- நாடாளுமன்றத்தில் 2019-20-ஆம் நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதி மற்றும் நிறுவனங்கள் விவகாரத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பொருளாதார ஆய்வறிக்கையின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:
- வளத்தை உருவாக்குதல்: கணிக்க முடியாத சந்தை தன்மைக்கு உரிமை அளிப்பது பொருளாதார வரலாறு அடிப்படையில் நான்கில் மூன்று பங்கு காலத்துக்கு சர்வதேச பொருளாதார சக்தியாக இந்தியா ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
- பொருளாதாரத்தில் விலையின் பங்களிப்பை கௌடில்யரின் அர்த்தசாஸ் திரம் விளக்குகிறது.
- வரலாற்றுப்பூர்வமாக, சந்தையின் கணிக்க முடியாத தன்மையை இந்திய பொருளாதாரம் நம்பியுள்ளது. இது, நம்பகத்தன்மையின் ஆதரவுடன் உள்ளது.
- சந்தையில் கணிக்க முடியாத தன்மை என்பது, பொருளாதார பரிவர்த்தனைகளில் வெளிப்படைத்தன்மையை வெளிப்படுத்துகிறது.
- நம்பகத்தன்மை என்பது நெறிமுறைகள் மற்றும் தத்துவரீதியான பரிமாணத் திலானது.
- தாராளமயமாக்கலுக்குப் பிறகு, இந்தியப் பொருளாதாரத்துக்கு ஆதரவு அளிக்கும் பொருளாதார மாதிரியின் அனைத்து காரணிகளும் நமது பாரம்பரிய சிந்தனைகளை வலியுறுத்துகிறது.
- சந்தையின் கணிக்க முடியாத அம்சங்கள் மூலம், அளவில்லா பலன்கள் கிடைத் துள்ளதை ஆய்வறிக்கை விளக்குகிறது.
- தாராளமயமாக்கலுக்குப் பிறகு, இந்தியா வின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் தனிநபரின் பொருளாதாரம் ஆகியவற்றின் குறிப்பிடத்தகுந்த உயர்வு என்பது, சொத்துக்களை உருவாக்குதலுடன் இணைந்துள்ளது.
- மற்ற துறைகளைவிட, தாராளமயமாக்கப் பட்ட துறைகளில் குறிப்பிடத்தகுந்த அளவு வேகமான வளர்ச்சி இருப்பதை ஆய்வறிக்கை வெளிப்படுத்துகிறது.
- நம்பகத்தன்மைக்கு கணிக்க முடியாத அம்சங்கள் ஆதரவு அளிக்க வேண்டியது அவசியம். இதனை 2011-13 காலகட்டத்தில் இருந்த நிதித்துறை செயல்பாடுகள் வெளிப்படுத்துகிறது.
- 5 லட்சம் கோடி அமெரிக்க டாலர் அளவுக் கான பொருளாதாரமாக மாற வேண்டும் என்ற இந்தியாவின் விருப்பத்தை நிறைவேற்றுவது என்பது கீழ்க்காணும் அம்சங்களை சார்ந்தது என்று ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது:
- கணிக்க முடியாத சந்தை தன்மையை வலுப்படுத்துதல்
- நம்பகத்தன்மையுடன் இதற்கு ஆதரவு அளித்தல்
- தொழில் துறைக்கு ஆதரவான கொள்கைகளை ஊக்குவித்து, கணிக்க முடியாத சந்தையை வலுப்படுத்துதல். இதற்காக:
- புதிதாக வருபவர்களுக்கு சமமான வாய்ப்புகளை அளித்தல்
- நேர்மையான போட்டி மற்றும் தொழில் செய்வதை எளிதாக்குவதற்கு வழிவகை செய்தல்
- சந்தையின் மதிப்பை குறைக்கும் தேவையில்லாத கொள்கைகளை அரசின் தலையீடு மூலமாக நீக்குதல்
- வர்த்தகம் மூலம் வேலைவாய்ப்பை உருவாக்குதல்
- வங்கித்துறையை சிறப்பான முறையில் மேம்படுத்துதல்
- நம்பிக்கை என்பது பொது சொத்து என்ற யோசனையை அறிமுகப்படுத்துதல், இது சிறந்த பயன்பாட்டின் மூலம், வலுப்படும்.
