* பணமதிப்பு நீக்கத்திற்கு பின் இன்று நாம் இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறோம்.

* பொருளாதாரத்தை முறைப்படுத்து வதற்கு அரசால் மேற்கொள்ளப்பட்ட தொடர்ச்சியான முக்கிய முடிவுகளில் பணமதிப்பு நீக்கமும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

* இந்தியாவிற்கு வெளியே உள்ள கருப்புப் பணத்தை அரசு முதலில் இலக்காக கொண்டது. இந்தப் பணத்தை அபராத வரி செலுத்தி மீண்டும் கொண்டு வருமாறு சொத்து உடைமையாளர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டார்கள். இதைச் செய்ய தவறியவர்கள் மீது கருப்புப் பண சட்டத்தின் கீழ் வழக்கு தொடுக்கப்பட்டது.

* வெளிநாடுகளில் உள்ள அனைத்து கணக்குகள் மற்றும் சொத்துக்களின் விவரங்கள் அரசுக்கு கிடைக்கப் பெற்றதை அடுத்து சட்டத்தை மீறியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Advertisment

* கணக்கு தாக்கல் செய்வதற்கும், வரிச் செலுத்துவோரின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதற்கும் நேர்முக மற்றும் மறைமுக வரிகளுக்கு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.

* முறையான பொருளாதாரத்தின் ஒரு பகுதியாக நலிந்த பிரிவினரும் வருவதை உறுதி செய்யும் மற்றொரு முக்கிய நடவடிக்கையாக அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதாரம் இருந்தது.

* ஜன் தன் கணக்குகள் பயனாக பெரும்பாலான மக்கள் வங்கி முறையோடும் இணைக்கப்பட்டனர். நேரடி பணப்பயன் பரிமாற்றம் என்ற அரசு ஆதரவு முறையின் மூலம் வங்கிக் கணக்குகளில் நேரடியாக பணம் செலுத்தப்படுவதை ஆதார் சட்டம் உறுதி செய்தது. மறைமுக வரிகள் விஷயத்தில் ஜி.எஸ்.டி மேலும் உத்தரவாதம் தந்தது. வரி நடைமுறைகள் எளிதாயின. இப்போது வரிஏய்ப்பு என்பது மிகவும் சிக்கலானதாக மாறியுள்ளது.

Advertisment

ரொக்கப் பணத்தின் பங்களிப்பு

* ரொக்கப் பண ஆதிக்கம் உள்ள பொருளாதாரம் இந்தியாவுடையது. பரிவர்த்தனைகளில் ரொக்கப் பணம் மறைமுகமாக ஈடுபடுத்தப்படுகிறது. இது வங்கி முறையை மீறிச் செல்வதால் சொத்துள்ளவர்கள் வரிஏய்ப்பு செய்ய முடிகிறது.

* ரொக்கப் பணம் வைத்திருப்பவர்கள் அதனை வங்கிகளில் செலுத்த பணமதிப்பு நீக்கம் நிர்ப்பந்தித்தது. பணம் செலுத்தியவர் எவர் என்ற விவரம் இல்லாததையடுத்து 17 லட்சத்து 42 ஆயிரம் சந்தேகத்திற்குரிய கணக்கு வைத்திருப்போர் அடையாளம் காணப்பட்டு இணையதளம் மூலம் தகவல்கள் பெறப்பட்டன. விதிமுறை மீறியவர்கள் சட்டப்படியான நடவடிக்கைகளை எதிர்கொண்டனர்.

* வங்கிகளில் பெருமளவு பணம் செலுத்தப்பட்டதால் அவற்றுக்கு கடன் வழங்கும் திறன் அதிகரித்தது. கூடுதல் முதலீடுகளுக்காக இந்தப் பணத்தில் அதிகபட்சம் பரஸ்பர நிதியத்திற்கு திருப்பி விடப்பட்டன. வழக்கமான முறைமையின் ஒரு பகுதியாக இது இருந்தது.

தவறான வாதம்

* ஏறத்தாழ ஒட்டு மொத்த பணமும் வங்கிகளில் செலுத்தப்பட்டு விட்டதாக பணமதிப்பு நீக்கம் குறித்து தவறான தகவல் அடிப்படையில் விமர்சனம் செய்யப்பட்டது. பணமதிப்பு நீக்கத்தின் நோக்கம் ரூபாய் நோட்டுக்களை பறிமுதல் செய்வதல்ல. அவற்றை முறையான பொருளாதாரத்திற்குள் கொண்டு வருதல் மற்றும் பணம் வைத்திருப்போரை வரி செலுத்தச் செய்தல் என்பவையே இதன் பரந்த நோக்கமாக இருந்தது. ரொக்கப் பணத்திலிருந்து டிஜிட்டல் பரிமாற்றத் திற்கு இந்தியாவை மாற்றுவதற்கு ஏற்கனவே இருக்கும் நடைமுறையை அசைக்க வேண்டியிருந்தது. அதிகபட்ச வரி வருவாய் மற்றும் வரிசெலுத்து வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு என்பவை இதன் தாக்கமாக இருந்தது கண்கூடாகும்.

