* மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி 2018-ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை மக்களவையில் தாக்கல் செய்தார். அதன் விபரம்.
*இந்தியாவில் சுகாதார இழப்புக்கான மிகுந்த சவாலான ஆபத்தாக குழந்தை மற்றும் தாய் ஊட்டச்சத்து குறைபாடு தொடர்வதாக ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது. காற்று மாசு, உணவு அபாயங்கள், உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு உள்ளிட்டவை இதர முக்கிய ஆபத்துக்களாகும்.
*2020-க்குள் மாநில அரசுகளின் பட்ஜெட்டில் மாநில சுகாதாரத் துறை செலவினங்களுக்கு 8 சதவீதத்திற்கும் கூடுதலாக அதிகரிக்க தேசிய சுகாதாரக் கொள்கை 2017 பரிந்துரைத்திருப்பதை இந்த ஆய்வறிக்கை குறிப்பிட்டுள்ளது.
*1990 முதல் 2015 வரையிலான காலக்கட்டத்தில்பிறப்பின் போது ஆயுள் எதிர்பார்ப்பு 10 ஆண்டுகள் அதிகரித்துள்ளதால் இந்தியாவில் தனிநபர் சுகாதார நிலையில் மேம்பாடு குறிப்பிடத்தக்க அளவு இருப்பதாக இந்த ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது.
*தேசிய சுகாதாரக் கொள்கை 2017 சுகாதார விநியோக முறைகளை வலுப்படுத்தவும் முழுமையான சுகாதார உள்ளடக்கத்தினை எட்டவும் உதவும் என்றும் ஆய்வறிக்கை கூறுகிறது.
*சமூக உள்கட்டமைப்பு, வேலைவாய்ப்பு மற்றும் மனித மேம்பாடு என்ற தலைப்பில் மனித திறன்களை விரிவுபடுத்த கல்வி, திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பு, பொருள் ஈட்டுதல் ஆகியவற்றில்பாலின இடைவெளியை போக்குவது மற்றும் சமூகத்தில் நிலவும் சமூக சமத்துவமற்ற நிலையை குறைப்பது ஆகியவை வளர்ச்சி யுக்தியில் நிலவும் இலக்குகளாக உள்ளன. இந்தியா பயிலும் அறிவுசார் பொருளாதாரங்களில் ஒன்றாக வளர்ச்சி பெற உறுதிபூண்டுள்ளது என்று கல்வி, திறன் மேம்பாடு மற்றும் சுகாதாரம் ஆகியவற்றுக்கு அரசு முன்னுரிமை அளிக்கும் என்றும் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
*மனித மூலதனத்தில் செலவை அரசு அதிகரித்து வருகிறது என்பதுடன் இந்த செலவினங் களின் செயல்திறனை விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றும் ஆய்வறிக்கை கூறுகிறது.
*சமூக சேவைகளில் மத்திய மாநில அரசுகளின் செலவினம் 2012&13 முதல் 2014&15 வரை ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தில் 6 சதவீதமாக உள்ளது. 2017&18-க்கு சமூக சேவைகளுக்கான செலவு 6.6 சதவீதமாக உள்ளது.
*கடந்த ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட பெரும் சீர்திருத்தங்கள் நிஜமான ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி இந்த ஆண்டு 6.75 சதவீதத்தை அடையவும் 2018-19-இல் 7.0 முதல் 7.5 சதவீதமாக உயர அனுமதித்து, அதன்மூலம் உலகத்தின் வேகமாக வளரும் பொருளாதாரம் என்பதை இந்தியா மீண்டும் நிலைநிறுத்தும்.
