ஒருங்கிணைந்த தகவல்களை வழங்கும் மென்பொருள் தற்போதைய கொரோனா வைரஸ் (COVID#19) தொற்றுப் பரவல் நமது நாட்டில் உருவாக்கியுள்ள சமூக பொருளாதாரத் தாக்கத்தை மீட்டெடுக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறை (DST) ஒரு மென்பொருளை உருவாக்கியுள்ளது.
அந்த மென்பொருள் புவி சார்ந்த தகவல்கள், தரநிலை சார்ந்த சேவைகள் மற்றும் பகுப்பாய்வுக் கருவிகள் ஆகிய வற்றின் மூலம் உருவாக்கப்பட்டது. இந்திய அளவைத் துறை (சர்வே ஆஃப் இந்தியா) (SoI) தயாரித்து நிர்வகிக்கும் இந்த கைபேசி மென்பொருளான SAHYOG,, மற்றும் அதனுடைய வலைதளமான (https://indiamaps.gov.in/soiapp/)ஆகியவை, கொரோனா வைரஸ் (COVID-19) பரவல், சமூகத் தொடர்புகளின் மூலம் கிடைக்கப் பெற்ற புவிசார் தரவுத் தொகுப்புகளைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இது தொற்று நோய்த் தடுப்புக்கு இந்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளை அதிகரிப்பதற்கான செயல்பாடாகும். தொடர்பு கண்காணிப்பு, பொது விழிப்புணர்வு மற்றும் சுய மதிப்பீட்டு நோக்கங்களுக்காக இந்திய அரசு அறிமுகப்படுத்திய "ஆரோக்கிய சேது' கைபேசி செயலிலியின் பயன்பாட்டை நிறைவு செய்யும் வண்ணம் சஹ்யோக் என்ற இந்தக் கைபேசி மென்பொருள் உள்ளது.
அறிவியல் அடிப்படையிலான இணையதளம் கொரோனா வைரஸ் தாக்கம் குறித்த அச்சம் நாட்டை அதிவேக விகிதத்தில் தாக்கி வரும் நிலையில், நாட்டில் உள்ள விஞ்ஞானிகளும், பொறியியலாளர்களும் இந்தத் தொற்றுநோயின் அனைத்து அம்சங்களையும் புரிந்து கொள்ள இதுவரை கண்டிராத அளவில் தங்களுக்குள் ஒத்துழைப்பை நல்கி வருகின்றனர். இந்தத் தொற்றுப் பரவலிலின் அறிவியல் ரீதியான மற்றும் உண்மை யான அம்சங்களை பொதுக் களத் திற்குக் கொண்டு வருவதற்கென, "கோவிட்ஜியான்' எனப்படும் பல நிறுவன, பல மொழி அறிவியல் தொடர்பு முயற்சி உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த முன்முயற்சி டாடா அடிப்படை அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம், (TIFR), இந்திய அறிவியல் நிறுவனம் (IISC) மற்றும் டாடா நினைவு மையம் (TMC) ஆகியவற்றின் சிந்தனையில் அடிப்படையில் உருவானதாகும். இந்த உன்னத முயற்சியில் முக்கியமான பல பங்களிப்பாளர்களும் இணைந் துள்ளனர். இந்த முன்முயற்சியின் விளைவாக 2020 ஏப்ரல் 03 அன்று ஒரு வலைத்தளம் தொடங்கப்பட்டு செயல்பாட்டிற்கு வந்துள்ளது. கோவிட் ஜியான் என்று பெயரிடப்பட்ட இந்த வலைத்தளம் கோவிட்-19 தாக்குதல் குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக ஆதாரவளங்களின் தொகுப்பை ஒன்றிணைக்கும் மையமாக செயல் படுகிறது. கோவிட் பற்றிய தகவல்களின் உண்மையான ஆதாரமாக இருப்பதுடன் மட்டுமின்றி, பொது விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் இந்த வலைத்தளத்தின் முதன்மை நோக்கமாகும்; இந்த நோயைப் புரிந்துகொள்வதற்கும் அதைத் தணிப்பதற்குமான சாத்தியமான வழிமுறைகளுக்கு ஒரு முழுமையான அணுகுமுறையைக் கொண்டுவருவதும் இதன் நோக்கமாகும். இந்த வலைத்தளத் தின் முகவரி:https://covid#gyan.in இதற்கிடையில், மற்றொரு புதிய முன்முயற்சியாக, பெங்களூருவை மையமாகக் கொண்ட முதல் நிலை உயிரணு அறிவியல் மற்றும் மறுதுளிர்ப்பு மருத்துவ நிறுவனம் (The Institute for Stem Cell Science and Regenerative Medicine - inStem), உயிரியல் அறிவியலுக்கான தேசிய மையம் (The National Centre for Biological Sciences # NCBS), ஆகிய இரண்டு பெரிய அறிவியல் நிறுவனங்களின் மாணவத் தன்னார் வலர்கள் பல உள்ளார்ந்த தகவல் தொடர்பு வழிமுறைகளையும் உதவிக் குழுக்களையும் உருவாக்கியுள்ளனர்.
கோவிட்-19 தொற்றுநோய் குறித்து சமூகத்தில் நிலவி வரும் அச்சங்கள், கவலைகளுக்கு இவை பதிலளிப்பதாக அமையும்.
