நாடு முழுவதும் H3N2என்ற இன்ஃப்ளூயன்சா வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இது ஏ, பி, சி என துணை வகைகளாகப் பிரிக்கப்படுகிறது. கர்நாடகா மற்றும் ஹரியானாவில் தலா ஒருவர் இன்ஃப்ளூயன்சா ஏ வகை வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்தது. அதோடு இந்தியா முழுவதும் 90 பேர் இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) காய்ச்சல் தடுப்பு வழிமுறைகள் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்திரபிரஸ்தா அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர் நிகில் மோடி தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசினார். அவர் கூறுகையில், கோவிட் தடுப்பு நெறிமுறைகளை மீண்டும் தொடங்குவதற்கான நேரம் இது. ஏனெனில் வளர்ந்து வரும் வைரஸ்களுடன் வாழ வேண்டும். எவ்வாறாயினும், பீதி அடையத் தேவையில்லை. மருத்துவர் அறிவுரை இல்லாமல் மருந்து உட்கொள்ள வேண்டாம் எனக் கூறினார்.
காய்ச்சல் தொற்று நோயை உண்டாக்கும் இன்ஃப்ளூயன்சா வைரஸ் 4 வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது, இதில் இன்ஃப்ளூயன்சா A மேலும் பல்வேறுதுணை வகைகளாக வகைப் படுத்தப்பட்டுள்ளது. அவற்றில் ஒன்று H3N2ஆகும். அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் (CDC) கூற்றுப்படி, H3N2 வைரஸ் 1968-ஆம் ஆண்டு காய்ச்சல் தொற்றுநோயை ஏற்படுத்தியது. இதனால் உலகளவில் சுமார் ஒரு மில்-லியன் மக்களும், அமெரிக்காவில் சுமார் 1 லட்சம் பேரும் உயிரிழந்தனர் என்று கூறியுள்ளது.
H3N2 வைரஸ் அறிகுறிகளும் மற்ற காய்ச்சல் அறிகுறிகள் போலவே இருக்கும். இருமல், காய்ச்சல், உடல்வலி, தலைவலி, தொண்டை புண், மூக்கு அடைப்பு, சளி, சோர்வு ஆகியவை அறிகுறிகளாக கூறப் படுகிறது. குமட்டல், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவையும் ஒரு சில சந்தர்ப்பங்களில் ஏற்படும். இந்திய மருத்துவ சங்கத்தின் (ஒஙஆ) கூற்றுப்படி, ஐ3ச2 காய்ச்சல் பொதுவாக 5 முதல் 7 நாட்கள் வரை இருக்கும். 3 நாட்களுக்கு பிறகு காய்ச்சல் குறைந்து விடும். இருப்பினும், இருமல் 3 வாரங்கள் வரை நீடிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
ஐ.எம்.ஏ படி, இந்த வைரஸ் பொதுவாக 15 வயதுக்குட்பட்ட அல்லது 50 வயதுக்கு மேற்பட்ட நபர்களை பாதிக்கிறது. குழந்தைகள் மற்றும் ஆஸ்துமா, நீரிழிவு, இதய நோய், நோயெதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், நரம்பியல் நோய் உள்ளவர்களுக்கு இந்த வைரஸ் தீவிர பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கூறியுள்ளது.
H3N2 பரவுவதைத் தடுக்க சுகாதாரமாக இருப்பது சிறந்த வழி. சாப்பிடுவதற்கு முன் மற்றும் உங்கள் முகம், மூக்கு, வாய் தொடுவதற்கு முன் கைகளை கழுவ வேண்டும். சானிடைசர் பயன்படுத்துவது, ஏற்கனவே வைரஸ் அல்லது வேறு ஏதேனும் பருவகால காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை சந்திப்பதை தவிர்ப்பது ஆகியவை நோய் பரவாமல் தடுப்பதைக் கட்டுப்படுத்தும்.
மேலும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பழங்கள், காய்கறிகள், ஆரோக்கியமான உணவு வகைகளைச் சாப்பிட வேண்டும். வீட்டில் சமைத்த உணவுகள், காரம் குறைவான மற்றும் குறைந்த கொழுப்புள்ள உணவுகள் சாப்பிடுவது உதவியாக இருக்கும்.
H3N2 காய்ச்சல் குறித்து செய்தியாளர் களிடம் பேசிய தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், “ 1000 இடங்களில் காய்ச்சல் முகாம்கள் நடத்த தொடங்கியுள்ளோம். சென்னையைப் பொறுத்தவரை வார்டுக்கு ஒன்று என்ற முறையில் 200 வார்டுகளுக்கு 200 சிறப்பு காய்ச்சல் முகாம்களை நடத்த தொடங்கியுள்ளோம். தமிழ்நாட்டில் உள்ள 11,333 மருத்துவ கட்டமைப்புகளில் துணை சுகாதார நிலையங்களை தவிர்த்து மற்ற இடங்களில் காய்ச்சலுக்கு உண்டான மருந்துகள் கையிருப்பில் உள்ளதா என்பதை உறுதிப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவது போன்ற பெரிய பாதிப்புகள் இல்லை. எனவே, பதற்றம் கொள்ள தேவையில்லை” என்று தெரிவித்தார்.