டிஜிட்டல்மயத்தின் தாக்கம்

* செல்பேசி வைத்திருப்போரிடையே சரியான நேரத்தில் பணப் பரிமாற்றத் திற்கான யு.பி.ஐ. செயலி 2016-இல் தொடங்கப்பட்டது. இதன் மூலம் 2016 அக்டோபரில் ரூ.0.5 பில்லியனாக இருந்த பணப் பரிமாற்றங்கள் 2018 செப்டம்பரில் ரூ.598 பில்லியனாக அதிகரித்தது.

* யு.பி.ஐ. இணையத்தைப் பயன்படுத்தி வெகு விரைவான பணப்பரிமாற்றங் களுக்கு என்.பி.சி.ஐ. மூலம் பீம் செயலி உருவாக்கப்பட்டது. இது தற்போது 1.25 கோடி மக்களால் பயன்படுத்தப்படுகிறது. பீம் செயலி மூலம் 2016 செப்டம்பரில் ரூ.0.02 பில்லியனாக இருந்த பணப் பரிமாற்ற மதிப்பு 2018 செப்டம்பரில் ரூ.70.6 பில்லியனாக அதிகரித்துள்ளது. 2017 ஜூன் மாதத்தில் யு.பி.ஐ. மூலமான ஒட்டு மொத்த பணப் பரிமாற்றங்களில் பீம் செயலியின் பங்கு 48 சதவீதமாக உள்ளது.

* ரூபே அட்டை, விற்பனை முனையிலும் மின்னணு வர்த்தகத்திலும் பயன்படுத்தப் படுகிறது. பணமதிப்பு நீக்கத்திற்கு முன் இதன் மூலம் நடந்த ரூ.8 பில்லியன் பணப் பரிமாற்றங்கள் 2018 செப்டம்பரில் விற்பனை முனையத்தில் ரூ.57.3 பில்லியனாகவும் மின்னணு வர்த்தகத்தில் ரூ.3 பில்லியனிலிருந்து ரூ.27 பில்லியனா கவும் அதிகரித்துள்ளது.

* இந்தியாவில் இன்று விசா மற்றும் மாஸ்டர் அட்டை சந்தை மதிப்பை இழந்து வருகிறது. அதே சமயம் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட கடன் மற்றும் பற்று அட்டை மூலமான பணப் பரிமாற்ற முறைக்குரிய யு.பி.ஐ. மற்றும் ரூபே அட்டையின் சந்தை மதிப்பு 65 சதவீதம் அதிகரித்துள்ளது.

நேரடி வரிகள் மீதான தாக்கம்

* பணமதிப்பு நீக்கத்தின் தாக்கம் தனிநபர் வருமான வரி வசூலில் உணரப்படுகிறது. இந்த வருவாய் 2018-19 நிதியாண்டில் (31.10.2018 வரை) முந்தைய ஆண்டோடு ஒப்பிடும் போது 20.2 சதவீதம் அதிகரித்துள்ளது. கார்ப்பரேட் வரி வசூல் கூட 19.5 சதவீதம் உயர்ந் துள்ளது.

* பணமதிப்பு நீக்கத்திற்கு 2 ஆண்டுகளுக்கு முன் நேரடி வரிவசூல், முறையே 6.6 சதவீதம், 9 சதவீதம் என்ற அளவில் உயர்ந்தது. அடுத்த இரண்டு ஆண்டுகளில், பணமதிப்பு நீக்கத்திற்கு பிந்தைய காலத்தில் 14.6 சதவீத அளவிற்கு (2016-17-இல் பணமதிப்பு நீக்கத்தின் தாக்கத்திற்கு முன்பிருந்த ஆண்டின் பகுதியில்) அதிகரித்தது. 2017-18-ஆம் ஆண்டில் 18 சதவீதம் அதிகரித்தது.

* அதே போல் 2017-18-ஆம் ஆண்டில் கணக்கு தாக்கல் செய்வது 6.86 கோடியை எட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 25 சதவீதம் அதிகமாகும். இந்த ஆண்டு 31.10.2018 நிலவரப்படி ஏற்கனவே 5.99 கோடி கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. முந்தைய ஆண்டில் இதே தேதியோடு ஒப்பிடும் போது இது 54.33 சதவீதம் அதிகமாகும். இந்த ஆண்டு புதிதாக கணக்கு தாக்கல் செய்வோர் எண்ணிக்கை 86.35 லட்சம் ஆகியுள்ளது.

* மே 2014-இல் தற்போதுள்ள அரசு தேர்வு செய்யப்பட்ட போது வருமானவரி கணக்கு தாக்கல் செய்வோரின் மொத்த எண்ணிக்கை 3.8 கோடியாக இருந்தது. இந்த அரசின் முதல் நான்கு ஆண்டுகளில் இது 6.86 கோடியாக அதிகரித்தது. இந்த அரசின் ஐந்து ஆண்டு கால நிறைவின்போது வருமானவரி கணக்கு தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை இரண்டு மடங்கு அதிகரிக்கக் கூடும்.