- தரவுகள் மற்றும் தொழில்நுட்பத் தைப் பயன்படுத்தி, சிறப்பான செயலாக்கத்தையும், வெளிப்படைத் தன்மையை அதிகரிக்கும் வகையிலும் கொள்கைகள் இருக்க வேண்டும் என்று ஆய்வறிக்கை பரிந்துரை செய்கிறது.
- அடிமட்ட அளவில் தொழில்முனைவோர் திறன் மற்றும் சொத்துக்கள் உருவாக்கம்
- உற்பத்தி வளர்ச்சி மற்றும் சொத்துக் கள் உருவாக்கத்தை ஊக்குவிக்கும் உத்தியாக தொழில்முனைவோர் திறன் திகழ்கிறது.
- உலக வங்கியின் மதிப்பீட்டின்படி, புதிதாக உருவாக்கப்பட்ட நிறுவனங்களின் எண்ணிக்கையில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.
- இந்தியாவில் புதிய நிறுவனங்கள் தொடக்கம் என்பது 2014-ஆம் ஆண்டு முதல் பெருமளவில் உயர்ந்துள்ளது.
- 2014-18 காலகட்டத்தில் அமைப்பு சார்ந்த புதிய

- 2014-18 காலகட்டத்தில் அமைப்பு சார்ந்த புதிய நிறுவனங்களின் ஆண்டு வளர்ச்சி விகிதம் என்பது 12.2%-ஆக உள்ளது. இது 2006-2014 காலகட்டத்தில் 3.8%-ஆக இருந்தது.
- 2018-ஆம் ஆண்டில் 1.24 லட்சம் புதிய நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன. கடந்த 2014-ஆம் ஆண்டில் 70,000-மாக இருந்த நிலையில், 80% வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
- தொழில்முனைவோர் செயல்பாடுகளை ஊக்குவிக்கும் அம்சங்கள் குறித்து நிர்வாக கட்டமைப்பின் அடிமட்ட அளவில் ஆய்வறிக்கை ஆய்வுசெய் துள்ளது. இந்தியாவில் உள்ள 500-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது புதிய நிறுவனங்கள் உருவாக்கம் என்பது உற்பத்தி, கட்டமைப்பு அல்லது வேளாண் துறைகளைவிட, சேவைகள் துறையில் குறிப்பிடத்தகுந்த அளவு அதிகமாக உள்ளது.
- அடிமட்ட அளவில் தொழில்முனைவோர் திறன் ஏற்பட்டிருப்பதற்கு அவசியத் தேவை மட்டும் காரணமில்லை என்று ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது.
- மாவட்ட அளவில் புதிய நிறுவனங்களின் பதிவு 10% அதிகரித்திருப்பதன் மூலம், மாவட்ட ஒட்டுமொத்த உற்பத்தியை 1.8% அளவுக்கு அதிகரித்துள்ளது.
- மாவட்ட அளவில் தொழில்முனைவோர் திறன் அதிகரிப்பதன் மூலம், அடிமட்ட அளவில் சொத்துக்களை உருவாக்குவதில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
- இந்தியாவில் புதிய நிறுவனங்கள் உருவாக்கம் என்பது பலதரப்பட்ட மற்றும் மாவட்டம் முழுவதிலும் இடம்பெற்றிருப்பதுடன், பல்வேறு துறைகளிலும் தொடங்கப்பட்டுள்ளன.