*2017 ஜூலை 1-ஆம் தேதி பெரும் மாற்றத்தைஏற்படுத்தக்கூடிய சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) அறிமுகம், புதிய இந்திய திவால் விதிகளின் கீழ் பாதிக்கப்பட்ட பெரும் நிறுவனங்களை அனுப்பி நீண்ட காலம் புரையோடிப்போயிருந்த இரட்டை இருப்பு பொறுப்பு அறிக்கையில் இருந்து தீர்வு கண்டது,
*வேளாண்மை, தொழில் மற்றும் சேவைகள் துறையும் முறையே 2.1 சதவீதம், 4.4 சதவீதம் மற்றும் 8.3 சதவீதம் என்ற விகிதத்தில் 2017&18-ஆம் ஆண்டில் வளரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
*கடந்த சில ஆண்டுகளாக எதிர்மறை பிராந்தியத்தில் இருந்த ஏற்றுமதிகளின் வளர்ச்சி 2016 & 17-இல் நேர்மறையான போக்கிற்கு திரும்பியதுடன், 2017 & 18-இல் வளர்ச்சி வேகம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இறக்குமதிகளில் அதிகரிக்கும் எதிர்பார்ப்புகள் காரணமாக சரக்கு மற்றும் சேவைகளின் ஏற்றுமதி 2017 & 18-இல் குறையும்.
*தீவிர பொருளாதார வளர்ச்சி இருந்தபோதிலும் ஜி.டி.பி.பின் சேமிப்பு மற்றும் முதலீட்டு விகிதமும் பொதுவாகக் குறைந்தது. முதலீட்டில் பெரும் சரிவு 2013&14-இல் ஏற்பட்ட போதிலும் அது 2015 & 16-லும் சரிவைக் கண்டது. இதனுள் வீட்டு உபயோகப் பொருட்கள் துறை சரிந்த போதிலும், தனியார் நிறுவனத் துறையில் உயர்வு ஏற்பட்டது.
*கடந்த மூன்று ஆண்டுகளில் சராசரி வளர்ச்சி உலகளாவிய வளர்ச்சி சராசரியை விட சுமார் 4 சதவீதம் அதிகமாகவும் வளரும் சந்தைகள் மற்றும் வளர்ந்து வரும் பொருளாதாரங்களை விட 3 சதவீதம் அதிகமாக இருந்தது என்பதால் இந்தியா உலகின் சிறந்த செயல்பாடுகளைக் கொண்ட பொருளாதாரமாக தரப்படுத்தப்பட்டது.
*ஜி.டி.பி. வளர்ச்சி 2014&15 முதல் 2017&18 வரை சராசரியாக 7.3 சதவீதமாக இருந்தது என்றும் இது உலகின் பெரும் பொருளாதாரங்களில் உயர்வானது என்றும் அது சுட்டிக்காட்டியுள்ளது. இந்த வளர்ச்சி குறைவான பணவீக்கம், மேம்படுத்தப்பட்ட நடப்பு கணக்கு இருப்பு மற்றும் ஜி.டி.பி.க்கு நிதி பற்றாக்குறையில் குறிப்பிடத்தக்க குறைவு ஆகியவை இதனை மேலும் நம்பிக்கைக்குரியதாக ஆக்கியுள்ளது.
*கச்சா எண்ணெய் விலை உயர்க்கூடும் என்பதால் வரும் ஆண்டில் ஜி.டி.பி. வளர்ச்சியில் பாதிப்பு இருக்கக்கூடும். எனினும் 2018-ஆம் ஆண்டில் உலக வளர்ச்சியில் மிதமான மேம்பாடு இருக்கும், ஜி.எஸ்.டி.யில் அதிக நிலைத்ததன்மைக்கான எதிர்பார்ப்பு, முதலீட்டு மட்டங்களில் மீட்சி மற்றும் தொடரும் கட்டமைப்பு சீர்திருத்தங்கள் உள்ளிட்டவை ஆச்சரியமூட்டும் உயர்வளர்ச்சியை அளிக்கும். நாட்டின் பொருளாதார செயல்திறன் 2018 & 19. மேம்பாடு அடையும்.
