அரசிற்கு தகுந்த ஆலோசனைகளை வழங்கிட முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவை அமைத்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது கொரோனா தொற்று தாக்கத்தால் தமிழகத்தின் பொருளாதாரத்தில் கடுமையான சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தின் வருவாய் மற்றும் நிதி பற்றாக்குறை, அதிக அளவிலான கடன் ஆகியவை தொடர்ந்து ஆபத்தான நிலையை ஏற்படுத்திவருகிறது.
அதே நேரத்தில் மக்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. பொருளாதாரம், சமூக நீதி, சமநிலை ஆகியவற்றில் தமிழக அரசு விரைந்து வளர்ச்சியை எட்டிவிடும் என்று மக்கள் பெரிதும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
இதே வகையில், சர்வதேச அளவிலான பொருளாதார, சமூக, அரசியல் நிபுணர் களின் ஆலோசனை தமிழகத்திற்கு தேவையாக உள்ளது.
எனவே, "முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனை குழு” ஒன்றை அமைக்க அரசு முடிவு செய்துள்ளது.
இந்த குழுவில் பேராசிரியர் எஸ்தர் டஃப்லோ (அமெரிக்காவின் மசாசூட் தொழில்நுட்ப மையத்தின் வறுமை ஒழிப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சி துறை), ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் பேராசிரியர் ரகுராம் ராஜன், மத்திய அரசின் முன்னாள் பொருளாதார ஆலோசகர் டாக்டர் அர்விந்த் சுப்பிரமணியன், ராஞ்சி பல்கலைக்கழகத் தின் பொருளாதார வளர்ச்சிதுறை கவுரவ பேராசிரியர் ஜீன் டிரெஸ், பிரதம மந்திரியின் முன்னாள் பொருளாதார ஆலோசகர் மற்றும் தமிழக முன்னாள் செயலாளர் டாக்டர் எஸ். நாராயண் ஆகியோர் இடம் பெறுகிறார்கள்.
இந்த குழு பொருளாதார, சமூக நீதி மற்றும் அரசியல் ஆகியவை குறித்த வழிகாட்டுதல்களையும், மனிதவள மேம்பாடு தொடர்பான விஷயங்களையும் குறிப்பாக பெண்கள் மற்றும் உரிமை குறைவான மக்களுக்கு சமவாய்ப்பு ஆகியவை குறித்து ஆலோசிக்கும்.
எஸ்தர் டஃப்லோ மற்றும் அவரது கணவர் அபிஜித் பானர்ஜி ஆகியோர் இணைந்து நிறுவிய பட்ங் ஆக்ஷக்ன்ப் கஹற்ண்ச் ஓஹம்ங்ங்ப் டர்ஸ்ங்ழ்ற்ஹ் ஆஸ்ரீற்ண்ர்ய் கஹக்ஷ (ஓ-டஹப்) அமைப்பானது 2014-ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தைச் செய்துகொண்டது. சிறந்த நிர்வாகத்தைத் தருவதற்காக, புள்ளிவிவரங்கள் அடிப்படையிலான திட்டமிடலுக்காக இந்த ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது. அந்தத் தருணத்தில் அந்தத் தம்பதியின் பணிகளும் ஆலோசனைகளும் வெகுவாகப் பாராட்டப்பட்டன.
மற்றொரு அறிஞரான ஜான் த்ரேவும் தமிழ்நாடு குறித்த பார்வையும் அக்கறையும் கொண்டவர். அவர் நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென்னுடன் இணைந்து எழுதிய An Uncertain Glory: India and its Contradictions புத்தகத்தில் தமிழ்நாடு பொது சுகாதாரத் துறையின் வெற்றி குறித்து விரிவாகவும் நேர்மறையாகவும் விவாதிக்கப்பட்டிருந்தது. மருத்துவ சேவைகளை வழங்குவதில் இந்தியாவிலேயே பிற மாநிலங்களை விட தமிழ்நாடு எப்படிச் சிறந்து விளங்குகிறது என்பதை இந்தப் புத்தகத்தில் விளக்கியிருந்தார் ஜான் த்ரே.
