மத்திய பட்ஜெட் 2021- 22

/idhalgal/general-knowledge/general-budget-2021-22

த்திய பட்ஜெட் 2021-22-ஐ நாடாளுமன்றத்தில் மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவாகரத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு.

நீடித்த வளர்ச்சி இலக்கு ஆறின் படி, அனைத்து 4,378 நகரங்களில் உள்ள எல்லா வீடுகளுக்கும் குழாய் மூலம் தண்ணீர் இணைப்புகளை வழங்குவதற்காக ஜல் ஜீவன் இயக்கம் (நகர்ப்புறம்) வடிவமைக்கப்பட்டுள்ளதாக தன்னுடைய பட்ஜெட் உரையின் போது மத்திய நிதியமைச்சர் கூறினார்.

500 அம்ருத் நகரங்களில் கழிவுநீர் மேலாண்மை வசதியை வழங்குவது அடுத்த இலக்காகும். சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு பிரிவின் கீழ் தூய்மை இந்தியா நகர்புறம் 2.0 தொடங்கப்படும்.

மலைப்பிரதேச, யூனியன் பிரதேச வடகிழக்கு மாநிலங்களின் தலைநகரங்கள் உட்பட 5 லட்சத்துக்கும் அதிகமான நகரங்களில் 20 ஆயிரத்துக்கும் அதிகமான மாநகர பேருந்துகளை இணைப்பதற்கான திட்டம் தொடங்கப்படும் என்று நிதியமைச்சர் கூறினார். ஒழுங்குமுறை படுத்தப்பட்ட நகர பேருந்து சேவைகள், மேம்படுத்தப்பட்ட நகர்ப்புற போக்குவரத்து மற்றும் வாழ்க்கை முறையை எளிமையாக்குவதற்காக இத்திட்டம் தொடங்கப்பட போவதாக அவர் கூறினார்.

நகர்ப்புற தண்ணீர் விநியோக அமைப்பில் விடுபட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ள 2.68 கோடி வீடுகளுக்கு ஜல் ஜீவன் இயக்கத்தின் (நகர்ப்புறம்) கீழ் இணைப்புகள் வழங்கப்படும். அதேபோன்று, 500 அம்ருத் நகரங்களில் உள்ள 2.64 கோடி வீடுகளுக்கு கழிவுநீர் மேலாண்மை வசதி வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. அம்ருத் இயக்கத்திற்கு தொடர்ந்து நிதி ஆதரவை வழங்குவதற்கான ரூபாய் 10 ஆயிரம் கோடி உட்பட ரூபாய் 2,87,000 கோடி ஜல் ஜீவன் இயக்கத்திற்கு (நகர்ப்புறம்) வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

தூய்மை இந்தியா இயக்கம் (நகர்ப்புறம்) 2.0-க்கு அடுத்த 5 வருடங்களுக்கு மொத்த ஒதுக்கீடாக ரூபாய் 1,41,678 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது. தூய்மை இந்தியா இயக்கத்தின் (நகர்ப்புறம்) தொடர்ச்சியாக இது இருக்கும். அனைத்து நகரங்களிலும் நிதி மற்றும் செயல்பாட்டுக்கான கூறுகளாக கீழ்கண்டவை இருக்கும்:

நீடித்து சுகாதாரம் (கழிவறைகளை கட்டுதல்)

ஒரு லட்சத்துக்கு கீழ் மக்கள்தொகை உள்ள அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலும் மனித கழிவு மேலாண்மை உள்ளிட்ட கழிவுநீர் மேலாண்மை (தூய்மை இந்தியா இயக்கம் (நகர்ப்புறம்) 2.0-இல் இது புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது)

திடக்கழிவு மேலாண்மை

தகவல், கல்வி மற்றும் தகவல் தொடர்பு திறன் வளர்த்தல்

சுகாதாரமும் நல்வாழ்வும்

மத்திய நிதிநிலை அறிக்கை 2021-22-இல் சுகாதாரம், நல்வாழ்விற்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டது. இவை தற்சார்பு இந்தியாவின் அடித்தளமாக அமைகிறது. சுகாதாரம், நல்வாழ்விற்கு 137 சதவீத நிதி கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.

நகர்ப்புற ஜல் ஜீவன் இயக்கம் துவங்கப்படும் என்று மத்திய நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்படி 4,378 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 2.86 கோடி வீடுகளுக்கு தண்ணீர் இணைப்புகள் வழங்கப்படுவதுடன், அம்ருத் என்று அழைக்கப்படும் புத்துயிர் மற்றும் நகர்ப்புற மாற்றத்துக்கான அடல் திட்டத்தின் 500 நகரங்களில் திரவ கழிவு மேலாண்மையும் அமைக்கப்படும். ரூ. 2,87,000 கோடி செலவில் ஐந்து ஆண்டுகளில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்.

