பொருளாதார ஆய்வறிக்கை

/idhalgal/general-knowledge/economic-thesis-2

நாடாளுமன்றத்தில் 2023-24-ஆம் நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பட்ஜெட்டுக்கு முன்னதாக தாக்கல் செய்யப்படும் பொருளாதார ஆய்வறிக்கை இந்திய பொருளாதாரத்தின் நிலை குறித்த விரிவான தகவல்களை வழங்குகிறது. அடுத்த நிதியாண்டிற்கான அரசின் கொள்கை முன்னுரிமைகளையும் பிரதிபலிக்கிறது.

பொருளாதார ஆய்வறிக்கையின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

இந்தியாவின் நிதித் துறைக்கான எதிர்காலம் பிரகாசமாக உள்ளது.

2024-25-ஆம் நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் 6.5% முதல் 7% வளரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2023-24-ஆம் நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் 8.2 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.

2023-24-ஆம் நிதியாண்டில் உலகப் பொருளாதாரம் நிலையற்றதாக இருந்தாலும், உள்நாட்டு வளர்ச்சிக் காரணிகள் இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்கு உதவியுள்ளன.

போர் உள்ளிட்ட உலக அரசியல் பதற்றங் களால் ரிசர்வ் வங்கியின் கொள்கை நிலைப்பாட்டில் மாற்றம் இருக்கலாம்.

2023-24-ஆம் நிதியாண்டில் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை, ஜி.டி.பியில் 0.7 சதவீதமாக இருந்துள்ளது. முந்தைய 2022-23-ஆம் நிதியாண்டில் நடப்புக் கணக்கு பற்றாக்குறை ஜி.டி.பியில் 2 சதவீதமாக இருந்தது.

2023-24-ஆம் நிதியாண்டில் சில்லறை பணவீக்கம் 5.4 சதவீதமாகக் குறைந் துள்ளது. முந்தைய 2022-23-ஆம் நிதியாண்டில் சில்லறை பணவீக்கம் சராசரியாக 6.7 சதவீதமாக இருந்தது.

உணவுப் பணவீக்கம் 2022-23-ஆம் நிதியாண்டில் 6.6 சதவீதத்தில் இருந்து 2023-24-ஆம் நிதியாண்டில் 7.5 சதவீதமாக உயர்ந்துள்ளது.

cc

மொத்த நிலையான மூலதன உருவாக்கம் 9 சதவிகிதம் உயர்ந்துள்ளது.

உணவுப் பொருள்களின் விலை உயர்வால் ஏழைகள் மற்றும் குறைந்த வருமானம் ஈட்டும் மக்களுக்க

உணவுப் பொருள்களின் விலை உயர்வால் ஏழைகள் மற்றும் குறைந்த வருமானம் ஈட்டும் மக்களுக்கு ஆதரவளிக்க, அவர்களுக்கு நேரடியாக பணம் செலுத்தலாம் அல்லது, குறிப்பிட்ட பொருட்களுக்கு கூப்பன்களை வழங்கலாம்.

இந்தியாவின் நோய் சுமையில் 54 சதவீதத்துக்கு ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கமே காரணம். எனவே, சமநிலையான, பரவலாக்கப்பட்ட உணவுப் பழக்கத்துக்கு மாற வேண்டும்.

இந்தியாவின் கொள்கை சவால்களை சந்தித்து வருகிறது. சர்வதேச அளவில் நிலையற்ற தன்மை இருந்தாலும், விலை ஏற்றம் கட்டுப்பாட்டில் உள்ளது.

கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் பேலன்ஸ் ஷீட் வலுவாக இருப்பதால், தனியார் முதலீடுகள் பலம் பெறும்.

பொது முதலீடு அதிகரித்த போதிலும், அரசின் நிதிநிலை வளர்ந்துள்ளது. வரி இணக்கம், செலவுகளை குறைத்தல், டிஜிட்டல்மயமாதல் போன்றவற்றால் இந்திய அரசின் நிதி நிர்வாகத்தில் சமநிலை ஏற்படும்.

நிதித்துறை முக்கிய மாற்றங்களை சந்தித்து வருகிறது. அதே சமயம், உள்நாட்டிலும், உலகளவிலும் ஏற்படும் சவால்களுக்கு நிதித் துறை தயாராக வேண்டும்.

இந்தியாவின் வளர்ச்சியில் மூலதன சந்தைகள் முக்கியமான அங்கமாக மாறி வருகின்றன. உலக அரசியல் பிரச்னைகள், பொருளாதார அதிர்வுகளையும் தாண்டி பங்குச் சந்தை ஏற்றம் கண்டுள்ளது.

