ஜிஎஸ்டி ஒரு அடிப்படை மாற்றம்

/idhalgal/general-knowledge/gst-fundamental-change

ஜூலை மாதம் முதல் தேதி நள்ளிரவில் நாடாளுமன்ற மத்திய மன்றத்தில் இந்தியாவின் பொருள்கள் மற்றும் சேவைகள் வரி (ஜிஎஸ்டி) துவக்கி வைக்கப்பட்டது. இது, உண்மையிலேயே சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு அடிப்படை மாற்றமாகும் - ஏனெனில் இந்தியா, "ஒரே நாடு, ஒரே வரி, ஒரே சந்தை என்ற பாதையில் பயணத்தைத் துவக்கியது. உலகளாவிய அனுபவங் களின்படி பொருள்கள் மற்றும் சேவைகள் வரி செயலாக்கத்தால் பல்வேறு தரப்பினருக்கு நன்மைகள் விளைந்துள்ளன. பலகட்ட வரிகளைத் தவிர்ப்பதாலும், திறமையான செயல்பாட்டாலும், நுகர்வோர் பயன்பெறுவர். தொழில் துறையினருக்கும், வணிகர்களுக்கும் பயன் உண்டு -

நாடெங்கிலும் ஒரே சீரான ஒரே மறைமுக வரி, இடுபொருள்களுக்கான வரிகளுக்கான உடனடி பலன் இவற்றோடு மாநிலங்களுக்கிடையே யான எல்லையில் வரி சார்ந்த தடுப்பு நிறுத்தங்கள் அகன்றுள்ளன.

பொருள்களை உற்பத்தி செய்து பிற பகுதிகளுக்கு அனுப்புவதற்கான போக்குவரத்து செலவு குறைவு, கச்சாப் பொருள்கள் கொள்முதலிலி ருந்து தயாரிக்கப்பட்ட பொருள்கள் நுகர்வோரிடம் சென்றடையும் வரை கணினிசார் அமைப்புகள் மற்றும் வரி வசூலிப்பவர்களோடு குறைந்த பட்ச போக்குவரத்து ஆகியவை ஏற்பட்டுள்ளன. பொருள் உற்பத்தி யாளர்கள் மூலப் பொருட்களை கொள்முதல் செய்யவும், உற்பத்திக்கான கிடங்குகளை எங்கே நிறுவுவது போன்ற அறிவார்ந்த முடிவுகளை எடுக்கவும் முடியும். மத்திய, மாநில அரசுகளுக்கு வரிசார் வருவாய் உயர்வதோடு, வரிகள் வசூலிப்பதற்கான செலவுகளும் குறையும்.

ஏற்றுமதியாளர்களும் சிறப்பாகப் போட்டியிட முடியும், ஏனெனில், அந்தப் பொருட்களுக்கு வரிகள் இருக்காது. இந்தியாவில் தொழில் - வியாபாரம் துவங்குவது எளிதாக்கப் பட்டுள்ள நிலையில் “இந்தியாவில் உற்பத்தி செய்வோம்” என்ற திட்டம் வலுப்பெறும். மலிவான பொருட்களின் மீது, அடிப்படை சுங்கவரியோடு ஒருங்கிணைந்த பொருட்கள் மற்றும் சேவை வரி விதிக்கப்படுவதன் மூலம் அவைகளிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும். இவ்வனைத்து பயன்களோடு, மத்திய காலகட்டத்திலும், நீண்ட காலகட்டத்திலும் உள்நாட்டு மொத்த உற்பத்தியின் வளர்ச்சி மிகும்.

