நாடாளுமன்றத்தில் 2024-25-ஆம் நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
பட்ஜெட்டுக்கு முன்னதாக தாக்கல் செய்யப்படும் பொருளாதார ஆய்வறிக்கை இந்திய பொருளாதாரத் தின் நிலை குறித்த விரிவான தகவல் களை வழங்குகிறது. அடுத்த நிதியாண்டிற் கான அரசின் கொள்கை முன்னுரிமை களையும் பிரதிபலிக்கிறது.
பொருளாதார ஆய்வறிக்கையின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:
“2025-ஆம் ஆண்டில் இந்தியப் பொருளாதாரம் 6.6 சதவீதம் வளர்ச்சி யடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முதன்மையாக வலுவான தனியார் நுகர்வு மற்றும் முதலீடுகள் துணைபுரிகின்றன. இந்தியாவின் வலுவான செயல்திறன் காரணமாக தெற்காசியாவில் பொருளாதார வளர்ச்சி இந்த ஆண்டு வலுவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்று ஐக்கிய நாடுகள் சபை அறிக்கை கூறுகிறது.
2025-26-ஆம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதாரம் 6.3 மற்றும் 6.8 சதவீதம் வரை வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிதி ஒருங்கிணைப்பு, நிலையான தனியார் நுகர்வு ஆகியவை காரணமாக உள்நாட்டுப் பொருளாதாரத்தின் அடிப்படைகள் வலுவாக உள்ளன.
முந்தைய நிதியாண்டில் 5.4 சதவீதமாக இருந்த சில்லறை பணவீக்கம் நடப்பு நிதியாண்டின் டிசம்பர் வரையிலான 3-ஆம் காலாண்டுவரை 4.9 சதவீதமாக குறைந்துள்ளது.
வணிக வங்கிகளின் லாபம் அதிகரித் துள்ளது. இது அ

வணிக வங்கிகளின் லாபம் அதிகரித் துள்ளது. இது அந்த வங்கிகளின் மொத்தச் செயல்படாத சொத்துக்கள் (வாராக் கடன்) சரிவில் பிரதிபலிக் கிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் இறுதியில், வணிக வங்கிகளின் மொத்தச் செயல்படாத சொத்துக்கள் 12 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 2.6 சதவீதமாகக் குறைந்துள்ளது.
பொதுத் தேர்தல் காரணத்தால் ஏற்ற, இறக்கங்கள் இருந்தபோதிலும் இந்திய பங்குச் சந்தைகள், மற்ற நாடுகளின் பங்குச்சந்தைகளைவிட சிறப்பாக செயல்பட்டன. நடப்பு நிதியாண்டில் டிசம்பர் வரை இந்திய பங்குச்சந்தைகள் 11.1 லட்சம் கோடி திரட்டியுள்ளன.
2023-24 ஆண்டு கால தொழிலாளர் பங்களிப்பு கணக்கெடுப்பு (PLFS) அறிக்கையின்படி, 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட நபர்களின் வேலையின்மை விகிதம் 2017-18-இல் 6% இலிருந்து 2023-24-இல் 3.2% ஆக படிப்படியாகக் குறைந்துள்ளது. தொழிலாளர் பங்களிப்பு விகிதம் (LFPR)மற்றும் தொழிலாளர்-மக்கள்தொகை விகிதம் (WPR)ஆகியவையும் அதிகரித்துள்ளன.
Q2 FY25-இல், 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கான நகர்ப்புற வேலையின்மை விகிதம் 6.4 சதவீதமாக உள்ளது. இது Q2 FY24-இல் 6.6 சதவீதமாக இருந்தது. இந்தியாவில் முறைசாரா துறை குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ளது. நிகர ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு(EPFO)சந்தாக்கள் நிதியாண்டு 19-இல் 61 லட்சத்திலிருந்து நிதியாண்டு 24-இல் 131 லட்சமாக இரட்டிப்பாகி யுள்ளது.
2025 நிதியாண்டில் இதுவரை, உலகளாவிய வர்த்தகம் மந்தமடைந்ததால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சேவைகள் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சியை அதிகரித்துள்ளன. இந்தியாவின் சேவைகள் ஏற்றுமதி வளர்ச்சி ஏப்ரல்-நவம்பர் நிதியாண்டில் 12.8 சதவீதமாக அதிகரித்தது. கணினி சேவைகள் மற்றும் வணிக சேவைகள் ஏற்றுமதிகள் இந்தியாவின் சேவைகள் ஏற்றுமதியில் சுமார் 70% ஆகும். ஏப்ரல்-நவம்பர் நிதியாண்டில், சேவை இறக்குமதி 13.9 சதவீதம் அதிகரித்தது.
ஆயுஷ்மான் பாரத் - பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டம் (AB#PMJAY),நாட்டின் மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்கள்தொகையில் 40 சதவீதம் பேருக்கு சுகாதாரப் பாதுகாப்பை வழங்குகிறது. இது, சுகாதாரப் பாதுகாப்பில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. 15 ஜனவரி 2025 நிலவரப்படி, 40 லட்சத்திற்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள் இந்தத் திட்டத்தில் சேர்ந்துள்ளனர். இத்திட்டம் மக்களின் செலவினங்களை குறைத்து, ரூ.1.25 லட்சம் கோடியை அவர்கள் சேமிக்க வழி வகுத்துள்ளது.