இந்தியாவின் நகரப் பகுதிகளை மேலும் தூய்மையாக்கும் முயற்சியில் மனித கழிவு மேலாண்மை, கழிவுநீர் சுத்திகரிப்பு, தரம் பிரிக்கப்பட்ட குப்பை, ஒருமுறை மட்டுமே உபயோகப்படும் நெகிழியின் பயன்பாட்டை குறைத்தல், கட்டுமான மற்றும் தகர்ப்பு நடவடிக்கைகளின் கழிவு மேலாண்மை மற்றும் உயிரிகளை பயன்படுத்தி மாசை கட்டுப்படுத்தும் வழிகள் வாயிலாக காற்று மாசை குறைப்பது போன்றவற்றிற்கும் நிதிநிலை அறிக்கையில் முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது.‌ 2021-2026 வரையிலான ஐந்து ஆண்டுகளில் ரூ. 1,41,678 கோடி மதிப்பில் நகர்புற தூய்மை இந்தியா இயக்கம் 2.0 செயல்படுத்தப்படும்.

பிரதமர் தற்சார்பு ஆரோக்கிய இந்தியா திட்டம்

சுகாதாரத்துறையின் நீடித்த முன்னேற்றத் திற்கு விரைவான வளர்ச்சிக் கொண்ட நடைமுறைகள் அவசியம் என்பதைக் கருத்தில் கொண்டு, பிரதமர் தற்சார்பு ஆரோக்கிய இந்தியா திட்டம் என்னும் மத்திய அரசின் புதிய திட்டம் ஆறு ஆண்டுகளுக்கு ரூ. 64,180 கோடி என்னும் ஒதுக்கீட்டுடன் தொடங்கப்பட உள்ளது. இது தொடக்க இடைநிலை மற்றும் மேல்நிலை சுகாதார நடைமுறை திறன்களை மேம்படுத்தவும், தற்போதுள்ள தேசிய நிறுவனங்களை வலுப்படுத்தவும், புது வகை நோய்களை கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் புதிய நிறுவனங்களை உருவாக்கவும் உதவும். தேசிய சுகாதார இயக்கத்தின் கூடுதல் திட்டமாக இது இருக்கும்.

இத்திட்டத்தின் முக்கிய அம்சங்கள்

17,788 ஊரக, 11,024 நகர்ப்புற சுகாதார ஆரோக்கிய மையங்களுக்கு ஆதரவளித்தல்.

அனைத்து மாவட்டங்களிலும் ஒருங்கிணைந்த பொது சுகாதார ஆய்வகங்கள், 11 மாநிலங்களில் 3,382 வட்டார பொது சுகாதார அலகுகளை உருவாக்குதல்.

602 மாவட்டங்களில் தீவிர சிகிச்சை மருத்துவமனை பிரிவுகள், 12 மத்திய நிறுவனங்களை ஏற்படுத்துதல்.

தேசிய நோய்க் கட்டுப்பாட்டு மையத்தை வலுப்படுத்துதல், அதன் ஐந்து மண்டலக் கிளைகள், 20 பெருநகர சுகாதார கண்காணிப்பு அலகுகளை வலுப்படுத்துதல்.

அனைத்து பொது சுகாதார ஆய்வகங்களையும் இணைக்க அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் ஒருங்கிணைந்த சுகாதார தகவல் வலைதளத்தை விரிவாக்குதல்.

budget

17 புதிய பொது சுகாதார அலகுகளை இயக்குதல், தற்போதுள்ள 33 பொது சுகாத

17 புதிய பொது சுகாதார அலகுகளை இயக்குதல், தற்போதுள்ள 33 பொது சுகாதார அலகுகளை நுழைவு இடங்களில் வலுப்படுத்துதல். அதாவது 32 விமான நிலையங்கள். 11 துறைமுகங்கள், 7 நில சந்திப்புகள்.

15 சுகாதார அவசர கால அறுவை சிகிச்சை மையங்கள், இரண்டு நடமாடும் மருத்துவமனைகளை அமைத்தல்.

உலக சுகாதார அமைப்பின், தென்கிழக்காசிய பிராந்தியத்துக்கான மண்டல ஆராய்ச்சி தளமாக ஒரு தேசிய சுகாதார நிறுவனத்தை அமைத்தல், ஒன்பது உயிரி-பாதுகாப்பு 3-ம் கட்ட ஆய்வகங்கள், நான்கு மண்டல நச்சு நுண்மவியல் தேசிய நிறுவனங்களை அமைத்தல்.

போஷான் 2.0 இயக்கம்

நாட்டின் சுகாதாரம் மற்றும் ஆரோக்கியத்தின் ஒருங்கிணைந்த அம்சமாக ஊட்டச்சத்து உள்ளது. இதனை வலுப்படுத்தும் வகையில், ஊட்டச்சத்து திட்டம், போஷான் இயக்கம் இணைக்கப்படும் என மத்திய நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போஷான் 2.0 இயக்கம் என்ற பெயரில் இது ஒருங்கிணைக்கப்படும். 112 பின்தங்கிய மாவட்டங்களில் ஊட்டச்சத்துக் குறைபாடுகளைப் போக்க தீவிர உத்தி கையாளப்படும்.

