நாட்டின் 73-வது சுந்திர தினத்தை ஒட்டி வீர தீர செயல்புரிந்தவர்களுக்கும், சிறந்த சேவை புரிந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு விருதுகளை வழங்கி கௌரவித்தார்.
முதலமைச்சரின் மாநில இளைஞர் விருதுகள்
ஆண்கள் பிரிவில் 1. நவீன்குமார், நாமக்கல் மாவட்டம் 2. மு.ஆனந்த்குமார், திண்டுக்கல் மாவட்டம் பெண்கள் பிரிவில் 1. செல்வி ரா. கலை வாணி, மதுரை மாவட்டம்
முதலமைச்சரின் நல் ஆளுமை விருது
பெருநகர சென்னை காவல் ஆணை யரகம், குற்றங்களை கண்டுபிடிக்க சென்னை பெருநகர காவல்துறையின் மூன்றாவது கண் மற்றும் Facetager செயலி ஆகிய வற்றை செயல்பாட்டிற்கு கொண்டுவந்த தற்காக வழங்கப்பட்டது.
வேலூர் மாவட்டத்தில் நாகநதி ஆற்றிற்கு புத்துயிர் அளித்தமைக்காக ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து துறைக்கு வழங்கப்பட்டது.
வணிகவரித்துறை வரி செலுத்துபவர்கள் ஜிஎஸ்டி முறைக்கு புலம் பெறுவது குறித்த தகவல்களை வழங்குவது புதிய பதிவு எண் குறித்த விவரங்கள் அளிப்பது, இதற்காக புதிய அழைப்பேசியை உருவாக்கி 24மணி நேர உதவி மையம் அமைத்ததற்காக வழங்கப்பட்டது.
பெருநகர சென்னை மாநகராட்சி, மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக சென்னை சாந்தோமில் இன்க்பினிட்டி பூங்கா அமைத்ததற்காக பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
அப்துல் கலாம் விருது
அறிவியலில் சாதனை படைக்கும், தமிழகத்தைச் சேர்ந்தோருக்கு, சுதந்திர தின விழாவில், அப்துல் கலாம் விருது வழங்கப்படுகிறது .இந்த ஆண்டு, அப்துல் கலாம் விருதை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன தலைவர், சிவன் பெற்றார்.
கல்பனா சாவ்லா விருது
வீர தீர செயலுக்கான கல்பனா சாவ்லா விருது மீன் வளத்துறை துணை இயக்குனர் ரம்யா லட்சுமிக்கு வழங்கப்பட்டது.
மாற்றுத்திறனாளி விருது
நெல்லை மாவட்டத்தில் கொள்ளையர் களை துணிவுடன் விரட்டியடித்த சண்முகவேல் செந்தாமரை தம்பதி யினருக்கு துணிவுக்கான சிறப்பு விருது வழங்கப்பட்டது.
மாற்றுத்திறனாளிகள் நலனுக்கான மிகச்சிறந்த சேவை புரிந்தவருக்கான விருது
வேப்பேரியில் உள்ள தொண்டு நிறுவனமான ஆப்பர்சுனிட்டி அறிவுசார் குறைபாடுடைய குழந்தைகளுக்கான பள்ளிக்கு வழங்கப்பட்டது. மாற்றுத்திறனாளி களுக்கு அதிக வேலைவாய்ப்பு வழங்கிய தற்கான விருதை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனமான எவரெஸ்ட் ஸ்டேபிளேசர்ஸ் பிரைவேட் லிமிட்டெட் பெற்றது.
சிறந்த மருத்துவருக்கான விருது
கோவை அரசு மருத்துவக்கல்லூரியில், விபத்து சிகிச்சை பிரிவில் செயல்படும் முடநீக்கியல் இயக்குனர் செ.வெற்றிவேல் செழியனுக்கு வழங்கப்பட்டது. மேலும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைத்துறை தலைவராக பணிபுரியும் மருத்துவர். வி.ரமாதேவிக்கு சிறந்த மருத்துவருக்கான விருது வழங்கப்பட்டது.
சிறந்த சமூகப்பணியாளருக்கான விருது
திருவான்மியூரில் உள்ள பாத்வே சோபின் நிறுவனத்தின் இணை நிறுவனரான சந்திரா பிரசாத்துக்கு வழங்கப்பட்டது.
சிறந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான விருது
சேலத்திற்கு சிறந்த மாநகராட்சிக்கான விருது மற்றும் தருமபுரி, வேதாரண்யம், அறந்தாங்கிக்கு சிறந்த நகராட்சிக்கான விருதுகளை முதலமைச்சர் வழங்கினார்.
சிறந்த பேரூராட்சிக்கான விருதில் மதுரையில் உள்ள கல்லுப்பட்டிக்கு முதல் பரிசு, திரூவாரூரில் உள்ள நன்னிலத்திற்கு இரண்டாம் பரிசு மற்றும் சிறந்த பேரூராட்சிக்கான விருதில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகருக்கு மூன்றாம் பரிசு வழங்கப் பட்டது.
சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கான விருதை, சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பெற்றது.