- ஒரு மாவட்டத்தில் உள்ள கல்வியறிவு மற்றும் கல்வி ஆகியவை உள்ளூர் தொழில்முனைவோர் திறனை குறிப்பிடத் தகுந்த அளவுக்கு ஊக்குவிக்கிறது:
- 70%-க்கும் அதிகமான கல்வியறிவு இருக்கும்போது, அது சிறப்பான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
- குறைவான கல்வியறிவு கொண்ட இந்தியாவின் கிழக்குப் பகுதியில் (2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, 59.6% கல்வியறிவு) புதிய நிறுவனங்கள் உருவாக்கம் என்பது குறைவாக உள்ளது.
- மாவட்ட அளவில் உள்ள கட்டமைப்பின் தரம், புதிய நிறுவனங்களை உருவாக்கு வதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
- தொழில் செய்வதை எளிதாக்குதல் மற்றும் எளிதான தொழிலாளர் விதிமுறைகள் ஆகியவை புதிய நிறுவனங் களை உருவாக்குவதற்கு வழிவகை செய்கிறது, குறிப்பாக உற்பத்தி துறையில் நிறுவனங்களை உருவாக்க வழிவகை செய்கிறது.
- எளிதாக தொழில் செய்வதை ஊக்குவித்தல் மற்றும் ஏற்கத்தக்க வகையிலான தொழிலாளர் சட்டங்களை அமல்படுத்துவது ஆகியவற்றின் மூலம், மாவட்ட அளவில் அதிக வேலைவாய்ப்பு களை உருவாக்க முடியும்.
- உணவுப் பொருளாதாரம் இந்தியாவில் ஒரு தட்டு உணவுக்கான பொருளாதாரம் இந்தியா முழுவதும் ஒரு தட்டு உணவுக்காக சாதாரண மனிதன் செலுத்தும் தொகையை மதிப்பீடு செய்வதற்கான முயற்சி.
- 2015-16 முதல் உணவுப் பொருட்களின் விலையில் ஏற்பட்ட மாற்றம்.
- இந்தியா முழுமைக்கும் 2015-16 முதல் சைவ உணவுப் பொருட்களின் விலை குறிப்பிடத்தகுந்த அளவு குறைந்துள்ளது; ஆனால், 2019-20 காலகட்டத்தில் விலை உயர்ந்துள்ளது.
- விலை குறைந்ததால், சைவ உணவு சாப்பிடும் ஒவ்வொரு குடும்பத்தினரும், சராசரியாக ஆண்டுதோறும் சுமார் ரூ.11,000ஐ சேமித்துள்ளனர்.
- அதே காலகட்டத்தில், அசைவ உணவு சாப்பிடுவோர் சராசரியாக ஆண்டுக்கு சுமார் ரூ.12,000-ஐ சேமித்துள்ளனர்.
- சைவ உணவுப் பொருட்கள் கிடைக்கும் திறன் 29% அதிகரித்துள்ளது.
- அசைவ உணவுப் பொருட்கள் கிடைக்கும் திறன் 18% அதிகரித்துள்ளது.
- 2019-20-இல் இந்தியப் பொருளாதாரத் தின் செயல்பாடு
- 2019-20-ஆம் நிதியாண்டின் முதலாவது பாதியில் இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 4.8%-ஆக இருந்தது. சர்வதேச அளவிலான உற்பத்தி, வர்த்தகம், தேவை ஆகியவை குறைந்தபோதும் இந்தியா வளர்ச்சியைப் பெற்றுள்ளது.
- உண்மையான நுகர்வு வளர்ச்சி, 2019-20-ன் இரண்டாவது காலாண்டில் மீட்டெடுக்கப்பட்டது. அரசின் முயற்சியால் இது ஊக்குவிக்கப்பட்டது.
- 2018-19-ஆம் நிதியாண்டின் இரண்டா வது பாதி காலத்தைவிட, 2019-20-ஆம் நிதியாண்டின் முதல் பாதியில் வேளாண்மை மற்றும் அதுதொடர்பான நடவடிக்கைகள், பொது நிர்வாகம், பாதுகாப்பு மற்றும் பிற சேவைகளின் வளர்ச்சி அதிகமாக இருந்தது.