அந்நிய செலாவணி:
நடப்பு நிதியாண்டின் 2-வது காலாண்டில் நாட்டின் நிதி பற்றாக் குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 1.2 சதவீதமாகவும் வெளிநாட்டுக் கடன் 19.4 சதவீதமாகவும் உள்ளது. மொத்த அந்நிய நேரடி முதலீடு நடப்பு நிதியாண்டின் முதல் 8 மாதங்களில் 5,560 கோடி டாலராக அதிகரித்தது. இது முந்தைய ஆண்டை விட 17.9 சதவீத வளர்ச்சியாகும். அந்நிய செலாவணி கையிருப்பு கடந்த டிசம்பர் மாத இறுதியில் 64,030 கோடி டாலராக இருந்தது.
ஏற்றுமதி
நடப்பு நிதியாண்டின் டிசம்பர் வரையில் நாட்டின் மொத்த ஏற்றுமதி, முந்தைய ஆண்டின் அதே கால அளவைக் காட்டிலும் 6 சதவீதம் அதிகரித் துள்ளது. உலகளாவிய சேவைகள் ஏற்றுமதியில் இந்தியா 7-வது இடத்தில் உள்ளது.
உள்கட்டமைப்பு வளர்ச்சி
மூலதனச் செலவு கடந்த 2019-20-ஆம் நிதியாண்டு முதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பொது தேர்தலுக்குப் பிறகு, ஜூலை முதல் நவம்பர் வரையிலான காலகட்டத்தில் மூலதனச் செலவு 8.2 சதவீதம் அதிகரித்தது.
நடப்பு நிதியாண்டில் 2,031 கி.மீ. தொலைவுக்கு புதிய ரயில் வழித்தடங்களும் 5,853 கி.மீ. நீள தேசிய நெடுஞ்சாலைகளும் மக்களின் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கப் பட்டுள்ளன.
மத்திய அரசு திட்டங்கள்:
‘ஜல்ஜீவன்’ திட்டத்தில் 12 கோடிக்கும் அதிகமான குடும்பத்துக்கு குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதித் திட்டத்தில் 89 லட்சம் வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன. பிரதமரின் விவசாயி திட்டத்தின் கீழ் 11 கோடி விவசாயிகள் பயனடைகின்றனர்.
மக்கள் சுகாதாரத்துக்காக செலவிடும் தொகை குறைந்துள்ளது. அதேநேரம், அரசின் சுகாதார செலவினம் 48 சதவீதமாக அதிகரித்துள்ளது.
தொழில்துறை 6.2% வளர்ச்சி
தொழில்துறை நடப்பு நிதியாண்டில் 6.2 சதவீதம் வளர்ச்சியுடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 99 சதவீத அறிதிறன்பேசிகள் இப்போது உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுகின்றன.
சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங் களுக்கு நிதியுதவியை அதிகரிக்க, ரூ.50,000 கோடியை அரசு அறிமுகப் படுத்தியுள்ளது.
சேவைத் துறை 55.3% பங்கு நாட்டின் பொருளாதாரத்தில் சேவைத் துறை 55.3 சதவீதம் பங்களிக்கிறது. கொரோனா பெருந்தொற்றுக்குப் பிந்தைய காலத்தில் சேவைத் துறையின் வளர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது.
வளர்ந்த இந்தியா
வளர்ந்த இந்தியா லட்சியத்தை அடைவதற்கு அவசியமான வேலைவாய்ப்புகளை உருவாக்கு வதற்கான மேம்பட்ட வாய்ப்புகளை வளர்ந்து வரும் எண்மபொருளாதாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறைகள் வழங்குகின்றன.
சுமார் 20 ஆண்டுகளுக்கு 8 சதவீத நிலையான வளர்ச்சியுடன் கட்டுப்பாடுகள் நீக்கம், தொழிலாளர் சீர்திருத்தம் உள்ளிட்டவை வளர்ந்த இந்தியா இலக்கை அடைய அவசியமாகும். தனியார் முதலீட்டையும் அதிகரிக்க வேண்டும்.
பொருளாதாரத்தை சீராக உயர்த்த பெருநிறுவன லாபங்களின் வளர்ச்சியானது பணியாளர்களின் ஊதியத்துடன் ஒத்துப்போக வேண்டும்.
அதேபோல், வாரத்தில் 60 மணிநேரத்துக்கு மேல் வேலை செய்வது மோசமான உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தும்.
சர்வதேச நிதி கிடைக்காவிட்டாலும், பருவநிலை நடவடிக்கைளுக்கான உறுதிப்பாட்டை இந்தியா இழக்கக் கூடாது. மின்வாகனங்களுக்கு வரிச்சலுகை அளிக்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல பரிந்துரைகள் அளிக்கப்பட்டுள்ளன.