கோவிட்-19 இந்திய-அமெரிக்க மெய்நிகர் வலைப்பின்னல்
கோவிட்-19 நோய் தொடர்பான கூட்டு ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொண்டு வரும் இந்திய - அமெரிக்க விஞ்ஞானிகள், தங்கள் ஆராய்ச்சிப் பணிகளை தற்போதுள்ள கட்டமைப்புகளையும், நிதியையும் பயன்படுத்தி, மெய்நிகர் வழிவகைகளின் மூலமாக மேற்கொள்ள உதவும் வகையில் கோவிட்-19 இந்திய-அமெரிக்க மெய்நிகர் வலைப்பின்னல் அமைப்பு களை உருவாக்க, திட்டங்கள் வரவேற்கப் படுகின்றன. இந்திய - அமெரிக்க அறிவியல் தொழில்நுட்ப அமைப்பு (IUSSTF) இதை அறிவித்துள்ளது. கோவிட்-19 தொடர்பான மிக முக்கியமான சவால்களை எதிர்கொள் வதற்கும், மேல்நிலையிலான ஆராய்ச்சி களை மேற்கொள்வதற்குமான, இந்திய - அமெரிக்க ஒத்துழைப்பின் மதிப்பையும் பலன்களையும், நன்கு எடுத்துரைக்கும் வகையிலான திட்டங்கள் ஊக்குவிக்கப் படுகின்றன உலகம் முழுவதும் பரவியுள்ள நோயான கோவிட்-19 நோய்க்கு எதிராக உலகமே போராடி வரும் இந்த சமயத்தில், உலக அளவிலான இந்த சவாலை எதிர்கொள்வதற்காக, அறிவியல் தொழில்நுட்ப சமுதாயம் இணைந்து செயல்பட்டு, தங்களத
ஒருங்கிணைந்த தகவல்களை வழங்கும் மென்பொருள் தற்போதைய கொரோனா வைரஸ் (COVID#19) தொற்றுப் பரவல் நமது நாட்டில் உருவாக்கியுள்ள சமூக பொருளாதாரத் தாக்கத்தை மீட்டெடுக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறை (DST) ஒரு மென்பொருளை உருவாக்கியுள்ளது.
அந்த மென்பொருள் புவி சார்ந்த தகவல்கள், தரநிலை சார்ந்த சேவைகள் மற்றும் பகுப்பாய்வுக் கருவிகள் ஆகிய வற்றின் மூலம் உருவாக்கப்பட்டது. இந்திய அளவைத் துறை (சர்வே ஆஃப் இந்தியா) (SoI) தயாரித்து நிர்வகிக்கும் இந்த கைபேசி மென்பொருளான SAHYOG,, மற்றும் அதனுடைய வலைதளமான (https://indiamaps.gov.in/soiapp/)ஆகியவை, கொரோனா வைரஸ் (COVID-19) பரவல், சமூகத் தொடர்புகளின் மூலம் கிடைக்கப் பெற்ற புவிசார் தரவுத் தொகுப்புகளைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இது தொற்று நோய்த் தடுப்புக்கு இந்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளை அதிகரிப்பதற்கான செயல்பாடாகும். தொடர்பு கண்காணிப்பு, பொது விழிப்புணர்வு மற்றும் சுய மதிப்பீட்டு நோக்கங்களுக்காக இந்திய அரசு அறிமுகப்படுத்திய "ஆரோக்கிய சேது' கைபேசி செயலிலியின் பயன்பாட்டை நிறைவு செய்யும் வண்ணம் சஹ்யோக் என்ற இந்தக் கைபேசி மென்பொருள் உள்ளது.
அறிவியல் அடிப்படையிலான இணையதளம் கொரோனா வைரஸ் தாக்கம் குறித்த அச்சம் நாட்டை அதிவேக விகிதத்தில் தாக்கி வரும் நிலையில், நாட்டில் உள்ள விஞ்ஞானிகளும், பொறியியலாளர்களும் இந்தத் தொற்றுநோயின் அனைத்து அம்சங்களையும் புரிந்து கொள்ள இதுவரை கண்டிராத அளவில் தங்களுக்குள் ஒத்துழைப்பை நல்கி வருகின்றனர். இந்தத் தொற்றுப் பரவலிலின் அறிவியல் ரீதியான மற்றும் உண்மை யான அம்சங்களை பொதுக் களத் திற்குக் கொண்டு வருவதற்கென, "கோவிட்ஜியான்' எனப்படும் பல நிறுவன, பல மொழி அறிவியல் தொடர்பு முயற்சி உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த முன்முயற்சி டாடா அடிப்படை அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம், (TIFR), இந்திய அறிவியல் நிறுவனம் (IISC) மற்றும் டாடா நினைவு மையம் (TMC) ஆகியவற்றின் சிந்தனையில் அடிப்படையில் உருவானதாகும். இந்த உன்னத முயற்சியில் முக்கியமான பல பங்களிப்பாளர்களும் இணைந் துள்ளனர். இந்த முன்முயற்சியின் விளைவாக 2020 ஏப்ரல் 03 அன்று ஒரு வலைத்தளம் தொடங்கப்பட்டு செயல்பாட்டிற்கு வந்துள்ளது. கோவிட் ஜியான் என்று பெயரிடப்பட்ட இந்த வலைத்தளம் கோவிட்-19 தாக்குதல் குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக ஆதாரவளங்களின் தொகுப்பை ஒன்றிணைக்கும் மையமாக செயல் படுகிறது. கோவிட் பற்றிய தகவல்களின் உண்மையான ஆதாரமாக இருப்பதுடன் மட்டுமின்றி, பொது விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் இந்த வலைத்தளத்தின் முதன்மை நோக்கமாகும்; இந்த நோயைப் புரிந்துகொள்வதற்கும் அதைத் தணிப்பதற்குமான சாத்தியமான வழிமுறைகளுக்கு ஒரு முழுமையான அணுகுமுறையைக் கொண்டுவருவதும் இதன் நோக்கமாகும். இந்த வலைத்தளத் தின் முகவரி:https://covid#gyan.in இதற்கிடையில், மற்றொரு புதிய முன்முயற்சியாக, பெங்களூருவை மையமாகக் கொண்ட முதல் நிலை உயிரணு அறிவியல் மற்றும் மறுதுளிர்ப்பு மருத்துவ நிறுவனம் (The Institute for Stem Cell Science and Regenerative Medicine - inStem), உயிரியல் அறிவியலுக்கான தேசிய மையம் (The National Centre for Biological Sciences # NCBS), ஆகிய இரண்டு பெரிய அறிவியல் நிறுவனங்களின் மாணவத் தன்னார் வலர்கள் பல உள்ளார்ந்த தகவல் தொடர்பு வழிமுறைகளையும் உதவிக் குழுக்களையும் உருவாக்கியுள்ளனர்.