- இந்தியாவின் மற்ற நாடுகளுடனான பொருளாதாரம் 2019-20-ஆம் நிதியாண்டின் முதல் பாதியில் மேலும் நிலைத்தன்மையைப் பெற்றது.
- 2018-19-ஆம் நிதியாண்டில் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.1%-ஆக இருந்த நடப்பு கணக்கு பற்றாக்குறை, 2019-20-ஆம் நிதியாண்டின் முதல் பாதியில் 1.5%-ஆக குறைந்தது.
- துறைவாரியான முதலீட்டு வருகை மீண்டது.
- அந்நிய செலாவணி கையிருப்பு அதிகரித்தது.
- கச்சா எண்ணெய் விலை குறைந்ததன் மூலம், 2019-20-ஆம் நிதியாண்டின் முதல் பாதியில் ஏற்றுமதியைவிட இறக்குமதி அளவு குறிப்பிடத்தகுந்த அளவு குறைந்தது.
- தற்காலிக உயர்வு காரணமாக, உணவுப் பணவீக்கம், 2019-20-ஆம் நிதியாண்டின் முதல் பாதியில் 3.3%-லிருந்து டிசம்பர் மாதத்தில் 7.35%-ஆக உயர்ந்தது.
- நுகர்வோர் விலை குறியீட்டெண் மற்றும் ஒட்டுமொத்த விலை குறையீட்டெண் ஆகியவை டிசம்பர் 2019-20-இல் உயர்ந்தன. தேவை அதிகரித்ததன் காரணமாக, இவை உயர்ந்துள்ளன.
- வளர்ச்சி சுழற்சி குறைந்துள்ள நிலையில், ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி குறைந்துள்ளதை புரிந்து கொள்ள முடியும்.
- நிதித்துறை உண்மையான துறையாக செயல்பட்டு வருகிறது (முதலீடு- வளர்ச்சி நுகர்வு) முதலீடு, நுகர்வு, ஏற்றுமதி ஆகியவற்றை அதிகரிக்கச் செய்ய 2019-20-ஆம் நிதியாண்டில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன:
- கடன்மீட்பு மற்றும் திவாலாதல் (ஒஇஈ) விதிகளின் கீழ், கடனை மீட்பதற்கான நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்பட்டன.
- கடன் கிடைப்பது எளிதானது.
- குறிப்பாக, நெருக்கடிக்கு உள்ளான ரியல் எஸ்டேட் மற்றும் வங்கியல்லாத நிதி நிறுவனங்கள் துறைக்கு எளிதில் கடன் கிடைத்தது.
- தேசிய கட்டமைப்புக்கான நிதி ஒதுக்கீடு 2019-2025 அறிவிக்கப்பட்டது.
- 2019-20-ஆம் நிதியாண்டின் இரண்டாவது பாதியில் ஒட்டுமொத்த உற்பத்தி வளர்ச்சி அதிகரிக்கும் என ஆய்வறிக்கை மதிப்பிடுகிறது.
- சிஎஸ்ஏ-வின் முதலாவது முன்கூட்டிய மதிப்பீட்டின்படி, 2019-20-இல் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 5%-ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
- 2020-21-இல் பொருளாதாரம் வலுவான நிலையில் மீண்டெழுவதற்காக சீர்திருத்த நடவடிக்கைகள் அதிவேகமாக செயல்படுத்தப்படும்.
நிதி முன்னேற்றங்கள்
- 2019-20-ஆம் நிதியாண்டின் முதல் 8 மாதங்களில் வருவாய் வரவு, கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தைவிட அதிக வளர்ச்சியைப் பெற்றுள்ளது. இதற்கு வரி அல்லாத வருவாய் அதிகரிப்பு காரணம்.
