குடியுரிமை திருத்த சட்டம் 2019 மக்களவையில் நிறைவேறியது. குடியுரிமை பெறுவதற்கான நிபந்தனைகளை நிறைவு செய்தால், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் நாடுகளில் மத அடிப்படையில் இன்னல்களை எதிர்கொண்டு, இந்தியாவுக்குக் குடிபெயர்ந்த இந்து, சீக்கிய, புத்த, சமண, பார்ஸி, கிறிஸ்தவ சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க இந்த மசோதா வகைசெய்கிறது. இந்த மசோதாவை தாக்கல் செய்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ""இந்தியாவின் சிறுபான்மை சமூகத்தை இந்த சட்டம் எவ்வகையிலும் குறிவைக்கவில்லை;
ஆனால், சட்டவிரோதமாகக் குடிபெயர்ந்து வந்தவர்களை நாட்டுக்குள் அனுமதிக்க முடியாது'' என்றார்.
விவாதத்திற்கு பதிலளித்துப் பேசிய அமித் ஷா, ""ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிரானது இந்த மசோதா என்ற தவறான கருத்து பரப்பப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த 70 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டிருப்போருக்கு குடியுரிமை வழங்கும் மனிதாபிமான செயல் இது. மத அடிப்படையில், இந்தியா பிரிவினைக்கு ஒப்புக் கொண்டது காங்கிரஸ் கட்சி என்பதால், இந்த மசோதா அவசியமாகியுள்ளது. உண்மையான அகதிகளையும், ஊடுருவல் காரர்களையும் உறுப்பினர்கள் பாகுபடுத் திப்பார்க்க வேண்டும்'' என்று உள்துறை அமைச்சர் கேட்டுக் கொண்டார்.
இந்த மசோதாவுக்குப் பின்னால், அரசியல் நோக்கம் ஏதுமில்லை என்று கூறிய அவர், கடந்த 70 ஆண்டுகளாக அடிப்படையான உரிமைகள் மறுக்கப் பட்டவர்களுக்கு அரசியல் சட்ட நடைமுறையின்படி, குடியுரிமை வழங்குவதற்குத்தான் இந்த சட்டம் என்றார். ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பங்களாதேஷ் நாடுகளின் அரசியல் சட்டத்தில் அரசு மதம் என்று குறிப்பிடப்பட்டிருப்பதை அவர் எடுத்துக்காட்டினார். இந்தப் பின்னணியில் இந்த நாடுகள் இந்து, சீக்கிய, புத்த, சமண, பார்ஸி, கிறிஸ்தவ சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கு மதரீதியாக இன்னல் ஏற்படுத்தியது வரலாறாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டார். இவர்கள், அன்றாட வாழ்க்கையில் தங்களின் மதஉரிமை களை நடைமுறைப்படுத்தவும், கடைபிடிக்கவும், பிரச்சாரம் செய்யவும் தடைகளும், கட்டுப்பாடுகளும் இருப்பதால் அச்சமடைந்துள்ளனர்.
இத்தகையோர் இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளனர். தங்களின் பயண ஆவணங்கள் காலாவதியான பின்பு அல்லது, அரைகுறையாக உள்ள நிலையில், அல்லது ஆவணங்களே இல்லாமல் இந்தியாவில் தொடர்ந்து தங்கியுள்ளனர்.
1971-ஆம் ஆண்டு பங்களாதேஷிலிருந்து அகதிகளாக வந்தவர்களுக்கு அப்போ திருந்த அரசு குடியுரிமை வழங்கியதை அவர் உதாரணமாக எடுத்துரைத்தார். அதன்பிறகும் அகதிகள் வருகை நிற்கவில்லை என்று உள்துறை அமைச்சர் கூறினார். உகாண்டாவிலிருந்து வந்த அகதிகளும், குடியுரிமை பெற்றுள்ளனர்.
