தயாராகும் சந்திராயன்-2 விண்கலம்

/idhalgal/general-knowledge/get-ready-chandrayaan-2-spacecraft

ந்தியாவின் இரண்டாவது சந்திர விண்கலமான சந்திராயன்-2, ஜூலை மாதம் விண்ணில் ஏவப்படவுள்ளது. 13 பேலோட்கள் மற்றும் அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவின் ஒரு ஆராய்ச்சி ஒன்றையும் ஏந்தி விண்ணில் செலுத்தப்படவுள்ளது.

ஆர்பிட்டார், லேண்டர்(விக்ரம்) மற்றும் ரோவர்(ப்ரகியன்) என்று மூன்று பகுதிகளை கொண்டுள்ளது.இந்த சந்திராயன்-2 விண்கலம், 3.8 டன் எடையை கொண்டுள்ளது.

இந்த ஆண்டு ஜூலை 9-இல் இருந்து ஜூலை 16-ற்குள் விண்ணில் ஏவப் படலாம் எனவும், அது நிலவில் செப்டம்பர் 6-ஆம் நாள் தரையிறங் கலாம் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இந்த ஏவுகணையில் பொருத்தப்பட்டுள்ள ஆர்பிட்டார், நிலவின் மேற்பரப் பிலிருந்து 100 கிலோமீட்டர் மேலே நிலவை சுற்றி வட்டமடிக்க உள்ளது. எனவும், லேண்டர் நிலவில் தரைப்பகுதிக்கு சென்று, நிலவின் தென்துருவத்தின் அருகில் மென்மையாக தரையிறங்கப் போகிறது எனவும் இஸ்ரோ தெரிவித் துள்ளது.

""ஜி எஸ் எல் வி'' எம் கே-III ஏவுகணை யில் வைத்து விண்ணில் ஏவப்படவுள்ள இந்த சந்திராயன்-2 விண்கலத்தில், ஆர்பிட்டார் மற்றும் லேண்டர் ஆகிய பகுதிகள் தனித்தனியாக தயாரிக்கப்பட்டு, ஒன்றுடன் மற்றொன்றை இணைத்து இந்த ஏவுகணையுனுள் வைக்கப் பட்டுள்ளது.

இந்த மூன்று பகுதிகளையும் ""ஜி எஸ் எல் வி'' எம் கே-III ஏவுகணை புவியின் சுற்றுவட்டப்பாதைக்கு வெளியில் எடுத்து செல்லும். அதன்பின், இந்த மூன்று பகுதிகளும், இந்த ஏவுகணையிலிருந்து பிரிந்து, ஆர்பிட்டாரின் உந்துவிசை மூலமாக நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடையும்.

அதன்பின் ஆர்பிட்டார் மற்றும் லேண்டர், இரண்டும் பிரிந்து

அதன்பின் ஆர்பிட்டார் மற்றும் லேண்டர், இரண்டும் பிரிந்து ஆர்பிட்டார் நிலவின் சுற்றுவட்டப்பாதையில் சுற்றிக்கொண்டிருக்கும். அதே நேரம் லேண்டர், ஆர்பிட்டாரிலிருந்து பிரிந்து, நிலவின் பரப்பை நோக்கி பயணிக்கும்.

அப்படி பயணிக்கும் லேண்டர் நிலவின் தென் துருவத்தின் அருகில் மென்மையாக தரையிறங்கும். பின் ரோவர், அதிலிருந்து வெளியேறி, நிலவின் பரப்புகளில் ஆராய்ச்சி மேற்கொள்ளும்.

இஸ்ரோ நிறுவனம், மேலும், லேண்டர் மற்றும் ரோவர் ஆகிய இரண்டிலும் ஆராய்ச்சிக்கான கருவிகளை பொருத்தி விண்ணில் ஏவப்போவதாக குறிப் பிட்டுள்ளது.

