13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் சென்னை, புதுடெல்லி, மும்பை, கொல்கத்தா, புனே, பெங்களூரு, லக்னோ, அகமதாபாத், தரம்சாலா, ஹைதராபாத் ஆகிய நகரங்களில் நடைபெற்றது.

மொத்தம் 10 அணிகள் பங்கேற்ற இத்தொடர். அக்டோபர் 5 முதல் நவம்பர் 19 வரை நடைபெற்றது.

இந்திய அணி லீக் சுற்றில் தான் பங்கேற்ற அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி பெற்று சாதனை படைத்தது.

லீக் சுற்றுகளின் முடிவில் இந்தியா, நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 4 அணிகள் அரை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.

Advertisment

wd

இதில் இந்தியா 70 ரன்கள் வித்தியாசத் தில் நியூசிலாந்து அணியையும், ஆஸ்திரேலியா 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வையும் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.

Advertisment

உலகக் கோப்பை யாருக்கு என்பதை தீர்மானிக்கும் இறுதிப் போட்டியில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் மோதின.

இந்த ஆட்டம் உலகின் மிகப்பெரிய மைதானமான 1.30 லட்சம் பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய அகமதாபாத் தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி 6-வது முறையாக கோப்பையை கைப்பற்றியது.

ஆஸ்திரேலியா இதற்கு முன் (1987, 1999, 2003, 2007, 2015) ஆகிய ஆண்டுகளில் கோப்பையை வென்றிருந்தது.

11 ஆட்டங்களில் 765 ரன்கள் குவித்த இந்திய வீரர் விராட் கோலி இத்தொடரின் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 11 ஆட்டங்களில் 597 ரன்கள் எடுத்து இரண்டாவது இடத்தை பிடித்தார்.

இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி 7 ஆட்டங்களில் 24 விக்கெட்டுகளை வீழ்த்தி பந்துவீச்சாளர்களில் முதலிடத்தை பெற்றார்.

இந்த ஆட்டம் உட்பட, இந்த உலகக் கோப்பை தொடர் முழுவதையும் 1.25 மில்லியன் ரசிகர்கள் நேரில் கண்டுகளித்தனர்.

45 நாட்கள் நடந்த இந்த தொடரை கிட்டத்தட்ட 12,50,307 ரசிகர்கள் மைதானத்துக்கு வந்து பார்த்துள்ளனர். இது உலக சாதனையாக மாறியுள்ளது.

கடந்த 2015-இல் ஆஸ்திரே-லியா மற்றும் நியூசிலாந்தில் நடந்த உலகக் கோப்பை தொடரை 1,016 மில்லியன் மக்கள் பார்த்ததே சாதனையாக இருந்தது.

தற்போது அதனை இந்தியாவில் நடந்த உலகக் கோப்பை தொடர் முறியடித் துள்ளது. விளையாட்டு வரலாற்றில் மிகப்பெரிய ஐசிசி நிகழ்வுகளில் ஒன்றாக இது மாறியுள்ளது.

13-வது உலக கோப்பை தொடரில் அரங்கேறிய முக்கிய சாதனைகள்

ஒரு உலக கோப்பை தொடரில் அதிக முறை 50-க்கும் மேல் ரன் எடுத்த வீரர் ஆனார் இந்தியாவின் கோலி (8). இவர் 3 சதம், 5 அரைசதம் அடித்தார். சச்சின், சாகிப் (வங்கதேசம்) தலா 7 முறை இதுபோல அடித்து இருந்தனர்.

ஒரு உலக கோப்பை தொடரில் அதிக ரன் எடுத்த வீரர் ஆனார் கோலி (765). 2003 தொடரில் சச்சின் 673 ரன் எடுத்ததே அதிகபட்ச சாதனையாக இருந்தது.

நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதி யில் 117 ரன்கள் எடுத்த கோலி, ஒருநாள் அரங்கில் 50-வது சதத்தை அடித்து சாதனை படைத்தார். (279 இன்னிங்ஸ்) இதற்கு முன் சச்சின் 452 இன்னிங்சில் அடித்திருந்த (49 சதம்) இதன் மூலம் முறியடித்தார்.

உலகக் கோப்பையில் அதிக சிக்சர்கள் (54) அடித்த வீரர் எனும் சாதனையை இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா படைத்தார். இதற்கு முன் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கிறிஸ் கெய்ல் (49) அடித்ததே சாதனையாக இருந்தது.

உலகக் கோப்பையில் அதிவேகமாக 50 விக்கெட் கைப்பற்றிய பவுலர் எனும் சாதனையை முகமது ஷமி படைத்தார். இவர் 17 போட்டியில் இந்த இலக்கை எட்டினார்.

உலகக் கோப்பை "நாக் அவுட்' போட்டி யில் (எதிர், நியூசி., அரையிறுதி) 7 விக்கெட் சாய்த்த முதல் பவுலர் ஆனார் ஷமி.

குறைந்த பந்துகளில் 50 விக்கெட் சாய்த்த பவுலர்களில் "நம்பர்-1' இடம் பெற்றார் ஷமி. இவர், 795 பந்துகளில் இந்த இலக்கை அடைந்தார்.

அறிமுக உலகக் கோப்பை தொடரில் அதிக ரன் எடுத்த வீரர் ஆனார் நியூசிலாந்தின் ரச்சின் ரவிந்திரா. இவர் 10 போட்டியில் 578 ரன் எடுத்தார்.

பேட்டிங் வரிசையில் 4-வது இடத்தில் களமிறங்கி, உலகக் கோப்பை தொடரில் அதிக ரன் எடுத்த வீரர் எனும் சாதனையை படைத்தார் இந்தியாவின் ஸ்ரேயாஸ் அய்யர். இவர் 11 போட்டியில் 530 ரன் எடுத்தார்.