- ஜிஎஸ்டி மாதாந்திர வசூல் தொகை 2019-20-ஆம் நிதியாண்டின், 5 மாதங்களில் தலா ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் மேலாக உள்ளது (டிசம்பர் 2019 வரை) நடப்பு நிதியாண்டில் வரிவிதிப்பு முறையில் பல்வேறு கட்டமைப்பு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன:
- நிறுவன வரி விகிதங்களில் மாற்றம்
- ஜிஎஸ்டி-யை எளிதாக செயல்படுத்து வதற்கான வழிமுறைகள்.
- நிதி பொறுப்பு மற்றும் நிதிநிலை நிர்வாக சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வரம்புக்குள் மாநிலங்களின் நிதிப் பற்றாக்குறை உள்ளது.
- மத்திய, மாநில அரசுகள் இணைந்து நிதி ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதை பொருளாதார ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது.
வெளிநாட்டுத் துறை
- இந்தியாவின் இர்ட நிலைமை 2019 மார்ச் இறுதியில் அன்னியச் செலாவணி கையிருப்பு 412.9 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்ற நிலையில் இருந்து,
- 2019 செப்டம்பர் இறுதியில் 433.7 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்ற நிலைக்கு உயர்ந்துள்ளது.
- (ஈஆஉ) ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் நடப்பு கணக்கு பற்றாக்குறை 2018-19-இல் 2.1 சதவீதத்தில் இருந்து, 2019-20 முதலாவது அரையாண்டில் 1.5 சதவீதமாகக் குறைந்துள்ளது.
- 2020 ஜனவரி 10-ஆம் தேதி நிலவரப்படி அன்னியச் செலாவணி கையிருப்பு 461.2 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது.
உலக வர்த்தகம்
2019-இல் உலகளவில் 2.9 சதவீத வளர்ச்சி காண்பது என உத்தேசிக்கப்பட்ட நிலையில், 2017-இல் அது உச்சபட்சமாக 5.7 சதவீதத்தை எட்டியதற்குப் பிறகு, உலக வர்த்தகம் 1.0 சதவீதம் வளர்ச்சி அடையும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
- இருந்தபோதிலும் உலக பொருளாதார செயல்பாடுகள் மீட்சி பெறும் போது 2020-இல் இது 2.9 சதவீதம் அளவுக்கு மீளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- இந்தியாவின் பொருள் வணிக வர்த்தகம் 2009-14 முதல் 2014-19 வரையில் மேம்பட்டிருக்கிறது. 2016-17-இல் கச்சா எண்ணெய் விலை 50 சதவீதத்துக்கும் மேல் குறைந்த பின்னணியில், இதன் பிற்பாதி காலகட்டத்தில் வணிகம் உயர்ந்துள்ளது.
- அமெரிக்கா, சீனா, ஐக்கிய அமீரகம், சவுதி அரேபியா, ஹாங்காங் ஆகிய நாடுகள் இந்தியாவின் முதல் ஐந்து வர்த்தக பங்காளர் நாடுகளாக தொடர்கின்றன.
ஏற்றுமதிகள்
- அதிகம் ஏற்றுமதியாகும் பொருள்கள்: பெட்ரோலியப் பொருட்கள், விலைமதிப்புமிக்க கற்கள், ரசாயன மருந்து கூட்டு பொருள்கள் & உயிரியல் சார்ந்த பொருள்கள், தங்கம் மற்றும் இதர விலைமதிப்புள்ள உலோகங்கள்.
- 2019-20 (ஏப்ரல் - நவம்பர்) -ல் பெருமளவு ஏற்றுமதி செய்யப்பட்ட நாடுகள்:
- அமெரிக்கா, அதைத் தொடர்ந்து ஐக்கிய அமீரகம், சீனா மற்றும் ஹாங்காங்.
- பொருள் வணிக ஏற்றுமதி, ஜிடிபியுடன் ஒப்பிடுகையில் குறைந்துள்ளது. இது இர்ட நிலையில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
- உலக அளவில் வர்த்தகம் குறைந்ததால், 2018-19 முதல் 2019-20-இல் முதல் அரையாண்டு காலம் வரையில் ஏற்றுமதிக்கும் ஜிடிபிக்குமான விகிதாச்சாரம் குறையும் அளவுக்கு தாக்கம் ஏற்பட்டது.