இதேமாதிரி நடவடிக்கை இலங்கை பிரச்சினையிலும், 1985-இல் அஸ்ஸாம் உடன்பாடு கை

இதேமாதிரி நடவடிக்கை இலங்கை பிரச்சினையிலும், 1985-இல் அஸ்ஸாம் உடன்பாடு கையெழுத்தான பின்னரும் மேற்கொள்ளப்பட்டது. இந்த முடிவுகள் அரசியல் சட்டப்பிரிவு 14-க்கு பொருத்தமான அடிப்படை யிலேயே எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
இந்த மசோதா, அரசியல் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்புக்கும், நெறிகளுக்கும் எதிராக உள்ளது என்று உறுப்பினர்கள் கூறுவதில் உண்மையில்லை என்று அமைச்சர் கூறினார். இந்த மசோதா இந்திய அரசியல் சட்டத்தின் எந்தப் பிரிவுக்கும் எதிரானது அல்ல என்றும் நாட்டுக்கு நான் உறுதியளிக்கிறேன் என அவர் கூறினார்.
குடியுரிமைத் திருத்த சட்ட விவரம்
இந்தியக் குடியுரிமையைப் பெற விரும்பும் வெளிநாட்டவர் ஒருவர் 11 ஆண்டுகள் இந்தியாவில் வசித்திருக்க வேண்டும் என்று இந்தியக் குடியுரிமைச் சட்டம், 1955 தெரிவிக்கிறது. இந்நிலையில் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானிலிருந்து குடிபெயர்ந்த மதச் சிறுபான்மையினராக இந்து, சீக்கிய, பார்ஸி, சமண, புத்த, கிறிஸ்தவர்கள் இந்தியக் குடியுரிமை கேட்டு விண்ணப்பிப்பதற்கு இந்தியாவில் 5 ஆண்டுகள் வசித்தால் போதுமானது என்று தற்போது சட்ட திருத்தம் செய்வதற்கான மசோதா மக்களவை, மாநிலங்களவையில் நிறைவேறியுள்ளது. இந்தியாவின் அண்டை நாடுகளில் உள்ள சிறுபான்மையினருக்கு சலுகை காட்டும் இச்சட்டத்திருத்தம் முஸ்லிம்களை அச்சலுகையிலிருந்து விலக்கிவைப் பதால் இது அரசியலமைப்புச் சட்டத் துக்கு எதிரானது என்று விமர்சிக்கப் படுகிறது.
அரசியலமைப்பும் குடியுரிமை திருத்த சட்டமும்
நாடாளுமன்றத்தால் இயற்றப்படுகிற எந்தவொரு சட்டம் அல்லது சட்டத் திருத்தமும் அரசியலமைப்புச் சட்டக் கொள்கைகளின்படியே அமைய வேண்டும். அரசியலமைப்புச் சட்டத்துக்கு முரணாக அமையும் சட்டங்கள் செல்லாத தாகக் கருதப்படும். நாடாளுமன்றத்தால் தற்போது நிறைவேற்றப்பட்டிருக்கும் மசோதா, முஸ்லிம்களைத் தவிர்த்து விட்டு மற்ற மதங்களைச் சேர்ந்த சிறுபான்மையினருக்கு மட்டுமே சலுகை காட்டுகிறது. சமய வேற்றுமைகளை சட்டபூர்வமாக ஏற்றுக்கொள்ளும் இந்தத் திருத்தம், மதச்சார்பற்ற இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராக அமைந்துள்ளது என்று விமர்சிக்கப்படுகிறது. அரசியலமைப்புச் சட்டக் கூறு 14-ன்படி அனைவரும் சாதி, சமய, பாலின வேறுபாடுகள் இன்றி சமமாக நடத்தப்பட வேண்டும். ஆனால், தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள மசோதாவோ இச்சட்டக் கூறுக்கு எதிராக அமைந்துள்ளது. அடிப்படை உரிமைகள், அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்புகளில் ஒன்றாகக் கருதப்படுவதால், அதைத் திருத்தியமைக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்துக்கு இல்லை என்றும் அரசியலமைப்புச் சட்டரீதியில் விமர்சிக்கப்படுகிறது.