கோவிட்-19 தொற்றுநோய் குறித்து சமூகத்தில் நிலவி வரும் அச்சங்கள், கவலைகளுக்கு இவை பதிலளிப்பதாக அமையும்.
கோவிட்-19 இந்திய-அமெரிக்க மெய்நிகர் வலைப்பின்னல்
கோவிட்-19 நோய் தொடர்பான கூட்டு ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொண்டு வரும் இந்திய - அமெரிக்க விஞ்ஞானிகள், தங்கள் ஆராய்ச்சிப் பணிகளை தற்போதுள்ள கட்டமைப்புகளையும், நிதியையும் பயன்படுத்தி, மெய்நிகர் வழிவகைகளின் மூலமாக மேற்கொள்ள உதவும் வகையில் கோவிட்-19 இந்திய-அமெரிக்க மெய்நிகர் வலைப்பின்னல் அமைப்பு களை உருவாக்க, திட்டங்கள் வரவேற்கப் படுகின்றன. இந்திய - அமெரிக்க அறிவியல் தொழில்நுட்ப அமைப்பு (IUSSTF) இதை அறிவித்துள்ளது. கோவிட்-19 தொடர்பான மிக முக்கியமான சவால்களை எதிர்கொள் வதற்கும், மேல்நிலையிலான ஆராய்ச்சி களை மேற்கொள்வதற்குமான, இந்திய - அமெரிக்க ஒத்துழைப்பின் மதிப்பையும் பலன்களையும், நன்கு எடுத்துரைக்கும் வகையிலான திட்டங்கள் ஊக்குவிக்கப் படுகின்றன உலகம் முழுவதும் பரவியுள்ள நோயான கோவிட்-19 நோய்க்கு எதிராக உலகமே போராடி வரும் இந்த சமயத்தில், உலக அளவிலான இந்த சவாலை எதிர்கொள்வதற்காக, அறிவியல் தொழில்நுட்ப சமுதாயம் இணைந்து செயல்பட்டு, தங்களது ஆற்றல்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். உலகளாவிய இந்த நோயை எதிர்த்துப் போராடுவதற்காக, புதிய தடுப்பு மருந்துகள், கருவிகள், நோய் கண்டறியும் கருவிகள், தகவல் பரிமாற்ற அமைப்புகள் ஆகியவற்றைக் கண்டறியவும்; சமுதாயத்திற்கும், தேசங்களுக்கும் உதவும் வகையில், இந்த நோயை எதிர்கொள்வதற்கான ஆற்றல்களை ஒன்று திரட்டவும், நிர்வகிக்கவும், தேவையான உத்திகளைக் கண்டறியவும், அறிவியல் பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் மிக முக்கிய பங்காற்ற வேண்டும்.
உலகளாவிய இந்த நோய்க்கு தீர்வு காண்பதற்காக, உலகின் பல்வேறு நாடுகளும், அமைப்புகளும் ஒருங்கி ணைந்து செயல்படுவதன் மூலம் அறிவியல், தொழில்நுட்ப சமுதாயங் களின் நிபுணத்துவத்தைப் பகிர்ந்து கொண்டு, அதன் மூலம் பயன் பெறவும், வெவ்வேறுபட்ட, உலக அளவிலான அறிவியல், பொறியியல், தொழில்நுட்ப அடிப்படையிலான பணியாளர்களை ஒன்றுதிரட்ட உதவவும் முடியும்.
