தமிழக அரசின் பொதுப் பாடத்திட்டம்

/idhalgal/general-knowledge/general-curriculum-tamil-nadu-govt

ந்தியாவிலேயே அதிகபட்சமாக 50 சதவீதத்துக்கும் அதிகமானோர் உயர் கல்விக்குச் செல்வது தமிழ்நாட்டில்தான் சாத்தியமாகியிருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் உட்பட்ட கலை அறிவியல் கல்லூரிகளில் வரும் கல்வியாண்டு (2023 – 2024) முதல் ஒரே பாடத்திட்டத்தை நடைமுறைப் படுத்தும் திட்டம் தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டின் கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு ஒரே மாதிரியான பொதுப் பாடத் திட்டத்தை உயர்கல்வித் துறை அமல்படுத்தியுள்ளது. இதற்கு தன்னாட்சி கல்லூரிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், உயர்கல்வித் துறை சார்பில் தன்னாட்சி கல்லூரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. இதில் உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி, செயலர் எ.கார்த்திக், கல்லூரிக் கல்வி இயக்குநர் ஜி.கீதா,உயர்கல்வி மன்றத் துணைத்தலைவர் அ.ராமசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர் களிடம் அமைச்சர் கூறியதாவது: பொது பாடத் திட்டத்தை அமல்படுத்துவது குறித்து தன்னாட்சி கல்லூரிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினோம். சிலர் மாறுபட்ட கருத்துகளை தெரிவித்தாலும், பெரும்பாலானவர்கள் பொது பாடத்திட்டத்தை வரவேற்றுள்ளனர். அதன்படி, இந்த ஆண்டு 90 சதவீதம் கல்வி நிறுவனங்களில் இந்த பாடத் திட்டம் அமல்படுத்தப்பட்டு விட்டது. மீதமுள்ளவர்கள் அடுத்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்த உள்ளனர்.

ee

பொதுப் பாடத்திட்டம் பன்னாட் டளவில் உருவாக்கப்பட்டுள்ளது.

இதை பின்பற்றுவதால் பல்கலைக்கழகங் களின் உரிமைகள் பாதிக்கப்படாது. அனைத்து பல்கலைகளின் பாட வாரியங்களும் இதை ஏற்றுக் கொண்டுள்ளன. பாடத் திட்டத்தை மாற்றியமைக்க உயர்கல்வித் துறைக்கு அதிகாரம் உள்ளது. அதன்படியே பொதுப் பாடத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இது மாணவர்கள், கல்வி நிறுவனங்களுக்கு பயனளிக்கும். கூட்டத்தில் சில கல்லூரி முதல்வர்கள் தேசிய கல்விக் கொள்கை குறித்து பேசினர். அதில் உள்ள நல்ல அம்சங் களை ஏற்றுக்கொள்ளலாம். எனினும், தமி

ந்தியாவிலேயே அதிகபட்சமாக 50 சதவீதத்துக்கும் அதிகமானோர் உயர் கல்விக்குச் செல்வது தமிழ்நாட்டில்தான் சாத்தியமாகியிருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் உட்பட்ட கலை அறிவியல் கல்லூரிகளில் வரும் கல்வியாண்டு (2023 – 2024) முதல் ஒரே பாடத்திட்டத்தை நடைமுறைப் படுத்தும் திட்டம் தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டின் கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு ஒரே மாதிரியான பொதுப் பாடத் திட்டத்தை உயர்கல்வித் துறை அமல்படுத்தியுள்ளது. இதற்கு தன்னாட்சி கல்லூரிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், உயர்கல்வித் துறை சார்பில் தன்னாட்சி கல்லூரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. இதில் உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி, செயலர் எ.கார்த்திக், கல்லூரிக் கல்வி இயக்குநர் ஜி.கீதா,உயர்கல்வி மன்றத் துணைத்தலைவர் அ.ராமசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர் களிடம் அமைச்சர் கூறியதாவது: பொது பாடத் திட்டத்தை அமல்படுத்துவது குறித்து தன்னாட்சி கல்லூரிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினோம். சிலர் மாறுபட்ட கருத்துகளை தெரிவித்தாலும், பெரும்பாலானவர்கள் பொது பாடத்திட்டத்தை வரவேற்றுள்ளனர். அதன்படி, இந்த ஆண்டு 90 சதவீதம் கல்வி நிறுவனங்களில் இந்த பாடத் திட்டம் அமல்படுத்தப்பட்டு விட்டது. மீதமுள்ளவர்கள் அடுத்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்த உள்ளனர்.

ee

பொதுப் பாடத்திட்டம் பன்னாட் டளவில் உருவாக்கப்பட்டுள்ளது.

