மந்தமான வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பின்மை

இந்தாண்டு பொருளாதார ஆய்வறிக்கை யில் வேலை வாய்ப்புக்கென்று தனி பகுதி இல்லை. வேலைவாய்ப்பு மற்றும் திறன் வளர்ச்சி என்று இரண்டு பக்கத்துக்கு மட்டுமே ஒரு அறிக்கை உள்ளது. பொருளாதார ஆய்வறிக்கையில் எத்தனை வேலை வாய்ப்புகள் புதிதாக உருவாக்கப்பட்டன என்பதற்கான எந்த தரவுகளும் இல்லை. திறன் வளர்ச்சி பயிற்சியளிக்கப்பட்ட 4,27,470 பேர்களுக்கு வேலைவாய்ப்பு என்ற தகவல் மட்டுமே உள்ளது. 2017-19-ஆம் ஆண்டில் எத்தனை வேலை வாய்ப்புகள் புதிதாக உருவாக்கப்பட்டன என்ற விபரங்கள் இல்லை. மிக மிக முக்கியமான வேலைவாய்ப்பு குறித்து எந்த தகவல்களையும் அளிக்காமல் பொருளாதார ஆய்வறிக்கை மவுனமாக இருப்பதே, இந்தியா எத்தகைய மந்தமான, வேலைவாய்ப்பை உருவாக்காத வளர்ச்சியை சந்தித்து வருகிறது என்பதை புரிந்து கொள்ளலாம்.

இரண்டாவது அளவீடு ஜிடிபி வளர்ச்சி

ஜிடிபி வளர்ச்சி 2015-16-ஆம் ஆண்டில் 8 சதவிகிதமாக இருந்தது 2016-17 ஆண்டில் 7.1 சதவிகிதமாக குறைந்துள்ளது என்பதை பொருளாதார ஆய்வறிக்கை ஒப்புக் கொள்கிறது. 2016-17-ஆம் ஆண்டின் முதல் பாதியில் வளர்ச்சி விகிதம் 7.7 சதவிகிதம் என்றும், இரண்டாவது பாதியில் 6.5 சதவிகிதம் என்பதையும் ஆய்வறிக்கை ஒப்புக் கொள்கிறது. பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் பொருளாதார வளர்ச்சி சரியும் என எதிர்பார்த்தது போலவே, வளர்ச்சி விகிதத்தில் சென்று கொண்டிருந்த பொருளாதார வளர்ச்சி 8 சதவிகிதத் திலிருந்து 6.5 சதவிகிதமாக வீழ்ச்சி அடைந்துள்ளது. ஒட்டு மொத்த மதிப்பு கூட்டுதலின் வளர்ச்சி இதை விட மோசமாக உள்ளது. 2016-17-ன் கடைசி காலாண்டில் இந்த வளர்ச்சி 5.6 சதவிகிதம் மட்டுமே. பொருளாதார ஆய்வறிக்கை, இந்த வளர்ச்சி விகிதத்தை (6.5 சதவிகிதம்) தக்கவைக்க வேண்டுமென்றால், தனியார் முதலீடு, ஏற்றுமதி மற்றும், கடன் வளர்ச்சிக்கு ஏற்ற வகையில் கணக்கு வழக்குகளை வைத்திருப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கூறுகிறது.

Advertisment

மூன்றாவது அளவீடு முதலீடு

ஒட்டு மொத்த மூலதன உருவாக்கம் சரிவடைந்துள்ளதை விளக்குகிறது. ஒட்டுமொத்த மூலதன உருவாக்கம் 2015-16 இரண்டாவது காலாண்டு முதல் சரிவையே சந்தித்து வருகிறது. தனியார் மூலதனமும் 2015-16 நான்காவது காலாண்டு முதல் சரிவையே சந்தித்து வருகிறது. இது 2016-17 ஆண்டிலும் தொடர்ந்தது. அடுத்து என்ன நடக்கும் என்ற மதிப்பீடும் நம்பிக்கை அளிக்கும் வகையில் இல்லை. “நிதிநிலை அறிக்கையில் உள்ள தகவலின்படி, அரசின் முதலீடு செலவுகள், 2017-18-இல் ஜிடிபியோடு ஒப்பிடுகையில், குறையும் என்று பொருளாதார ஆய்வறிக்கை கூறுகிறது.