*ஜி.எஸ்.டி. நிலைப்படுத்துதல், டி.பி.எஸ். நடைமுறைகளை நிறைவுசெய்தல், ஏர் இந்தியாவை பாதுகாத்தல் மற்றும் பெரும் பொருளாதார நிலைத்ததன்மையை தக்க வைத்தல் ஆகியவை அவை. நீண்ட காலமாக நிலவும் வெளியேற்றத்தை தடுக்க டிபி.எஸ். செயல்பாடுகள் குறிப்பிடத்தக்கதாக இருக்கும். சாத்தியமற்ற வங்கிகளை குறைக்கவும் தனியார் பங்களிப்பை அதிகரிக்கவும் சீர்திருத்தங்கள் தேவைப்படுகின்றன.
*வேளாண் உற்பத்தியை பலப்படுத்தும் போது வேளாண் உற்பத்தியை அதிகரிப்பது. இவற்றுக்கெல்லாம் மேலாக, இந்தியா தனது விரைவான பொருளாதார வளர்ச்சிக்கான சூழ்நிலையை தொடர்ந்து மேம்படுத்த வேண்டும். இதற்கு தனியார் பங்களிப்பு மற்றும் ஏற்றுமதிகள் நீடித்திருக்கும் ஊக்கிகளாக இருக்கும்.
*சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) இந்தியப் பொருளாதாரம் குறித்த புதிய கண்ணோட்டத்தை அளித்திருப்பதுடன் புதிய தரவுகள் உருவெடுத்துள்ளன. மறைமுக வரி செலுத்துவோரின் எண்ணிக்கையில் ஐம்பது சதவீத உயர்வு ஏற்பட்டுள்ளது. பெரிய நிறுவனங்களில் இருந்து கொள்முதல் செய்யும் சிறிய நிறுவனங்கள் தானாக முன்வந்து பதிவு செய்து கொண்டுள்ளன. அவை உள்ளீட்டு வரி இருப்பை பெற விரும்புகின்றன.
*ஜி.எஸ்.டி. அடித்தள விநியோகம் அவர்களது பொருளாதாரங்களின் அளவுடன் இணைக்கப்பட்டதாக உள்ளது என்பதால் புதிய வரி முறைக்கு மாறும்போது வரி வசூல் குறையும் என்ற பெரிய உற்பத்தி மாநிலங்களின் அச்சம் களையப்பட்டுள்ளதாக இந்த ஆய்வறிக்கை கூறுகிறது.
*இந்தியாவின் முறையான துறை, குறிப்பாக வேளாண் அல்லாத முறையான துறையின் ஊதிய விகிதம் தற்போதைய நம்பிக்கையை விடவும் குறிப்பிடத்தக்க அளவு பெரியதாக உள்ளது. முறையான என்பது இ.பி.எஃப்.ஓ./இ.எஸ்.ஐ.சி. போன்ற சமூக பாதுகாப்பு அம்சங்கள் அடிப்படையில் விளக்கப்படும்போது முறையான துறையின் ஊதிய விகிதம் வேளாண் அல்லாத பணித் திறனின் ஊதியவிகிதம் 31 சதவீதமாக இருப்பது தெரியவந்தது. முறையான என்பது ஜி.எஸ்.டி.யின் ஒரு பகுதியாக விளக்கப்படும் போது இந்த முறையான துறை ஊதிய பங்களிப்பு 53 சதவீதமாக உள்ளது தெரியவருகிறது.
*இந்தியாவின் வரலாற்றில் முதன்முறையாக மாநிலங்களின் சர்வதேச ஏற்றுமதி குறித்த தகவல்கள் பொருளாதார ஆய்வறிக்கையில் இடம்பெற்றுள்ளன. இந்தத் தரவுகள் ஏற்றுமதி செயல்திறன் மற்றும் மாநிலத்தின் வாழ்க்கைத் தரம் ஆகியற்றுக்கு நெருக்கமான தொடர்பு இருப்பதைக் காட்டுகின்றன. சர்வதேச நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நாடுகள் மற்றும் இதர மாநிலங்களுக்கு வர்த்தகம் செய்யும் மாநிலங்கள் வளமாக இருப்பது தெரிகிறது. இத்தகைய நெருக்கம் வளத்திற்கு சர்வதேச வணிகத்திற்கும் இடையே உள்ளது.