ஃபரீதாபாதில் கோவிட்-19
ஹரியானா மாநிலம், ஃபரீதாபாதில் இயங்கிவரும் சுகாதார அறிவியல் தொழில்நுட்ப செயல்பாட்டு நிறுவனத் தில் (Translational Health Science and Technology Institute# THSTI) உள்ள உயிரியல் மருத்துவ ஆய்வகம் (The bioassay laboratory) அங்குள்ள ஈஎஸ்ஐசி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் கோவிட்-19 தொற்று குறித்து பரிசோதிக்கும் விரிவாக்க மையமாகச் செயல்படும். சுகாதார அறிவியல் தொழில்நுட்ப செயல்பாட்டு நிறுவனம் மத்திய அரசின் பயோடெக்னாலஜி துறையின் கீழ் வருகிறது. ஃபரீதாபாத் பகுதியில் இயங்கும் கோவிட்-19 பரிசோதனைக் கான முதல் ஆய்வகம் இதுதான். இது தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம் ஈஎஸ்ஐசி மருத்துவமனை நிர்வாகத்துக்கும் சுகாதார அறிவியல் தொழில்நுட்ப செயல்பாட்டு நிறுவனத் துக்கும் இடையில் கையெழுத் தானது. அதன்படி உயிரியல் மருத்துவ ஆய்வகத்தின் நிபுணர் குழு ஈஎஸ்ஐ மருத்துவமனையைச் சேர்ந்தவர்களுக்கு கோவிட்-19 சோதனைக்கான உரிய பயிற்சி அளிக்கும். சுகாதார அறிவியல் தொழில்நுட்ப செயல்பாட்டு நிறுவனத் துக்கு மத்திய அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் வரும் பயோடெக் னாலஜி துறை நிதியுதவி அளிக்கும். ஈஎஸ்ஐசி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை மத்திய தொழிலாளர் நல அமைச்சகத்தின் கீழ் இயங்குகிறது.
ரத்த பிளாஸ்மா தெரபி
கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு புதுமையான வழியில் சிகிச்சை அளிக்கும் துணிச்சலான வழிமுறையைப் பின்பற்ற, அறிவியல் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் தேசிய முக்கியத்துவ மையமான ஸ்ரீசித்ரா திருநாள் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிலையத்துக்கு (SCTIMST) அனுமதி கிடைத்துள்ளது. தொழில்நுட்ப ரீதியில் ""கன்வலசன்ட்-பிளாஸ்மா தெரபி'' எனப்படும் இந்த சிகிச்சை முறையில், ஏற்கெனவே நோயுற்று குணமடைந் தவரின் உடலிலில் உருவாகியிருக்கும் நோய் எதிர்ப்பாற்றலைப் பயன்படுத்திக் கொள்ளும் நடைமுறையைப் பின்பற்று வதாக உள்ளது. இந்தப் புதிய சிகிச்சை முறையை மேற்கொள்ள இந்தியாவில் மருத்துவத் துறையில் அங்கீகாரம் அளிக்கும் தலைமை அமைப்பான ஐ.சி.எம்.ஆர். இதற்கு ஒப்புதல் அளித் துள்ளது. ""வயது வரம்புக்கு அனுமதி கோரி இந்திய ரசாயன மருந்துக் கட்டுப்பாட்டு ஜெனரலுக்கு விண்ணப் பித்திருக்கிறோம். ரத்த தானத்துக்கான விதிமுறைகளைத் தளர்த்துமாறு கோரியுள்ளோம்'' என்று SCTIMST இயக்குநர் டாக்டர் ஆஷா கிஷோர் தெரிவித்தார்.
கன்வலசன்ட்-பிளாஸ்மா தெரபி என்பது புதிய கொரோனா வைரஸ் கிருமி போன்ற தாக்குதல் நடைபெறும்போது, நமது நோய் எதிர்ப்பு மண்டலம் அதை எதிர்ப்பதற்கான அணுக்களை உருவாக்குகிறது. காவல் நாய்களைப் போல இவை அதிகரித்துச் சென்று, ஊடுருவிய வைரஸை அடையாளம் காணும். நமது ரத்தத்திலுள்ள வெள்ளை அணுக்கள் உடலுக்குள் ஊடுருவியுள்ள வைரஸ்களை அழிக்கும். உடலிலில் அந்தத் தொற்று நீங்கிவிடும். நோயில் இருந்து மீண்டவரிடம் இருந்து எடுக்கப்பட்ட நோய் எதிர்ப்பு அணுக்கள், இரத்தம் செலுத்துவதைப் போன்ற முறையில், நோயாளியின் ரத்தத்தில் செலுத்தப்படும். இந்த நோய் எதிர்ப்பு அணுக்கள் வைரஸ் தாக்குதலுக்கு எதிராக தனது தாக்குதலை வீரியத்துடன் மேற்கொள்ளும். நோய் எதிர்ப்பு அணுக்கள் என்பவை என்ன?: ஒரு நுண்கிருமியால் நோய்த் தொற்று ஏற்படும்போது முன்களத்தில் நின்று செயல்படும் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் முன்வரிசை வீரர் களைப் போன்ற அணுக்கள் இவை.
இலிம்போசைட்ஸ் என்ற நோய் எதிர்ப்பு செல்களால் சுரக்கப்படும் ஒரு குறிப்பிட்ட வகை புரதமாக இது இருக்கும். புதிய கொரோனா வைரஸ் போன்று, புதிதாக உடலுக்குள் ஊடுருவும் கிருமி களை எதிர்த்து இவை தாக்குதல் நடத்தும். ஊடுருவல் செய்து வரும் ஒவ்வொரு கிருமியின் தன்மையையும் எதிர்கொள்ளத் தேவையான வகையில் எதிர்ப்பு அணுக்களை நோய் எதிர்ப்பு சக்தி உருவாக்கும். இந்த எதிர்ப்பு அணுக்களும், அழிக்கப்பட வேண்டிய வைரஸில் இருக்கும் அணுக்களும் ஒரே மாதிரியானவையாக இருக்கும்.