அரசியல் சட்டத் திருத்தம் தேவை ஒரு சில நாடுகளைத் தவிர்த்து, பொருட்கள் மற்றும் சேவைகள் வரி விதிக்கப்பட்ட நாடுகளில் அவை மத்திய அரசினாலோ, மாநில அரசுகளாலோ யாராவது ஒருவரால் மட்டுமே விதிக்கப்படுகிறது. ஜிஎஸ்டி வரி விதிப்பிற்கு முன்னால், அரசியல் சட்டத்தின்கீழ் மத்திய, மாநில அரசுகளுக்கான நிதி நிலை அதிகாரங்கள், மத்தியத் தொகுப்பு மற்றும் மாநிலங்கள் தொகுப்பு என்று தெளிவாகப் பிரிக்

ஜூலை மாதம் முதல் தேதி நள்ளிரவில் நாடாளுமன்ற மத்திய மன்றத்தில் இந்தியாவின் பொருள்கள் மற்றும் சேவைகள் வரி (ஜிஎஸ்டி) துவக்கி வைக்கப்பட்டது. இது, உண்மையிலேயே சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு அடிப்படை மாற்றமாகும் - ஏனெனில் இந்தியா, "ஒரே நாடு, ஒரே வரி, ஒரே சந்தை என்ற பாதையில் பயணத்தைத் துவக்கியது. உலகளாவிய அனுபவங் களின்படி பொருள்கள் மற்றும் சேவைகள் வரி செயலாக்கத்தால் பல்வேறு தரப்பினருக்கு நன்மைகள் விளைந்துள்ளன. பலகட்ட வரிகளைத் தவிர்ப்பதாலும், திறமையான செயல்பாட்டாலும், நுகர்வோர் பயன்பெறுவர். தொழில் துறையினருக்கும், வணிகர்களுக்கும் பயன் உண்டு -

நாடெங்கிலும் ஒரே சீரான ஒரே மறைமுக வரி, இடுபொருள்களுக்கான வரிகளுக்கான உடனடி பலன் இவற்றோடு மாநிலங்களுக்கிடையே யான எல்லையில் வரி சார்ந்த தடுப்பு நிறுத்தங்கள் அகன்றுள்ளன.

பொருள்களை உற்பத்தி செய்து பிற பகுதிகளுக்கு அனுப்புவதற்கான போக்குவரத்து செலவு குறைவு, கச்சாப் பொருள்கள் கொள்முதலிலி ருந்து தயாரிக்கப்பட்ட பொருள்கள் நுகர்வோரிடம் சென்றடையும் வரை கணினிசார் அமைப்புகள் மற்றும் வரி வசூலிப்பவர்களோடு குறைந்த பட்ச போக்குவரத்து ஆகியவை ஏற்பட்டுள்ளன. பொருள் உற்பத்தி யாளர்கள் மூலப் பொருட்களை கொள்முதல் செய்யவும், உற்பத்திக்கான கிடங்குகளை எங்கே நிறுவுவது போன்ற அறிவார்ந்த முடிவுகளை எடுக்கவும் முடியும். மத்திய, மாநில அரசுகளுக்கு வரிசார் வருவாய் உயர்வதோடு, வரிகள் வசூலிப்பதற்கான செலவுகளும் குறையும்.

ஏற்றுமதியாளர்களும் சிறப்பாகப் போட்டியிட முடியும், ஏனெனில், அந்தப் பொருட்களுக்கு வரிகள் இருக்காது. இந்தியாவில் தொழில் - வியாபாரம் துவங்குவது எளிதாக்கப் பட்டுள்ள நிலையில் “இந்தியாவில் உற்பத்தி செய்வோம்” என்ற திட்டம் வலுப்பெறும். மலிவான பொருட்களின் மீது, அடிப்படை சுங்கவரியோடு ஒருங்கிணைந்த பொருட்கள் மற்றும் சேவை வரி விதிக்கப்படுவதன் மூலம் அவைகளிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும். இவ்வனைத்து பயன்களோடு, மத்திய காலகட்டத்திலும், நீண்ட காலகட்டத்திலும் உள்நாட்டு மொத்த உற்பத்தியின் வளர்ச்சி மிகும்.