சந்திராயன்-1 பத்து வருடங்களுக்கு முன்னர், விண்ணில் ஏவப்பட்டது. மொத்தம் 11 பேலோட்களை கொண்டு விண்ணில் ஏவப்பட்ட இந்த சந்திராயன் 1-இல், 5 இந்திய, 3 ஐரோப்பிய, 2 அமெரிக்க, 1 பல்கேரிய பேலோட்கள். இந்த சந்திராயன்-1 நிலவில் நீர் இருப்பதை கண்டுபிடிக்க உதவியது. 1.4 டன்கள் எடை கொண்டிருந்த சந்திராயன்-1, பி.எஸ்.எல்.வி ஏவுகணை மூலமாக விண்ணில் ஏவப்பட்டது.

ch

சந்திரனுக்கு அனுப்பப்படும் இஸ்ரோவின் 2-வது விண்கலம் குறித்து முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

உலகிலேயே முதல் முறையாக நிலவின் தெற்கு முனைக்கு அருகில் சந்திராயன் - 2 விண்கலம் அனுப்பப்பட உள்ளது. இம்முறை ஆர்பிட்டர், லேண்டர், ரோவர் ஆகியவை கொண்டு செல்லப்படும். இதன்மூலம் தென்முனையில் சாப்ட் லேண்டிங் மூலம் விண்கலம் தரை யிறக்கப்படும்.

இதையடுத்து 14 நாட்கள் தங்கி யிருந்து, பகல் நேர சோதனைகள் மேற்கொள்கிறது. ரோவர் 100 மீ தூரம் நடந்து சென்று, நிலவின் பரப்பை ஆய்வு செய்கிறது. மேலும் கொண்டு செல்லும் உபகரணங்கள் மூலம், பல்வேறு சோதனைகளை மேற்கொள்ள இருக்கிறது.

இதன்பிறகு ஆர்பிட்டர் மற்றும் ரோவர் ஆகியவை நிலவை படம்பிடித்து 15 நிமிடங்களில் புகைப்படங்களை அனுப்பும். சந்திராயன் - 2ன் எடை 3.8 டன்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது என இஸ்ரோ தலைவர் கே. சிவன் கூறியுள்ளார். இது ஜி.எஸ்.எல்.வி எம்.கே-ஒஒஒ மூலம் அனுப்பப்பட உள்ளது.

கடந்த அக்டோபர் 2008-இல் சந்திராயன் - 1 நிலவிற்கு அனுப்பப்பட்டது. இது ஆகஸ்ட் 2009 வரை செயல்பட்டது. இந்த திட்டத்தில் லூனார் ஆர்பிட்டர் மற்றும் இம்பேக்டர் ஆகியவை அடங்கும். இது பி.எஸ்.எல்.எவி-எக்ஸ்.எல் ராக்கெட் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. சந்திராயன் - 2 இருமுறை ஒத்தி வைக்கப்பட்டது. முதலில் ஏப்ரலிலும், பின்னர் அக்டோபரிலும் ஒத்தி வைக்கப்பட்டது.

சந்திராயன் 2 திட்டம்: கிரையோஜெனிக் என்ஜின் சோதனை நிறைவு

சந்திராயன் விண்கலம் விண்ணில் செலுத்த உதவும் ஜி.எஸ்.எல்.வி எம்.கே.-III கிரையோஜெனிக் என்ஜின் பரிசோதனை வெற்றிகரமாக நிறைவேறியது.

சந்திரனை ஆய்வு செய்ய இந்தியா முதல் முதலில் அனுப்பிய விண்கலம் சந்திராயன்-1 என்ற பெயரில் விண்ணில் பாய்ந்தது. இதற்கு அடுத்த விரைவில் சந்திராயன்-2 என்ற இரண்டாவது விண்கலத்தை இந்தியா நிலவுக்கு அனுப்ப உள்ளது.

இஸ்ரோ இத்திட்டத்திற்கான ஆயத்தப் பணிகளில் மும்முரமாக இயங்கி வருகிறது. இதன் அங்கமாக சந்திராயன்-2 விண்கலத்தை விண்ணில் செலுத்த பயன்படும் கிரையோஜெனிக் என்ஜின் (CE-20) ஜி.எஸ்.எல்.வி எம்.கே.-III வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.

இந்தச் சோதனை அக்டோபர் 11-ஆம் தேதி பெங்களூரிலிருக்கும் இஸ்ரோ தலைமை அலுவலகத்தில் நிகழ்ந்தது என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

மனிதன் அபாய காலத்தில் விண்கலத்தில் இருந்து தப்பிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட முதல் சோதனை ஓட்டமே வெற்றி பெற்றது இஸ்ரோவின் சாதனையாகக் கருதப்படுகிறது.

இந்தியா சார்பில் நிலாவுக்கு இரண்டாவது முறையாக ஆராய்ச்சி செய்ய சந்திராயன் 2, வரும் ஜூலை மாதம் அனுப்பப்படும் நிலையில், தற்போது இந்த விண்கலம் நாசாவின் ஒரு ப்ரோபையும் கொண்டு செல்ல உள்ளது. இந்த கருவியின் மூலம் நிலாவின் தூரத்தை துல்லியமாக அளக்க முடியும் என்று கூறப்படுகிறது.