*இதர நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் பெரிய ஏற்றுமதி நிறுவனங்களின் ஏற்றுமதி பங்களிப்பு அசாதாரணமாகவே உள்ளது. முதல் இடத்தில் உள்ள ஒரு சதவீத இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் ஏற்றுமதி பங்களிப்பு 38 சதவீதமாக மட்டுமே உள்ள நிலையில் பிரேசில், ஜெர்மனி, மெக்சிகோ மற்றும் அமெரிக்கவில் உள்ள பெரிய நிறுவனங்களில் முதல் ஒரு சதவீத நிறுவனங்களின் ஏற்றுமதி பங்களிப்பு முறையே 72, 68. 67 மற்றும் 55 சதவீதமாக உள்ளன. இதே போக்கு முதல் 5 சதவீதம் மற்றும் பத்து சதவீத நிறுவனங்களின் ஏற்றுமதி பங்களிப்பும் உள்ளன.
*மாநில வரிகளில் தள்ளூபடி ஆயத்த ஆடைகள் ஏற்றுமதியை (மனிதரால் உருவாக்கப்படும் இழைகள்) 16 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது என்றும் ஆனால் மற்றவற்றில் இது இல்லை என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
*இந்திய சமூகம் ஆண் குழந்தைகளையே பெரிதும் விரும்புகிறது என்று வெளிப்படையாக அறியப்பட்ட உண்மையை தகவல்கள் எடுத்துக் காட்டுகின்றன. ஆண் குழந்தைகள் பிறக்கும் வரை பெரும்பாலான பெற்றோர் தொடர்ந்து குழந்தைகள் பெற்றுக் கொள்வதாகவும் அது சுட்டிக்காட்டுகிறது இந்த ஆய்வறிக்கை மாறுபட்ட பாலிலியல் விகிதங்களுக்கு காரணமாக பல்வேறு சூழ்நிலைகள் குறித்த விவரங்களை அளிப்பதுடன் பிறப்பில் பாலிலியல் விகிதம் குறித்து இந்தியாவுக்கு இந்தோனேசியாவுக்கும் இடையிலான ஒப்பீட்டையும் அளிக்கிறது.
*இந்தியாவின் வரித் துறை வரி தொடர்பான பல்வேறு விவகாரங்களில் வழக்குகளை எதிர்த்து போராடியுள்ள போதிலும் மிகக் குறைவாக 30 சதவீத அளவுக்கு மட்டுமே வெற்றி கண்டுள்ளதாக ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. நிலுவையில் உள்ள 66 சதவீத வழக்குகளின் மதிப்பு வெறும் 1.8 சதவிகிதம்தான். மேலும் 0.2 சதவீத வழக்குகளின் மதிப்பு 56 சதவீதமாக உள்ளது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
*தரவுகளை மதிப்பீடு செய்த இந்த ஆய்வறிக்கை சேமிப்புக்களில் வளர்ச்சி பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தவில்லை என்றும் முதலீட்டில் வளர்ச்சிதான் அதனை ஏற்படுத்தி உள்ளது என்றும் கூறியுள்ளது.
*நேரடி வரியை வசூலிக்கும் அதிகாரம் கொண்ட இந்திய மாநிலங்கள் மற்றும் இதர உள்ளூர் அரசுகள் வசூலித்த நேரடி வரி வசூலில் இதர கூட்டாட்சி நாடுகளின் மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவாக உள்ளது என ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்தியா, பிரேசில் மற்றும் ஜெர்மனி இடையே உள்ளூர் அரசுகளின் உள்ளூர் வருவாயில் நேரடி வரியின் விகிதம் குறித்த ஒப்பீடு அளிக்கப்பட்டுள்ளது.