இதை பின்பற்றுவதால் பல்கலைக்கழகங் களின் உரிமைகள் பாதிக்கப்படாது. அனைத்து பல்கலைகளின் பாட வாரியங்களும் இதை ஏற்றுக் கொண்டுள்ளன. பாடத் திட்டத்தை மாற்றியமைக்க உயர்கல்வித் துறைக்கு அதிகாரம் உள்ளது. அதன்படியே பொதுப் பாடத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இது மாணவர்கள், கல்வி நிறுவனங்களுக்கு பயனளிக்கும். கூட்டத்தில் சில கல்லூரி முதல்வர்கள் தேசிய கல்விக் கொள்கை குறித்து பேசினர். அதில் உள்ள நல்ல அம்சங் களை ஏற்றுக்கொள்ளலாம். எனினும், தமிழ்நாட்டின் விரைவில் மாநில கல்விக் கொள்கை அமல்படுத்தப் படும்.

கூட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட தன்னாட்சி கல்லூரிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளை பதிவு செய்தனர். கோயம்புத்தூர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள தன்னாட்சி கல்லூரிகளின் முதல்வர்கள் சிலர் பாடத் திட்டத்தை எதிர்த்து கருத்துகளை முன் வைத்தனர். தன்னாட்சி கல்லூரிகளின் பிரதிநிதிகள் சிலர் கூறும்போது, ‘‘பொது பாடத் திட்டத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட வேண்டும். அவற்றை கூட்டத்தில் எடுத்துரைத்தோம்.

அந்த விவரங்களை எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க அமைச்சர் கூறியுள்ளார். உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என நம்புகிறோம். பொதுப் பாடத் திட்டத்தை அமல்படுத்தவும் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது” என்றனர்.

பாடத்திட்டத்தில் பன்மைத்துவம் அழிகிறதா?

ஒரு துறை சார்ந்த பட்டப்படிப்பைப் பயிலும் மாணவர்கள் அனைவரும் ஒரே பாடத்திட்டத்தைப் பயில்வதுதான் சரியானது என்பது மேலோட்டமாகப் பார்த்தால் பொருத்தமான கருத்தாகத் தோன்றும். ஆனால், ‘ஒன்று’ என்பது ஏகத்துவத்தை வலியுறுத்துவது; பன்மைத்துவத்தை அழிப்பது என்பதைக் கணக்கில் எடுத்து இதைப் பார்க்க வேண்டும்.

நிர்வாக வசதிக்காகக் கலை அறிவியல் கல்லூரிகளுக்கு எனக் கிட்டத்தட்டப் பத்துப் பல்கலைக்கழகங்கள் இயங்கு கின்றன. இந்தப் பல்கலைக்கழகங்களின் முக்கியப் பணி, அவற்றின் நிர்வாகத்துக்கு உட்பட்ட கல்லூரிகளில் உள்ள படிப்புகளுக்குப் பாடத்திட்டம் தயார் செய்தல், தேர்வு நடத்துதல், பட்டம் வழங்குதல் ஆகியவை. ஒவ்வொரு துறை சார்ந்த பட்ட வகுப்புக்கும் பாடத்திட்டம் வகுப்பதற்கு என ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் பாடத்திட்டக் குழு உள்ளது. குறிப்பிட்ட துறையின் அடிப்படைப் பாடங்கள், சிறப்புப் பாடங்கள், அரசு கட்டாயம் எனக் குறிப்பிட்டுள்ள பாடங்கள் (மனித உரிமைகள், யோகா போன்றவை) ஆகியவற்றோடு பல்கலைக்கழகம் செயல்படும் நிலவியல் இயல்பு உள்ளிட்ட காரணங்களைக் கருதித் தனித்துவமான பாடங்கள் எனப் பல்வேறு விஷயங்களைக் கவனத்தில் கொண்டு பாடத்திட்டத்தை அக்குழு வகுக்கின்றது.

ee

பல்கலைக்கழகம் மட்டுமல்ல, தன்னாட்சி பெற்ற கல்லூரிகள் இருக்கின்றன.

அவை பாடத்திட்டங்களைத் தாமே வகுத்துக்கொள்ளவும் தேர்வுகளை நடத்தி முடிவுகளை வெளியிடுவதற்கும் அதிகாரம் பெற்றவை. பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தோடு ஒப்பிடும்போது தன்னாட்சிக் கல்லூரிகளின் பாடத் திட்டம் மேம்பட்டதாக இருக்கிறது என்பது வெளிப்படை. மாணவர்களுக் கான துறைசார் அறிவு மேம்பாட்டையும் வேலைவாய்ப்பையும் கருத்தில் கொண்டு அவற்றுக்கேற்ற வகையில் அக்கல்லூரிகள் பாடத்திட்டம் வகுக்கின்றன. அதனால் பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தை விடவும் நவீனத் தன்மை மிகுந்ததாகத் தன்னாட்சிக் கல்லூரிகளின் பாடத்திட்டங்கள் இருக்கின்றன.