2021-22 நிதிநிலை அறிக்கையில், கொவிட்-19 தடுப்பூசிகளுக்கு ரூ. 35,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, தற்போது ஐந்து மாநிலங்களில் போடப்படும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட நிமோனியாவை கட்டுப்படுத்தக்கூடிய நியூமோகோக்கல் தடுப்பூசி விரைவில் நாடு முழுவதும் போடப்படும். இது ஆண்டுக்கு 50,000-க்கும் அதிகமான குழந்தை இறப்புகளை தவிர்க்கும்.

ஒருங்கிணைந்த சுகாதார பணியாளர் களுக்கான தேசிய ஆணைய மசோதா, 56 சுகாதாரம் தொடர்பான தொழில்களில் வெளிப்படைத்தன்மையை உருவாக்கி முறைப்படுத்தும் நோக்கத்துடன் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப் பட்டது. செவிலியர் தொழிலில் வெளிப் படைத் தன்மையையும், திறமையையும் கொண்டு வரும் நோக்கில் தேசிய செவிலியர் மற்றும் மகப்பேற்று தாதியர் மசோதாவை அரசு அறிமுகப்படுத்த உள்ளதாக அவர் தெரிவித்தார்.

மூலதன செலவு

மூலதன செலவுக்கான பட்ஜெட் மதிப்பீடு ரூ.5.54 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இது கடந்த நிதியாண்டு பட்ஜெட் மதிப்பீட்டை விட 34.5 சதவீதம் அதிகம். கடந்த நிதியாண்டில் மூலதன செலவு ரூ.4.12 லட்சம் கோடியாக இருந்தது. நிதி நெருக்கடி நிலையிலும், மூலதன செலவுக்கு அதிகம் செலவு செய்ய மத்திய அரசு முயற்சி எடுத்துள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்தார். 2020-21லிஆம் நிதியாண்டில் மூலதன செலவு ரூ.4.39 லட்சம் கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொருளாதார விவாகரத்துறையின் மூலதன பட்ஜெட்டில் ரூ.44 ஆயிரம் கோடி உள்ளது எனவும், அவை நல்ல முன்னேற்றம் உள்ள மூலதன செலவு திட்டங்களுக்கு வழங்கப்படும். மூலதன செலவுகளுக்காக, மாநிலங்கள் மற்றும் தன்னாட்சி அமைப்புகளுக்கு ரூ.2 லட்சம் கோடி வழங்கப்படும்.

வெளிநாட்டினர் உரிமை மற்றும் கட்டுப்பாட்டுக்கு அனுமதி

காப்பீட்டுத் துறையில், அந்நிய முதலீட்டு வரம்பை 49 சதவீதத்திலிருந்து 74 சதவீதமாக அதிகரிக்கும் வகையில் காப்பீட்டுச் சட்டம் 1938-இல் திருத்தம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார். புதிய உத்தேச வரையறையின்படி, நிறுவன வாரியத்தின் பெரும்பாலான இயக்குநர்கள் மற்றும் முக்கிய மேலாண்மை நிர்வாகிகள் இந்தியர்களாக இருப்பார்கள். ஒரு குறிப்பிட்ட அளவிலான லாபம் பொது இருப்பாக வைக்கப்படும்.

பொதுத்துறை வங்கிகளின் நிதித் திறனை ஒருங்கிணைக்கும் வகையில், 2021-22-ஆம் நிதியாண்டில் ரூ.20,000 கோடி அளவுக்கு மறு முதலீடு செய்ய அரசு உத்தேசித்துள்ளது.

சிறிய அளவில் கடன் பெறுவோரின் நலனைப் பாதுகாக்க கடன் ஒழுங்குமுறை மேம்படுத்தப்படும். வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்களின் குறைந்தபட்ச சொத்து மதிப்பு ரூ.100 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2002லிஆம் ஆண்டின் சர்ஃபாசி சட்டத்தின் கீழ் கடன் மீட்பு அளவு ரூ.50 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக குறைக்கப்படுகிறது.

அதிக செலவுகளால் வருவாய் வரத்து சரிவு

பெருந் தொற்றினால் பொருளாதாரத்தில் ஏற்பட்ட தாக்கம் வருவாய் வரத்தை வெகுவாக சரிந்திருக்கிறது. ஏழைகள், பெண்கள் பட்டியலினத்தவர்கள், பழங்குடியினர் போன்ற சமுதாயத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு வழங்கிய அத்தியாவசிய நிவாரண பொருட்களால் கூடுதல் செலவும் ஏற்பட்டது.

திருத்தியமைக்கப்பட்ட மதிப்பீடுகள் 2020-21இன் நிதி பற்றாக்குறையால் ஒட்டுமொத்த உள்நாட்டு வளர்ச்சி 9.5 சதவீதமாக இருந்தது. அரசு கடன்கள், பலதரப்பு கடன்கள், சிறுசேமிப்பு நிதிகள், குறுகிய கால கடன்கள் போன்றவற்றின் வாயிலாக நிதிஉதவி வழங்கப்பட்டது. கூடுதலாகத் தேவைப்படும் ரூ. 80,000 கோடிக்காக இந்த 2 மாதங்களில் வெளிச்சந்தைகளை அணுகப்படும்.