கோவிட்-19 நோய் பாதித்து, குணமானவரிடம் இருந்து ரத்தம் எடுக்கப்படும். அது பகுப்பாய்வு செய்து வைரஸை எதிர்க்கும் அணுக்கள் மட்டும் தனியே எடுக்கப்படும். கன்வலசன்ட் சீரம், அதாவது கோவிட்-19 பாதிப்புக்கு உள்ளாகி குணமடைந்து, நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளவரின் ரத்தத்தில் இருந்து பிரிக்கப்பட்ட இந்த அணுக்கள், கோவிட்-19 பாதித்த நோயாளிக்கு செலுத்தப்படும். நோயுற்றவர் மறைமுகமான நோய் எதிர்ப்பாற்றல் பெறுகிறார். ""ரத்த அணுக்கள் பிரிக்கப்படுவதற்கு முன்ன தாக, ரத்தம் தருபவருக்கு உரிய மருத்துவப் பரிசோதனைகள் செய்து, அதன் பிறகே நோயுற்றவருக்கு அது செலுத்தப்படும். முதலிலில், குணமடைந் தவரிடம் நோய்க்கான அறிகுறி முற்றிலும் இல்லை என்ற சோதனை முடிவு கிடைக்க வேண்டும். முழுமை யாகக் குணமடைந்தவர் என அவர் சான்றளிக்கப்பட்டிருக்க வேண்டும். அதன் பிறகு இரண்டு வாரங்கள் அவர் காத்திருக்க வேண்டும். அல்லது குறைந்தபட்சம் 28 நாட்களுக்கு அவருக்கு கோவிட்-19க்கான எந்த விதமான மறுஅறிகுறியும் தோன்றாமல் இருக்க வேண்டும். இந்த இரண்டில் ஒரு நிபந்தனை கட்டாயமாக பூர்த்தியாகிட வேண்டும்'' என்று ஒய்க்ண்ஹ நஸ்ரீண்ங்ய்ஸ்ரீங் ரண்ழ்ங்-க்கு அளித்த பேட்டியில் டாக்டர் கிஷோர் கூறியுள்ளார்.
ஆரம்பத்தில் சிறிய எண்ணிக்கையிலான நோயாளிகளுக்கு நாங்கள் இதை முயற்சிப்போம். இப்போதைக்கு பரிசோதனை சிகிச்சை முறையாக, தீவிர பாதிப்பு உள்ளவர்களுக்கு மட்டும் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. இதைச் செலுத்துவதற்கான நபரைத் தேர்வு செய்த பிறகு, தகவல்களை அறிந்துகொண்டு ஒப்புதல் அளிக்கும் படிவத்தில் அவர் கையெழுத்திட வேண்டும். இது மருத்துவ ஆய்வகப் பரிசோதனையாக நடத்தப்படும்'' என்று டாக்டர் கிஷோர் தெரிவித்துள்ளார். இதில் ஐந்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளின் கோவிட் மருத்துவ மையங்கள் பங்கேற்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இது மறைமுக தடுப்பூசி போன்றது. தடுப்பூசி போடும்போது, நோய் எதிர்ப்பு மண்டலம் நோய் எதிர்ப்பு அணுக்களை உருவாக்குகிறது. எனவே, தடுப்பூசி போடப்பட்ட நபரை குறிப்பிட்ட அதன்பிறகு அந்தக் கிருமி தாக்கினால், நோய் எதிர்ப்பு மண்டலம், நோய் எதிர்ப்பு அணுக்களை உற்பத்தி செய்து அனுப்பி, நோய்த் தொற்றை அழித்துவிடும். தடுப்பூசி ஆயுள் முழுக்க நோய் எதிர்ப்பு சக்தியைத் தருகிறது. மறைமுக நோய் எதிர்ப்பு அணு சிகிச்சை முறையில், ரத்தத்தில் செலுத்தப்பட்ட நோய் எதிர்ப்பு அணுக்கள் உயிருடன் இருக்கும் காலம் வரையில் மட்டுமே அது செயல்படும் நிலையில் இருக்கும். இதனால் கிடைக்கும் பாதுகாப்பு தற்காலிலிகமானது. ஒரு குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி சுயமாக உருவாவதற்கு முன்பு வரையில், குழந்தைக்குத் தேவையான நோய் எதிர்ப்பாற்றலை தாய் தன்னுடைய தாய்ப்பாலிலின் மூலம் புகட்டுவதைப் போன்றது இது.
1890-ஆம் ஆண்டில் ஜெர்மன் டாக்டர் எமில் வோன் பெஹ்ரிங் என்பவர், தொண்டை அடைப்பான் பாதிப்புக்கு உள்ளான முயலிலின் ரத்தத்தில் இருந்து எடுத்த ரத்தத்தைப் பிரித்து இவ்வாறு அணுக்களை எடுத்து, மனிதர்களில் ஏற்பட்ட தொண்டை அடைப்பான் நோய்க்கான சிகிச்சைக்கு வெற்றிகரமாகப் பயன்படுத்தியுள்ளார். மருத்துவத்துக்கான முதலாவது நோபல் பரிசு 1901-இல் அவருக்குத் தான் வழங்கப்பட்டது. அந்த சமயத்தில் நோய் எதிர்ப்பு அணுக்கள் பற்றி எதுவும் தெரியாது. கன்வலசன்ட் சீரம் சிகிச்சை என்பது குறைந்த செயல் திறன் கொண்ட தாக, கணிசமான பக்க விளைவுகள் கொண்டதாக இருந்தது. நோய் எதிர்ப்பு அணுக்களின் நுட்பமான பகுதியைப் பிரிப்பதற்கு மேலும் பல ஆண்டுகள் தேவைப்பட்டது. அப்போதும் கூட, நமக்கு தேவைப்படாத எதிர்ப்பு அணுக்கள் மற்றும் அசுத்தக் காரணி களால் பக்க விளைவுகள் ஏற்பட்டன.
