இந்தியாவில் தற்போது நடந்து முடிந்துள்ள மக்களவைத் தேர்தலுக் கான பிரச்சாரத்தின் போது, பிரதான அரசியல் கட்சிகள் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவதோடு, உள்கட்டமைப்பு திட்டங்கள் மற்றும் உற்பத்தித் துறையின் விரிவாக்கம் ஆகியவை குறித்து வாக்குறுதி அளித் துள்ளன.
CO2 (கரியமில வாயு) உமிழ்வை பொறுத்த வரை ஏற்கனவே உலகளவில் மூன்றாவது நாடாக விளங்கும் இந்தியாவில் இது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்?
மத்திய இந்தியாவிலுள்ள சத்தீஷ்கர் மாநிலத்தின் கோர்பா மாவட்டத்தில், தினமும் நூற்றுக்கணக்கான லாரிகள் பல்லாயிரக்கணக்கான டன் நிலக்கரியை அங்குள்ள திறந்தவெளி சுரங்கங்களில் இருந்து எடுத்து வருகின்றன. எந்நேரமும் அனல் மின் நிலையங்களில் எரிந்துக் கொண்டிருக்கும் நிலக்கரிகள், அந்த பகுதியில் இரவையும் பகலை போன்றே காட்டுகிறது.
இந்தியாவின் மொத்த மின்னுற்பத்தியில் 25 சதவீத்தை சத்தீஸ்கர் அளிக்கிறது. குறிப்பாக, இந்தியாவின் 70 சதவீத மின்சாரம் நிலக்கரியை எரிப்பதன் மூலம் பெறப்படுவதாக தரவுகள் தெரிவிக்கும் நிலையில், இந்திய அரசு அதை 55 சதவீதத்திற்கும் கீழாக குறிப்பிடுகிறது.
இந்தியாவை பொறுத்தவரை அனல் மின்சாரத்திற்கே அரசு முக்கியத்துவம் அளிக்கிறது. அது தற்போதைக்கு குறையும் நிலையில் இல்லை என்று கூறுகிறார் கிரீன்பீஸ் அமைப்பை சேர்ந்த சுனில் டஹியா.
புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பயன்பாட்டை அதிகரிப்பது
சத்தீஸ்கரின் நிலைமை இவ்வாறிருக்க, அதன் அருகிலுள்ள ஆந்திரப்பிரதேச மாநிலத்தில், உலகின் மிகப்பெரிய சூரிய ஒளி மின்னுற்பத்தி நிலையம் ஒன்ற
இந்தியாவில் தற்போது நடந்து முடிந்துள்ள மக்களவைத் தேர்தலுக் கான பிரச்சாரத்தின் போது, பிரதான அரசியல் கட்சிகள் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவதோடு, உள்கட்டமைப்பு திட்டங்கள் மற்றும் உற்பத்தித் துறையின் விரிவாக்கம் ஆகியவை குறித்து வாக்குறுதி அளித் துள்ளன.
CO2 (கரியமில வாயு) உமிழ்வை பொறுத்த வரை ஏற்கனவே உலகளவில் மூன்றாவது நாடாக விளங்கும் இந்தியாவில் இது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்?
மத்திய இந்தியாவிலுள்ள சத்தீஷ்கர் மாநிலத்தின் கோர்பா மாவட்டத்தில், தினமும் நூற்றுக்கணக்கான லாரிகள் பல்லாயிரக்கணக்கான டன் நிலக்கரியை அங்குள்ள திறந்தவெளி சுரங்கங்களில் இருந்து எடுத்து வருகின்றன. எந்நேரமும் அனல் மின் நிலையங்களில் எரிந்துக் கொண்டிருக்கும் நிலக்கரிகள், அந்த பகுதியில் இரவையும் பகலை போன்றே காட்டுகிறது.
இந்தியாவின் மொத்த மின்னுற்பத்தியில் 25 சதவீத்தை சத்தீஸ்கர் அளிக்கிறது. குறிப்பாக, இந்தியாவின் 70 சதவீத மின்சாரம் நிலக்கரியை எரிப்பதன் மூலம் பெறப்படுவதாக தரவுகள் தெரிவிக்கும் நிலையில், இந்திய அரசு அதை 55 சதவீதத்திற்கும் கீழாக குறிப்பிடுகிறது.
இந்தியாவை பொறுத்தவரை அனல் மின்சாரத்திற்கே அரசு முக்கியத்துவம் அளிக்கிறது. அது தற்போதைக்கு குறையும் நிலையில் இல்லை என்று கூறுகிறார் கிரீன்பீஸ் அமைப்பை சேர்ந்த சுனில் டஹியா.
புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பயன்பாட்டை அதிகரிப்பது
சத்தீஸ்கரின் நிலைமை இவ்வாறிருக்க, அதன் அருகிலுள்ள ஆந்திரப்பிரதேச மாநிலத்தில், உலகின் மிகப்பெரிய சூரிய ஒளி மின்னுற்பத்தி நிலையம் ஒன்று இயங்கி வருகிறது.
6,000 ஏக்கர் பரப்பளவில் 4.5 மில்லியன் சூரிய ஒளித் தகடுகள் பதிக்கப்பட்ட அந்த மின்னுற்பத்தி வளாகத்தில் மொத்தம் 1,000 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. அதுமட்டுமின்றி, இதே போன்ற மின்னுற்பத்தி வளாகங்கள் அம்மாநிலம் முழுவதும் கட்டப்பட்டு வருகின்றன.
புதுப்பிக்கத்தக்க ஆற்றலை பயன்படுத்தி இந்தியாவில் கடந்த ஆண்டு மட்டும் 70 ஜிகாவாட்ஸ் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டதாக அரசின் தரவுகள் குறிப்பிடுகின்றன. உலகளவில் பார்க்கும் போது, இந்தியா காற்றாலை மின்சார உற்பத்தியில் நான்காவது இடத்தையும், சூரிய ஒளி மின்னுற்பத்தியில் ஆறாவது இடத்தையும் வகிக்கிறது.
2022-ஆம் ஆண்டிற்குள் இந்தியாவின் புதுப்பிக்கத் தக்க ஆற்றல் மின்னுற்பத் தியை 175 ஜிகாவாட்ஸாக அதிகரிப்பதற்கு இந்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
தொடரும் நிலக்கரியின் ஆதிக்கம்
பாரிஸின் காலநிலை ஒப்பந்தத்தின் கீழ், இந்தியா மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஈஞ2 வெளியேற்றத்தை 2030-ஆம் ஆண்டுக்குள் 33-35 சதவீதம் குறைக்க வேண்டியுள்ளது.
உலகின் இரண்டாவது அதிக மக்கள் தொகை நாடான இந்தியாவில் கடந்த ஆண்டு மட்டும் 2.3 பில்லியன் டன் கார்பன்-டை-ஆக்ஸைடு வெளியேற்றப் பட்டுள்ளது. இது அதற்கு முந்தைய ஆண்டை விட ஐந்து சதவீதம் ஏற்றம் கண்டிருப்பதாக சர்வதேச ஆற்றல் நிறுவனம் கூறுகிறது.
இந்தியாவின் மொத்த மின்னுற்பத்தியில் 90 சதவீதம் புதைப்படிமங்களை சார்ந்தே உள்ளது. குறிப்பாக, சுற்றுச்சூழலுக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் நிலக்கரியே நான்கில் மூன்று மடங்கு மின்னுற்பத்திக்கு பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவின் மொத்த ஈஞ2 உமிழ்வில் 70 சதவீதம் அதன் எரிசக்தி துறை யினாலேயே வெளியிடப்படுகிறது. அது வருங்காலத்தில் இன்னும் அதிகரிக்கும் என்றே கருதப்படுகிறது.
தேர்தலின்போது அரசியல்வாதிகள் அளித்த வாக்குறுதிகள், மேலதிக நிலக்கரி எரிப்பிற்கும், நச்சுவாயு உமிழ்வுக்கும் வழிவகுக்கும் என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
""ஒருபுறம், புதுப்பிக்கதக்க ஆற்றல் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், மறுபுறம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை அளிப்பதாக அரசியல் கட்சிகள் உறுதியளித்து வருகின்றன'' என்று கூறுகிறார் எரிசக்தி மற்றும் காலநிலை கொள்கைகள் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு வரும் அரசுசாரா நிறுவனம் ஒன்றின் தலைமை செயலதிகாரி ஸ்ரீநிவாஸ் கிருஷ்ணசாமி. 2020-ஆம் ஆண்டிற்குள் நாட்டின் நிலக்கரி உற்பத்தி ஒரு பில்லியன் டன்னாக அதிகரிக்கப்படும் என்று இந்திய அரசு கூறுகிறது.
இதை தவிர்த்து, ஆஸ்திரேலியா, இந்தோனேஷியா ஆகிய நாடுகளிலிருந்தும் கூடுதலாக நிலக்கரி இறக்குமதி செய்யப்படுகிறது. 2017-ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில், இந்தியாவின் நிலக்கரி இறக்குமதி 2018-ஆம் ஆண்டு 190-யிலிருந்து 210 மில்லியன் டன்களாக அதிகரித்துள்ளது.
