சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை அரசின் பல்வேறு சிறப்புத் திட்டங்களை ஒருங்கிணைத்து செயல்படுத்தவும், அவற்றைக் கண்காணிக்கவும் இதற்கெனத் தனியாக ஒரு துறை தமிழக வரலாற்றிலேயே முதன்முறையாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. தமிழக அரசு பல்முனை சிறப்புத் திட்டங்களை அறிவியல் தொழில்நுட்பம் மூலம் செயல்படுத்தி அனைத்துத் தரப்பினரும் சமூக-பொருளாதார வளர்ச்சியும் மேம்பாடும் பெற்ற ஒரு புதுயுகத்தை நோக்கி மாநிலத்தை அழைத்துச் செல்ல விழைந்துள்ளது.
வேளாண்மை, கல்வி, நீர், சுகாதாரம், ஊரக வளர்ச்சி, தொழில்கள் மற்றும் கட்டமைப்புப் போன்ற முக்கிய துறைகளின் சீரான திட்டமிடப்பட்ட, நீடித்த வளர்ச்சியினை அடைய இத்துறை தொடர்புடைய துறைகளுடன் இணைந்து செயலாற்றும்.
இத்துறையானது, அனைத்துத் தரப்பு மக்களும் பொருளாதார வளர்ச்சியில் ஏற்றம் பெற, குறிப்பாக ஏழைகள் மற்றும் மகளிர் பயனுறும் வகையில் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கான சமூகப் பாதுகாப்புத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.
தொடர்புடைய துறைகளை ஒருங்கிணைத்து, அரசின் பல்வேறு சிறப்புத் திட்டங்களின் செயலாக்கத்தைக் கண்காணித்தல்.
கள ஆய்வுகளை மேற்கொள்ளுதல் மற்றும் குறித்த காலங்களில் மாவட்ட அளவில் ஆய்வுக் கூட்டங்கள் மற்றும் கலந்தாய்வுகள் நடத்துதல்.
சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை அலுவலர்களை, களப்பணி ஆய்வுகளை அடிக்கடி மேற்கொள்ளச் செய்து, திட்டங்களின் தரம் மற்றும் திறன் விவரங்களை ஆராய்ந்து அவை குறித்த கருத்துக்களை அரசிற்கு இத்துறை அளிக்கும். மேலும், திட்டங்களின் செயலாக்கத்தைச் செம்மைப்படுத்தி, மேம்படுத்தும் வழிமுறைகளை, தேவைப்படும்போது அரசிற்கு இத்துறை பரிந்துரைக்கும். இத்துறை, பிற துறைகளுடன் இணைந்து செயலாற்றுவதுடன், கள ஆய்வு விவரங்களின் அடிப்படையில், திட்டங்களில் எதிர்பார்க்கப்படும் பயன்களைப் பெற, உரிய கொள்கை மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை வகுப்பதற்கான தக்க பரிந்துரைகளை வழங்கும்.
அரசின் பல்வேறு சிறப்புத் திட்டங்கள் செவ்வனே செயல்படுத்தப்படுவதைக் கண்காணிக்கும் அமைப்பாக இத்துறை செவ்வனே செயல்படும்.
மனித வள மேலாண்மைத் துறை
டி.ஏ. வர்கீஸ், ஐ.சி.எஸ்., தலைமையில் அமைக்கப்பட்ட நிர்வாகச் சீர்திருத்த ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில், அரசுத் துறைகளினிடையே மனித வளங்களை திறம்பட நிருவகிக்கும் வண்ணம், 1976-ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் ஆறாம் நாள் பொதுத்துறையிலிருந்து சில பொருண்மைகளைப் பிரித்து பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை உருவாக்கப்பட்டது.
பணியாளர்கள் மூலமாகவே ஒரு நிறுவனம் நிமிர்ந்து நிற்கிறது.
