சையுலகில் மிகவும் உயரிய விருதாக கருதப்படுவது கிராமி விருதாகும்.

1959-ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் இந்த விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது.

இந்த விழாவில் இசைத்துறையின் பல்வேறு பிரிவுகளில் சிறந்த முறையில் பங்காற்றியவர்களுக்கு விருதுகள் வழங்கப்படும்.

Advertisment

gr

65-வது கிராமி விருது வாங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது.

இதில் ஷசிறந்த ஆடியோ புக், நரேஷன் அண்ட் ஸ்டோரிடெல்லிங் ரெகார்டிங்’ பிரிவில், நடிகை வயோலா டேவிஸ் தனது வாழ்வின் நினைவுகளை மையப் படுத்தி உருவாக்கிய ஷஃபைண்டிங் மீ’ என்ற ஆடியோ பதிவுக்கு கிராமி விருது வழங்கப்பட்டது.

Advertisment

இந்த விழாவில், பியோன்சேவின் ‘பிரேக் மைசோல்’ பாடல் சிறந்த நடனம் மற்றும் எலெக்ட்ரானிக்கல் ரெக்கார்டிங் பிரிவில் கிராமி விருதை வென்றுள்ளது.

இவரது ‘ரெனேசன்ஸ்’ ஆல்பம் சிறந்த எலெக்ட்ரானிக் மியூசிக் ஆல்பம் பிரிவில் விருதை வென்றுள்ளது.

அதேபோல, பெஸ்ட் டிரெடிஷனல் ஆர் அண்ட் பி பெர்பார்மென்சில் பியோன்சேவின் ‘பிளாஸ்டிக் ஆஃப் தி சோஃபா’ பாடலும் கிராமி விருதை வென்றுள்ளது.

மேலும், சிறந்த ஆர் அண்ட பி பாடலுக்கு கஃப் இட் பாடலுக்கு பாடியதற்காகவும், பாடல் வரிகளுக்காகவும் மற்ற பாடகர்களுடன் கிராமி விருதை பியோன்சே பகிர்ந்துள்ளார்.

இதன் மூலம் 32 விருதுகளை வென்று கிராமி விருது வரலாற்றிலேயே அதிகமான விருதை வென்றவர் என்ற சாதனை படைத்துள்ளார்.

அதேபோல, திருநங்கை கிம் பெட்ராஸ் பெஸ்ட் பாப் டியோ என்ற பிரிவில் கிராமி விருதை வென்றுள்ளார்.

இதன் மூலம் முதல் கிராமி விருதை வென்ற திருநங்கை என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

அன்ஹோலி பாடலுக்காக இந்த விருதை சாம் ஸ்மித் மற்றும் கிம் பெட்ராஸ் ஆகியோர் பெற்றுள்ளனர்.

gra

சிறந்த இசை வீடியோ பிரிவில் 'ஆல் டூ வெல்: தி ஷார்ட் பி-லிம்' என்ற குறும்படத்தை எழுதி இயக்கிதற்காக உலகப்புகழ் பெற்ற பிரபல பாடகி டெய்லர் ஷிப்ட் விருதை வென்றார்.

மேலும் பெங்களூருவைச் சேர்ந்த இசையமைப்பாளர் ரிக்கி கேஜ் மூன்றாவது முறையாக கிராமி விருதினை வென்று சாதனை படைத்துள்ளார்.

இவர் Best Immersive Audio Album பிரிவில் டிவைன் டைட்ஸ் (Divine Tides) என்ற ஆல்பத்திற்காக கிராமி விருதை வென்றுள்ளார்.

அமெரிக்காவில் பிறந்தவரான கேஜ், தி போலீஸ் என்ற பிரிட்டிஷ் ராக் இசை குழுவை சேர்ந்த டிரம் வாசிப்பாளரான ஸ்டூவர்ட் கோப்லேண்ட் உடன் இந்த விருதினை பகிர்ந்து கொண்டுள்ளார்.

இதன் மூலம் ரிக்கி கேஜ் 3 கிராமி விருது வாங்கிய ஒரே இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.