அரசியல் சட்டத் திருத்தம் தேவை ஒரு சில நாடுகளைத் தவிர்த்து, பொருட்கள் மற்றும் சேவைகள் வரி விதிக்கப்பட்ட நாடுகளில் அவை மத்திய அரசினாலோ, மாநில அரசுகளாலோ யாராவது ஒருவரால் மட்டுமே விதிக்கப்படுகிறது. ஜிஎஸ்டி வரி விதிப்பிற்கு முன்னால், அரசியல் சட்டத்தின்கீழ் மத்திய, மாநில அரசுகளுக்கான நிதி நிலை அதிகாரங்கள், மத்தியத் தொகுப்பு மற்றும் மாநிலங்கள் தொகுப்பு என்று தெளிவாகப் பிரிக்கப்பட்டிருந்ததால், அரசியல் சட்டத் திருத்தம் தேவைப் பட்டது. கஞ்சா, பிற போதைப் பொருட்கள் மற்றும் மக்கள் உட்கொள்ளும் மதுபானங்கள் தவிர்த்து, மற்ற பொருள்கள் உற்பத்தி மீது, வரிவிதிக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு உள்ளது. இப்பொருட்களை விற்பனை செய்யும் போது அதன்மீது வரிவிதிக்கும் அதிகாரம் மாநிலங்களுக்கு இருந்தது. ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு விற்கப்பட்ட பொருட்களின் மீது, மத்திய விற்பனை வரி விதிக்க மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது. ஆனால், இந்த வரியை மாநில அரசுகள் வசூலித்து, தங்களிடமே வைத்துக்கொள்வார்கள்.

சேவைகளைப் பொறுத்த வரையில் மத்திய அரசு மட்டுமே, சேவை வரி விதிக்கமுடியும். அரசியல் சட்டத்தின்கீழ் மத்திய, மாநில அரசுகள் தனித்தனியான பொறுப்புக்களை நிர்வகிக்கும் நிலையில் அதற்காக அவர்களுக்கு நிதி தேவைப்படுகிறது. ஆகவே, மத்திய மாநில அரசுகள் ஒரே சமயத்தில் ஜிஎஸ்டி வரி விதித்து, வசூலிக்க ஏதுவாக அரசியல் சட்டம் திருத்தப்பட வேண்டியிருந்தது. இந்தியாவில், இப்படி இருவரும் ஜிஎஸ்டி வரி விதிக்கும் தன்மை, அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் செயல்படும் கூட்டு ஆட்சிக்கு உகந்ததாகும்.

அரசியல் சட்ட (101-வது) திருத்தம் 2016

இந்த அரசியல் சட்டத் திருத்தத்தின்படி மத்திய மாநில அரசுகள், பொருட்கள் மற்றும் சேவைகள் வரியை விதித்து வசூலிக்க முடியும். ஜிஎஸ்டி வரி என்பது மக்கள் உட்கொள்ளும் மதுபானங்கள் தவிர பிற பொருட்கள் மற்றும் சேவைகள் மீது விதிக்கப்படும் வரியாகும். ஆகவே, அரசியல் சட்டத்தில் விளக்கப்பட்டுள்ளபடி மக்கள் பயன்படுத்தும் மதுபானங்களுக்கு ஜிஎஸ்டி வரி இருக்காது. மற்றொரு வகையில் ஐந்து வகையான பெட்ரோலியம் பொருட்கள், அதாவது, பெட்ரோலிய கச்சா எண்ணெய், பெட்ரோல், உயர்வேக டீசல், இயற்கை எரிவாயு, விமானங்களில் பயன்படுத்தப் படும் எரிபொருள் ஆகியவற்றின் மீது தற்காலிகமாக ஜிஎஸ்டி வரி விதிக்கப்படவில்லை. இவற்றின் மீது இந்த வரி எப்போதிலிருந்து துவங்கும் என்று ஜிஎஸ்டி கவுன்சில் பிறகு முடிவு செய்யும். ஒரு மாநிலத்திலிருந்து மற்ற மாநிலங்களுக்குச் செல்லும் பொருட்கள் மற்றும் சேவைகள் மீது மத்திய அரசு ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி வரியை விதிக்கும். இதன்படி ஜிஎஸ்டி வரி என்பது, கடைசியாக ஒருவர் ஒரு பொருளை அல்லது சேவையை பயன்படுத்தும் போது, அதன் மீது விதிக்கப்படும் வரியாகும். ஆகவே, ஒரு பொருள் ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்குச் செல்லும் போது உற்பத்தியாளர் / வியாபாரி கொடுக்கும் எல்லா வரிகளுக்கும் இழப்பீட்டுப் பயன்கள் கிடைக்கும்.