ஒரு பகுதியில் உள்ள பல்கலைக்கழகம் அல்லது தன்னாட்சிக் கல்லூரிப் பாடங்களுக்கு அந்தந்தப் பகுதியில் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களே பாடநூல்கள் எழுதுகின்றனர்.

சில கல்லூரிகளில் ஆசிரியர்கள் சேர்ந்தெழுதுவதும் உண்டு.

ஒவ்வொரு பல்கலைக்கழகத்தின் அமைவிடம், பெயர், பண்பாடு ஆகியவற்றுக்கேற்ற பாடங்கள் இப்போது இருக்கின்றன. தன்னாட்சிக் கல்லூரிகள் புதிய புதிய தாள்களை வைத்திருக்கின்றன. பல்கலைக்கழக மானியக் குழு நடத்தும் உதவிப் பேராசிரியர் பணித் தகுதித் தேர்வு / முனைவர் பட்ட இளைநிலை ஆய்வாளர் உதவித் தொகைக்கான தேர்வுக்கு (மஏஈ சஊப / ஓதஎ) மாணவர்களைத் தயார்ப்படுத்தும் வகையில் சில கல்லூரிகளில் பாடம் இருக்கிறது. தமிழ்ப் பாடம் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும் என்பதால் அதைச் சான்று காட்டுகிறேன். மற்றபடி பிற துறைகளின் பாடத்திட்டங்களிலும் உள்ளூர்த்தன்மை, வேலைவாய்ப்பு ஆகியவற்றை மையமிட்ட தன்மைகள் உள்ளன.

பாடநூல்களை எழுதுவோர், உரைநூல்களை உருவாக்குவோர், அவற்றை வெளியிடும் பதிப்பகத்தார் என அனைவருக்கும் இந்த உள்ளூர்த்தன்மை உண்டு. அவையெல்லாம் எத்தகைய தரத்தைக் கொண்டவை என்பதில் எனக்குக் கடும் விமர்சனம் இருக்கிறது. அவற்றைத் தரப்படுத்த வேண்டியது தேவை; ஒழித்துவிடக் கூடாது. பல்கலைக்கழக அளவிலும் கல்லூரி நிலையிலும் பாடத்திட்டத்தைத் தீர்மானிக்கும் வாய்ப்பு இருப்பதால் பல பேராசிரியர்கள் எழுதுபவர்களாக இருக்கிறார்கள். இல்லையென்றால் கையொப்பம் இடுவதற்கும் மாணவர் வருகைப் பதிவு போடுவதற்கும் தேர்வுத்தாள் திருத்துவதற்கும் மட்டுமே பேனா பிடிப்பவர்களாக மாறிப் போவார்கள். பாட நூல்களை வெளியிடும் பதிப்பகங்கள் பலவும் உள்ளூர் சார்ந்தவையாக இருக்கின்றன. ஒரே பாடத்திட்டம் என்றால் குறிப்பிட்ட சில பதிப்பகங்களின் மேலாதிக்கம் பாடநூல் வெளியீட்டில் ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது. இதைப் பதிப்பகத்தாரும் கவனத்தில் இருத்த வேண்டும்.

75 விழுக்காடு பொதுப் பாடத்திட்டம் என்றும் 25 விழுக்காடு அவரவர் விருப்பம் போல வைத்துக்கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளனர். எந்த 25 விழுக்காடு விருப்பத்துக்கு உரியது என்பதைப் பற்றித் தெளிவில்லை. பொதுத் தமிழ்ப் பாடத்திட்டத்தில் நவீன கவிதைகள் வைக்கப்பட்டுள்ளன. அப்துல் ரகுமானும் மு.மேத்தாவும் வைரமுத்துவும் இன்னும் எத்தனை காலம்தான் இடம்பெறுவார்கள்? பொதுப் பாடத்திட்டத்தை இப்போது உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியம் என்னவென்று புரியவில்லை. ஏற்கெனவே இருக்கும் பாடத்திட்டத்தை நவீனமாக்கினால் அது வளர்ச்சி. இன்னும் பின்னுக்குக் கொண்டு செல்வது இழிவு. ஒரு துறையில் அடிப்படைத் தாள்கள் எவை என்பதைக் கண்டறிந்து அவற்றைக் கட்டாயமாக வைக்க வேண்டும் என்று சொல்லலாம். ஒரு துறையில் பட்டம் பெறுவோர் அனைவரும் இத்தகைய அடிப்படைப் பாடங்களைக் கற்றிருக்க வேண்டும் என்பதில் ஒருவகை நியாயம் இருக்கிறது.