*இந்த ஆய்வறிக்கை இந்திய நிலப்பரப்பில் பருவநிலை மாற்றத்தின் கால்தடங்கள் மற்றும் வேளாண் உற்பத்தியில் அதன் மோசமான தாக்கம் குறித்தும் படம்பிடித்துக் காட்டுகிறது.
அதிக வெப்ப அளவு உயர்வு மற்றும் மழை பற்றாக்குறை ஆகியவை இந்திய வரை படத்தில் படம்பிடிக்கப்பட்டு வேளாண் உற்பத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்தும் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. பாசனப் பகுதிகளை விட பாசனமற்ற பகுதிகளில் அதன் தாக்கம் இருமடங்கு இருப்பது கண்டறியப்பட்டது.
பொதுஅறிவு பிட்ஸ்
*ஐக்கிய அரபு அமீரகம், உலகின் மிக நீளமான ஜிப் வரிசையைத் அறிமுகப்படுத்தி புதிய உலக சாதனை படைத்துள்ளது.
*அலமாட்டி அணை கிருஷ்ணா நதியின் மீது கட்டப்பட்டுள்ளது.
*அகமதாபாத் நகரில் சமஸ்கிருதத்தை கற்றுக் கொள்வதற்கான முதல் மையம் அமைக்கப்பட உள்ளது.
*தேசிய சர்க்கரை நிறுவனம் உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் அமைந்துள்ளது.
*கர்நாடக மாநிலத்தில் இரண்டாவது இந்திய தகவல் தொழில்நுட்ப மையம் அமைக்கப்பட உள்ளது.
*கொல்கத்தா மெட்ரோ, மிதக்கும் சந்தை கொண்ட முதல் மெட்ரோ ஆகும்.
*இந்திய வங்கிகள் சங்கத்தின் முதல் பெண் தலைவர் உஷா ஆனந்த் சுப்பிரமணியன்.
*சீனா முதன்முதலில் குரங்குகளை குளோனிங் மூலம் உருவாக்கிய நாடாகும்.
*இந்திய தானியங்கி கடல் மாசுபாடு கணினி ஹைதராபாத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
*இரண்டாம் உலக போரின் நினைவு அருங்காட்சியகத்தை அமைத்துள்ள இந்திய மாநிலம் அருணாச்சல பிரதேசம்.
*மகாராஷ்டிர மாநிலம் விவசாயிகளுக்கான அனைத்து மாவட்டத்திலும், தினசரி வானிலை ஆலோசனை தகவல் திட்டத்தை தொடங்க உள்ளது.
*சூடானில் முதல் அணுமின் நிலையம் கட்ட ஒப்பந்தம் செய்துள்ள நாடு ரஷ்யா.
*மகாராஷ்டிரா மாநிலம் மருத்துவ ஸ்தாபனத்தில் பதிவு மற்றும் ஒழுங்குமுறை சட்டத்தை அமல்படுத்தி உள்ளது.
*இந்திய தானிய ஆராய்ச்சி நிறுவனம் உத்தரபிரதேச மாநிலத்தில் அமைந்துள்ளது.
*இந்தியாவின் முதல் சமூக தணிக்கை சட்டம் மேகாலயா மாநிலத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
*உலகின் முதல் ஒட்டக மருத்துவமனை துபாயில் தொடங்கப்பட்டுள்ளது.
*முதல் தேசிய ரயில் மற்றும் போக்குவரத்து பல்கலைக்கழகம் குஜராத் மாநிலம் வதோதராவில் அமைக்கப்பட உள்ளது.
*2022-ஆம் ஆண்டின் காமன்வெல்த் போட்டியை நடத்தவுள்ள நாடு இங்கிலாந்து.
*கஜ்னெர் வனவிலங்கு சரணாலயம் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ளது.