மத்திய அரசின் பதில்
இந்தச் சட்டத்தால் இந்திய முஸ்லிம் களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்று குறிப்பிட்டிருக்கும் உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்தியா மதச்சார்பற்ற நாடாக இருந்தாலும் பாகிஸ்தான் மத அடிப்படையிலேயே பிரிக்கப்பட்டது, ஒருவேளை தேசப் பிரிவினை செய்யப்படாதிருந்தால், இன்று இப்படி யொரு சட்டத்திருத்தத்துக்கே தேவை எழுந்திருக்காது என்று பதில் அளித் திருக்கிறார். ஆனால் பாகிஸ்தான், வங்கதேசம் மட்டுமின்றி ஆப்கானிஸ் தானில் உள்ள சிறுபான்மையினருக்கும் இத்திருத்த சட்டம் சலுகை யளிக்கிறது.
முஸ்லிம்களுக்கு எதிரானதா?
மதச் சிறுபான்மையினரைப் பாதுகாப்பது இந்தத் திருத்தத்தின் நோக்கமாகக் கூறப்படுகிறது. ஆனால், இந்தத் திருத்தத் தில் அனைத்து மதச் சிறுபான்மையினருக்கும் அவ்வாறு சலுகை காட்டப்பட வில்லை. பாகிஸ்தானில் அஹமதியா மற்றும் ஷியா முஸ்லிம்கள் துன்புறுத்தல் களுக்கு ஆளாகின்றனர். மியான்மரில் ரோகிங்கியா முஸ்லிம்களும் இந்துக் களும் துயரங்களுக்கு ஆளாகி வருகின் றனர். இலங்கையில் தமிழ் முஸ்லிம்களும் இந்துக்களும் இதே துயரத்தை அனுபவித்து வருகின்றனர். அவர்களுக் கெல்லாம் ஏன் இந்தச் சலுகையை விரிவுபடுத்தவில்லை என்ற கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன. முஸ்லிம் நாடுகளிலுள்ள சிறுபான்மையினரைப் பற்றி மட்டுமே இந்தச் சட்டத்திருத்தம் கவனம் கொண்டுள்ளதாகவும் விமர்சிக் கப்படுகிறது.
வடகிழக்கு மாநிலங்கள்
அரசியலமைப்புச் சட்டக் கூறு 244 மற்றும் ஆறாவது அட்டவணையின்படி பழங்குடியினர் நிர்வாகப் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள மிசோரம், மேகாலயா மாநிலங்களிலும் அஸ்ஸாம், திரிபுரா ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளிலும் அங்கே செல்வதற்கு முன்பு அனுமதிச்சீட்டு பெறும் இன்னர் லைன் பர்மிட் முறை பின்பற்றப்பட்டு வருகிறது. இதன்படி, இந்தியாவின் மற்ற பகுதிகளில் வசிப்பவர்கள் இந்த மாநிலப் பகுதிகளுக்குச் செல்ல முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும். அருணாச்சல பிரதேசம், நாகாலாந்து மாநிலங்களுக்குள் நுழைவதற்கு முன்கூட்டியே அனுமதி பெறும் முறையானது பிரிட்டிஷ் ஆட்சிக்காலத் திலிருந்தே நடைமுறையில் இருந்து வருகிறது. குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப் பட்ட டிசம்பர் 10 அன்று, மணிப்பூர் மாநிலத்துக்கும் இன்னர் லைன் பர்மிட் முறையை மத்திய அரசு நீட்டித்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் அந்நியர் களாக அறிவிக்கப்பட்டவர்கள், இந்திய குடியுரிமைத் திருத்த மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ள ஆறு மதப்பிரிவு களில் எந்தவொன்றைச் சார்ந்தவ ராக இருந்தாலும் அவருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்பட மாட்டாது என்றும் திருத்த சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேசியக் குடியுரிமைப் பதிவேடும் குடியுரிமை திருத்த சட்டமும்
அஸ்ஸாமில் மேற்கொள்ளப்பட்ட தேசியக் குடியுரிமைப் பதிவேட்டுப் பணிகள், அருகாமை நாடுகளிலிருந்து இந்தியாவுக்குக் குடிபெயர்ந்தவர்களில் 19 லட்சம் பேர்களை அந்நியர்கள் என்று அடையாளப்படுத்தியுள்ளது. தலைமுறை தலைமுறையாக இந்தியா வில் வசிப்பவர்களும்கூட உரிய ஆவணங்களைச் சமர்ப்பிக்கவில்லை என்ற காரணம் காட்டி அந்நியர்களாக அடையாளப்படுத்தப்பட்டிருப்பது விமர்சிக்கப்பட்டுவருகிறது. எனினும், இதுவரையிலான பணிகள் ஏட்டளவில் மட்டுமே இருக்கின்றன. இந்நிலையில், அந்நியர்கள் என்று அடையாளப்படுத் தப்பட்டவர்களில் இந்து, சீக்கிய, பார்ஸி, சமண, புத்த, கிறிஸ்தவ சமயத்தைச் சார்ந்தவர்கள் இயல்பா கவே விடுவிக்கப்படுவார்கள். அந்நியர்கள் என்று அடையாளப்படுத்தப்பட்ட வர்களில் முஸ்லிம்கள் மட்டுமே எஞ்சி யிருப்பார்கள்.