அவர்கள் வியர்வையாலும் உழைப்பாலும், முயற்சியாலும் அது முன்னேற்றமடைந்து இலக்குகளை நோக்கிப் பயணித்து, நோக்கத்தை அடைந்து வெற்றி பெறுகிறது. இதுகாறும் இத்துறைக்குப் “பணியாளர் நிர்வாகம்” என்ற பழம் பெயரே வழங்கப்பட்டு வந்தது. பணியாளர்கள் சமன்செய்து சீர்தூக்கும் துலாபாரங்கள் ; நேர்மையாக நிர்வாகத்தை நடத்திச்செல்ல வேண்டிய கட்டளைக்கற்கள்; திறமையால் பளிச்சிட வேண்டிய வைரக்கற்கள்; அடுத்தவர்களை மதிப்பீடு செய்ய வேண்டிய எடைக்கற்கள்; ஏழைகளின் வாழ்வு முன்னேற உதவ வேண்டிய படிக்கற்கள்; அத்தகைய பணியாளர்கள் நிர்வாகத்தின் மனித வளமாகக் கருதப்பட வேண்டும், நிறுவனத்தின் சொத்துக்களாக மதிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை என்ற பெயரை ‘மனிதவள மேலாண்மைத் துறை’ என்று 30.06.2021 அன்று மாற்றியமைத்திருக்கிறார்கள்.
மனிதவள மேலாண்மையில், நியமனம், பயிற்சி, மேம்பாடு, ஊக்கம் அளித்தல், நெறிமுறைப்படுத்துதல் போன்ற அனைத்துப் பணிகளும் அங்கங்களாக இருக்கின்றன. இவற்றைத் தமிழகத்தில் இருக்கிற அரசுப் பணியாளர்களுக்கு நிகழ்த்துகின்ற நிறுவனங்கள் அனைத்தும் இந்தத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகின்றன.
இத்துறையின் முக்கிய பணிகளை நான்கு தொகுதிகளாக பின்வருமாறு வகைப்படுத்தலாம்:-
சட்டபூர்வமான பணிகள்-சட்டங்களை நிர்வகித்தல்
சட்டங்கள், விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கும், அரசு வழங்கும் சேவைகளுக்குமான இணைப்பு உயிரோட்டமான ஒன்று. இது, பரந்த செயல்பாட்டு எல்லைகளைக் கொண்ட அரசுப் பணிகளின் தரத்தின் மூலம் வெளிப்படுகிறது. எனவே, சட்டபூர்வ மற்றும் நிர்வாக வரையறைகளை, முன்னேற்றத்திற்கு வித்திடும் வகையிலும் சமச்சீர் மரபை பேணிடும் வகையிலும் நிர்வகிப்பதன் மூலம் அரசின் செயல்பாடுகளில் ஒழுங்குமுறை உறுதிப்படுத்தப்படுகிறது. இத்துறை தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் (பணி நிபந்தனைகள்) சட்டம், 2016 ளதமிழ்நாடு சட்டம் எண். 14/2016ன மற்றும் தமிழ்நாடு லோக்ஆயுக்தா சட்டம், 2018 (தமிழ்நாடு சட்டம் எண். 33/2018) ஆகிய சட்டங்களை நிர்வகிக்கிறது.
நிர்வாகப் பணிகள் அனைத்து அரசுத் துறை அலகுகளின் அன்றாட நிர்வாகத்தில் பணிகள் மற்றும் ஒழுக்கம் தொடர்புடைய பின்வரும் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் பின்பற்றப்படுவதை இத்துறை உறுதி செய்கிறது.
தற்போதுள்ள விதிகள்/ஒழுங்கு முறைகள், அவ்வப்போது மறுபரிசீலனை செய்யப்பட்டு, தேவையற்ற பகுதிகள் நீக்கப்பட்டு, நாளது தேதிவரையிலான திருத்தங்கள்மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் மூலம் பணியாளர் களிடையே பணி அமைப்பின் முக்கியத்துவம் மற்றும் அதன் இலக்குகள் வலியுறுத்தப்பட்டு தெளிவுப்படுத்தப் படுகிறது.