வரவு செலவு திட்ட மதிப்பீடுகள்

பொருளாதாரத்தை ஊக்குவிப்பதற்காக செலவுகளுக்கான வரவு செலவு திட்ட மதிப்பீடுகள், 2021-22-ஆம் ஆண்டில் ரூ. 34.83 லட்சம் கோடியாக இருக்கும் என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.

இதில் மூலதன செலவிற்காக ஒதுக்கப் பட்டுள்ள ரூ. 5.54 லட்சம் கோடி, 2020-21-ஆம் ஆண்டின் வரவு செலவு திட்ட மதிப்பீடுகளை விட 34.5 சதவீதம் அதிகமாகும். 2021-22-ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட மதிப்பீடுகளின் நிதி பற்றாக்குறை ஒட்டு மொத்த உள்நாட்டு வளர்ச்சியில் 6.8 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டுக்காக சந்தையில் இருந்து பெறப் படும் மொத்த கடன் தொகை சுமார் ரூ. 12 லட்சம் கோடியாக இருக்கும்.

மாநிலங்களுக்காக கடன்

15-வது நிதி ஆணையத்தின் கருத்தின் அடிப்படையில் 2021-22-ஆம் ஆண்டில் மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் 4 சதவீதத்தை மாநிலங்கள் கடனாகப் பெற அரசு அனுமதி வழங்கியுள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இந்த வரம்பில் ஒரு பகுதி மூலதன செலவிற்காக கூடுதலாக செலவு செய்யப்படும். மேலும் நிபந்தனைகளுக்குட்பட்டு மாநில வளர்ச்சியில் 0.5 சதவீத கடன் கூடுதலாக வழங்கப்படும். 15-வது நிதி ஆணையத்தின் பரிந்துரையின் படி 2023 24-ஆம் ஆண்டுக்குள் மாநிலங்களின் ஒட்டு மொத்த வளர்ச்சியில் 3 சதவீத நிதி பற்றாக்குறையை மாநிலங்கள் அடைய வேண்டும்.

பொதுத்துறை நிறுவனங்களில் தனியார்மய கொள்கை அறிவிப்பு

சமூக மற்றும் வளர்ச்சி திட்டங்கள் பலவற்றுக்காக, அரசு பொதுத்துறை நிறுவனங்களில், தனியார்மய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், தனியார் முதலீட்டை கொண்டுவரவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

அரசு பொதுத் துறை நிறுவனங்களில் உத்தியுடன் கூடிய தனியார்மய கொள்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்தார். இது முக்கியம் மற்றும் முக்கியமற்ற துறைகளில் தனியார்மயத்துக்கான தெளிவான திட்டத்தை வழங்கும்.

தற்சார்பு இந்தியா தொகுப்பின் கீழ், அரசின் உறுதியை நிறைவேற்ற, பொதுத்துறை நிறுவனங்களில் தனியார் மய கொள்கை கொண்டு வரப்படுவதாகவும், அதன் முக்கிய அம்சங்களையும், அமைச்சர் சுட்டிக்காட்டினார்:

இத்திட்டத்தின் கீழ் தற்போதுள்ள மத்திய பொதுத்துறை நிறுவனங்கள், பொதுத்துறை வங்கிகள் மற்றும் பொதுத்துறை காப்பீடு நிறுவனங்கள் வரவுள்ளன.

2 வகை துறைகள் தனியார்மயமாக்கப் படவுள்ளன:

முக்கிய துறை: குறைந்த அளவிலான பொதுத்துறை நிறுவனங்கள் மட்டும் இருக்கும் மற்றவை தனியார் மயமாக்கப் படும் அல்லது மற்ற பொதுத்துறை நிறுவனங்கள் இணைக்கப்படும் அல்லது மூடப்படும்.

முக்கிய பிரிவுகளின் கீழ் வரும் துறைகள்:

அணுசக்தி, விண்வெளி மற்றும் பாதுகாப்புத்துறை போக்குவரத்து மற்றும் தொலை தொடர்பு மின்சாரம், பெட்ரோலியம், நிலக்கரி மற்றும் இதர கனிமவளங்கள் துறை வங்கித்துறை, காப்பீடு மற்றும் நிதி சேவைகள் துறை முக்கியமற்ற பிரிவு: இந்தப் பிரிவில் உள்ள மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படும், அல்லது மூடப்படும்.

புதுப்பிக்கப்பட்ட மின்சார விநியோகத் திட்டம்

நிதிநிலை அறிக்கையின் உரையில், சீர்திருத்தங்களின் அடிப்படையில் பயன்களுடன் இணைந்த புதுப்பிக்கப் பட்ட மின்சார விநியோகத் திட்டம் 5 ஆண்டுகளில் ரூ.‌3,05,984 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படும். இந்தத் திட்டத்தின் மூலம் உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கு மின்சார விநியோக நிறுவனங்களுக்கு நிதி உதவி வழங்கப்படும்.

விநியோக நிறுவனங்களின் ஏகாதிபத் தியம் குறித்து தமது உரையில் பேசிய நிர்மலா சீதாராமன், ஒன்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்களிலிருந்து நுகர்வோர் பயன் பெறுவதற்கு மாற்று வழிகளுக்கான கட்டமைப்பு தயாரிக்கப்படும்.