பாக்டீரியா தொற்றுக்கு எதிராக நம்மிடம் செயல்திறன்மிக்க நோய் எதிர்ப்பு அணுக்கள் உள்ளன. இருந் தாலும் வைரஸ்களுக்கு எதிரான அணுக்கள் இல்லை. புதிய வைரஸ் நோய்த் தாக்குதல் ஏற்படும் போதெல்லாம், அதற்கு சிகிச்சை தருவதற்கான மருந்துகள் நம்மிடம் இருப்பதில்லை. எனவே, வைரஸ் காரணமான நோய்த் தொற்று தாக்கும்போது கன்வலசன்ட் சீரம் தான் மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. 2009-2010 H1N1 பறவைக்காய்ச்சல் பரவியபோது, நோயாளிகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கும் நிலையில் இது பயன்படுத்தப்பட்டது. மறைமுக நோய் எதிர்ப்பு அணு சிகிச்சைக்குப் பிறகு, சீரம் மூலம் சிகிச்சை பெற்ற நோயாளிகளின் உடல் நிலையில் முன்னேற்றம் தெரிந்தது. வைரஸ் அளவு குறைந்தது, மரணங்களின் எண்ணிக்கை குறைந்தது. இதே நடைமுறை 2018-இல் எபோலா நோய்த் தாக்குதல் பரவியபோதும் பின்பற்றப்பட்டது.
ரத்தத்தில் கிருமிகள் உள்ளதா என்பதை பரிசோதிப்பதற்கான நவீன ரத்த வங்கி நுட்பங்கள் அதிகரித்துவிட்டன. ரத்தம் தருபவர் மற்றும் பெறுபவரின் ரத்த வகைகளைப் பொருத்திப் பார்ப்பதில் சிரமம் ஏதும் கிடையாது. எனவே நோய்த் தொற்று ஏற்படுத்தும் அணுக்களை செலுத்துதல் அல்லது ரத்தம் செலுத்துதல் தொடர்பான எதிர்வினைகளை ஏற்படுத்துதலுக்கான வாய்ப்புகள் குறைவு. ""ரத்த தானத்தின் போது நாம் செய்வதைப் போல, ரத்த வகை மற்றும் ஆர்.எச். பொருந்தி வருகிறதா என்று பார்க்கப்படுகிறது. ரத்த வகை பொருந்தி வந்தால் மட்டுமே, ரத்த தானமும், பெறுதலும் சாத்தியமாகும். தானம் செய்பவருக்கு கடுமையான பரிசோதனைகள் செய்து, கட்டாயமான காரணிகள் குறித்து ஆய்வு செய்யப்படும். அதன் பிறகே அவர் ரத்த தானம் செய்ய அனுமதிக்கப்படுவார். மஞ்சள் காமாலை, எச்.ஐ.வி. மலேரியா உள்ளிட்ட பல பரிசோதனைகள் அவருக்கு நடைபெறும். இதுபோன்ற எதுவும், ரத்தம் பெறுபவருக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காக இந்தப் பரிசோதனைகள் செய்யப்படும்'' என்று SCTIMST இயக்குநர் டாக்டர் ஆஷா கிஷோர் விளக்கினார்.
இதைப் பெறுபவரின் உடலிலில் எவ்வளவு காலத்துக்கு எதிர்ப்பு அணுக்கள் இருக்கும்?: நோய் எதிர்ப்பு அணு செலுத்தப்பட்டதும், குறைந்தது மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு அவருடைய உடலிலில் அது இருக்கும். இந்த காலக்கட்டத்தில் அவர் உடல் நலம் பெற்றுவிடுவார். இது பயனுள்ளதாக இருந்தால் முதல் மூன்று அல்லது நான்கு நாட்களில் தெரிந்துவிடும் என்றும், அதற்கு மேல் தேவைப்படாது என்றும் அமெரிக்கா மற்றும் சீனாவில் இருந்து கிடைக்கும் ஆராய்ச்சி அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இதற்கான நோய் எதிர்ப்பு அணுக்களைப் பெறுவது எளிதானது அல்ல. நோயில் இருந்து மீண்டவர்களின் உடலிலில் இருந்து கணிசமான அளவுக்கு ரத்தம் எடுப்பது சிரமம். கோவிட்-19 போன்ற நோய்கள் பாதித்தவர்கள் பெரும்பாலும் வயது முதிர்ந்தவர்கள் என்பதால் ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற மற்ற கோளாறுகள் உள்ளவர்களாக இருப்பார்கள். குணமடைந்த எல்லா நோயாளிகளும் ரத்தம் தானம் செய்ய முன்வர மாட்டார்கள் என்பதும் இதற்குக் காரணம்.