ff

Advertisment

நான்காவது அளவீடு கடன் வளர்ச்சி

பொருளாதார ஆய்வறிக்கையில் உள்ளதை அப்படியே பார்த்தால்போதும். கூடுதலாக எதுவும் சேர்க்க வேண்டி யதில்லை. 2003-08 -ஆம் ஆண்டு காலத்தில் கடன் வளர்ச்சி மிக அதிகமாக இருந்தது. ஒவ்வொரு ஆண்டும் 20 சதவிகிதத்துக்கு அதிகமாக வளர்ச்சி இருந்தது. உலக பொருளாதாரத்தில் ஏற்பட்ட மந்த நிலை காரணமாக, 2008-10 ஆண்டு காலத்தில், இந்த வளர்ச்சி 15 சதவிகிதமாக வீழ்ந்தது. பிப்ரவரி 2014 வரை இந்நிலை நீடித்தது. பின்னர் இறங்கு முகமே. 2016-17-இல் வங்கி கடன் விகிதம் சராசரியாக 7 சதவிகிதமாக இருந்தது. தற்போது மே 2017-இல் இந்த சதவிகிதம் வெறும் 4.1 சதவிகிதமே. உணவு அல்லாத கடன், விவசாயம், தொழில், சேவைத் துறை, தனி நபர் கடன் ஆகியவை, செப்டம்பர் 2016 முதல் தொடர்ந்து இறங்குமுகத்தையே சந்தித்து வருகிறது. இதில் மிக மோசமாக பாதிக்கப்பட்டது தொழில் துறையே. செப்டம்பர் 2016 முதல் சரிவையே சந்தித்து வருகிறது. தொழில் நிறுவனங்களுக்கான பொதுத்துறை வங்கிகளின் கடன் விகிதம் செப்டம்பர் 2016 முதல் வீழ்ந்துள்ளது. தனியார் வங்கிகள்தான் தொழில் நிறுவனங்களுக்கு கடன் அளித்து வருகின்றன.

ஐந்தாவது அளவீடு தொழில் உற்பத்தி

பொருளாதார ஆய்வறிக்கையின்படி, தொழில் துறை வளர்ச்சி 8.8 சதவிகிதத் திலிருந்து 2015-16-இல் 5.6 சதவிகிதமாக குறைந்துள்ளது. தொழில் உற்பத்தி குறியீடு குழப்பமான விபரங்களை அளிக்கிறது. 2004-05 ஆண்டை கணக்கில் எடுத்துக் கொண்டால், தொழில் உற்பத்தி குறியீடு 0.7 சதவிகிதத்திலிருந்து 1.9 சதவிகிதமாக 2016-17 முதல் காலாண்டில் உயர்ந்துள்ளது. ஆனால் 2011-12 ஆண்டை அடிப்படையாக கொண்ட புதிய கணகீட்டின்படி, வளர்ச்சி விகிதம் 2016-17 முதல் காலாண்டில் 7.8 சதவிகிதத்திலிருந்து கடைசி காலாண்டில் 2.9 சதவிகிதமாக வீழ்ச்சி யடைந்துள்ளது!. இந்த புதிய அளவீடு சரிவை சுட்டிக்காட்டுகிறது என்றாலும், பழைய கணக்கீட்டோடு ஒப்பிடுகையில் முன்னேற்றமே.