கடந்த 2020-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பிரதமர் வெளியிட்ட அறிவிப்பை நிறைவேற்றும் வகையில் பசுமையான, நிலையான எதிர்காலத் திற்கு, 2021-22 -ஆம் ஆண்டில் விரிவான தேசிய ஹைட்ரஜன் எரிசக்தி இயக்கம் அறிமுகப்படுத்தப்படும்.

பெட்ரோலியம் - இயற்கை எரிவாயு

கொவிட்- 19 கால கட்டத்தில் தடையற்ற எரிவாயு மற்றும் பெட்ரோலியப் பொருட்கள் விநியோகம் செய்யப் பட்டதாக மத்திய நிதியமைச்சர் தெரிவித்தார்.

மேலும் சில முக்கிய அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டார். அதன் விவரம்....

உஜ்வாலா எனப்படும் இலவச எரிவாயுத் திட்டத்தின் கீழ் 8 கோடி குடும்பங்களுக்கு எரிவாயு உருளை இலவசமாக விநியோகம் செய்யப்பட்டது. இது மேலும் 1 கோடி குடும்பங்களுக்கு விரிவுபடுத்தப்படும்.

நகர குழாய் எரிவாயுத் திட்டத்தின் கீழ் அடுத்த 3 ஆண்டுகளில் 100 மாவட்டங்கள் இணைக்கப்படும்.

ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசங் களுக்கு பிரத்யேக குழாய் எரிவாயு இணைப்புத் திட்டம் ஒன்று செயல்படுத்தப்படும்.

அனைத்து வகையான இயற்கை எரிவாயு குழாய் இணைப்புத் திட்டத்தில் தடையற்ற விநியோகம், அதற்கான முன்பதிவுக்கான ஒருங்கிணைப்பு ஆகியவற்றில் எவ்வித தங்கு தடையுமின்றி செயல்பட ஒரு பிரத்யேக எரிவாயு விநியோக இயக்கம் அமைக்கப்படும்.

மெட்ரோ ரயில் திட்டத்துக்கான மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு:

11.5 கிலோ மீட்டர் தொலைவுள்ள கொச்சி மெட்ரோ ரயில் சேவை திட்டம்-2-க்கு ரூ.1957 கோடி நிதி ஒதுக்கீடு

118.9 கிலோ மீட்டர் தொலைவுள்ள சென்னை மெட்ரோ ரயில் திட்டம்-2-க்கு ரூ.63,246 கோடி நிதி ஒதுக்கீடு

58.19 கிலோ மீட்டர் தொலைவுள்ள பெங்களூரூ மெட்ரோ ரயில் திட்டம் 2ஏ மற்றும் 2பி-க்கு ரூ.14,788 கோடி நிதி ஒதுக்கீடு.

தேசிய கட்டமைப்பு திட்டங்கள்

தேசிய கட்டமைப்பு மூலமான திட்டங் களின் இலக்கை வரும் ஆண்டுகளில் எட்டுவதற்கு பின்வரும் மூன்று நடவடிக்கைகளை எடுக்க மத்திய அரசு உத்தேசித்துள்ளதாக அறிவித்தார். நிதிசார் கட்டமைப்புகளை உருவாக் குதல், சொத்துகளை பணமாக்குவதற்கு அதிக முக்கியத்துவம் அளித்தல், மத்திய மற்றும் மாநில பட்ஜெட்களில் மூலதன செலவினத்துக்கான பங்கை அதிகரித்தல் 2019 டிசம்பரில் 6835 திட்டங்களுடன் தொடங்கப்பட்ட தேசியக் கட்டமைப்புத் திட்டம் இப்போது 7,400 திட்டங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டு உள்ளதாகவும், சில முக்கிய கட்டமைப்பு அமைச்சகங்கள் மூலம் ரூ.1.10 லட்சம் கோடி மதிப்பில் சுமார் 217 திட்டங்கள் முடிக்கப்பட்டுள்ள தாகவும் தெரிவித்தார்.

வேளாண் மற்றும் அது சார்ந்த துறை

விவசாயிகளுக்கு போதிய அளவு வேளாண் கடன் வழங்கும் வகையில், நடப்பு நிதியாண்டில் ரூ.16.5 லட்சம் கோடி அளவுக்கு கடன் வழங்கும் அளவு அதிகரிக்கப்படுகிறது. மேலும் கால்நடை வளர்ப்பு, பால் உற்பத்தி மற்றும் மீன் வளர்ப்பு போன்ற வேளாண் சார்ந்த துறைகளுக்கும் இத்தகைய கடனை வழங்க அரசு கவனம் செலுத்தி வருகிறது.

ஊரக வளர்ச்சி மேம்பாட்டு நிதி ரூ.30,000 கோடியிலிருந்து ரூ.40,000 கோடியாக அதிகரிக்கப்படுகிறது.

வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சிக்கான தேசிய வங்கியின் (நபார்டு) கீழ் செயல்படுத்தப்படும் நுண்பாசனத் திட்டத்திற்கான நிதி தற்போது ரூ.5,000 கோடி அளவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், கூடுதலாக ரூ.5,000 கோடி ஒதுக்கப்படும்.