ஆலோசனை வழங்கும் பணிகள்
அரசுப் பணிகளில் ஒரே மாதிரியான நடைமுறைகளைப் பராமரிக்கும் பொருட்டு தமிழ்நாடு அரசு அலுவல் விதிகள் மற்றும் தலைமைச் செயலக அறிவுறுத்தங்களின் கீழ் பின்வரும் நேர்வுகள் உள்ளிட்ட பல்வேறு நேர்வுகளில் மனிதவள மேலாண்மைத் துறையை தலைமைச் செயலகத் துறைகள் கலந்தாலோசிக்கின்றன:-
தமிழ்நாடு மாநிலப் பணிகள் மற்றும் தமிழ்நாடு தலைமைச் செயலகப் பணிகளில் உள்ள பல்வேறு பதவிகளுக்கு காலிப் பணியிட மதிப்பீடு மற்றும் தேர்ந்தோர் பெயர் பட்டியல் தயாரித்தல்; அரசுப் பணியாளர்களின் பணி வரன்முறை மற்றும் தகுதிகாண் பருவ விளம்பல் நேர்வுகளில் வழிகாட்டுதல் தெளிவுரைகள் வழங்குதல்; அடிப்படை விதிகளில் தெளிவுரை வழங்குதல்; முதுநிலை திருத்தம் தொடர்பான கருத்துருக்களை ஆய்வு செய்தல்;
சிறப்பு / தற்காலிக விதிகளை உருவாக்குதல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ளும் நேர்வுகளில் ஆலோசனை வழங்குதல்;
அரசுப்பணியாளர்களின் மீதான ஒழுங்கு நடவடிக்கைகள் குறித்த நேர்வுகளில் ஆலோசனை வழங்குதல்.
பயிற்சி அரசுப் பணியாளர்களின் அன்றாட பணிகளிலும் அவர்கள் எதிர்காலத்தில் வகிக்கவேண்டிய பொறுப்புகளிலும் பணித்திறனை மேம்படுத்த, பயிற்சி அளித்தல் இத்துறையின் முக்கியமான செயல்பாடாகும். அரசுப் பணியாளர்கள் பணியில் சேரும்பொழுதே, அவர்களின் அடிப்படை திறனை வளர்த்துக் கொள்ளவும், குறிப்பிட்ட துறைகளில் அவர்களின் திறமையையும், மதிப்பையும் கூட்டவும், சவால்களை எதிர்நோக்கும் திண்ணம் கொண்டவர் களாக மேம்படுத்தவும், அவர்களுக்கு பல்வேறு வகையான பயிற்சிகளான அனைத்து அரசுப் பணியாளர்களுக்கும் பணியில் சேரும் போது அடிப்படை பயிற்சி; பணியில் உள்ள அரசுப்பணி யாளர்களுக்கு கட்டாயப்பயிற்சி; தேவைக்கேற்ற புத்தாக்கப் பயிற்சிகள் (தகவல் அறியும் உரிமை சட்டம், மின் ஆளுமை, இணைய பாதுகாப்பு, போன்றவை) அளிக்கப்படுகின்றன. பொதுப்பணிகளில் பல்வேறு நிலைகளில் உள்ள பதவிகளுக்கான தேர்வுகளில் தேர்ச்சிப்பெற ஏதுவாக தமிழக இளைஞர்களுக்கு இத்துறையால் ஆயத்த பயிற்சி அளிக்கப்படுகிறது திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை மாநிலத்திற்கான ஆண்டுத் திட்டங்கள் மற்றும் ஐந்தாண்டுத் திட்டங்களைத் தயாரித்தல், மாநிலத் திட்டச் செலவினங்கள், இருபது அம்சத் திட்டம் மற்றும் மத்திய அரசு பொறுப்பேற்கும் திட்டங்கள் ஆகியவற்றை கண்காணித்து ஆய்வு செய்தல் திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறையின் முதன்மை பொறுப்புகளாக இருந்தன. தற்பொழுது, வரவு செலவுத் திட்டத்தில், திட்டம் மற்றும் திட்டம் சாராத பகுதிகள் ஒன்றாக சேர்க்கப்பட்டு, மத்திய திட்டக் குழுவிற்கு பதிலாக, நிதி ஆயோக் (சஒபஒ ஆஹஹ்ர்ஞ்) என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு, நீடித்த நிலைத்த வளர்ச்சிக்கான இலக்குகள், முதன்மையான நோக்கமாக உருவாக்கப் பட்டுள்ளது. நிதி ஆயோக்கைத் தொடர்ந்து, இத்துறை நீடித்த நிலைத்த வளர்ச்சிக்கான இலக்குகள், குறிக்கோள்கள் மற்றும் குறியீடுகளை அடைவதற்கு மிகுந்த கவனம் செலுத்துகிறது. மேலும், வளர்ச்சி சார்ந்த திட்டங்களுக்கான நீண்டகால செயல் உத்திகள் அடிப்படையில் இலக்கு நிர்ணயித்தல், இடைப்பட்ட காலங்களில் செயல்படுத்த தேவையான வளர்ச்சி சார்ந்த திட்டங்களை முன்னிலைப்படுத்தல் மற்றும் அம்முயற்சிகளில் கொள்கை ஒருங்கிணைப்பினை உறுதிப்படுத்துதல் ஆகிய மாற்றங்களை உருவாக்குவதே இத்துறையின் முதன்மைப் பணியாகும்.