இதனிடையே, பருவ கால வைரஸ் காய்ச்சல் தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகத்தின் செயலாளர் ராஜேஷ் பூஷண் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் ஆகியவற்றின் தலைமைச் செயலாளர்கள், முதன்மை செயலாளர்கள், சுகாதார அமைச்சகத்தின் செயலாளர்கள் ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், “இன்ஃப்ளூயன்சா ஏ பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பர் மாத நடுவில் இருந்தே அதிகரிக்க தொடங்கியது. குறிப்பாக ஹெச்3என்2 பாதிப்பு பல இடங்களில் கண்டறியப்பட்டுள்ளது. குழந்தைகள், பெரியவர்கள், இணை நோய்களை உடையவர்கள், ஐ1ச1, ஐ3ச2 போன்ற நோய்களால் பாதிக்கப்படும் வாய்ப்புகள் அதிகம்.
நோய் பரவலை கட்டுப்படுத்த பொதுமக்கள் கைகளை தூய்மை யாக வைத்துகொள்ளவேண்டும். சுவாசப் பிரச்னைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மருந்துகள், மருத்துவ உபகரணங்கள், மருத்துவ ஆக்சிஜன் போன்றவற்றை போதிய கையிருப்பில் வைத்துகொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
H3N2 வைரஸ் பாதிப்புக்கான அறிகுறி இல்லாதவர்கள் அடிக்கடி கைகளை சோப் போட்டு கழுவ வேண்டும். வைரஸ் பாதிப்புக்கான அறிகுறிகள் தென்படுபவர்கள் ஐ.சி.எம்.ஆர். வழங்கியுள்ள கீழ்க்காணும் வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
முகக்கவசம் அணிவது அவசியம், கூட்ட நெரிசலான இடங்களில் இருப்பதை தவிர்க்க வேண்டும் தும்மும் போதும், இருமும் போதும் வாய், மூக்கை மறைத்துக் கொள்ள வேண்டும். கண்கள், மூக்கு ஆகியவற்றை தொடுவதை தவிர்க்க வேண்டும்.
தண்ணீர் மற்றும் நீர்ச்சத்துள்ளவற்றை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
காய்ச்சல், உடல் வலிக்கு பாராசிட்டமால் மருந்தை எடுத்துக் கொள்ளலாம் கை குலுக்குவதோ, உடல் ரீதியான வேறு வகை வாழ்த்துப் பரிமாற்றமோ கூடாது பொது இடங்களில் எச்சில் உமிழக் கூடாது.
மருத்துவர் பரிந்துரையின்றி ஆன்டிபயாடிக்கோ அல்லது வேறு மருந்துகளையோ எடுக்கக் கூடாது.
மற்றவர்களுடன் ஒன்றாக நெருக்கமாக அமர்ந்து உண்ணக் கூடாது.
மழை மற்றும் குளிர்காலத்தின் போது பெரும்பான்மையோருக்கு வந்து செல்லும் சாதாரண காய்ச்சல் தொற்று இது. எனினும், குழந்தைகள், முதியோர் மற்றும் இணைநோய்கள் இருப்பவர்களுக்கு அபாய அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க வேண்டும்.
இந்தியாவில் கடந்த சில மாதங்களாக இன்ஃப்ளூயன்சா எச்3என்2 வைரஸ் (Influenza H3N2)பாதிப்பு அதிகரித்து வருவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தெரிவித்துள்ளது.
இன்ஃப்ளூயன்சா காய்ச்சல் என்பது வைரஸ் காய்ச்சல். அதாவது, பரவக் கூடிய வைரஸ் காய்ச்சல். லேசான சளி, லேசான தொண்டை வலி-, லேசான இருமல் என்று இதன் பாதிப்புகள் இருக்கலாம். சில நேரங்களில் பாதிப்பு தெரியாமல் கூட இருக்கலாம். லேசான காய்ச்சலாகத் தொடங்கி தீவிர காய்ச்சலாக பாதிப்பை ஏற்படுத்தலாம்.
தற்போது இன்ஃப்ளூயன்சா H3N2 (Influenza A subtype H3N2) என்ற வைரஸ் அதிக அளவில் பரவி வருவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள 30 சோதனை மையங்களில் எடுக்கப்பட்ட தரவுகளின் அடிப்படை யில் இந்த அறிக்கையை ஐசிஎம்ஆர் வெளியிட்டுள்ளது. அதன் விவரம்:
இந்தியாவில் கடந்த டிசம்பர் 15-ஆம் தேதி முதல் Influenza A subtype H3N2 பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது.
தீவிர பாதிப்பை சந்திக்கும் (severe acute respiratory infection)50 சதவீத நோயாளிகள் இந்த வகை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்ற Influenza வைரஸ் துணை வகைகளை விட இந்த துணை வகை அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களில் 92 சதவீதம் பேருக்கு காய்ச்சல், 86 சதவீதம் பேருக்கு இருமல், 27 சதவீதம் பேருக்கு சுவாசக் கோளாறு அறிகுறிகள் உள்ளன.
தீவிர பாதிப்பை சந்திப்பவர்களில் 10 சதவீதம் பேருக்கு ஆக்சிஜன் உதவி தேவைப்படுகிறது. 7 சதவீதம் பேருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவு சிகிச்சை அளிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
தமிழகத்தில் இந்த வைரஸ் பாதிப்பு
தற்போது அதிகமாக கண்டயறிப் பட்டுள்ளது. அனைத்து மாவட்டங் களுக்கும் இது தொடர்பான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் இந்த வைரஸ் பாதிப்பு கட்டுப்பாட்டில்தான் உள்ளது. மாவட்டங்களில் அதிக காய்ச்சல் பாதிப்பு இருக்கும் இடங்களில் காய்ச்சல் முகாம் நடத்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. நடமாடும் வாகனங்கள் மூலம் இந்தக் காய்ச்சல் முகாம் நடத்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான மருந்துகள் அனைத்தும் போதுமான அளவு கையிருப்பில் உள்ளன” என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.