- பெட்ரோலியம் அல்லாத பொருள்களின் ஏற்றுமதி வளர்ச்சி 2009-14-இல் இருந்து 2014-19 வரையில் குறிப்பிடத்தக்க அளவுக்குக் குறைந்துள்ளது.
- அதிகம் இறக்குமதி செய்யப்பட்ட பொருள்கள்: கச்சா எண்ணெய், தங்கம், பெட்ரோலியப் பொருள்கள், நிலக்கரி, கற்கரி & எரிபொருள் கட்டிகள்.
- சீனாவில் இருந்து அதிகபட்ச அளவுக்கு பொருள்களை இந்தியா இறக்குமதி செய்கிறது. அதற்கடுத்தபடியாக அமெரிக்கா, ஐக்கிய அமீரகம் மற்றும் சவூதி அரேபியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.
- ஜிடிபியுடன் ஒப்பிடும் போது வணிகப் பொருள் இறக்குமதி குறைந்துள்ளது. இர்ட-இல் நேர்மறை தாக்கத்தை இது ஏற்படுத்தியுள்ளது.
- இறக்குமதி தொகுப்பில் கச்சா எண்ணெய் அளவு அதிகமாக இருப்பது, கச்சா எண்ணெயின் விலைகளுடன் சேர்ந்து இந்தியாவின் மொத்த இறக்குமதியுடன் தொடர்பை ஏற்படுத்துவதாக உள்ளது. கச்சா எண்ணெய் விலை உயரும்போது, மொத்த இறக்குமதியில் கச்சா எண்ணெ யின் மதிப்பும் உயர்கிறது. அதன் மூலம் ஜிடிபி ஒப்பீட்டில் இறக்குமதி அளவு உயர்கிறது.
- கணிசமான அளவு தங்கம் இறக்குமதி செய்யப்படுவதாலும், தங்கத்தின் விலை களுக்கு ஏற்ப இந்தியாவின் ஒட்டுமொத்த இறக்குமதி அளவு மாறுபடுகிறது. இருந்தபோதிலும், 2018-19 மற்றும் 2019-20ன் முதல் அரையாண்டு காலத்தில் ஒட்டுமொத்த இறக்குமதி யில், தங்கத்தின் இறக்குமதி அளவு ஒரே மாதிரியாக நீடித்தது. இறக்குமதி வரி உயர்வு காரணமாக இறக்குமதி குறைந்து விலைகள் உயர்ந்த போதிலும் அந்த அளவு அதே நிலையில் நீடித்தது.
- பெட்ரோலியம் அல்லாத, தங்கம் அல்லாத பொருட்களின் இறக்குமதிகள் ஜிடிபி வளர்ச்சியுடன் நேர்மறையாக தொடர்பு கொண்டுள்ளன.
- பெட்ரோலியம் அல்லாத, கச்சா எண்ணெய் அல்லாத பொருள்களின் இறக்குமதி, ஜிடிபி வளர்ச்சி அதிகரித்த 2009-14 முதல் 2014-19 வரையிலான காலத்தில் ஜிடிபி ஒப்பீட்டளவில் குறைந்துள்ளது.
- முதலீட்டு அளவு குறைந்து, பெட்ரோலியம் அல்லாத, தங்கம் அல்லாத பொருள் களின் இறக்குமதி குறைந்து, நுகர்வு அதிகரிப்பால் ஏற்பட்ட வளர்ச்சியாக இது இருக்கலாம்.