மத்திய ரிசர்வ் வங்கியின் கொள்கை

அறிக்கை ஏற்கனவே இருந்த பல்வேறு கருத்துக்களை உறுதிப்படுத்தியுள்ளது. ரிசர்வ் வங்கி அறிக்கையின்படி, 2017-18-ன் இரண்டாவது காலாண்டில், வளர்ச்சி குறைவாகவே இருக்கும் என்று மதிப்பிட்டுள்ளது. தொழில் உற்பத்தியும் குறைந்து, நுகர்வோர் பயன்பாட்டுப் பொருட்கள் மற்றும் மூலதன பொருட்களின் உற்பத்தி குறைவாகவே இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. புதிய முதலீடுகள் 2016-17-ன் முதல் காலாண்டில் கடந்த 12 வருடங்களில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. வங்கிகள் மற்றும் கார்ப்பரேஷன்களின் இரட்டை ஆண்டறிக்கைகளில் புதிய முதலீடுகள் குறைந்து, மூலதனங்கள் குறைவதற்கான சாத்தியக் கூறுகளே அதிகமாக உள்ளது. மாநிலங்களும் தங்களது மூலதன செலவுகளை குறைக்கும். இந்த பொருளாதார ஆய்வறிக்கை வேலைவாய்ப்பு மற்றும் கடன் வளர்ச்சி குறித்து எதுவும் கூறவில்லை. நாம் 70-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வேளையில் மகிழ்ச்சியில்லாமல் இருக்கிறோம்.

ஆட்டோமொபைல் உற்பத்தி சரிவு

இந்த ஆண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலப்பகுதியில் இந்தியா வின் வளர்ச்சி விகிதம் கடந்த ஏழு ஆண்டுகளில் இல்லாத வகையில் 5 சதவீதமாக வீழ்ச்சி கண்டுள்ளது. இந்தியாவின் பெரு நிறுவனமான ஆட்டோமொபைல் உற்பத்தித்துறை மற்றும் ரியல் எஸ்டேட் துறை ஆகியவை சரிவை சந்தித்துள்ளது. இதனால் பொருளாதாரம் வீழ்ச்சியை அடைந் துள்ளது.

வாடிக்கையாளர்களின் கடனுக்கான வட்டி விகிதத்தை வங்கிகள் குறைக்காததும் பொருளாதார வளர்ச்சியை பாதிக்க ஒரு காரணம். பொருளாதாரம் சரிவையடுத்து மத்திய அரசு பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை அறிவித்துள்ள போதும், அதன் தாக்கம் உடனடியாக எதிரொலிக்கவில்லை. வேலையின்மை மற்றும் வங்கிகளில் உள்ள நிர்வாக குளறுபடிகளை சீர்செய்ய வேண்டும். அத்துடன் வேளாண்துறையை மீள் கட்டியமைக்க வேண்டும். மேலும் தனியார் முதலீடுகளை ஈர்ப்பதை அதிகரிப்பதன் மூலமும் பொருளாதார சரிவில் இருந்து மீள முடியும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.

ஊட்டச்சத்து குறைபாடு

இந்தியாவில் 5 வயதுக்கு உட்பட்ட பாதி குழந்தைகளில் சுமார் 69% குழந்தைகள் ஊட்டச்சத்து குறைவால் உயிரிழப்பதாக யுனிசெப் அதிர்ச்சி அறிக்கை வெளி யிட்டுள்ளது. மேலும் இதுக் குறித்த புள்ளிவிவரங்களும் அறிக்கையில் விளக்கப்பட்டுள்ளன. விரிவான தேசிய ஊட்டசத்து கணக்கெடுப்பு சார்பில் இது தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வின் முடிவுகள் கடந்த மாதம் வெளியிடப்பட்டன. இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டபோது, 2016-18-ஆம் ஆண்டில் ஊட்டச்சத்து குறைபாடு தொடர்பான நோய்களின் பாதிப்பு, 2015-16-ஆம் ஆண்டின் தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பின் போது இருந்ததை விட குறைவாக இருந்தது, இது 38.3% குழந்தைகள் வளர்ச்சி குறைபாடு, 35.8% எடை குறைபாடு மற்றும் 21% உடல் மெலிந்ததால் பாதிக்கப்பட்டிருந்தனர். இப்போதைய ஆய்வறிக்கையின் படி இந்தியாவில் 5 வயதுக்குட்பட்ட 35% குழந்தைகள் வயதுக்கேற்ற வளர்ச்சி இல்லாமல் இருப்பதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. அத்துடன் 17% குழந்தைகள் வளர்ச்சிக்கேற்ற எடையின்றி இருப்ப தாகவும், 33% குழந்தைகள் வயதுக்கேற்ற எடையின்றி இருப்பதாகவும் கூறப் பட்டுள்ளது.