நாசா தயாரிப்பில் உருவாக்கப்பட்ட ரெட்ரோ ரிஃப்ளெக்டர் என்ற கருவி சந்திராயன்-2 விண்கலத்தில் அனுப்பப் படும்.

ரெட்ரோ ரிஃபிளக்டர் என்பது அதிநவீன கண்ணாடியாகும். பூமியில் இருந்து விஞ்ஞானிகள், லேசரை செலுத்தி, கண்ணாடியின் பிரதிபலிப்பை அளப்பர். இதன் மூலம் நிலா - பூமிக்கு இடையில் இருக்கும் துல்லியமான தூரத்தை அளவிட முடியும்.

மேலும் 3,890-கிலோ எடையுள்ள சந்திராயன் -2-வில், ஜிஎஸ்எல்வி ஙந்-3 விண்கலம் இருக்கும். இது நிலாவின் நில அமைப்பு, கனிமவியல் மற்றும் புறவெளி மண்டலம் குறித்து ஆராய்ச்சி நடத்த உள்ளது.

இந்த 800 கோடி ரூபாய் சந்திராயன்-2 திட்டம் இந்தியா சார்பில் நிலாவுக்கு சென்று ஆராய்ச்சி செய்த சந்திராயன்-1 சென்று சரியாக 10 வருடத்திற்கு பின்னர் அனுப்பப்படுகிறது. சந்திராயன்-1 அக்டோபர் 22, 2008-ஆம் ஆண்டு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான (இஸ்ரோ)வின் முன்னாள் தலைவரான விக்ரம் சாராபாயின் பெயர் சந்திராயன்-2 லேண்டருக்கு வைக்கப்பட்டுள்ளது. சந்திராயன்-2, நிலாவில் தரையிறங்கினால், நிலாவுக்கு ரோவர் அனுப்பிய 5-வது நாடு என்ற பெருமையை இந்தியா பெறும்.

""சந்திரயான்-2 திட்டம் கொண்டுள்ள பல இலக்குகளில், சந்திரனில் நீர் கைப்பற்றும் இலக்கும் அடங்கி உள்ளது'' என இஸ்ரோ தலைவர் கே. சிவன் தெரிவித்துள்ளார்.

________________

ஆதித்யா எல்-1 விண்கலம்

அடுத்த ஆண்டு முதல் பாதியில் இந்தியாவின் இஸ்ரோ ஆய்வு மையம் சூரியனை ஆராயும் வகையில் ஆதித்யா எல்-1 என்ற விண்கலத்தை ஏவ திட்டமிட்டுள்ளது.

பூமியில் இருந்து 15 கோடி கி.மீ. தொலைவில் சூரியன் உள்ளது.

பூமியில் இருந்து 15 லட்சம் கி.மீ. தொலைவில் அது நிலைநிறுத்தப்பட்டு, சூரியனின் வெளிப்புற பகுதி கரோனா குறித்து ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் சூரியனை பற்றி இதுவரை தெரியாத பல தகவல்களை அறிந்து கொள்ள முடியும்.

சந்திரன், சூரியன் உள்பட பல்வேறு கிரகங்களை ஆராயும் முயற்சியில் இஸ்ரோ ஈடுபட்டுள்ளது.

இது பருவநிலை மாறுபாடு தொடர்பான ஆய்வுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

விண்ணிற்கு மனிதனை அனுப்பும் திட்டமும் செயல்பாட்டில் உள்ளது. இதனை செயல்படுத்த திட்ட வடிவமைப்பு நிறைவு பெற்றுள்ளது. வருகிற 2022-ஆம் ஆண்டிற்குள் இந்தியா மனிதனை விண்ணிற்கு அனுப்பும்.

அதேநேரம், விண்வெளிக்கு மனிதர் களுக்கு பதில் ரோபோக்களை அனுப்பும் ஆய்வுகளும் நடந்து வருகின்றன.

எனினும், ரோபோக்களுக்கு செயற்கை நுண்ணறிவு சாத்தியமானால் மட்டுமே இந்த முயற்சி வெற்றியடையும். இல்லாவிட்டால், அசாதாரண சூழல்களை ரோபோக்களால் திறம்பட கையாள முடியாது.

gk010619
இதையும் படியுங்கள்
Subscribe