- தொடர்ச்சியாக முதலீட்டு அளவு குறைந்திருப்பதால் ஜிடிபி வளர்ச்சி குறைந்து, நுகர்வு குறைந்து, முதலீட்டு கண்ணோட்டம் பாதித்து, மேற்கொண்டு ஜிடிபி வளர்ச்சியைக் குறைத்துள்ளது. அதனுடன் சேர்ந்து பெட்ரோலியம் அல்லாத, தங்கம் அல்லாத இறக்குமதிகள் ஜிடிபி ஒப்பீட்டில் 2018-19 முதல் 2019-20 முதல் அரையாண்டு காலம் வரையிலான காலத்தில் குறைந்துள்ளது.
- வர்த்தக ஊக்குவிப்பு விஷயத்தில், 2016-இல் 143-வது இடத்தில் இருந்த இந்தியா, 2019-இல் 68-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. தொழில் செய்வதற்கு உகந்த நாடு என உலக வங்கி கண்காணிப்பில் தயாரிக்கப்படும் ""எல்லைகளுக்கு அப்பால் வர்த்தகம்'' என்ற குறியீட்டில் இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
__________
பொருளாதார ஆய்வறிக்கை விளக்கம்
பொருளாதார ஆய்வறிக்கை என்பது, இந்தியாவின் நிதித்துறையில் உள்ள தலைமைப் பொருளாதார ஆலோசகரின் தலைமையிலான குழுவால் தயாரிக்கப்படும் ஆண்டறிக்கையாகும்.
எப்போது வெளியாகும்?
நடப்பு நிதியாண்டின் முடிவு மார்ச் மாதம் வருகிறது என்றால், பிப்ரவரி மாதம் அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். இதற்கிடையில், பட்ஜெட்டுக்கு ஒருநாள் முன்பாக நாடாளுமன்றத்தில் நடப்பு ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்படும்.
ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது?
பட்ஜெட்டுக்கு முந்தைய கவனம் பெரும்பாலும் ஃபிஸ்கல் டெஃபிசிட் (நிதிப் பற்றாக்குறை) மீது இருக்கும் என்பதால், எல்லா பட்ஜெட் களுக்கும் முன்பு பொருளாதார ஆய்வறிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. மேலும் அரசின் கொள்கை முடிவுகள் பொருளாதாரத்தின் மீது ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் உள்ளிட்ட தகவல்களையும் விளக்கும் விதமாக பொருளாதார ஆய்வறிக்கை தயாரிக்கப்படுவதால் பொருளாதார ஆய்வறிக்கை மீது அரசியல் ரீதியாக அதிகமான எதிர்பார்ப்பு ஏற்படுகிறது
பொருளாதார ஆய்வறிக்கையில் இடம்பெறும் விவரங்கள்?
பொருளாதார ஆய்வறிக்கை மூன்று பகுதிகளைக் கொண்டது. முதல் பகுதி இந்திய பொருளாதாரத்தின் நடப்பு நிலை மீதான தலைமைப் பொருளாதார ஆலோசகரின் பார்வை இடம்பெறும். இதன் மூலம், அந்தந்த பொருளாதாரச் சிக்கல்கள் ஏற்பட்ட நேரங்களில் அரசின் நிலைப்பாடு குறித்த புரிதலையும் பெற முடியும். இரண்டாவது பகுதியில் தரவுகள் மற்றும் தகவகள் இடம்பெறும். மத்திய அரசின் நிதித்துறையின் கீழ் இயங்கும் பல்வேறு பிரிவுகள் மற்றும் துறைகள் மூலம் பெறப்பட்ட தகவல்கள் மற்றும் தரவுகள் எண்களாகவும், விளக்கப்படங்களாகவும் இந்த பகுதியில் இடம்பெறும். மூன்றாவது பகுதியில்தான் முக்கியமான விவரங்களாகப் பார்க்கப்படுகிற, தேசத்தின் வருவாய், உற்பத்தி, வேலைவாய்ப்பு, பண வீக்கம், வணிகம் மற்றும் ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகம் உள்ளிட்ட பெரிய விவகாரங்களின் புள்ளியியல் விவரங்கள் பொருளாதாரக் கண்ணோட்டத்தில் இடம்பெறும்.