டெரிவேடிவ் வர்த்தகம் மிக அதிக லாபம் தரக்கூடிய திறன் கொண்டது. இதனால்தான், டெரிவேடிவ் வர்த்தகம் மனிதர்களின் சூதாட்ட உணர்வுகளைத் தூண்டுகிறது. இதன் விளைவாக, டெரிவேடிவ் வர்த்தகத்தில் சிறு முதலீட்டாளர்களின் பங்களிப்பு அதிகரித்திருக்கலாம்.

ee

உலகளவில் டெரிவேடிவ் வர்த்தகத்தால் முதலீட்டாளர்கள் நஷ்டம் அடைந்து வருகின்றனர். எனவே, டெரிவேடிவ் வர்த்தகம் பற்றி முதலீட்டாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது முக்கியம். பங்குச் சந்தையில் சரிவு ஏற்பட்டால், டெரிவேடிவ் வர்த்தகத்தில் ஈடுபடும் சிறு முதலீட்டாளர்கள் பெரும் நஷ்டத்தை சந்திப்பார்கள்.

சீனாவில் இருந்து வரும் அந்நிய நேரடி முதலீடுகளால், உலக விநியோக அமைப்பில் இந்தியாவின் பங்களிப்பு அதிகரிக்கும், ஏற்றுமதி வளரும்.

மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறை 2023-ஆம் நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6.4 சதவீதத் திலிருந்து 2024-ஆம் நிதியாண்டில் 5.6 சதவீதமாகக் குறைந்துள்ளது.

2024-ஆம் நிதியாண்டுக்கான மூலதன செலவு 9.5 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இது ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 28.2 சதவீதம் அதிகரிப்பாகும்.

மொத்த நிதிப் பற்றாக்குறை பட்ஜெட் இலக்கான ரூ. 9.1 லட்சம் கோடியை விட 8.6 சதவீதம் குறைவாக இருந்ததால் மாநில அரசுகளின் செலவினங்களின் தரம் மேம்பட்டது.

2024-ஆம் நிதியாண்டில் விவசாயம், தொழில் மற்றும் சேவைத் துறைகளின் பங்குகள் முறையே 17.7 சதவீதம், 27.6 சதவீதம் மற்றும் 54.7 சதவீதமாக இருந்தன. 2024-ஆம் நிதியாண்டில், உற்பத்தித் துறை 9.9 சதவீத வளர்ச்சியைக் கண்டுள்ளது. கட்டுமானப் பணிகளும் 9.9 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன.

தனியார் நிதி அல்லாத நிறுவனங்களின் மொத்த நிலையான மூலதன உருவாக்கம் 2023-இல் 19.8 சதவீதம் அதிகரித்து காணப்பட்டது. இது வளர்ச்சியின் முக்கிய உந்துதலாக கருதப்படுகிறது. எட்டு பெரிய நகரங்களில் 4.1 லட்சம் குடியிருப்புகள் விற்கப்பட்டுள்ளதால், 2023-ஆம் ஆண்டில் ரியல் எஸ்டேட் 33 சதவீத ஆண்டு வளர்ச்சியைக் கண்டுள்ளது. இது 2013-க்குப் பிறகு மிக அதிகமான விற்பனையாகும்.

இந்திய அரசின் மய்ண்ஸ்ங்ழ்ள்ஹப் நங்ழ்ஸ்ண்ஸ்ரீங்ள் ஞக்ஷப்ண்ஞ்ஹற்ண்ர்ய் என்ய்க் (மநஞஎ) நிதியில் ஐந்து சதவீதத்தை தொலைத்தொடர்புத் துறையில் ஆராய்ச்சிக்காகவும் மேம்பாட்டிற்காகவும் செலவிட உத்தேசிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிதியில் தற்போது 80,000 கோடி ரூபாய் இருக்கிறது. இந்த நிதியின் பெயர் இனி 'டிஜிட்டல் பாரத் நிதி' என மாற்றப்படும்.

கொரோனாவுக்குப் பிந்தைய காலகட்டத்தில் இந்தியச் சுற்றுலாத் துறை சற்று வளர்ச்சி கண்டிருக்கிறது. 2023-ஆம் ஆண்டில் 92 லட்சத்திற்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இந்தியாவுக்கு வந்துள்ளனர்.

அதற்கு முந்தைய ஆண்டோடு ஒப்பிட்டால் இது 43.5 சதவீத வளர்ச்சியாகும். 2023-ஆம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் புதிதாக 14,000 அறைகள் கட்டப்பட்டிருக்கின்றன.

