இந்திய-அமெரிக்க வர்த்தக போட்டி!

/idhalgal/general-knowledge/india-america-trade-competition

ந்தியாவுக்கு அளிக்கப்பட்டு வந்த வர்த்தக முன்னுரிமை அந்தஸ்தை அமெரிக்கா ரத்து செய்வதாக கடந்த மாதத்தில் அறிவித்துள்ளது.

அமெரிக்கா இதுவரை இந்தியாவுக்கு அளித்துவந்த இந்த வர்த்தக முன்னுரி மையின் கீழ் வாகன உதிரி பாகங்கள், ஜவுளிப் பொருட்கள் என 2,000 தயாரிப்புகளை இந்தியா அமெரிக்காவுக்கு வரி ஏதும் இல்லாமல் ஏற்றுமதி செய்து வந்தது. தற்போது இந்தியாவின் வர்த்தக முன்னுரிமை அந்தஸ்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ரத்து செய்துள்ளார்.

வர்த்தக முன்னுரிமை அந்தஸ்து ஒப்பந்தத்தின்படி அமெரிக்காவில் வர்த்தகம் செய்வதற்கு சில நாடுகளுக்கு முன்னுரிமைகளும் சலுகைகளும் அளிக்கப்படும். அதன்படி இந்த திட்டத்தின்கீழ் வரும் நாடுகள் குறிப்பிட்ட பொருட்களுக்கு வரி ஏதும் செலுத்தாமல் ஏற்றுமதி செய்து கொள்ளலாம்.

trade

கடந்த மார்ச் மாதம் இந்தியாவிற்கு அளிக்கப்பட்டு வந்த வர்த்தக முன்னுரிமை அந்தஸ்தை விலக்க இருப்பதாக ட்ரம்ப் அறிவித்து இருந்தார். இந்நிலையில் இந்தியாவில் பொதுத் தேர்தல் நடக்கவிருந்ததால் பொறுத்திருந்

ந்தியாவுக்கு அளிக்கப்பட்டு வந்த வர்த்தக முன்னுரிமை அந்தஸ்தை அமெரிக்கா ரத்து செய்வதாக கடந்த மாதத்தில் அறிவித்துள்ளது.

அமெரிக்கா இதுவரை இந்தியாவுக்கு அளித்துவந்த இந்த வர்த்தக முன்னுரி மையின் கீழ் வாகன உதிரி பாகங்கள், ஜவுளிப் பொருட்கள் என 2,000 தயாரிப்புகளை இந்தியா அமெரிக்காவுக்கு வரி ஏதும் இல்லாமல் ஏற்றுமதி செய்து வந்தது. தற்போது இந்தியாவின் வர்த்தக முன்னுரிமை அந்தஸ்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ரத்து செய்துள்ளார்.

வர்த்தக முன்னுரிமை அந்தஸ்து ஒப்பந்தத்தின்படி அமெரிக்காவில் வர்த்தகம் செய்வதற்கு சில நாடுகளுக்கு முன்னுரிமைகளும் சலுகைகளும் அளிக்கப்படும். அதன்படி இந்த திட்டத்தின்கீழ் வரும் நாடுகள் குறிப்பிட்ட பொருட்களுக்கு வரி ஏதும் செலுத்தாமல் ஏற்றுமதி செய்து கொள்ளலாம்.

trade

கடந்த மார்ச் மாதம் இந்தியாவிற்கு அளிக்கப்பட்டு வந்த வர்த்தக முன்னுரிமை அந்தஸ்தை விலக்க இருப்பதாக ட்ரம்ப் அறிவித்து இருந்தார். இந்நிலையில் இந்தியாவில் பொதுத் தேர்தல் நடக்கவிருந்ததால் பொறுத்திருந்து தனது முடிவை உறுதி செய்திருக்கிறார்.

வர்த்தக முன்னுரிமை ஒப்பந்தத்தில் சில விதிமுறைகள் உள்ளன. இந்த ஒப்பந்தத்தின்கீழ் வரும் நாடுகள் அந்த விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். உலகளாவிய தொழிலாளர் விதிகளை கடைப்பிடித்தல், அறிவுசார் உடைமை களுக்குப் பாதுகாப்பு அளித்தல், முறையான நியாயமான வர்த்தக உறவைப் பேணுதல் போன்றவை அந்த விதிகளில் சில. இந்த விதிகளை கடைபிடிக்கும் பட்சத்தில் அந்த நாடுகள் குறிப்பிட்ட தயாரிப்புகளை அமெரிக்காவுக்கு வரி ஏதுமின்றி ஏற்றுமதி செய்து கொள்ளலாம்.

ஆனால், இந்த விதிகளை இந்தியா பூர்த்தி செய்யவில்லை என்று ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.

வர்த்தக முன்னுரிமை அந்தஸ்து ஒப்பந்தத்தின்படி அமெரிக்கா எதிர்பார்த்த அளவில் இந்தியச் சந்தையில் சம அளவிலான வர்த்தக வாய்ப்புகளை இந்தியா வழங்க தவறி இருக்கிறது.