இ-நாம் திட்டத்தின் கீழ் 1.68 கோடி விவசாயிகள் பதிவு செய்துள்ளனர் என்றும், ரூ.1.14 லட்சம் கோடி அளவுக்கு இந்த இ-நாம் மூலம் வணிகம் நடைபெறுவதாகவும் அமைச்சர் கூறினார். மேலும் இந்தத் திட்டம் வெளிப்படையாகவும், போட்டித் தன்மையுடனும் இருக்க 1000 மண்டிகள் இ-நாம்-வுடன் இணைக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

மீன்பிடி துறைமுகங்கள் மற்றும் மையங் களை நவீன அளவில் மேம்படுத்த போதிய முதலீடுகள் செய்யப்படும் என்று கூறிய அமைச்சர், 5 பெரிய மீன்பிடி துறைமுகங்கள் மேம்படுத்தப் படும் என்றார். குறிப்பாக சென்னை, கொச்சி, விசாகப்பட்டினம், பாரதீப் மற்றும் பெட்டாகட் ஆகிய துறைமுகங்கள் மேம்படுத்தப்பட்டு பொருளாதார நடவடிக்கைகளுக்கான மையங்களாக உருமாற்றப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். மேலும் ஆறுகள், குளங்கள் மற்றும் நீர்நிலைகள் மூலம் உள்நாட்டு மீன்பிடி துறைமுகங்கள் மற்றும் மையங்கள் மேம்படுத்தப்படும்.

கடற்பாசியின் மதிப்பை அங்கீகரிக்கும் வகையிலும், கடலோரவாழ் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும், வளர்ந்து வரும் துறையாக கடற்பாசி வளர்ப்பு திகழ்கிறது. அந்த வகையில், கடற்பாசி வளர்ப்பை மேம்படுத்தும் வகையில் தமிழகத்தில் பல்வகை பயன்பாட்டுக்கான கடற்பாசி பூங்கா அமைக்கப்படும் என்றும், இதன் மூலம் பெரிய அளவில் வேலைவாய்ப்பு உருவாகுவதோடு கூடுதல் வருவாயை ஏற்படுத்தும்.

தேசிய கல்விக் கொள்கை

2021-22-க்கான நிதிநிலை அறிக்கையை மக்களவையில் தாக்கல் செய்து பேசிய அவர், இந்த பள்ளிகள் தத்தமது பிராந்தியங்களில் முன்னுதாரணமாக திகழும் வகையில் மேம்படுத்தப்படும் என்றும், பிற பள்ளிகள் தேசிய கல்விக் கொள்கையின் இலக்குகளை அடைவ தற்கு இவை வழிகாட்டியாக இருக்கும் என்றும் கூறினார்.

தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தனியார் பள்ளிகள், மாநில அரசுகள் ஆகியவற்றுடன் இணைந்து 100 புதிய சைனிக் பள்ளிகள் துவங்கப்படும்.

தர நிர்ணயம், அங்கீகாரம், ஒழுங்குப் படுத்துதல், நிதி ஆகியவற்றை கவனிப் பதற்காக நான்கு பிரத்யேக அமைப்பு களுடன் இந்திய உயர்கல்வி ஆணையம் அமைக்கப்படும்.

லடாக் பகுதியில் உயர்கல்வி அளிப்ப தற்காக லே மத்திய பல்கலைக்கழகம் அமைக்கப்படவுள்ளதாகவும் கூறினார்.

ஒரே நாடு, ஒரே ரேஷன் அட்டை திட்டம்

ஒரே நாடு, ஒரே ரேஷன் அட்டை திட்டம் 32 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அமலில் உள்ளது. இதில் 69 கோடி பயனாளிகள் பயன் பெறுகின்றனர். அதாவது மொத்த பயனாளிகளில் 86 சதவீதம் பேர் பயன் பெறுகின்றனர் என்று அமைச்சர் தெரிவித்தார். அடுத்த சில மாதங்களில் மீதமுள்ள 4 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களும் இதில் சேர்க்கப்படும் என அவர் உறுதியளித்தார். ரேஷன் அட்டை பயனாளிகள், நாட்டில் எந்தப் பகுதியிலும் தங்களுக்கான ரேஷன் பொருட்களை வாங்கிக் கொள்ள இத் திட்டம் வகை செய்கிறது. குறிப்பாக குடிபெயர்ந்த தொழிலாளர்களின் குடும்பத்தினர் சொந்த ஊரில் இருக்கும்போது, தாங்கள் வேறு இடத்தில் வேலை பார்க்கும் நிலையில், பகுதியளவு பொருட்களை வாங்கிக் கொள்ளவும், ஊரில் இருப்பவர்கள் மீதியை வாங்கிக் கொள்ளவும் இது வகை செய்கிறது.