சீனாவுக்கு அடுத்தபடியாக உலகிலேயே மிகப்பெரிய காலணி உற்பத்தியாளராக இந்தியா இருக்கிறது. இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் காலணிகளின் மதிப்பு 1.9 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது, 2024-இல் 2.5 பில்லியன் டாலராக உயர்ந்திருக்கிறது.

செல்போன் உற்பத்தியைப் பொருத்தவரை, 2024-ஆம் ஆண்டில் உலகில் உற்பத்தியாகும் ஐஃபோன்களில் 14 சதவீதம் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. ஃபாக்ஸ்கான் நிறுவனம் கர்நாடக மாநிலத்திலும் தமிழ்நாட்டிலும் புதிய தொழிற்சாலை களுக்காக முதலீடுகளைச் செய்திருக்கிறது.

2024 மார்ச் மாதத்தில் மொத்த வாராக் கடன் விகிதம் 2.8 சதவீதமாகக் குறைந்தது. 12 ஆண்டுகளில் இது மிகக் குறைந்த அளவாகும்.

இந்தியாவின் சேவைகள் ஏற்றுமதி 2024-ஆம் நிதியாண்டில் 341.1 பில்லியன் அமெரிக்க டாலர் என்ற புதிய உச்சத்தை எட்டியது.

2024 மார்ச் மாத நிலவரப்படி அந்நிய செலாவணி கையிருப்பு 11 மாத திட்டமிடப்பட்ட இறக்குமதிகளை ஈடுகட்டப் போதுமானதாக இருந்தது.

2013-ஆம் ஆண்டில் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து, நேரடி பணப் பரிமாற்றம் மூலம் ரூ.36.9 லட்சம் கோடி வங்கிக் கணக்குகளுக்கு செலுத்தப்பட்டுள்ளது.

அயலக இந்தியர்கள் இந்தியாவுக்கு அனுப்பும் பணம் 2024-ஆம் ஆண்டில் 3.7 சதவீதம் அதிகரித்து 124 பில்லியன் டாலராகவும், 2025-ஆம் ஆண்டில் 4 சதவீதம் அதிகரித்து 129 பில்லியன் டாலராகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2017-18-ஆம் ஆண்டில் 23.3 சதவீதமாக இருந்த பெண் தொழிலாளர் பங்கேற்பு விகிதம், 2022-23-ஆம் ஆண்டில் 37 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதற்கு கிராமப்புற பெண்களின் பங்கேற்பு அதிகரித்து வருவதே முக்கிய காரணமாகும்.

வேலைவாய்ப்பு

இந்திய பொருளாதாரம் வளர்ச்சி யடைய 2030-ஆம் ஆண்டு வரை பண்ணை சாரா துறையில் ஆண்டுக்கு கிட்டத்தட்ட 78.5 லட்சம் வேலைகளை உருவாக்க வேண்டியது அவசியமாகும்.

5 ஆண்டுகளில் 60 லட்சம் வேலைவாய்ப்பு களை உருவாக்குவதற்கான, உற்பத்தி யுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டம், மித்ரா ஜவுளித் திட்டம் (20 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்குதல்), முத்ரா திட்டம் போன்ற தற்போதுள்ள திட்டங்களின் அமலாக்கத்தை அதிகரிக்கும் போது, வேலைவாய்ப்பு உயர வாய்ப்புகள் உள்ளன.

ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவின் விரைவான வளர்ச்சியால், அடுத்த 10 ஆண்டுகளில் பிபிஓ துறையில் வேலைவாய்ப்பு கணிசமாகக் குறையும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், அடுத்த தசாப்தத்தில், செயற்கை நுண்ணறிவின் படிப்படியான பரவல் உற்பத்தித் திறனை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செயற்கை நுண்ணறிவு இயக்கத்துக்காக 2024-ஆம் ஆண்டில் ரூ.10,300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது செயற்கை நுண்ணறிவு அமைப்பை வலுப்படுத்துவதற்கான குறிப்பிடத்தக்க நடவடிக்கையாகும்.

இந்தியாவின் பெரு வணிகத் துறையின் லாபம் 2024 மற்றும் 2023 நிதியாண்டுக்கு இடையில் நான்கு மடங்காக அதிகரித் துள்ளது. மூலதனத்தைப் பயன்படுத்து வதற்கும் தொழிலாளர்களைப் பயன்படுத்துவதற்கும் இடையில் சரியான சமநிலையை ஏற்படுத்த வணிக நிறுவனங்களுக்கு ஒரு கடமை உள்ளது.

gk010824
இதையும் படியுங்கள்
Subscribe