முழுமையான வளர்ச்சி இலக்குகளை அடைவதற்காக, பல்வேறு அரசுத் துறைகளுடன் ஒருங்கிணைந்து, மாநில அளவிலான பல்வேறு துறைகள் சார்ந்த குழுவின் உறுப்பினராக இருந்து, வளர்ச்சித் திட்டங்கள் குறித்த கோப்புகளை இத்துறை கூர்ந்தாய்வு செய்கின்றது.
இத்துறை நிதி ஆயோக் (சஒபஒ ஆஹஹ்ர்ஞ்)உடன் கலந்துரையாடும் மாநில அரசின் முகமைத் துறையாகும். மேலும், அரசு மேற்கொள்ளும் புதிய முயற்சிகளுக்குத் தேவையான ஒருங்கிணைப்பு பணிகளையும், துறைகளிடமிருந்து பெறப்படும் பொருண்மைகள் குறித்த நடப்பு நிலையைப் பிரகதியின் கீழ் (டதஆஏஆபஒ) பதிவேற்றம் செய்கிறது.
இத்துறை, அரசின் புதிய முயற்சிகளின் செயலாக்கத்திற்காக தொடர்புடைய பல்வேறு துறைகளின் செயல்களை ஒருங்கிணைக்கிறது.
மாநிலத் திட்டக் குழு, பொருள்இயல் மற்றும் புள்ளிஇயல் துறை மற்றும் மதிப்பீடு மற்றும் செயல்முறை ஆராய்ச்சித் துறை வல்லுநர்களின் சிறப்புத் திறமைகளை பயன்படுத்தியும் கொள்கைகளுக்கான ஆலோசனைகளை வழங்குகிறது. மேலும், தமிழ்நாடு புத்தாக்க முயற்சி வழியாக ஆதாரங்களின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட கொள்கைகளுக்கு திட்டச் செயலாக்கம் அளிக்கிறது.
மேலும், சிறப்பு முயற்சிகள் திட்டத்தின்கீழ் மேற்பார்வையிடப்பட்டு வரும் சென்னை மெட்ரோ இரயில் திட்டம் மற்றும் சில புதிய சிறப்பு முயற்சிகளாக (சங்ஜ் நல்ங்ஸ்ரீண்ஹப் ஒய்ண்ற்ண்ஹற்ண்ஸ்ங்ள்) முக்கியமான உட்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சி குறித்த திட்டங்களின் முன்னேற்றத்தை வேகப்படுத்தும் முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றது.
