ஜி20 கூட்டமைப்பின் 18-வது உச்சி மாநாடு டெல்லி-யில் செப்டம்பர் 9, 10 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இந்தியாவில் முதன்முறையாக ஜி20 மாநாடு நடைபெறுவதால், அதற்கான ஏற்பாடுகளை, கடந்த சில மாதங்களாக மத்திய அரசு செய்துவந்தது. டெல்-லி பிரகதி மைதானத்திலுள்ள பாரத் மண்டபம் மாநாட்டுக்காகத் தேர்வுசெய்யப்பட்டது.
அந்த மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உட்பட ஜி20 கூட்டமைப்பின் தலைவர்கள் பங்கேற்றனர். சீன அதிபர் ஜி ஜின்பிங் மாநாட்டுக்கு வரவில்லை.
மாநாட்டின் முதல் நாளில் கூட்டுப் பிரகடனம் வெளியிடப்பட்டது. ‘பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்களையும் ஜி20 நாடுகள் கண்டிக்கின்றன. பயங்கரவாத அமைப்பு களுக்கு எந்தவித நிதி உதவியும், பொருள் உதவியும், அரசியல் ஆதரவும் அளிக்கக் கூடாது. பயங்கரவாத நிதித்தடுப்புக்குழுவின் செயல்பாடு களுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்குவது’ என்ற பிரகடனம் வெளியிடப்பட்டது.
ஊழல் நடவடிக்கைகள் மீதான சகிப்பின்மைக்கு ஜி20 நாடுகள் உறுதியேற்றன. ஊழலை ஒழிப்பதில் சர்வதேச ஒத்துழைப்பு, சொத்து மீட்பு நடவடிக்கையில் ஒத்துழைப்பு, ஊழல் கண்காணிப்பு தடுப்பு அமைப்புகளை வலுப்படுத்துவது, இவற்றில் ஒருங்கிணைந்து செயல்படுவது என்று மாநாட்டில் முடிவெடுக்கப்பட்டது.
ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், “டெல்-லியில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாடு ஒரு மைல் கல். இது ஒரு திருப்புமுனை உச்சி மாநாடு, இது பல முக்கியத் துறைகளில் முன்னேற ஒரு வழியை வழங்குகிறது. ஜி20 மாநாட்டை அரசியலாக்கும் முயற்சிகள் தடுக்கப்பட்டன. உக்ரைனில் நடந்த போர் பற்றி ஜி20 நிகழ்ச்சி நிரலி-ல் எடுத்துக்கொள்ள அனுமதி கொடுக்கப்படவில்லை. உச்சி மாநாட்டின் நிகழ்ச்சி நிரலை உக்ரைன்மயமாக்கும் மேற்கத்திய நாடுகளின் முயற்சிகளை எங்களால் தடுக்க முடிந்தது” என்றார்.
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், “ஜி20 மாநாட்டில் உலக நாடுகளின் தலைவர்கள் ஒருமனதாக வெளியிட்ட கூட்டறிக்கையில், ரஷ்யா தனிமைப்படுத்தப்பட்டிருப்பது உறுதியாகியிருக்கிறது. பெரும்பாலான ஜி20 நாடுகள் உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பைக் கண்டித் திருக்கின்றன. ரஷ்யா இன்னும் போரை நடத்திக்கொண்டிருக்கிறது. பிராந்தியங்களைக் கையகப்படுத்து தலுக்கான அச்சுறுத்தலையும் தவிர்க்க வேண்டும். ஜி20 மாநாடு உக்ரைனில் நியாயமான மற்றும் நீடித்த அமைதி நிலவ உறுதியேற்றிருக்கிறது. பிரதமர் மோடிக்கு நன்றி'' எனக் குறிப்பிட்டார்.
இந்தியா தரப்பில், “ஜி20 மாநாடு என்பது புவிசார் அரசியல் மற்றும் பாதுகாப்புப் பிரச்னைகளைத் தீர்க்கும் தளமல்ல. இது உலகப் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்தும் முயற்சி. காலநிலை நெருக்கடி பற்றிப் பேசவே இங்கு கூடியிருக்கிறோம். எனவே, ஜி20 மாநாடு மற்ற விஷயங்களில் சிக்கிக்கொள்ளக் கூடாது'' எனத் தெரிவிக்கப்பட்டது.
உலகத் தலைவர்களுக்கு குடியரசுத் தலைவர் அளிக்கும் விருந்து தொடர் பான அழைப்பிதழில், ‘இந்தியா’ என்பதற்கு பதிலாக, ‘பாரத்’ என்று அச்சிடப்பட்டிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், மாநாட்டில் பிரதமர் மோடிக்கு முன்பாக வைக்கப்பட்டிருந்த பெயர்ப் பலகையில் ‘இந்தியா’ என்பதற்கு பதிலாக ‘பாரத்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது அந்த மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உட்பட ஜி20 கூட்டமைப்பின் தலைவர்கள் பங்கேற்றனர். சீன அதிபர் ஜி ஜின்பிங் மாநாட்டுக்கு வரவில்லை. இது குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, ‘சீன அதிபர் மாநாட்டில் பங்கேற்றிருந்தால் நன்றாக இருந்திருக்கும். மாநாடு சிறப்பாகவே நடந்துகொண்டிருக்கிறது’ என்று பதிலளித்தார்.
புது டெல்லி-யில் புதிதாகக் கட்டப்பட்ட பாரத் மண்டபத்தின் முதல் விருந்தினர் பெருமையை உலகப் பெருந்தலைவர்கள் பெற்றுள்ளனர். ஜி20 என்பது, 19 நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தை உள்ளடக்கிய பன்னாட்டு அமைப்பாகும். இதற்கென நிலைப்பட்ட செயலகமோ, தலைவரோ கிடையாது.