அதன் காரணமாக வர்த்தக முன்னுரிமை அந்தஸ்து பட்டியலிலிருந்து இந்தியாவை நீக்குகிறோம் என்று ட்ரம்ப் தெரிவித்தார்.

ட்ரம்பின் இந்த முடிவு குறித்து வர்த்தக முன்னுரிமை அமைப்புக்கான கூட்டணியின் நிர்வாக இயக்குனர் டான் அந்தோனி கூறியதாவது, ""ட்ரம்பின் இந்த வர்த்தக முடிவு அமெரிக்க வர்த்தகத்தை பெரும் அளவு பாதிக்கும் அமெரிக்காவிலுள்ள குறு தொழில் நிறுவனங்கள்தான் வர்த்தக முன்னுரிமை அளிக்கப்பட்ட நாடுகளிலிருந்து செய்யப்படும் இறக்குமதிகளால் பெரும் அளவில் பயன்பெற்று வருகின்றன.

அந்த முன்னுரிமை பட்டியலில் இருந்து நாடுகள் நீக்கப்படும்போது பாதிக்கப் படுவது அமெரிக்க நிறுவனங்கள் தான். அவர்கள் இறக்குமதிக்கு கூடுதல் வரி செலுத்த வேண்டிய நிலை உருவாகும். அதன் விளைவாக வேலையின்மை உருவாகும்'' என்றார்.

மேலும், ""வர்த்தக முன்னுரிமை பட்டியலில் இந்தியா தொடர வேண்டும் என்று அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களும், அமெரிக்க வர்த்தக நிறுவனங்களும் கேட்டுக்கொண்டன. அவற்றிற்கெல்லாம் எதிராகத்தான் ட்ரம்ப் இந்த முடிவை எடுத்துள்ளார்'' என்றும் தெரிவித்தார். ட்ரம்பின் இந்த நடவடிக்கை இந்தியா வுக்கு துரதிஷ்டவசமானது. இந்தியா- அமெரிக்கா இடையிலான சமூகமான வர்த்தகத்துக்கு தேவையான குறிப்பிடத் தக்க முயற்சிகளை இந்தியா எடுத்துள்ள தாகவும், ஆனால், அவற்றை ஏற்க அமெரிக்கா தயாராக இல்லை என்ப தாகவும் இந்திய வர்த்தகத் துறையின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2018-ஆம் ஆண்டு கணக்கின்படி, உலகளவில் 324.7 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களை இந்தியா ஏற்றுமதி செய்திருக்கிறது. அதில் 51.4 பில்லியன் டாலர் அளவில் இந்தியா அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்திருக் கிறது. அதிலும் அமெரிக்காவின் வர்த்தக முன்னுரிமை அந்தஸ்து திட்டத்தின்கீழ் இந்தியா செய்த ஏற்றுமதியின் மதிப்பு 6.35 பில்லியன் டாலர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

உருக்கின் மீது 25 சதவீதமும், அலுமினியம் மீது 10 சதவீதமும் வரி விதிப்பதாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் அமெரிக்கா தெரிவித்தது. இந்தியாவிலிருந்து அதிக அளவு உருக்கு, அலுமினியம் ஏற்றுமதி செய்யப்படுவதால் இந்த வரி விதிப்பு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.

அமெரிக்கா விதித்த கூடுதல் வரியால் 24 கோடி டாலர் அளவுக்கு கூடுதல் தொகையை செலுத்த வேண்டியிருக்கும்.

இந்தப் பிரச்சினைக்கு சுமூக தீர்வு கிடைக்கும் என்ற எண்ணத்தில் வரி விதிப்பை இந்தியா செயல்படுத்தா மலிருந்து. மேலும் இந்தியாவுக்கு அளிக்கப்பட்டு வந்த பொதுப் பிரிவு சலுகையையும் அமெரிக்கா கடந்த ஜூன் 5-ஆம் தேதி ரத்து செய்தது. இதனால் இந்தியாவுக்கு 550 கோடி டாலர் அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் 29 பொருட்கள் அடையாளம் காணப்பட்டு அவற்றுக்கு வரி விதிக்க இந்தியா முடிவு செய்து அதை செயல்படுத்தியுள்ளது.

ஆப்பிள், பியர்ஸ், தட்டையான உருக்கில் செய்யப்பட்ட பொருட்கள், டியூப் மற்றும் பைப் ஃபிட்டிங், ஸ்க்ரூ, போல்ட் மற்றும் ரிவிட் ஆகியவற்றின் மீது வரி விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலிருந்து ஆண்டுக்கு 150 கோடி டாலர் மதிப்புக்கு அலுமினியம் மற்றும் உருக்கு ஏற்றுமதி செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

2017-18-ஆம் நிதி ஆண்டில் இந்தியா விலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி யான பொருட்களின் மொத்த மதிப்பு 4,700 டாலராகும். இறக்குமதி செய்யப் படும் பொருள்களின் மதிப்பு 2,600 கோடி டாலராகும்.

gk010719
இதையும் படியுங்கள்
Subscribe