நாவல் கொரோனா வைரஸ் மரபணு நாவல் கொரோனா வைரஸ் என்பது ஒரு புதிய வைரஸ். இந்த வைரஸ் பற்றிய பல்வேறு அம்சங்களையும் கண்டறிய ஆராய்ச்சியாளர்கள் முயன்று வருகிறார்கள். நாவல் கொரோனா வைரஸ் பற்றிய ஜீனோம் மரபணுக்குழு வரிசைப்படுத்துதல் குறித்துக் கண்டறிய, ஹைதராபாத்தில் உள்ள செல் மற்றும் மூலக்கூறு உயிரியல் கழகமும், புதுதில்லியில் உள்ள ஜீனோ மிக்ஸ் மற்றும் ஒருங்கிணைந்த உயிரியல் கழகமும், இணைந்து பணியாற்றி வருகிறார்கள். இந்த வைரஸின் தோற்றம், இது எவ்வளவு விரைவாக செயல்படுகிறது, எவ்வளவு விரைவாகப் பெருகுகிறது என்பது பற்றி புரிந்து கொள்ள இது உதவும். எவ்வளவு விரைவாக இது தோன்றுகிறது என்றும் இதன் வருங்கால அம்சங்கள் குறித்தும் அறிந்து கொள்ளவும் இந்த ஆய்வு உதவி செய்யும் என்று சிசிஎம்பி- யின் இயக்குநர் டாக்டர் ராகேஷ் மிஸ்ரா, மத்திய அறிவியல் தொழில் நுட்பத் துறையின் இந்திய அறிவியல் இதழின் (இந்தியா சயின்ஸ் வயர்) மூத்த அறிவியலாளரான ஜோதி சர்மாவிடம் பேசுகையில் தெரிவித்தார். ஒரு குறிப்பிட்ட உயிரியின், (ஜீனோம்) மரபணுத்தொகுப்பின், முழுமையான டிஎன்ஏ வரிசைக்கிரமத்தை உறுதிப் படுத்துவதற்கு பயன்படுத்தப்படுவதே முழு ஜீனோம் வரிசைக்கிரமம் என்ற முறையாகும். சமீபத்திய கொரோனா வைரஸ் மரபணுக்களின் தொகுப்பை வரிசைப்படுத்தும் அணுகுமுறையில், கொரோனா வைரஸ் உள்ளது என கண்டறியப்பட்டுள்ள நோயாளிகளிட மிருந்து இந்த வைரஸ் மாதிரிகளை எடுத்து, அந்த மாதிரிகளை, வரிசைப் படுத்தும் மையத்திற்கு அனுப்புவது உட்பட பல பணிகள் இதில் உள்ளன.
கோவிட்-19 தொற்று நோயை எதிர்க்க இரசாயனம் WE innovate Biosolutions என்ற பூனேவை சேர்ந்த சிறிய தொழில்நுட்ப நிறுவனத்துடன், இந்திய அறிவியல் தொழில்நுட்பத்துறையும், உயிரியல் தொழில்நுட்பத்துறையும் கூட்டாக இணைந்து வெள்ளியின் மூலக்கூறுகளை கொண்டு தயாரிக்கப்படும் இரசாயனம் கலக்காத நீர்மக்கரைசலை, கிருமிநாசினி யாக உருவாக்கியுள்ளது.
இந்த திரவ கிருமி நாசினி எளிதில் தீப்பற்றாது என்பதுடன் அபாயகரமான இரசாயனங்கள் இல்லாதது. அதுமட்டு மன்றி இந்த திரவ கிருமிநாசினி தொற்று பரவுவதைத் தடுக்க ஒரு சிறந்த தடுப்பானாகச் செயல்படும். இந்தக் கிருமி நாசினியைத் தொற்றுநோயால் எளிதில் பாதிக்கப்பட வாய்ப்புள்ள சுகாதாரத்துறை பணியாளர்களும், மருத்துவ வல்லுநர்களும் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கும், நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் பெரிதும் உதவுகிறது.
தொற்று பரவாமல் தடுக்க இயலும் பூச்சு கண்டுபிடிப்பு கோவிட்-19 உட்பட பல்வேறு வகையான வைரஸ் கிருமிகளைக் கொன்று, இவற்றினால் பரவும் நோய்களை, ஒரே முறையிலேயே குணப்படுத்தக்கூடிய, நுண்ணுயிர்களுக்கு எதிரான பூச்சு ஒன்றை, அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறையின் கீழ் செயல்படும், தன்னாட்சி நிறுவனமான, ஜவஹர்லால் நேரு உயர் அறிவியல் ஆராய்ச்சி மையம் கண்டறிந்துள்ளது. துணிகள், நெகிழி போன்ற தளங்களில், நுண்ணுயிரிகளுக்கு எதிரான இந்தப் பூச்சைப் பூசினால், கிருமிகள் கொல்லப்படுவதாகத் தெரியவந்துள்ளது.
இந்த சக பிணைப்புப் பூச்சு பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரை, மெட்டீரியல் அண்ட் இன்டர்பேஸ் (Material and Interface) என்ற ஆராய்ச்சி இதழால், ஏற்கனவே ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளது.
இப்பூச்சு, இன்புளுவென்சா வைரஸ்; தற்போதைய மருந்துகளுக்குக் கட்டுப்படாத, தொற்று விளைவிக்கும் பாக்டீரியா மற்றும் காளான்; மெதிசிலினுக்குக் கட்டுப்படாத நுண்ணுயிரி ஃப்ளூகனாஸோலுக்குக் கட்டுப் படாத C. albicans spp எனும் கிருமி (fluconazole#resistant C. albicans spp) ஆகியவற்றை, முழுமையாகக் கொன்று விடும் என்று கண்டறியப்பட்டுள்ளது. எங்கள் அறிவுக்கு எட்டிய வரை, இது நாள் வரை, அனைத்து வகையான வைரஸ்கள், பாக்டீரியாக்கள், காளான் கள் ஆகியவற்றைக் கொல்லக்கூடிய சக பிணைப்புப் பூச்சு உத்திகள் எதுவும் இல்லை என்று ஆராய்ச்சியாளர்கள் கூறினார்கள்.