குடியுரிமையுரிமையின் முக்கியத்துவம்
யார் குடிமக்கள் ஆக முடியும் என்று ஒரு நாடு எப்படி வரையறுக்கிறதோ அதுதான் அந்த நாட்டின் பண்பையும் வரையறுக்கிறது. ஏனெனில், குடியுரிமை தான் உரிமைகளைப் பெறுவதற்கான உரிமையைத் தருகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை, 1950-இல் அரசியல மைப்புச் சட்டம் ஏற்கப்பட்டபோது, குடியுரிமை பற்றிய அரசியலமைப்புச் சட்டத்தின் இரண்டாவது பாகத்தின்படி இந்திய நிலப்பரப்புக்குள் தங்கள் இருப்பிடத்தைக் கொண்டவருக்குக் குடியுரிமை வழங்கப்பட்டது.
அரசமைப்புச் சட்டக் கூறு 6-ன்படி, பாகிஸ்தான் பகுதியிலிருந்து இந்தியப் பகுதிக்குப் புலம்பெயர்ந்தோருக்கும் குடியுரிமை அந்தஸ்து வழங்கப் பட்டது. இப்படியான அரசியலமைப்பு முறையில் மதத்துக்குத் திட்டவட்ட மாக இடமில்லாத நிலை இருந்தது. குடியுரிமையைக் கையகப்படுத்தல் மற்றும் துண்டித்தல்-தொடர்பிலான வழிமுறைகளை உருவாக்குவதற்கான நாடாளுமன்றத்தின் அதிகாரத் தையும் நமது அரசியலமைப்புச் சட்டம் அங்கீகரிக்கிறது. இந்த ரீதியில்தான், நாடாளுமன்றம் குடியுரிமைச் சட்டம், 1955-ஐ இயற்றியது. இந்தச் சட்டத்தின் அடிப்படையிலும் மதம் என்பது தேவைப்படும் அம்சமாக இல்லை.
1955-இல் அமல்படுத்தப்பட்ட சட்டத் தின் குறிப்பிட்ட அம்சங்களைத் திருத்துவதற்காகத் தற்போது பரிந்துரைக் கப்பட்டுள்ள குடியுரிமைச் திருத்த சட்டம் மதம் சார்ந்த அம்சத்தில் மாற்றம் செய்ய முனைந்துள்ளது.
மதச்சார்பற்ற அரசியலமைப்புச் சட்டத்தைக் கொண்ட இந்தியா போன்ற நாட்டில் குறிப்பிட்ட மதப்பிரிவினரின் குடியுரிமையைக் கையகப்படுத்த முடியுமா என்ற வெளிப்படையான புள்ளியில்தான் பெரும்பாலான விவாதங்கள் மையம் கொண்டிருக்கின்றன. குறிப்பாக, அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை அம்சம் மதச்சார்பின்மை என்று அடுக்கடுக்காக நீதிமன்றத் தீர்ப்புகள் அறிவித்திருக்கும் வேளை இது. ஆனால், இந்த அடிப்படைக் கேள்வியுடன், மத்திய அரசு பரிந்துரைத்திருக்கும் குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதா வைப் பார்க்கும்போது, அரசியலமைப் புக்கு விரோதமான அம்சங்கள் அதில் தூவப்பட்டிருக்கின்றன. இந்த சட்டத்தில் நாடுகள், சமூகங்களை வகைப்படுத் திருக்கும் பட்டியல் அரசியலமைப்புரீதி யாக சந்தேகத்துக்குரியது.