அதேபோல, ஆலோசனைக் குழுவின் மற்றொரு உறுப்பினரான டாக்டர் எஸ். நாராயண், 2018-இல் வெளியிட்ட தனது The Dravidian Years புத்தகத்தில், திராவிட இயக்க ஆட்சியில் அதிகாரமும் ஆலோசனையும் எப்படி கீழ்மட்டத்தி-லிருந்து மேல்நோக்கி எடுத்துச் செல்லப்பட்டது என்பதை விளக்கியிருந்தார். திராவிடக் கட்சிகள் மக்களுக்கு என்ன தேவை என்பதை அறிந்து எப்படிச் செயல்பட்டன என்பதையும் ஆய்வுசெய்திருந்தார். தமிழ்நாடு அரசு அளிக்கும் இலவசங் களுக்குப் பின்னால் உள்ள சமூக நிர்பந்தங்கள், தேவைகள் ஆகியவற்றைத் தெளிவாக முன்வைத்தார்.
தமிழ்நாடு அரசைப் பொறுத்தவரை இந்தக் குழுவினரிடமிருந்து பொருளாதாரம் மற்றும் சமூகக் கொள்கைகளை வகுப்பது, சமூக நீதி, மனித வளத்தை மேம்படுத்துவது ஆகியவற்றில் பொதுவான வழிகாட்டுதலை எதிர்பார்க்கிறது. மாநிலத்தின் பொருளாதாரம், வேலைவாய்ப்பு, உற்பத்தி ஆகியவற்றை வளர்த்தெடுப்பதற்கான ஆலோசனைகளையும் எதிர்பார்க்கிறது.
தமிழ்நாடு அரசின் நிதித் துறையே இந்தக் குழுவின் செயலகமாக இருக்கும். நிதித் துறையின் கூடுதல் தலைமைச் செயலர் எஸ். கிருஷ்ணன் இந்தக் குழுவின் ஒருங்கிணைப்பாளராக இருப்பார் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஆனால், இந்தியாவில் மாநிலங்களுக்கு நிதித் துறை சுதந்திரம் மிகக் குறைவாக உள்ள நிலையில் இம்மாதிரி குழுக்கள் தேவையா என சமூக வலைதளங்களில் கேள்விகள் எழுப்பப்பட்டன.
"இந்தியாவில் தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்கள் பரப்பளவில் ஐரோப்பிய நாடுகளுக்கு இணையானவை.
தமிழ்நாட்டின் நிதி நிலை அறிக்கையில் கிட்டத்தட்ட 3 லட்சம் கோடியைக் கையாளுகிறார்கள். சேவைத் துறை, தயாரிப்புத் துறை கடந்த சில ஆண்டு களில் வெகுவாக வளர்ந்திருக்கின்றன. விவசாயத்தைச் சார்ந்திருப்பது வெகுவாகக் குறைந்திருக்கிறது. ஆகவே பொருளாதார நிபுணர்களின் ஆலோசனை என்பது நிச்சயம் தேவை.
தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் ஏழு அம்சத் திட்டத்தை நிறைவேற்றுவோம் என வாக்குறுதி அளித்திருக்கிறார்கள்.
இவற்றை நிறைவேற்ற நிச்சயம் இந்தப் பொருளாதார நிபுணர்களின் ஆலோசனை தேவைப்படும்” என்கிறார் சென்னைப் பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறைத் தலைவர் ஜோதி சிவஞானம்.
ஆனால், தமிழ்நாடு பெரும் கடன் சுமையை எதிர்கொண்டிருக்கிறது. வரி வசூ-லிக்கும் அதிகாரம் குறைக்கப் பட்டிருக்கிறது. இந்த நிலையில், இந்தக் குழுவால் என்ன செய்ய முடியும் என்ற கேள்வியும் இருக்கிறது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நிதி ரீதியில் பல சவால்கள் இருக்கின்றன என்பது உண்மைதான். மாநிலத்தின் நிதி நிலை மிக மோசமான நிலைமையில் உள்ளது. மாநிலத்திற்கு பட்ஜெட்டிற்கு உள்ளே 5.7 லட்சம் கடன் இருக்கிறது. பட்ஜெட்டிற்கு வெளியில் 3 லட்சம் கோடி ரூபாய் கடன் உள்ளது. இந்தக் கடன்களுக்காக வருடத்திற்கு 40 ஆயிரம் கோடி ரூபாய் வட்டியாக கட்ட வேண்டியுள்ளது.