மறைமுக வரியின் மீதான தாக்கம்

* பணமதிப்பு நீக்கமும், ஜி.எஸ்.டி அமலாக்கமும் ரொக்கப் பரிமாற்றத்தை பெருமளவு குறைத்துள்ளது. டிஜிட்டல் பரிமாற்றங்கள் அதிகரித்திருப்பது கண்கூடு. பொருளாதாரத்தை முறைப் படுத்தியதால் ஜி.எஸ்.டி அமலாக்கத் திற்கு முன் 6.4 மில்லியனாக இருந்த வரிசெலுத்துவோர் எண்ணிக்கை ஜி.எஸ்.டி அமலாக்கத்திற்கு பின் 12 மில்லியனாக அதிகரிக்க வழிவகுத் துள்ளது. வரி வருவாய் தற்போது அதிகரித்திருப்பதன் ஒரு பகுதியாக சரக்கு மற்றும் சேவைகளின் உண்மை யான பயன்பாடு பதிவு செய்யப் பட்டுள்ளது.

* பொருளாதாரத்தில் மறைமுக வரியின் அதிகரிப்பு உத்வேகத்தை தருகிறது. இதன் மூலம் மத்திய-மாநில அரசுகள் பயனடைந்துள்ளன. ஜி.எஸ்.டிக்கு பின் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு ஆண்டும் வரிவசூலில் 14 சதவீதம் அதிகரிப்பது நிச்சயமாகி உள்ளது.

* வருமானவரி செலுத்துவோர் தங்களின் வர்த்தக வருவாயை அறிவிப்பது மறைமுக வரி கணக்கீட்டில் தாக்கம் ஏற்படுத்துவது மட்டுமின்றி வரி மதிப்பீட்டை அவர்களே தெரிவிப்பதன் மூலம் வருமானவரி அதிகரிப்பையும் உறுதி செய்கிறது. 2014-15-இல் ஜி.டி.பி.யில் மறைமுக வரி விகிதம் 4.4 சதவீதமாக இருந்தது. ஜி.எஸ்.டி அமலாக்கத்திற்கு பின் இது ஒரு சதவீதம் அதிகரித்து 5.4 சதவீதம் ஆகியுள்ளது.

* சிறு வகையான வரி செலுத்துவோருக்கு ஆண்டு வருமானவரி நிவாரணமாக ரூ.97 ஆயிரம் கோடியும், ஜி.எஸ்.டி. மூலம் வரி செலுத்துவோருக்கு ரூ.80 ஆயிரம் கோடி நிவாரணம் வழங்கப் பட்டுள்ள போதும் வரிவசூல் அதிகரித்துள்ளது. நேர்முக மற்றும் மறைமுக வரிகளின் விகிதங்கள் குறைக்கப் பட்டுள்ள போதும் வரிவசூல் அதிகரித் துள்ளது. வரி செலுத்துவோர் தளம் விரிவடைந்துள்ளது. ஜி.எஸ்.டி. அறிமுகத்திற்கு முன் 31 சதவீதம் வரி செலுத்திக் கொண்டிருந்த 334 பொருள்களுக்கான ஜி.எஸ்.டி. விகிதங்கள் குறைந்திருப்பது வரிக்குறைப்புக்கான சாட்சியங்களாக உள்ளன.

* இந்த நிதி ஆதாரங்களை சிறந்த அடிப்படை கட்டுமான உருவாக்கத்திற்கும், சமூக நலனுக்கும் ஊரக இந்தியாவிற்கும் அரசு பயன்படுத்துகிறது. இல்லையென்றால், கிராமங்களை இணைக்கும் சாலைகள், அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம், ஊரக துப்புரவில் 92 சதவீத நிறைவு, வெற்றிகரமான வீட்டுவசதி திட்டம், 8 கோடி ஏழைக் குடும்பங்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு ஆகியவற்றை எவ்வாறு நாம் நிறைவேற்றி இருக்க முடியும்.

* ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 10 கோடி குடும்பங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. மானிய விலையில் உணவு வழங்க ரூ.1,62,000 கோடி செலவிடப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையில் 50 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. வெற்றிகரமான பயிர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

* பொருளாதாரத்தை முறைப்படுத்தி யதன் காரணமாக 13 கோடி தொழில் முனைவோருக்கு முத்ரா கடன் வழங்க வழி ஏற்பட்டுள்ளது.

* ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகள் சில வாரங்களில் அமல்படுத்தப்பட்டது. ஒரு பதவிக்கு ஒரு ஊதியம் என்பது அமலாக்கப் பட்டது.

* கூடுதலான முறைப்படுத்தலால் கூடுதல் வருவாய், ஏழைகளுக்குக் கூடுதல் நிதி, சிறந்த அடிப்படைக் கட்டமைப்பு, நமது மக்களின் சிறப்பான வாழ்க்கைத்தரம் சாத்தியமாகி உள்ளது.

இது மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி எழுதிய ஆங்கில கட்டுரையின் தமிழாக்கம் ஆகும்