ஜிஎஸ்டி கவுன்சில்

இந்த அரசியல் சட்டத் திருத்தத்தின் சிறப்பு அம்சமாக, ஜிஎஸ்டி கவுன்சில் விளங்கும். இந்த கவுன்சிலின் தலைவராக, மத்திய நிதியமைச்சர் இருப்பார். உறுப்பினர்களாக, மத்திய நிதி இணை அமைச்சர் மற்றும் டெல்லி புதுச்சேரி யூனியன் பிரதேசங்கள் உள்ளிட்ட 29 மாநிலங்களின் நிதியமைச்சர்கள் இருப்பார்கள். இந்த ஜிஎஸ்டி கவுன்சிலின் வழிகாட்டு நெறியாக இருப்பது, மத்திய அரசுக்கும் மாநிலங்களுக்கிடையிலும் ஒருமித்த கருத்தோடு கூடிய பொருள்கள் மற்றும் சேவை சந்தையை உருவாக்குவதாகும். இந்த கவுன்சில் மத்திய மாநில அரசுகளுக்கு கீழ்க்காணும் பரிந்துரை களை அளிக்கும்.

ஜிஎஸ்டிக்குள் இணையும் மத்திய, மாநில மற்றும் உள்ளாட்சிகள் விதிக்கும் வரிகள், தீர்வைகள் மற்றும் கூடுதல் வரிகள்;

ஜிஎஸ்டி சேவைக்குட்பட்ட மற்றும் அதிலிருந்து விலக்கப்பட்ட பொருள்கள் மற்றும் சேவைகள்;

எந்தத் தேதியிலிருந்து பெட்ரோலிய கச்சா எண்ணெய், பெட்ரோல், உயர் வேக டீசல், இயற்கை எரிவாயு மற்றும் விமானங்களில் பயன்படுத்தப்படும் எரிபொருள் ஆகியவற்றின் மீது ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் என்பது.

மாதிரி ஜிஎஸ்டி சட்டங்கள், வரி விதிப்பிற்கான அடிப்படைக் காரணங்கள், ஒருங்கிணைந்த ஜிஎஸ்டியை மத்திய மாநில அரசுகளுக்கு எந்த அளவில் பிரித்துக் கொடுப்பது மற்றும் எந்த இடத்திலிருந்து வழங்கப் படுகிறது என்பதற்கான அடிப்படைத் தன்மைகள் ;

எந்த அளவுக்குக் கீழே உள்ள பொருட்களுக்கும் சேவைகளுக்கும் ஜிஎஸ்டியிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.

ஜிஎஸ்டி சார்ந்த வரி அளவுகள் மற்றும் அடிப்படை விகிதங்கள் ஆகியவை ;

இயற்கைப் பேரிடர் மற்றும் பேரிடர் ஏற்படும் போது, கூடுதல் வருவாய்க்காக விதிக்கப்படும் சிறப்பு வரி விகிதம்/ விகிதங்கள் ;

மாநிலங்களுக்கான சிறப்பு ஷரத்துக்கள்

வடகிழக்கு மாநிலங்கள், ஜம்மு& காஷ்மீர், ஹிமாச்சல பிரதேசம் மற்றும் உத்தராகண்ட் மாநிலங்களுக்கான சிறப்பு ஷரத்துக்கள் உள்ளன. ஜிஎஸ்டி கவுன்சில் தீர்மானிக்கும் மற்ற எந்த நடவடிக்கைக்கும் அரசியல் சட்டத்திருத்தத்தின்படி ஜிஎஸ்டி கவுன்சில் மேற்கொள்ளும் ஒவ்வொரு முடிவும், கவுன்சிலில் அன்றன்று பங்குபெற்று வாக்களிக்கும் பகுதி உறுப்பினர்களின் பெரும்பான்மையுடன் இருக்க வேண்டும். இந்தப் பெரும்பான்மை, மத்திய மாநில அரசுகளுக்கு அளிக்கப்பட்டுள்ள விகிதங்களின்படி இருக்க வேண்டும். அதன்படி, மத்திய அரசின் வாக்குக்கு 1/3 மதிப்பும், மாநிலங்களின் பங்கு 2/3 பகுதியாகவும் இருக்கும். இந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெறுவதற்கு அடிப்படையான பதிவியல், மொத்த உறுப்பினர்களில் பாதியாக இருக்கும். வாக்களிக்கும் உறுப்பினர்களின் மதிப்பு, மத்திய அரசோ, மாநிலங்களோ தன்னிச்சையாக எந்தவொரு முடிவையும் மேற்கொள்ள இயலாத வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசுக்கு 33 சதவிகித வாக்கு அதிகாரம் மட்டுமே உள்ளதால், கவுன்சிலின் முடிவுக்கு மாநிலங்களின் ஒப்புதலும் அவசியமாகிறது. ஆனால், இதுவரை கவுன்சிலில் மேற்கொள்ளப்பட்டுள்ள எல்லா முடிவுகளும் ஒருமித்த எண்ண முடிவாக மேற்கொள்ளப்பட்டுள்ளதால் இதுவரை வாக்களிக்கும் நிலைமை ஏற்படவில்லை.