"இந்த நீண்ட காலக் கடன்கள் ஒருபுறமிருக்க, அன்றாடச் செலவுகளையே சமாளிக்க முடியாத நிலைதான் நிலவுகிறது. இதன் காரணமாகத்தான் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயது அதிகரிக்கப்பட்டது. இதுபோல கடந்த 100 வருடங்களில் இது நடந்ததில்லை. அன்றாடச் செலவுகளையே அரசால் சமாளிக்க முடியவில்லை என்பதற்கு இதுதான் சிறந்த உதாரணம். இதனால்தான் அரசு முதலில் நிதி குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிடப்போவதாகச் சொல்லியிருக்கிறது. இம்மாதிரிச் சூழலில், இதுபோன்ற நிபுணர்களின் ஆலோசனை மிக அவசியம்'' என்கிறார் ஜோதி சிவஞானம்.
இந்தக் குழு அமைக்கப்பட்டது மிகச் சிறப்பான நடவடிக்கை என்கிறார் காங்கிரஸ் சார்புடைய பொருளாதார நிபுணரான ஆனந்த் சீனிவாசன். "இது மிகச் சிறப்பான குழு. இந்தக் குழுவில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்தன்மை இருக்கிறது. எஸ். நாராயண் வருவாய் ஈட்டுவதற்கான வழிகளைச் சொல்வதில் சிறந்தவர். எஸ்தர் டஃப்லோவும் ஜான் த்ரேவும் ஏழ்மை ஒழிப்பில் நிபுணர்கள். ரகுராம் ராஜன் வட்டிச் சுமை குறைப்பதை பற்றி, நிதியை கொண்டுவருவதில் நிபுணர்.
மாநிலத்தின் கடன்களை நிர்வகிப்பதில் அவருடைய பங்களிப்பு மிக முக்கியமானதாக இருக்கும். அரவிந்த் சுப்பிரமணியன், மாநிலத்தின் தற்போதய பொருளாதாரத்திற்குள் அதனை சிறப்பாக நிர்வகிக்கும் வழிகளைக் காட்டுவார். எதிலெல்லாம் முதலீடு செய்யலாம் என்று சொல்வார்.” என்கிறார் அவர்.
ஆனால், குழுவில் உள்ள வெளிநாட்டவர்கள், வெளிமாநிலத்தவரால் மாநிலத்தின் சமூகச் சூழலை புரிந்துகொண்டு ஆலோசனைகளை வழங்க முடியுமா என்ற கேள்வியும் இருக்கிறது. "இந்தக் குழுவைப் பொறுத்தவரை மாநிலத்தின் நிதிநிலையை மேம்படுத்த விரிவான, பரந்த பார்வையிலான வழிகாட்டும் அறிவுரைகளை அளிக்கும். மிக நுணுக்கமான ஆலோசனைகளைத் தர மாட்டார்கள். குறிப்பான அறிவுரைகளை அளிக்க மாநில வளர்ச்சி ஆலோசனைக் குழு இருக்கிறது.
இந்தியாவைப் பொறுத்தவரை, 1950களில் பெரும்பாலானவர்கள் ஏழைகளாக இருந்தபோது, வளர்ச்சி வந்தால் ஏழ்மை மாறிவிடும் என்று கருதப்பட்டது. 1991-இல் பொருளாதார தாராளமயமாக்கத்திற்குப் பின் பெரும் வளர்ச்சி ஏற்பட்டது. இருந்த போதும் வறுமை என்பது ஒழிய வில்லை. இந்த நிலையில்தான் 2004-க்குப் பிறகு பல விஷயங்களை குடிமக்கள் உரிமையாக கேட்டுப்பெறும் விதத்தில் சட்டமியற்றப்பட்டது. இதன் பின்னணியில் ஷான் த்ரே இருந்தார்.
அவரது ஆலோசனையின் பேரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டநிலையில், அதன் தாக்கம் எப்படியிருக்கிறது என விழுப்புரம் மாவட்டத்தில் வந்து ஆய்வுசெய்தார். ஆகவே அவருக்கு தமிழ்நாட்டைப் பற்றி நன்றாகவே தெரியும்.
அரவிந்த் சுப்பிரமணியத்தைப் பொறுத்த வரை வர்த்தகம், பொருளாதாரக் கொள்கைகள் ஆகியவற்றில் வல்லவர். ரகுராம் ராஜனைப் பொறுத்தவரை, சர்வதேச நிதி, பணம் ஆகியவற்றை நிர்வகிப்பதில் திறமை மிகுந்தவர்.
