மிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் சென்னை பார்முலா ரேஸிங் சர்க்யூட் போட்டி மற்றும் இந்தியன் ரேஸிங் லீக் கார் பந்தயம் தீவுத்திடல் பகுதியில் பயிற்சி சுற்றுகளுடன் நடைபெற்றது.

தெற்கு ஆசியாவில் முதன்முறையாக நடத்தப்படும் இரவு நேர சாலை பார்முலா 4 கார் பந்தயமாக இது அமைந்தது.

மேலும் தெற்கு ஆசியாவிலேயே இதுவரை நடைபெறாத மிக நீளமான சாலை கார் பந்தயம் இது என்னும் பெருமையை இந்த பார்முலா 4 கார் பந்தயம் பெற்றது.

ss

Advertisment

இந்த 3.5 கி.மீ. நீள கார் பந்தயப் பகுதியில் மொத்தம் 19 வளைவுகள் இருந்தன. பந்தய இடம் சென்னை மாநகரில் தீவுத் திடலி-ல் தொடங்கி, போர் நினைவுச் சின்னம், நேப்பியர் சுவாமி சிவானந்தாசாலை, அண்ணாசாலை வழியாக 3.5 கி.மீ. தூரத்தைக் கடந்து தீவுத் திடலி-லேயே வந்து முடிவதாக இருந்தது.

பார்முலா 4 பந்தயத்தில் சென்னை டர்போ ரைடர்ஸ். கோவா ஏசஸ் ஜோ ரேசிங் ஸ்டுடெமான்ஸ் டெல்லி, பெங்களூரு ஸ்பிடெஸ்டர்ஸ். ஷ்ராச்சிராஹ் பெங்கால் டைகர்ஸ், ஐதராபாத் பிளாக்பேர்ட்ஸ். அகமதாபாத் ரேசர்ஸ், காட்ஸ்பீடு கொச்சி ஆகிய 8 அணிகள் கலந்து கொண்டன.

ஓர் அணிக்கு 2 வீரர்கள் வீதம் 16 பேர் கலந்து கொண்டனர். ஒவ்வொரு அணியிலும் 2 கார்கள் பயன்படுத்தப்பட்டன.

Advertisment

இந்திய ரேசிங் லீக் பந்தயத்தில் (ஐ.ஆர்.எல்) 6 அணிகள் கலந்து கொண்டன. ஒரு அணியில் 4 பேர் இடம் பெற்றனர்.

இதில் ஒவ்வொரு அணியிலும் தலா ஒரு வீராங்கனை இடம் பெறுவது கட்டாயமாக்கப் பட்டிருந்தது.

அந்த வகையில் 18 வீரர்கள் 6 வீராங்கனைகள் என மொத்தம் 24 பேர் கலந்து கொண்டனர்.

ஒவ்வொரு அணியிலும் 2 கார்கள் வீதம் 16 கார்கள் பயன்படுத்தப்பட்டன. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பந்தயத்தின் பயிற்சியை கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

முதல் நாளில் வீரர்கள் பயிற்சிகளில் மட்டுமே ஈடுபட்டனர். இரண்டாவது நாளன்று தகுதிச் சுற்று மற்றும் பிரதான பந்தயங்கள் அனைத்தும் திட்டமிட்டபடி வெற்றிகரமாக நடைபெற்றன.

தகுதிச் சுற்றில் முதல் இடம் பிடித்த ஆஸ்திரேலிய வீரர் ஹக்பார்ட்டரே பந்தய தூரத்தை 19:42,952 வினாடிகளில் கடந்து இலக்கை அடைந்து போட்டி யில் முதல் இடம் பிடித்து வெற்றி பெற்றார்.

இந்தியாவின் ருஹான் ஆல்வா பந்தய தூரத்தை 19:50.251 வினாடிகளில் இலக்கை அடைந்து இரண்டாவது இடம் பிடித்து வெற்றி பெற்றார்.

பெங்களூரு, ஸ்பிடெஸ்டர்ஸ் அணியின் அபய் மோகன் 20:09.021 வினாடிகளில் இலக்கை அடைந்து மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.

சென்னை டர்போ ரைடர்ஸ் அணியை சேர்ந்த இஷாக் டிமெல்வீக் 20:11.408 விநாடிகளில் பந்தய தூரத்தை எட்டி 5-வது இடத்தையே பிடித்தார்.

பார்முலா 4 இந்தியன் சாம்பியன் ஷிப் போட்டியுடன் இந்தியன் ரேசிங் லீக் போட்டியில் ஜே.கே.ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியும் நடைபெற்றது.

பிற்பகலில் தொடங்கி மின்னொளியில் இரவு வரை நடைபெற்ற இந்தப் பந்தயம் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.

இந்தப் போட்டிகளில் இங்கிலாந்து, போர்சுக்கல், செக்குடியரசு, பெல்ஜியம்.

டென்மார்க சுவிட்சர்லாந்து, ஸ்பெயின், மலேசியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த வீரர்களும் வீராங் கனைகளும் கலந்து கொண்டனர்.