முக்கிய நடவடிக்கைகள் நீடித்த நிலைத்த வளர்ச்சிக்கான இலக்குகளை 2030-இல் அடைய மாநில அரசின் முயற்சிகளுக்கு அனைத்துதுறைகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுதல் நிதி ஆயோக் (சஒபஒ ஆஹஹ்ர்ஞ்) அமைப்புடன் இணைந்து நீண்ட கால செயல் உத்திகளை செயல்படுத்துதல் மற்றும் இடைப்பட்ட கால செயல்பாட்டுத் திட்டமிடுதலை நடைமுறைப்படுத்துதல் முன்னேற விழையும் மாவட்ட திட்டத்தினை (ஆள்ல்ண்ழ்ஹற்ண்ர்ய்ஹப் உண்ள்ற்ழ்ண்ஸ்ரீற்ள் டழ்ர்ஞ்ழ்ஹம்ம்ங்) மாநில அளவில் ஒருங்கிணைத்தல் மற்றும் கண்காணித்தல் வளர்ச்சிக் குறியீட்டை அளவிடுதல் மற்றும் பெரிய திட்டங்களை மதிப்பீடு செய்தல் மாநிலத் திட்டக் குழுவினரால் நிலம் மற்றும் நீர் பயன்பாடு குறித்து குறிப்பான திட்டங்களின் தயாரிப்பு மற்றும் செயல்பாடுகள் மீது ஆய்வுகள் மேற்கொள்ளுவதைக் கண்காணித்தல் இருபது அம்சத் திட்டத்தின் கீழ் பல்வேறு துறைகள் மற்றும் அமைப்பு களால் செயல்படுத்தப்படும் கண்காணிக்கப்பட வேண்டிய பல்வேறு இனங்கள் மற்றும் திட்டங்கள் குறித்து தகவல்கள் சேகரித்தல் மற்றும் தொகுத்தல் தமிழ்நாடு புத்தாக்க முயற்சிகளை நிர்வகித்தல் பொருளாதார மற்றும் சமூகக் காரணி களின் அடிப்படையில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளின் சீரான வளர்ச்சியை உறுதி செய்யும் பொருட்டு மாநில சமச்சீர் வளர்ச்சி நிதி மூலமாக செயல்படுத்தப்படும் திட்டங்களை மேற்பார்வையிடல் மலைப்பகுதி மேம்பாட்டுத் திட்டம் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலை மேம்பாட்டுத் திட்டங்களுக்கு மாற்றாக, 2015-2016 -ஆம் ஆண்டு முதல் சிறப்புப் பகுதி மேம்பாட்டுத் திட்டத்தினை செயல்படுத்துதல் பெரிய உள் கட்டமைப்பு திட்டங்களின் முன்னேற்றம் குறித்து தலைமைச் செயலாளரால் சீராய்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளுதல் பல்வேறு அரசுத் துறைகளை உள்ளடக்கிய சிறப்பு மற்றும் புதுமை யான திட்டங்களைச் செயல்படுத்து வதற்காக ஒருங்கிணைந்து செயல்படுதல் மாவட்ட திட்டக் குழுவின் ஒரு அங்கமாக செயல்படும் மாவட்ட திட்டப் பிரிவின் மூலமாக மாவட்டத்தின் வளர்ச்சி திட்டங்களை மேற்பார்வையிடுதல் அரசுத் துறைகளில் ஆதாரங்கள் அடிப்படையிலான கொள்கை உருவாக்கத்தை மேம்படுத்துதல்.
மாநில வருவாய் மதிப்பீடுகள், பொருளாதாரக் கணக்கெடுப்பு, வேளாண் கணக்கெடுப்பு, சமூகப் பொருளாதார ஆய்வுகள், சிறப்பு ஆய்வுகள், வயது முதிர்ந்தோரின் வாழ்வாதாரம் குறித்த ஆய்வு, மாநில பொருளாதாரத்தின் மாதாந்திர அறிக்கைகள் ஆகியவை குறித்து, பொருள் இயல் மற்றும் புள்ளி இயல் துறை மூலம் பொது மற்றும் தனியார் துறைகளிடமிருந்து புள்ளி விவரங்களை சேகரித்தல், தொகுத்தல் மற்றும் பரவச் செய்தல் வளர்ச்சித் திட்டங்கள், மத்திய அரசு பொறுப்பேற்கும் திட்டங்கள், வெளிநாட்டு நிதி உதவி பெறும் திட்டங்கள் ஆகியவற்றை மதிப்பீடு மற்றும் செயல்முறை ஆராய்ச்சித்துறை மூலமாக மதிப்பீடு செய்தல் மாநிலத் திட்டக் குழு, பொருள் இயல் மற்றும் புள்ளி இயல் துறை மற்றும் மதிப்பீடு மற்றும் செயல்முறை ஆராய்ச்சித் துறை ஆகிய துறைகள் செயல்படுவதற்கான நிர்வாக வசதிகள் செய்தல் சிறப்பு முயற்சிகள் திட்டத்தின் கீழ் ‘மெட்ரோ இரயில் திட்டம்’ போன்ற புதிய மற்றும் சிறப்பு திட்டங்களை செயல்படுத்துதல் புதிய சிறப்பு முயற்சிகளாக முக்கியமான உள் கட்டமைப்பு மற்றும் வளர்ச்சி குறித்த திட்டங்களின் முன்னேற்றத்தை வேகப்படுத்தும் முயற்சிகளை மேற்கொள்ளுதல்.