தற்போது உருவாக்கப்பட்டுள்ள மூலக்கூறுகள், பல்வேறு தளங்களில், புற ஊதாக்கதிர்களின் தாக்கத்துடன் (அல்ட்ரா வயலட் இராடியேஷன்) இரசாயன ரீதியாக, குறுக்கிணைவு செய்யும் திறன் கொண்டவை. தற்போது பரவிவரும் கொரோனா வைரஸ் நோயைக் கருத்தில் கொண்டு பார்க்கும் போது, இந்தப் பூச்சு பயனளிப்பதாக இருந்தால், இந்த மூலக்கூறுகளை ஒப்பந்த ஆராய்ச்சி அமைப்பு (Contract Research Organisation) ஒன்றின் மூலமாக, பெரிய அளவில் தயாரிக்க இயலும். முகக்கவசம், கையுறை, மருத்துவ கவுன்கள் உடைகள் போன்ற பல்வேறு பாதுகாப்பு உபகரணங்கள் மீது, இந்தப் பூச்சைப் பூசலாம். மருத்துவமனைகளி லிலிருந்து ஏற்படக்கூடிய தொற்றுக் களையும் தவிர்க்கும் வகையில், இதர மருத்துவ இயந்திரங்கள் மற்றும் கருவிகள் மீதும் இந்தப் பூச்சைப் பயன்படுத்தலாம்.
கோவிட்-19 தொற்று குறித்த விழிப்புணர்வு
கோவிட் -19 தொற்று குறித்த கற்பனைக் கதைகளை விடுத்து, அதன் பின்னணியில் உள்ள பொது சுகாதார நடவடிக்கை குறித்த அடிப்படை அறிவியல் புரிதலை ஏற்படுத்த, விறுவிறுப்பான, ஒளிரும் தொடர்பு பொருள்கள் கொண்ட ஒரு தொகுப்பை டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது. கோவிட்-19 பரவலைத் தடுக்க சமூக இடைவெளி ஏன் உதவிகரமாக இருக்கிறதென்பதை விளக்கும் பன்மொழி சாதனங்களை (யூ டியூப் காணொளிகள்) ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி உள்ளார்கள். ஹாரி ஸ்டீவென்ஸ், வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் வெளியிட்ட அசல் கட்டுரைகளை அடிப்படையாகக் கொண்டு இந்த காணொலிலிகள் உருவாக்கப்பட்டுள்ளன. ""கல்வியாளர்கள், குடும்பங்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோரின் தன்னார்வ முயற்சிகளின் மூலம் ஆங்கிலம், இந்தி, வங்காளம், கொங்கனி, மராத்தி, மலையாளம், ஒடியா, தமிழ், தெலுங்கு ஆகிய ஒன்பது மொழிகளில் நாங்கள் இதை வெளியிட்டுள்ளோம்'', என்கிறார் டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானி, பேராசிரியர் அர்னாப் பட்டாச்சார்யா. மேலும் குஜராத்தி, பஞ்சாபி, ஹரியான்வி அஸாமி மொழிகளிலும் இந்த காணொலிலி விரைவில் வெளியிடப்படும்.
கோவிட்-19 தொற்று குறித்து வலம் வரும் பல்வேறு கற்பனைக் கதை களைக் களைந்து சரியான தகவலைத் தெரியப்படுத்துவதுதான் இதன் நோக்க மாகும். அதிக பார்வையாளர்களை சென்றடைவதற்காக, எளிதாக புரியும் வகையிலும், பிராந்திய மொழியிலும் இந்தத் தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன. ""இந்த நோய் வெளிநாட்டில் உருவாகி இருந்தாலும், உள்ளூர் தேவைகளுக்கு ஏற்ற படி நம் மக்களுக்கு இதை விளக்க வேண்டும். அதற்கு பிராந்திய மொழி உள்ளடக்கம் முக்கியம். இந்த தொகுப்பை உபயோகப்படுத்துவதன் மூலம் மக்கள் மத்தியில் சிறப்பான முறையில் விழிப்புணர்வை ஏற்படுத்தலாம் என நாங்கள் நம்புகிறோம், என்கிறார் பட்டாச்சார்யா. அடுத்த கட்டமாக, வீடுகளில் கிடைக்கும் பொருள்களைக் கொண்டு முகக்கவசங்களை தயார் செய்ய இந்தக் குழு முயற்சி செய்கிறது. இதற்கான சுவரொட்டிகளும் காணொலிகளும் விரைவில் வெளியிடப்படும். தவறான தகவல்களைக் களைந்து, இந்த வைரஸின் பின்னே உள்ள அறிவியலை விளக்க, விஞ்ஞானிகள் பொதுமக்களுடன் சமூக ஊடகம் மூலம் கலந்துரையாடும் "சாய் அன்டு ஒய்' (‘Chai and Why’) நிகழ்ச்சி, டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனத்தின் பொது மக்களை சென்றடையும் நடவடிக்கையாகும்.