாட்டு மற்றும் தலா வருமானம் உயரவும், வாழ்க்கை தரம் உயரவும் வாய்ப்பு ஏற்படுகிறது.

மேற்குறிப்பிடப்பட்ட காரணிகளின் விளக்கங்கள் இந்தியாவின் மக்கள்தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்தப்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறது. மக்கள் தொகையின் அதிவேக வளர்ச்சி வீதம், பொருளாதார முன்னேற்றத்தை மிகவும் மோசமான அளவு பாதிக்கிறது.

gk010822
இதையும் படியுங்கள்
Subscribe