ஜிஎஸ்டி கவுன்சிலின் செயல்முறை

ஜூலை 1, 2017 அன்று ஜிஎஸ்டி செயல்படுத்தப்பட்டதற்கு முன்பு நடைபெற்ற 18 கூட்டங்களில் ஒருமித்தக் கருத்து ஏற்பட இயலாது என்று நினைக்கப்பட்ட பல விஷயங்களில் ஒருமித்த கருத்து ஏற்பட்டுள்ளது. நடைபெற்ற ஒரு சில கூட்டங்களிலேயே, மத்திய ஜிஎஸ்டி, மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி, மாநிலங்களுக்கான இழப்பீடு, மற்றும் ஜிஎஸ்டி சார்ந்த பல நியதிகள் சார்ந்த மாதிரி சட்ட முன்வடிவுகளை இந்தக் கவுன்சில் வழங்கியுள்ளது. எதிர்மறை அதிகாரங்கள் மற்றும் வரி கொடுப்பவர்களை மத்திய மாநிலங்களுக்கு பிரிப்பது போன்ற சிக்கலான விஷயங்களில் உண்மை யிலேயே விட்டுகொடுக்கும் போக்கு காணப்பட்டது. வெவ்வேறு மாநிலங் களில் இருந்த, பலவகையான மதிப்புக் கூட்டு வரிகளுக்கு பதிலாக எல்லா பொருள்களும், சேவைகளும் எளிதான முறையில் ஒரு சில அடுக்குகளில் உள்ளடக்கப்பட்டுள்ளது. புதிதாக உருவாக்கப்பட்டுள்ள அரசியல் சட்ட அமைப்பான ஜிஎஸ்டி கவுன்சிலில் மத்திய மாநில அரசுகள், தங்களுடைய இறையாண்மைகளை ஒன்றிணைத்து, தங்களுடைய நிதி ஆதாயங்களை ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து உண்மையிலேயே சிறப்பாகச் செயல்படும் ஒரு மாதிரி கூட்டாட்சியாக விளங்குகிறது. இந்தக் கவுன்சில், நிதி மற்றும் வரி சார்ந்த முடிவுகளில் நம்ப முடியாத அளவிற்கு ஒருமித்த கருத்தை எட்டியுள்ளது. மத்திய மாநில அரசுகளுக்கிடையே மற்ற துறைகளிலும் ஏற்பட வேண்டிய ஒருமித்த நிலைக்கு இது ஒரு முன்னோடியாக விளங்குகிறது.