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான முனையம் குடிபெயர்ந்த தொழிலாளர்கள் குறித்து விசேஷ கவனம் செலுத்தும் வகையில், அமைப்புசாரா தொழிலாளர் நலனுக்கான அரசின் முயற்சிகளை மேம்படுத்தும் வகையில், ஒரு முனையம் உருவாக்கப்படும் தனியாக வேலை பார்ப்பவர்கள், கட்டடங்கள் மற்றும் கட்டுமானத் தொழிலாளர்கள் குறித்த தகவல்கள் இதன் மூலம் சேகரிக்கப்படும். குடிபெயர்ந்த தொழிலாளர்களுக்கு சுகாதாரம், வீட்டுவசதி, தொழில் திறன் பயிற்சி, காப்பீடு, கடன் மற்றும் உணவுப் பொருள் அளிக்கும் திட்டங்களை உருவாக்க இது உதவிகரமாக இருக்கும்.

தேசிய ஆராய்ச்சி பவுண்டேசன் திட்டம்

நாட்டில் ஆராய்ச்சிக்கான சூழலை பலப்படுத்தும் வகையில், புதுமை சிந்தனை மற்றும் ஆராய்ச்சி & மேம்பாட்டுக்கு பல்வேறு புதிய முன்முயற்சிகள் 2021-22-ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளன. ஐந்தாண்டு காலத்தில் தேசிய ஆராய்ச்சி பவுண்டேசனுக்கு ரூ.50 ஆயிரம் கோடியிலான திட்டத்தை நிதியமைச்சர் அறிவித்தார். ஷஷநாட்டில் ஒட்டுமொத்த ஆராய்ச்சி சூழல் இதனால் வலுப்பெறும். தேசத்தின் வளர்ச்சிக்கு முக்கியமானதாக அடையாளம் காணப்பட்ட துறைகளில் கவனம் செலுத்துவதாக இந்த ஆராய்ச்சிகள் இருக்கும்''.

இந்தியாவின் விண்வெளித் துறை

விண்வெளித் துறையின் கீழ் செயல்படும் புதிய விண்வெளி இந்தியா லிமிடெட் (சநஒக) என்ற பொதுத் துறை நிறுவனம் உருவாக்கப்படும். பிரேசிலில் இருந்து இந்தியாவின் நான்கு சிறிய செயற்கைக்கோள்களுடன், அமேசானியா செயற்கைக்கோளுடன் பி.எஸ்.எல்.வி.-சிஎஸ்51 ராக்கெட்டை ஏவுதலை இந்த நிறுவனம் செயல் படுத்தும். விண்வெளி பயணத்துக்கான அடிப்படை அம்சங்களில் நான்கு இந்திய விண்வெளி வீரர்கள் ரஷியாவில் பயிற்சி பெற்று வருகின்றனர். 2021 டிசம்பரில் மேற்கொள்ளப்படும் ககன்யான் மிஷனில் பயணம் செல்ல அவர்கள் இந்தப் பயிற்சி மேற்கொள்கின்றனர்.

மூத்த குடிமக்களுக்கு வருமானவரி தாக்கலில் இருந்து விலக்கு கடந்த 2020-ஆம் ஆண்டில், வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை 6.48 கோடியாக உயர்ந்தது. இது கடந்த 2014-ஆம் ஆண்டில் 3.31 கோடியாக இருந்தது.

இந்த மத்திய நிதி நிலை அறிக்கையில், மூத்த குடிமக்களுக்கு சில சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. 75-வது சுதந்திர ஆண்டில், 75 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களின் வரித்தாக்கல் சுமையை குறைக்க, இந்த நிதிநிலை அறிக்கையில் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. ஓய்வூதியம் மற்றும் வட்டி வருமானம் மட்டும் உள்ள, 75 வயதுக்கும் மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அவர்களின் வருமானத்தில் தேவையான வரியை, ஓய்வூதியம் வழங்கும் வங்கிகளே பிடித்தம் செய்து கொள்ளலாம்.

வருமான வரி கணக்கு தாக்கலை மீண்டும் சரிபார்ப்பதற்கான காலம் தற்போது 6 ஆண்டுகளாக உள்ளது. இது இந்த நிதிநிலை அறிக்கையில் 3 ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது. வரி ஏய்ப்பு வழக்குகளில் ஓராண்டில், ரூ.50 லட்சம் அல்லது அதற்கு மேல் வருவாய் ஆதாரங்கள் மறைக்கப் பட்டிருந்தால், 10 ஆண்டுகள் வரை அந்த வருமானவரி கணக்கை மறு ஆய்வு செய்ய முடியும். ஆனால் இதற்கு முதன்மை தலைமை ஆணையரின் ஒப்புதல் பெற வேண்டும்.

ஜிஎஸ்டி-யை சுமூகப்படுத்துதல்

ஜிஎஸ்டி-யை மேலும் எளிதாக்கவும், குறைபாடுகளை களையவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் கூறினார்.

உள்ளூர் உற்பத்திக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் சிறந்த ஏற்றுமதியை அதிகரிக்கும் வகையிலும், மூலப் பொருட்களை எளிதில் அணுகவும், மதிப்புக்கூட்டுப் பொருட்களை ஏற்றுமதி செய்யவும் உத்தேசிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். முன்பு அளிக்கப்பட்டிருந்த 400 வரி விலக்குகளை ஆய்வு செய்து இந்த ஆண்டு சுங்க தீர்வையை சீரமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மாற்றியமைக்கப்படும் சீரான சுங்கத் தீர்வை முறையை கொண்டுவர 2021 அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்படும்.