அவரைப் பொறுத்தவரை ஏங்ய்ங்ழ்ஹப் ஊவ்ன்ப்ண்க்ஷழ்ண்ன்ம் ச்ழ்ஹம்ங் ஜ்ர்ழ்ந்-ஐ அவர் தொடர்ந்து வ-லியுறுத்துவார். அதாவது பொருளாதாரத்தில் எதைச் செய்தால் என்ன நடக்கும் என்பது ரகுராம் ராஜனுக்கு நன்கு தெரியும். ரகுராம் ராஜனின் அறிவுரையை மீறித்தான் பண மதிப்பிழப்பு நடவடிக்கையே அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் விளைவுகள் எல்லோருக்கும் தெரியும். ஆகவே இந்தக் குழுவைப் பொறுத்தவரை, ஆலோசனைகளை அளிப்பதில் பிரச்சனை இருக்காது'' என்கிறார் ஜோதி சிவஞானம்.
இந்தியாவில் ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை அமல்படுத்தப்பட்ட பிறகு, மாநிலங்கள் பெரும் நிதி நெருக்கடியை எதிர்கொள்ளும் நிலையில், இம்மாதிரி குழு மிக அவசியம் என்கிறார் ஜோதி சிவஞானம். "மாநிலங்களின் நிதி இறையாண்மை என்பது ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை வந்த பிறகு அடியோடு போய் விட்டது. ஜிஎஸ்டி அமல்படுத்திய பிறகு ஐந்தாண்டுகளில் 14 சதவீத வளர்ச்சி இருக்கும் என்றார்கள்.
அதனால்தான் 2022 வரை இழப்பீடு தருவதாக சொன்னார்கள். ஆனால், நினைத்த வேகத்தில் வளர்ச்சி ஏற்படவில்லை. தவிர, ஜிஎஸ்டி கவுன்சில் மிகுந்த அதிகார தோரணையோடு செயல்படுகிறது.
ஜிஎஸ்டி கவுன்சிலை பொறுத்தவரை ஒரு பக்கம் மாநில அரசுகள் மற்றொரு பக்கம் மத்திய அரசு என்றுதான் விவாதம் நடக்குமென நினைத்தார்கள். ஆனால், கவுன்சில் கூட்டங்கள் நடக்கும்போது பா.ஜ.க. ஆளும் மாநிலங்களின் அரசுகள் ஒன்றாகச் சேர்ந்துகொண்டு மத்திய அரசின் பக்கம் நிற்கின்றன. இதனால், பா.ஜ.க. என்ன நினைக்கிறதோ அதுதான் கவுன்சிலில் நடக்கிறது.
ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டபோது மாநில அரசு தனது வருவாயில் 44 சதவீதத்தை இதில் கொண்டுவர ஒப்புக்கொண்டது. மத்திய அரசு 35 சதவீதத்தை விட்டுக்கொடுத்திருக்கிறது. ஆனால், பிரிக்கும்போது மத்திய அரசும் மாநில அரசும் வரி வருவாயை பாதிப்பாதியாக பிரித்துக்கொள்ள வேண்டும். இருந்தபோதும் அந்த அமைப்பு ஒரு கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில் இருக்குமென எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படி நடக்கவில்லை. அரசியல் ரீதியாக கவுன்சில் பிரிந்துகிடக்கிறது.
இப்போதைய சூழலி-ல் மாநிலங்களால் பெட்ரோல் விலையைக் குறைக்க முடியாது. மதுபானங்களின் மீது கடுமையான வரி விதிக்கப்பட்டிருக்கிறது. பத்திரப்பதிவுத் துறையிலும் கடுமையான வரிகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. இந்தச் சவால்களுக்கு மத்தியில்தான் புதிய மாநில அரசு பணியாற்ற வேண்டும்.