ff

இந்திய அளவில் உணவின்றி தவிக்கும் 6.4% குழந்தைகள் இருக்கும் நிலையில், குழந்தைகளுக்கு உணவளிக்கும் மாநிலங்களில் ஆந்திரப் பிரதேசம் முதலிடம் வகிக்கிறது. நாட்டிலேயே அங்குதான் குறைந்தபட்சமாக 1.3% குழந்தைகள் உணவு பற்றாக்குறையுடன் உள்ளனர். அது தவிர 5 வயதுக்கு கீழுள்ள ஒவ்வொரு 5 குழந்தைகளில் ஒன்றுக்கு வைட்டமின் ஏ பற்றாக்குறை உள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் ஒவ்வொரு 3 குழந்தைகளில் ஒன்றுக்கு வைட்டமின் பி12 பற்றாக்குறை யும், ஒவ்வொரு 5 குழந்தைகளில் 2 குழந்தைகளுக்கு ரத்த சோகையும் ஏற்படுகிறது.

42 சதவீத குழந்தைகளே போதிய அளவில் உணவை பெறுகின்றனர்.

21 சதவீத குழந்தைகள் மட்டுமே போதிய அளவிலான பல்வேறு உணவுப் பொருட்களை பெறுகின்றனர்.

5 வயதுக்கு கீழுள்ள ஐந்து குழந்தைகளில், ஒரு குழந்தைக்கு வைட்டமின் ஏ பற்றாக் குறை உள்ளது.

அதிகபட்சமாக சிக்கிம் மாநிலத்தில் 35.9% குழந்தைகள் போதிய உணவில்லாமல் இருக்கின்றனர் என ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஆந்திராவிற்கு அடுத்தபடி யாக மகாராஷ்டிர மாநிலத்தில் 2.2% குழந்தைகளும், குஜராத், தெலங்கானா மற்றும் கர்நாடகாவில் தலா 3.6% குழந்தைகளும் உணவுப் பற்றாக்குறையுடன் உள்ளனர்.

ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் அதை அளவிடுவதோடு தவிர, உலகளவில் செயல்படுத்தப்பட்ட மிகப்பெரிய நுண்ணூட்டச்சத்து கணக்கெடுப்பு, இந்த ஆய்வாகும். ஊட்டச்சத்து குறைபாட்டைக் குறைப்பதற்கான இந்தியாவின் முதன்மைத் திட்டமான தேசிய ஊட்டச்சத்து இயக்கமான போஷன் அபியான், ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் இரத்த சோகை ஆகியவற்றில் மட்டுமே கவனம் செலுத்துகிறது மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டைக் குறிப்பிடவில்லை.

இதற்கிடையில் உணவு குறியீடு பட்டியலில் கடந்த ஆண்டு உலக அளவில் இந்தியாவுக்கு பின்னர் 16 நாடுகள் இருந்த நிலையில், இந்த ஆண்டு இந்தியாவுக்கு பின்னால் 15 நாடுகள் மட்டுமே உள்ளன. இதில் இந்தியாவை சுற்றி உள்ள பாகிஸ்தான், இலங்கை, நேபாளம், மியான்மர், சீனா உள்ளிட்ட நாடுகள் இந்தியாவை விட முன்னிலை பெற்றுள்ளது.

பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயம்

பாரத் பெட்ரோலியம் கார்பரேசன் லிமிடெட் (அசாமின் நுமலிகரா சுத்தகரிப்பு நிலையத்தின் பங்குகள் தவிர்த்து), கார்கோ மோவர் கண்டெய்னெர் கார்பரேசன் ஆஃப் இந்தியா, ஷிப்பிங் கம்பெனி ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் ஆகிய மூன்று பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை தனியார்களுக்கு விற்பனை செய்வது தொடர்பாக முக்கிய அறிவிப்பை அண்மையில் நிதித்துறை அமைச்சர் வெளியிட்டார். இவை மட்டுமில்லாமல் டி.எச்.டி.சி நிறுவனத்தில் இருக்கும் 74.23% பங்குகள், நீப்கோவின் 100% பங்குகள் அனைத்தும் தனியார் மயமாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட்டினை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிக்கும் போது ரூ. 1,05,000 கோடி முதலீட்டினை திரும்ப பெறுதல் குறித்து அறிவித்தார். கடந்த நிதியாண்டில் (2018-2019) இந்த இலக்கு ரூ. 80,000 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த மூன்று நிறுவனங்களின் விற்பனையை மார்ச் மாதம் 31-ஆம் தேதி, 2020-ஆம் ஆண்டுக்குள் முடிப்பது என்பது அரசுக்கு சவாலான காரியமாக இருக்கும் என்று துறைசார் வல்லுநர்கள் அறிவிக்கின்றனர்.

பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன் லிமிடெட் நிறுவனத்தில் அரசு 53.29% பங்குகளை விற்பனை செய்ய உள்ளது. ஷிப்பிங் கார்ப்பரேசன் ஆஃப் இந்தியா நிறுவனத்தின் 63.75% பங்குகளை விற்பனை செய்ய உள்ளது. ஈஞசஈஞத நிறுவனத்தின் 54.8% பங்குகளில் 30.8% பங்குகளை விற்பனை செய்ய உள்ளது இந்நிறுவனம். ரயில்வே துறையில் ஈஞசஈஞத நிறுவனத்தின் ஏனைய 24% பங்குகளின் ஒத்துழைப்பு தேவைப்படுவதால் அந்த பங்குகளை அப்படியே வைத்திருக்க முடிவு செய்துள்ளது இந்திய அரசு. ஆனால் நிர்வாகம் முழுவதும் தனியார் நிறுவனத் திற்கு கொடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நுமலிகர் எண்ணெய் நிறுவனத்தின் பங்குகள் அனைத்தும் முறையே மற்றொரு அரசு நிறுவனத்திற்கு மாற்றப் படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்திடம் இருந்து அதனை பிரித்து வேறொரு அரசு நிறுவனத் துக்கு அளிக்கப்படும் என்று நிதியமைச்சர் அறிவித்தார்.

பொருளாதார அழுத்தத்தை சந்தித்து வரும் டெலிகாம் நிறுவனங்களுக்கு சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் ஸ்பெக்ட்ரம் கட்டணங்களை வசூலிக்கும் திட்டத்தை தற்போது தள்ளி வைத் துள்ளது மத்திய அரசு. ஆனால் ஸ்பெக்ட்ரம் ஏலத்திற்கு வரும் போது ஸ்பெக்ட்ரம் கட்டணங்கள் (வட்டியுடன்) கட்டப்பட வேண்டும் என்று அறிவித்துள்ளது. ஸ்பெக்ட்ரம் கட்டணங் களை தற்காலிகமாக ஒத்திவைக்க விரும்பும் நிறுவனங்கள் வங்கி உத்திரவாதத்தை சமர்பிக்க வேண்டும். இந்த நிலுவை தொகையை திருப்பி செலுத்த 2 ஆண்டுகள் வரை நிறுவனங் களுக்கு தளர்வு அளிக்க ஒப்புதல் அளித்துள்ளது மத்திய அரசு. இந்த பணத்தினை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தவணை முறையில் திருப்பி செலுத்தலாம்.

பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்வதன் மூலம், அரசாங்கம் மொத்தம் ரூ. 1 லட்சம் கோடியை திரட்டக்கூடும் என்று வல்லுநர்கள் அறிவிக்கின்றனர். இந்த நிதிகள் 2020 மார்ச் மாத இறுதிக்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.3% நிதி பற்றாக்குறையை சமாளிக்க உதவும். ஆயினும், இந்த நிதியாண்டுக்குள் இந்த பங்கு விற்பனையை செய்ய முடியுமா என்பதை அரசாங்கம் தெளிவுபடுத்த வில்லை.