இந்தியாவின் அதிகரித்து வரும் ஈஞ2 உமிழ்விற்கு அனல் மின்நிலையங்கள் மட்டும் காரணமல்ல. நிலக்கரிக்கு அடுத்தபடியாக, ஸ்டீல் மற்றும் சிமெண்ட் உற்பத்தி துறைகள் அதிகப் படியான கார்பனை உமிழ்கின்றன. அடுத்த பத்தாண்டுகளில் நாட்டின் சிமெண்ட் உற்பத்தியை மூன்று மடங்கு அதிகரிப்பதற்கு அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
""இந்தியாவின் நச்சுவாயு வெளியீட்டில் சிமெண்ட் மற்றும் ஸ்டீல் ஆகியவை குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கின்றன. ஆனால், அதுகுறித்து யாரும் கவலைப் படுவதாக தெரியவில்லை'' என்று கூறுகிறார் ஆற்றல் வள மேலாண்மை நிபுணரான அஜய் மதுர்.
வீணாகும் மின்சாரம்
தேவையை விட அதிகமான அளவு நாட்டில் மின்னுற்பத்தி செய்யப்படுவதாக மற்றொரு தரவு தெரிவிக்கிறது.
3,50,000 மெகாவாட்ஸ் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறனுடைய மின்னுற்பத்தி நிலையங்கள் நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கும் நிலையில், நாட்டின் மின்சார தேவை ஒருபோதும் 1,80,000 மெகாவாட்ஸை தாண்டியதில்லை என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மின்னுற்பத்திக்கும், மின்சார தேவைக்கும் இடையிலான மிகப்பெரிய இடைவேளைக்கு நாட்டின் தவறான மின் பங்கீட்டு கொள்கைகளே காரணமென்று குற்றஞ்சாட்டப்படுகிறது. ""மின் பகிர்வுத் துறையின் உள்கட்டமைப்பை மேம்படுத் துவதற்கு பெரியளவிலான முதலீடுகள் ஈர்க்கப்படாததால், இந்தியாவின் மின்னுற்பத்தி அதன் முழு திறனை அடைய முடிவதில்லை'' என்று உலக வங்கியின் அறிக்கை ஒன்று தெரிவிக் கிறது. அதன் காரணமாகவே, நாடு முழுவதுமுள்ள மின்னுற்பத்தி நிலையங்கள் தனது மொத்த திறனை விட 40 சதவீதத்திற்கும் குறைவான மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றன.
ஒருவேளை, நாட்டின் மின் பகிர்மானத் தில் மேம்பாடு எட்டப்படவில்லை என்றால், அனைத்து மாநிலங்களும் தனித்தனியே மின்னுற்பத்தி நிலையங் களை ஏற்படுத்த கூடும் என்று நிபுணர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
குறைந்து வரும் உற்பத்தி செலவு
சமீபகாலமாக, இந்தியாவில் நிலக்கரி மூலம் தயாரிக்கப்படும் மின்சாரத்தை விட, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்களின் வாயிலாக உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் செலவீனம் மிகவும் குறைந்து வருவதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். ""நாட்டின் மின் தேவையை குறைந்த செலவில் பூர்த்தி செய்வதற்குரிய வழியாக புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்கள் விளங்குவதால், அதை நோக்கிய நகர்வு தொடர்ந்து இருந்துக்கொண்டே இருக்கும் என்று கூறப்படுகிறது. ""சூரிய ஒளியின் மூலமா கவோ அல்லது பிற புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்களின் வாயிலாகவோ உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை சேமித்து வைப்பதற்குரிய கட்டமைப்புகள் சரிவர ஏற்படுத்தப்படவில்லை.
""நிலையான மின்னுற்பத்தியை அனல்மின் நிலையங்களினால் மட்டுமே வழங்க முடியும். எனவே, அவற்றின் தேவை தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கும் என்று கூறுகிறார் சத்தீஸ்கரி லுள்ள மின்னுற்பத்தி நிறுவனமொன்றின் தலைமை செயலதிகாரியான ஷைலேந்திர ஷுக்லா. ""பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தின் படி, ஈஞ2 உமிழ்வை குறைப்பதற்கான நடவடிக்கையை முன்னெடுப்பதில் இந்தியா முன்னிலை வகிக்கிறது.
இருந்தபோதிலும், அது போதுமானதாக இருக்காது என்று கிருஷ்ணசாமி கூறுகிறார். உலக வெப்பமயமாதலை 1.5ஈ வைத்திருக்க வேண்டுமென்று பாரிஸ் காலநிலை கூட்டத்தில் முடிவெடுக்கப் பட்டாலும், அது போதுமான அளவை விட குறைவாகவே இருக்குமென்று காலநிலை மாற்றத்திற்கான சர்வதேச அரசாங்க குழுவின் அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.