இந்த நிலையில் இந்தக் குழுவில் இருப்பவர்களின் தொடர்புகள் புதிய முதலீடுகளைக் கொண்டுவர உதவலாம். இம்மாதிரி ஒரு உயர் மட்டக் குழு அமைக்கப்பட்டிருப்பதால், பொருளாதாரம், முதலீடு ஆகியவற்றில் மாநில அரசு மிகத் தீவிரத்துடன் பணியாற்றுகிறது என்பதைப் புரிந்துகொண்டு பல நிறுவனங்கள் முதலீடு செய்ய முன்வரலாம். இதன் மூலம் வளர்ச்சி அதிகரிக்கும். ஆகவே வரி வருவாயும் அதிகரிக்கும். தி.மு.க. முன்வைத்த 7 அம்சத் திட்டத்தில் 2 இலக்க வளர்ச்சியை ஏற்படுத்துவது தங்களது இலக்கு என்று சொல்லியிருக் கிறார்கள். அந்த இலக்கை அடைய இந்த வளர்ச்சி உதவும்” என்கிறார் பேராசிரியர் ஜோதி சிவஞானம்.
ரகுராம் ராஜன், அரவிந்த் சுப்பிரமணியன், காங்கிரஸ் அரசில் பல ஆலோசனைகளை அளித்த ஜான் த்ரே ஆகியோரைக் கொண்டு குழு அமைத்திருப்பது ஒரு அரசியல் ரீதியான நடவடிக்கையும்கூட என்கிறார்கள் ஜோதி சிவஞானமும் ஆனந்த் சீனிவாசனும்.
"பிரதமர் ஹார்வர்டா ஹார்ட் ஒர்க்கா என்று கேட்டு, ஹார்ட் ஒர்க்கே முக்கியம் என்றார். அதனால் இந்தியாவின் பொருளாதாரம் இந்த நிலையில் இருக்கிறது. ஆனால் மாநில அரசு அப்படிக் கேட்கவில்லை. மேதைகளை மதிக்கிறது. இதற்கு நிச்சயம் பலன் இருக்கும்” என்கிறார் ஆனந்த் சீனிவாசன்.
"நிச்சயம் இது ஒரு அரசியல் நடவடிக்கை யும்கூட. மாநில அரசே இம்மாதிரி குழுவை அமைத்து பொருளாதாரத்தை மேம்படுத்த நினைக்கிறதே, மத்திய அரசு செய்யக்கூடாதா என்ற கேள்வியை இந்த நியமனம் எழுப்பும்” என்று சுட்டிக்காட்டுகிறார் ஜோதி சிவஞானம்.
இது போல குழு அமைப்பது, நிபுணர்களின் ஆலோசனையைப் பெறுவது என்பது புதிதல்ல. 100 வருடங்களுக்கு முன்பே சென்னைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத் துறைத் தலைவர் பி.ஜே. தாமஸ் இந்திய அரசுக்கே ஆலோசனை சொன்னார். ராஜாஜி காலகட்டத்தில் விற்பனை வரியை அறிமுகப்படுத்தியதே தாமஸ்தான்.
அதேபோல தி.மு.க. ஆட்சிக் காலத்தில் குகன் ஆலோசகராக இருந்தார்.
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு பி.ஜே. தாமஸ், கே.என். ராஜ், வி.கே.ஆர்.வி. ராவ், இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தை உருவாக்கிய மெகலனாபிஸ், பி.ஆர். பிரம்மானந்தா, சி.என். வக்கீல், சுக்மாய் சக்ரவர்த்தி, மன்மோன் சிங், கௌசிக் பாசு, ரகுராம் ராஜன், அரவிந்த் சுப்ரமணியன், பனகாரியா போன்றவர்கள் இந்திய அரசுக்கு ஆலோசகர்களாக இருந்தார்கள்.
__________________________________
டாக்டர் ரகுராம் ராஜன்
தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட டாக்டர் ரகுராம் ராஜன், டெல்லியில் பட்டப்படிப்பும், அகமதாபாத்தில் உள்ள ஐ.ஐ.எம்மில் எம்.பி.ஏவும் படித்தவர். உலக வங்கியின் மூத்த அதிகாரியாகப் பதவி வகித்தவர். 2008-ஆம் ஆண்டு அமெரிக்காவில் மிகப் பெரிய பொருளாதார நெருக்கடி வரப்போகிறது என்பதை முன்பே கண்டறிந்து சொன்னவர் இவர்தான். இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக 2013-ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் 2016-ஆம் ஆண்டு செப்டம்பர் வரை பதவி வகித்தவர். 2003 முதல் 2006 வரை, சர்வதேச நாணய நிதியம் இயக்குநர் மற்றும் தலைமை பொருளாதார வல்லுநராக இருந்தார். கடந்த 2007-08-ஆம் வருடம் ஏற்பட்ட சர்வதேச பொருளாதார நெருக்கடியையே சாமர்த்தியமாக சமாளித்து பல ஆலோசனைகளை வழங்கியவர். பண மதிப்பிழப்பு, சரியாக அமல்படுத்தப்படாத ஜி.எஸ்.டி போன்றவை இந்திய பொருளாதாரத்தின் வேகத்தை குறைத்துவிட்டது என்று வெளிப்படையாக குற்றம்சாட்டி பரபரப்பை ஏற்படுத்தியவர். பொருளாதாரத்தில் மிகுந்த நிபுணத்துவம் பெற்றவர்.