நாடு ரீதியான வகைப்பாடு முதலில் நாடுகளைப் பார்ப்போம். ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசத்தை ஒன்றாகச் சேர்த்து இதர அண்டை நாடுகளைச் சேர்க்காமல் இருப்பது ஏன் என்று தெரியவில்லை. பொதுவான வரலாறு என்பது காரணமாக இருக்க முடியாது. ஏனெனில், ஆப்கானிஸ்தான் எப்போதும் பிரிட்டிஷ் இந்தியாவின் அங்கமாக இருந்ததே இல்லை. இந்தியாவின் எல்லையில் இல்லாததால், நிலவியல்ரீதியாகவும் அண்டை நாடென ஆப்கானிஸ்தானைக் கோருவதற்கும் வாய்ப்பு கிடையாது. முக்கியமாக, இந்தியாவுடன் எல்லைப் பகுதியைப் பகிரும் நேபாளம், பூடான், மியான்மர் போன்ற தேசங்கள் ஏன் இந்தப் பட்டியலிலிருந்து விடுபட்டன?
குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதாவில் நோக்கங்கள் மற்றும் காரணங்களுக்கான அறிக்கையிடுதல் பகுதியில் இதற்கான காரணம் சொல்லப்பட்டுள்ளது. இந்த மூன்று நாடுகளும் அரசியலமைப்புரீதியாக தங்கள் அரசு சார்ந்துள்ள மதம் என்னவென்பதை அறிவிக்கிறது. அதனால், சமயச்சார்பான ஆட்சி நடக்கும் நாடுகளில் மதச் சிறுபான்மையினரைப் பாதுகாப்பதற்குத்தான் இந்த விடுபடுதல் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், இந்தக் காரணம் வலுவானதல்ல. இந்தியாவின் அண்டை நாடும், சமயச்சார்பான அரசுமான பூடானின் அதிகாரபூர்வ மதமாக வஜ்ராயன பௌத்தம் ஏன் இந்தப் பட்டியலிலிருந்து விடுபட்டது? பூட்டானைப் பொறுத்தவரை கிறிஸ்த வர்கள் வீட்டுக்குள் தனிப்பட்ட அளவிலேயே பிரார்த்தனை செய்ய முடியும். எல்லைப் பிராந்தியங்களில் உள்ள பல பூட்டானிய கிறிஸ்தவர்கள் தேவாலயங்களில் வழிபடுவதற்காக இந்தியாவுக்குப் பயணிக்கும் நிலை உள்ளது. ஆனால், குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதாவில் அவர்கள் பலனாளிகளாக இல்லை. அண்டை நாடுகளில் மதச் சிறுபான்மையினருக்கு அச்சுறுத்தல் நிலவுவதைத் தடுப்பதுதான் நோக்கம் என்றால், பெரும்பான்மை பௌத்தர்களால் தமிழ் இந்துக்கள் மோசமாக நடத்தப்பட்ட வரலாறுள்ள நிலையில் அவர்கள் ஏன் இந்தப் பட்டியலிலிருந்து விடுபட்டனர்? மியான்மரில் ரோகிங்கியா முஸ்லிம் மக்கள் மீது இனப்படுகொலை ஏவப்பட்டு, நிறைய பேர் இந்தியாவுக்கு அகதிகளாக வந்த நிலையில் அவர்கள் ஏன் இந்தப் பட்டியலில் சேர்க்கப்படவில்லை? இந்த மூன்று நாடுகளை மட்டுமே சேர்த்திருக்கும் குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதாவின் தேர்வு சிலருக்கு மட்டும் சலுகை காட்டுவதாக உள்ளது.
இந்த குடியுரிமைத் திருத்த சட்டத்திற் கெதிராக நாடு முழுவதும் மாணவர்கள், வடகிழக்கு மாநில மக்கள் என போராட்டம் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே இச்சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புதான் குடியுரிமைத் திருத்த சட்டத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கும்.