மாநிலங்களுக்கு இழப்பீடு

ஜிஎஸ்டி வரி என்பது பொருட்கள் மற்றும் சேவைகள் சென்றடையும் கட்டத்தில் விதிக்கப்படும் வரியாதலால், பொருள்களை உற்பத்தி செய்யும் மாநிலங்களுக்கு இது பாதகமாக விளங்கும் என்ற கருத்து சில மாநிலங்களுக்கிடையே இருந்தது. ஆகவே, அரசியல் சட்ட 101-வது திருத்த சட்டம் 2016-இன்படி ஜிஎஸ்டி வரி செயல்படுத்தப்படுவதால் இழப்பு ஏற்படும் மாநிலங்களுக்கு அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இழப்பீடு வழங்கப்படும். இதன்படி, மாநிலங்களின் வருவாயின் அளவு, 2015-16-ஆம் ஆண்டின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு, ஆண்டிற்கு 14 சதவிகித உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் கட்டத்தில் அதனை ஈடு செய்ய தீர்வை வரி விதிக்கவும் வழி செய்யப்பட்டுள்ளது. இந்தத் தீர்வை, ஆடம்பரப் பொருட்கள் மற்றும் அநாவசியப் பொருட்கள் மீது விதிக்கப்படும்.

வரி கசிவுகளையும், ஏய்ப்புகளையும் சமாளித்தல்

இந்திய ஜிஎஸ்டி அமைப்பின் கீழ் விலைப்பட்டியல்களின் பொருத்தம் அவசியம். ஒரு பொருளை உற்பத்தி செய்து விற்பனை செய்வதற்காக வாங்கப்பட்ட மூலப் பொருள்களுக்கு கொடுக்கப்பட்ட வரியும் அதை விற்றவர்கள், காட்டிய வரிவிதிப்பும் ஒன்றாக இருக்கவேண்டும். பொருள்கள் மற்றும் சேவைகள் வரி சார்ந்த கணினி உள் கட்டமைப்பு வசதிகள் மூலம் மாதத்திற்கு 300 கோடி விலைப்பட்டியல்களை ஒப்பிட்டுப் பார்க்கமுடியும். இது, ஒரு தானியங்கி செயல்பாட்டு முறையாகும். இதனால், வரிசார்ந்த மோசடிகளும், ஏய்ப்புகளும் தடுக்கப்பட்டு மேன்மேலும் பல வணிகங்கள், முறைப்படுத்தப்பட்ட பொருளாதாரத்தில் இணையும். இந்த புதிய ஜிஎஸ்டி அமைப்பில் வரி செலுத்துவோர் ஒரே ஒரு வலைதளத்தில் பதிவு செய்து, படிவங்களை சமர்ப்பித்து வரிகளைச் செலுத்த முடியும். ஒரு சில அரிய நிகழ்வுகளில், வரி செலுத்துவோர் வரி வசூலிப்பவர்களோடு தொடர்பு கொள்ள நேரிடும்போது ஒரே ஒரு அமைப்போடு தொடர்பு கொள்வார்.

அது, மாநில அரசாகவும் இருக்கலாம் அல்லது மத்திய அரசாகவும் இருக்கலாம். அனைத்து ஜிஎஸ்டி செயல்பாடுகளுக்கும் யாராவது ஒருவர் தீர்வு காணும் வரையில் மற்றவருக்கான அதிகாரங்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. வரி செலுத்துவோர், வரி செலுத்துவதைத் தவிர்க்கமுடியாததால், வரி வசூலிப் பவர்களோடு தொடர்பு குறைந்து இலஞ்சமும் தவிர்க்கப்படும்.

முடிவாக ஜூலை 1, 2017இல் செயல்படுத்தப்பட்ட இந்திய ஜிஎஸ்டி வரி அமைப்பு வியாபாரம் செய்யப்படும் முறையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் பங்கு பெறும் அனைவரும் இந்தச் சீர்திருத்தத்தை வரவேற்றிருக்கிறார்கள். இந்தப் புதிய ஜிஎஸ்டி அமைப்பின் மூலம் மேலும் பல வணிகங்கள், முறைப்படுத்தப்பட்ட பொருளாதாரத்தில் இணையும். இப்படிப்பட்ட பெரிய மாற்றத்தால் சில தொல்லைகள் ஏற்படலாம். இந்த மாற்றம் எளிதாக ஏற்பட மத்திய மாநில அரசுகளின் வரி வசூலிக்கும் அமைப்புகள் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த சிறு தொல்லைகளால் ஏற்படும் பெரும் பலன்கள் இந்தியப் பொருளாதாரத்திற்கு பல ஆண்டுகளுக்குப் பயன்களை அளிக்கும்.

gk010822
இதையும் படியுங்கள்
Subscribe