பேராசிரியர் எஸ்தர் டஃப்லோ
அமெரிக்காவின் மாசாசூட் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்வி மையத்தின் வறுமை ஒழிப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சி துறையின் பேராசிரியர். பொருளாதாரத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர். கடந்த 2019-இல் பேராசிரியர்கள் அபித் பானர்ஜி, மைக்கேல் கிரிமர் ஆகியோருடன் இணைந்து பொருளாதார அறிவியல் பிரிவில் நோபல் பரிசு பெற்றுள்ளார். அதுமட்டுமல்லாமல் சமூக அறிவிய-லில் ஆஸ்திரிய இளவரசி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். மோசமான பொருளாதாரம் மற்றும் சர்வதேச ஏழ்மைக்கு எதிரான போராட்டம் என்ற புத்தகத்தை எழுதி பிஸ்னஸ் புத்தக விருதை 2011-இல் பெற்றுள்ளார். இந்த புத்தகம் 17 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. சமீபத்தில் கடினமான நேரத்தில் சிறந்த பொருளாதாரம் என்ற புத்தகத்தையும் இவர் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
டாக்டர் அர்விந்த் சுப்பிரமணியன்
தமிழகத்தை பூர்வீக மாகக் கொண்ட டாக்டர் அரவிந்த் சுப்பிரமணியன், உலக வங்கியில் முக்கியமான பதவியை வகித்தவர். உலகின் முக்கியமான பல்கலைக்கழகங்களில் பொருளாதாரம் குறித்து சொல்-லி தருபவர். வளரும் நாடுகளின் பொருளாதாரம் குறித்து தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வருபவர். ரகுராம் ராஜன், ரிசர்வ் வங்கியின் கவர்னராக தேர்வான பின்பு, மன்மோகன் சிங்குக்கு முதன்மைப் பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்பட்டார் டாக்டர் அரவிந்த் சுப்பிரமணியன்.
பேராசிரியர் ஜீன் டிரெஸ்
பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த ஜீன் டிரெஸ், இங்கிலாந்தில் உள்ள எஸ்செக்ஸ் பல்கலைக் கழகத்தில் படித்தவர். இந்தியாவில் உள்ள ஸ்பாட்டிஸ்ட்டிக்கல் இன்ஸ்டிடியூட்டில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் பெற்றவர். வளர்ச்சிப் பொருளாதாரம் குறித்த துறையில் ஆர்வத்துடன் செயல்படுபவரான ஜீன் டிரெஸ், நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென்னுடன் இணைந்து வறுமை ஒழிப்பு குறித்து புத்தகம் எழுதியவர். டெல்லி ஸ்கூல் ஆஃப் எக்னாமிக்ஸ், ராஞ்சி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்று கிறார். காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது, பொருளாதார ஆய்வுக் குழு உறுப்பினராக இருந்தார். மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தைக் கொண்டுவந்து, கிராமப்புறங்களில் உள்ள ஏழை மக்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்க காரணமாக இருந்தவர் இவர்தான்.
டாக்டர் எஸ். நாராயண்
சென்னையைச் சேர்ந்த டாக்டர் எஸ். நாராயண் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி. 1965 முதல் 2004-ஆம் ஆண்டு வரை மாநில அளவிலும், மத்திய அரசிலும் பல்வேறு துறைகளில் உயர்பதவி வகித்தவர். நிதி, தொழில் மற்றும் வர்த்தகத்துறை, எரிபொருள், விவசாயம், கப்பல் போக்குவரத்து, சாலைவசதி போன்ற பல்வேறு துறைகளில் தலைமை வகித்தவர். பல்வேறு அமைச்சரவையில் பல்வேறு நலத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கின் ஆலோசகராக இருந்தவர்.