முக்கிய மாற்றங்கள் தேவை மாணவர்கள் பாடங்களைத் தவிர்த்து சமூகம், கலை, அரசியல் விஷயங்கள் சார்ந்து உரையாட, விவாதிப்பதற்கான வெளி இல்லாமலாகி ஒரு மொண்ணை யான இளைய தலைமுறையை உருவாக்கி அனுப்பிக்கொண்டிருக்கிறது உயர் கல்வி.

இரண்டாவதாக, பள்ளிக் கல்வியின் தரம். பள்ளிக் கல்வியில் தேர்ச்சி பெறுவோரின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்துவருவது மகிழ்ச்சிக்குரியது என்றாலும், தாய்மொழியில்கூட எழுதப் படிக்கத் தெரியாத பெரும் எண்ணிக்கையிலான மாணவர்கள் உயர் கல்விக்குள் வந்துகொண்டிருக்கிறார்கள். இவர்களில் பெரும்பான்மையானோர் முதல் தலைமுறைப் படிப்பாளிகள். இத்தகைய பள்ளி மாணவர்களைக் கல்லூரி மாணவர்களாக உருமாற்று வதற்கான எவ்வித நடைமுறைகளும், உபாயங்களும் உயர் கல்வித் துறைக்கோ பல்கலைக்கழகங்களுக்கோ கல்வி நிறுவனங்களுக்கோ இல்லை. நாம் கவனம் செலுத்த வேண்டிய இடம் இதுதான். ஆகவே, உயர் கல்வி என்னும் அடுத்தகட்ட நகர்வுக்கான முன்தயாரிப்பாக ஓர் இணைப்புப் பாலம் தேவைப்படுகிறது. ஒரு மாணவன் கல்லூரிக்குள் நுழைந்தவுடன், முதல் பருவம் முழுவதையும்கூட அத்தகையதாக வடிவமைக்கலாம்.

தமிழில் சரளமாக எழுதவும் பேசவும், ஆங்கிலத்தில் குறைந்தபட்சப் பயன்பாட்டுக்குமான பயிற்சி; கணினியில் அடிப்படைப் பயன்பாடு, தமிழ், ஆங்கிலத் தட்டச்சுப் பயிற்சி; மொழி, இனம், சாதி, சமூகம், நாடு, பாலினம், பண்பாடு, வரலாறு குறித்த அடிப்படைகளை உணர்வு கலக்காமல், அறிவுபூர்வமாக விளக்கும் சிறிய பாடங்கள்; உடல், சுகாதாரம், உணவு, உடலோம்பல் குறித்த விழிப்புணர்வு; போதைப் பொருள்கள், குடிப்பழக்கம், குடிநோய்களின் சமூக உளவியல் தாக்கங்களை விளக்கும் அமர்வுகள்; செய்தித்தாள்கள், புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை வலியுறுத்தும் பயிற்சிகள்; சமூக ஊடகங்களைச் சாதகமாகக் கையாள, கைபேசிகளைத் தேவைக்குப் பயன்படுத்துவதற்கான அறிவுரைகள் போன்ற அடிப்படை அம்சங்கள், ஒரு பள்ளி மாணவனைப் பண்பட்ட குடிமைப் பண்புகள் உள்ளவனாக மாற்றுவதற்கான முதற்படியாக அமையும்.

இன்றைய இளைஞர்கள் சிலரிடையே நிலவும் சாதிய மனோபாவம், தீவிர பிற மத வெறுப்பு, பாலின சமத்துவத்துக்கு எதிரான சிந்தனைகள் போன்றவற்றில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டியவை கல்வி நிறுவனங்கள்தான். வேலைவாய்ப்புக் கான தொழில்முறைத் தகுதிகளையும் சிறந்த மனிதனாக வாழ்வதற்கான குடிமைப் பண்புகளையும் வழங்குகின்ற ஒரு பொருத்தமான பாடத்திட்டத்துடன் இணைந்த செயல்முறையைக் கற்பனை செய்ய வேண்டும். அதற்கு மேலோட்டமான ‘பாடத்திட்ட’ மாற்றங்கள் மட்டும் போதாது. தலைகீழ் மாற்றங்களுக்கும் நாம் தயாராக வேண்டும். அரசு இதைக் கவனத்தில் கொள்ளட்டும்!

gk010923
இதையும் படியுங்கள்
Subscribe