ஒவ்வொரு ஆண்டும் ஜி20 உறுப்பினர் களில் ஒரு நாடு தலைமை ஏற்று பல செயல் திட்டங்களை தீர்மானித்து நடத்துகின்றன. ஆண்டுதோறும் வெறும் நிகழ்வாக கடந்து செல்லும் இந்த ஆலோசனைக் கூட்டங்கள் இந்த ஆண்டு, ஒரு திருவிழாவாக கொண்டாடப்பட்டது. இது பாரதத்தின் திருவிழா. பாரதத்தின் பண்பாட்டை உலகிற்கு பறைசாற்றும் பெருவிழா.
இந்தியாவின் அனைத்து மாநிலங்களின் 60 நகரங்களில் நடத்தப்பட்ட இதன் ஆலோசனைக் கூட்டங்கள், இந்தியாவின் கலாச்சார பன்முகத்தை பறைசாற்றியது.
உண்மையில், காஷ்மீரத்தை பாகிஸ்தானும், அருணாச்சலப் பிரதேசத்தை சீனாவும் சொந்தம் கொண்டாட முயல்கின்றன. இச்சூழ-லில், இவ்விரண்டு மாநிலங்களின் ஆலோசனைக் கூட்டங்களும் ஆழ்புலக் கட்டுறுதியை சர்வதேச நாடுகளுக்கு குறிப்புணர்த்திவிட்டன.
குறிப்பாக, இந்திய சுற்றுலாத் துறையின் நோக்கம் அயல் நாடுகளுக்கான விளம்பர செலவின்றி நிறைவேறியது. இது தவிர ஜி20 ஆலோசனைக் கூட்டங்களால் இந்தியாவுக்குக் கிடைத்தது என்ன? உலகுக்கு கிடைத்தது என்ன? எனவும் பார்க்க வேண்டி உள்ளது.
உலகின் வளர்ந்த நாடுகள் பொருளாதார மந்த சூழ்நிலையில் தவிக்க, இந்தியாவின் பொருளாதாரம் வளர்ந்து கொண்டே இருக்கிறது. இந்தியாவுக்கு இணையாக வளர்ந்து கொண்டிருந்த சீனப் பொருளாதாரம் கூட மந்தநிலையை நோக்கி நகர்வது உலக நாடுகளை கலக்கப்படுத்தி உள்ளது.
தற்போது, இருளடைந்த உலகின் பொருளாதார வானில் இந்தியா மட்டுமே நம்பிக்கை நட்சத்திரமாக ஜொ-லிக்கிறது. இதனால், இந்தியாவின் அறைகூவலை உலக நாடுகள் ஏற்க தயாராகிவிட்டன. இந்தியாவின் அறைகூவல் தனக்கானது அல்ல வளர்ந்து வரும் நாடுகளுக்குமான ஒட்டுமொத்த குரல். இந்தியா தான் நடந்து வந்த பாதையை மறக்கவில்லை.
அது சந்தித்த சோதனைகளும், போராட்டங்களும் வளரும் நாடுகள் இன்றும் சந்திப்பதை காண்கின்றது. குறிப்பாக சூழ்நிலை பிறழ்வும், உலக வர்த்தக நடைமுறை பேதங்களும் வளரும் நாடுகளாலேயே அதிகம் தாக்குகின்றன. இதை இந்தியா தொடர்ந்து சுட்டிக் காட்டிக்கொண்டே இருக்கிறது. புதுடெல்லி-லியின் பாரத் மண்டபத்தில் நடந்த ஜி20 மாநாட்டில் இந்தியா இதை அறைகூவலாகவே விடுத்தது.
வெளிநாட்டு முதலீடு, உலகின் தரம் வாய்ந்த தொழில்நுட்பம், உலக உற்பத்தி சங்கி-லியின் சிரத்தன்மை ஆகியன இந்தியாவின் வளர்ச்சிக்கு இன்றியமையாதது. இந்த ஜி20 மாநாடு, இந்தியா இத்தகைய விஷயங்களையும் உலக தலைவர்களுடன் விவாதிக்கும் நடைமேடையாக அமையும்.
இந்த ஆண்டின் பல்வேறு ஜி20 ஆலோசனைக் கூட்டங்களுக்கு இடையே முதன்முறையாக இந்தியா, ‘ஸ்டார்ட் அப் ஜி20’ என்ற அமைப்பை ஏற்படுத்தி குருகிராமில் நடத்தியது.
இது மட்டுமன்றி, இந்தியாவின் ஜி20 ஆலோசனைக் கூட்டங்களில் முதன்முறையாக பல முக்கிய தலைப்புகள் முன்னிறுத்தப்பட்டன. பேரிடர்களில் குறைந்த தாக்கம், சிறுதானிய முக்கியத்துவம், சைபர் பாதுகாப்பு, பெண்கள் தலைமையிலான வளர்ச்சி, பாரம்பரிய மருத்துவத்தின் வளர்ச்சி உள்ளிட்டவை இடம் பெற்றிருந்தன.
இத்தகைய விவாத முன்னெடுப்புகள் நமது தேச நலன்களோடு, உலக நலன் காப்பதிலும் முக்கிய பங்காற்றும். இந்த ஆண்டு துவக்கத்திலிருந்து இந்தியா, ‘ஒரே பூமி ஒரே குடும்பம் ஒரே எதிர்காலம்' என்ற குறிக்கோளை நோக்கமாகக் கொண்டு ஜி 20 ஆலோசனைக் கூட்டங்களில் செயலாற்றியது.