மொபைல் போன்களுக்கான மின் ஊக்கிகள் மற்றும் உதிரிப் பாகங்களுக் கான சில வரி விலக்குகளை திரும்பப் பெறப்படும். சில வகை உதிரிப்பாகங் களுக்கு மிதமான வகையில் 2.5 சதவீதம் அளவுக்கு வரி விதிக்கப்படும்.

துருப்பிடிக்காத உருக்கு, உலோகக் கலப்பு மற்றும் உலோகக் கலப்பற்ற பொருட் களுக்கு ஒரே சீராக 7.5 சதவீதம் என்ற விதத்தில் சுங்கத் தீர்வை குறைக்கப்படும். தாமிரப்பட்டைக்கான சுங்கத்தீர்வை ஐந்து சதவீதத்திலிருந்து 2.5 சதவீதமாக குறைக்கப்படுகிறது.

மனிதர்கள் உருவாக்கும் ஜவுளிகளுக்கான மூலப்பொருட்கள் மீதான வரியை சீராக்கும் வகையில், பாலியெஸ்டர், நார்ப்பொருட்கள், நைலான் வகைக்கு ஐந்து சதவீதம் என்ற சீரான வரி விதிக்கப்படும். இது ஜவுளித்துறை, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் மற்றும் ஏற்றுமதிக்கு ஊக்கமளிக்கும். தங்கம் மற்றும் வெள்ளி மீதான சுங்கத் தீர்வை சீரமைக்கப்படும்.

சூரியசக்தி தகடுகள், மற்றும் மின் ஊக்கி களை படிப்படியாக உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. சூரியசக்தி மாற்றிகள் மீதான வரியை ஐந்து சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. இதே போல சூரியசக்தி விளக்குகள் மீதான தீர்வையும் ஐந்து சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

இரும்புத் திருகாணிகள், பிளாஸ்டிக் கட்டுமானப் பொருட்கள், இறால் மீனுக் கான உணவுப் பொருட்கள் ஆகிய வற்றின் மீதான தீர்வை 15 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கு பயனளிக்கும்.

விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில், பருத்திக்கு பத்து சதவீதம் என்ற அளவுக் கும், கச்சாப் பட்டு, பட்டு நூல் ஆகிய வற்றுக்கு 15 சதவீதம் அளவுக்கும் சுங்கத் தீர்வை அதிகரிக்கப்பட்டுள்ளது.

குறைந்த எண்ணிக்கையிலான பொருட் களுக்கு வேளாண் கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு செஸ் எனப்படும் கூடுதல் வரி விதிக்கப்படும். இந்த வரியை விதிக்கும் போது நுகர்வோருக்கு கூடுதல் சுமை ஏற்படாத வண்ணம் கவனத்தில் கொள்ளப்படும்.

தங்கம், வெள்ளி, ஆல்கஹால் கலந்த திரவங்கள், கச்சா பனை எண்ணெய், கச்சா சோயா பீன்ஸ் மற்றும் சூரியகாந்தி எண்ணெய், ஆப்பிள், நிலக்கரி, பழுப்பு நிலக்கரி, சிலவகை உரங்கள், பட்டாணி, காபூல் கொண்டைக்கடலை, கொண்டைக்கடலை, பருத்தி ஆகியவை இந்த வரி வரிவிதிப்பின் கீழ் வரும்.

பெட்ரோல் மீது லிட்டருக்கு ரூ.2.50-ஆம் டீசலுக்கு நான்கு ரூபாயும் கூடுதல் வரி விதிக்கப்படும். இருப்பினும் பெட்ரோல், டீசல் மீது அடிப்படை கலால் வரி மற்றும் சிறப்புக் கூடுதல் கலால் வரி விகிதங்கள் நிதி நிலை அறிக்கையில் குறைக்கப்பட்டுள்ளதால் நுகர்வோருக்கு கூடுதல் சுமை ஏற்படாது என்று அமைச்சர் தெரிவித்தார்.

பொதுத்துறை - தனியார் கூட்டாண்மை

2021-22 நிதியாண்டில் பொதுத்துறை, தனியார் கூட்டாண்மை அடிப்படையில், ரூ.2,000 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான ஏழு திட்டங்கள் பெரிய துறைமுகங்களில் செயல்படுத்தப்படும். இதன் மூலம் பெரிய துறைமுகங்களின் இயக்க சேவைகளை, பொதுத்துறை மற்றும் தனியார் கூட்டு முயற்சியில் இயக்க அனுமதிக்கப்படும்.

ஐரோப்பா, ஜப்பானிலிருந்து அதிக கப்பல்களை இந்தியாவுக்கு வரவழைக்கும் முயற்சியாக சுமார் 90 கப்பல் மறு சுழற்சி தளங்களை குஜராத் மாநிலம் அலாங்கில் அமைக்க முயற்சி மேற்கொள்ளப் பட்டுள்ளதாகவும், இதன் மூலம் நாட்டின் 1.5 லட்சம் இளைஞர்களுக்கு கூடுதல் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

gk010321
இதையும் படியுங்கள்
Subscribe