கிராமியப் பாடகர் வேல்முருகனின் என் பாட்டு வண்டிப் பயணம்! - 15

/idhalgal/general-knowledge/country-singer-velmurugans-journey-my-singing-carriage-15

ன்னோட குருநாதர் குருநாதர்ன்னு சொன்னேன்ல அவரு யாருன்னு சொல்லட்டுமா? அவர் ஒரு பல குரல் வித்தகர். நான், இப்ப அவரை பார்த்தாக் கூட கையெடுத்துக் கும்பிடுவேன். என்னையும் அறியாம, அவரை மனசுக்குள் உட்காரவச்சி, கால்ல விழுந்து கும்பிடுவேன்.

அவரு, பூவரச மரந்க் கிளைகள்ல பூவரசம் பூ மாதிரியே உட்கார்ந்து இருப்பார். அப்புறம் எங்க ஊரு தந்தி மரத்துலயும் சில நேரம் மரக்கிளைகள்லயும் உட்கார்ந்து இருப்பார்.

என்னடா இது மரக்கிளைகள்லயும் உட்கார்ந்திருக்கிற ஆள் யார்ன்னு குழம்பாதீங்க.

அவரு வேற யாரும் இல்லீங்க. ஊர்த் திருவிழாவுக்கு கட்டுற மைக் செட்டின் ஸ்பீக்கர்தாங்க என்னோட குருநாதர். அவர்தான் டி.எம்.எஸ்., சீர்காழி கோவிந்தராஜன், சி.எஸ்.ஜெயராமன், பி.சுசீலா அம்மா, ஜானகி அம்மா, வாணி ஜெயராம் மாதிரியான பலபேரின் பாட்டுக்களை எனக்குச் சொல்லிக்கொடுத்தவர். நான் அந்தப் பாட்டுக்களை எல்லாம் கேட்டு உருகவும் அதையெல்லாம் நான் மனப்பாடம் பண்ணவும் காரணமானவர் அவர்தான். அதுமட்டுமா?

நான் மைக்க புடிச்சு பாடுனா, என்னோட குரல ஊரு ஒலகத்துக்கு எல்லாம் அவர்தான் பரவசமாப் பரப்புவாரு. விஷேச வீடுகள்ல, மைக்கப் புடிச்சுக்கிட்டு, எங்க ஊர்க் காரங்க, என்ன பாட வைப்பாங்க. ஸ்பீக்கர் ஐயாதான், அப்ப நமக்கு உதவியா இருப்பார்.

என்னை ஏன் பாட வைப்பாங்கன்னா, இன்னும் விஷேசம் முடியல. இப்ப போனாக்கூட மொய் வைக்கலாம், அப்படின்னு ஊருசனத்துக்கு தெரியனும். அப்படிங்கறதனால என்ன ரேடியோ செட்ல பாட வைப்பாங்க. இப்படி ரேடியோ செட்டுல பாடுறத வெச்சு, ஊரு சனங்க வந்து மொய் வச்சுட்டு சாப்புட்டுப் போவாங்க.

அப்பல்லாம் சிலேட்டுக்கு பல்பம் வாங்குறதுக்கு நான் அம்மாகிட்ட அடிக்கடி காசு கேட்பேன். அதுக்கு அம்மா சொல்லும், என்னடா முந்தா நாளுதான பல்பம் வாங்கக் காசு கொடுத்தேன், திரும்பத் திரும்பக் கேக்கிறியேன்னு கேக்கும்.

ஏன் பல்பத்துக்கு அடிக்கடி காசு கேட்பேன்னா, சில பேரு அந்த சிலேட்டு குச்சியை கடிச்சுத் தின்னுடுவாங்க. திடீர்ன்னு பாத்தா என்னோட ஜாமென்றி பாக்ஸ்ல சிலேட்டுக் குச்சி காணாமப் போயிடும். பாத்தா பக்கத்துல இருக்குற பையன் அத நாக்குல வெச்சு நக்கிக்கிட்டு இருப்பான்.

அந்த சுண்ணாம்பு வைத்துக்குள்ள போச்சுன்னா கட்டியா ஆயிடும். அது கடைசில ஆபத்துல போய்தான் முடியும்.

அம்மா அதைச் சொல்லிச் சொல்லி பயமுறுத்தும். இந்த பல்பத்த தின்னாலே சோகை விழுந்துடும் வேற.

உங்களுக்கு நாமக்கட்டின்னா தெரியுமா? சில பசங்க, அந்த நாமக்கட்டியத் திம்பாங்க. சில பேரு செங்காமட்டையைக் கல்லுல தேச்சு தேச்சு, நக்கி நக்கித் திம்பாங்க. சில பேரு அடுப்புச் சாம்பலை உ

ன்னோட குருநாதர் குருநாதர்ன்னு சொன்னேன்ல அவரு யாருன்னு சொல்லட்டுமா? அவர் ஒரு பல குரல் வித்தகர். நான், இப்ப அவரை பார்த்தாக் கூட கையெடுத்துக் கும்பிடுவேன். என்னையும் அறியாம, அவரை மனசுக்குள் உட்காரவச்சி, கால்ல விழுந்து கும்பிடுவேன்.

அவரு, பூவரச மரந்க் கிளைகள்ல பூவரசம் பூ மாதிரியே உட்கார்ந்து இருப்பார். அப்புறம் எங்க ஊரு தந்தி மரத்துலயும் சில நேரம் மரக்கிளைகள்லயும் உட்கார்ந்து இருப்பார்.

என்னடா இது மரக்கிளைகள்லயும் உட்கார்ந்திருக்கிற ஆள் யார்ன்னு குழம்பாதீங்க.

அவரு வேற யாரும் இல்லீங்க. ஊர்த் திருவிழாவுக்கு கட்டுற மைக் செட்டின் ஸ்பீக்கர்தாங்க என்னோட குருநாதர். அவர்தான் டி.எம்.எஸ்., சீர்காழி கோவிந்தராஜன், சி.எஸ்.ஜெயராமன், பி.சுசீலா அம்மா, ஜானகி அம்மா, வாணி ஜெயராம் மாதிரியான பலபேரின் பாட்டுக்களை எனக்குச் சொல்லிக்கொடுத்தவர். நான் அந்தப் பாட்டுக்களை எல்லாம் கேட்டு உருகவும் அதையெல்லாம் நான் மனப்பாடம் பண்ணவும் காரணமானவர் அவர்தான். அதுமட்டுமா?

நான் மைக்க புடிச்சு பாடுனா, என்னோட குரல ஊரு ஒலகத்துக்கு எல்லாம் அவர்தான் பரவசமாப் பரப்புவாரு. விஷேச வீடுகள்ல, மைக்கப் புடிச்சுக்கிட்டு, எங்க ஊர்க் காரங்க, என்ன பாட வைப்பாங்க. ஸ்பீக்கர் ஐயாதான், அப்ப நமக்கு உதவியா இருப்பார்.

என்னை ஏன் பாட வைப்பாங்கன்னா, இன்னும் விஷேசம் முடியல. இப்ப போனாக்கூட மொய் வைக்கலாம், அப்படின்னு ஊருசனத்துக்கு தெரியனும். அப்படிங்கறதனால என்ன ரேடியோ செட்ல பாட வைப்பாங்க. இப்படி ரேடியோ செட்டுல பாடுறத வெச்சு, ஊரு சனங்க வந்து மொய் வச்சுட்டு சாப்புட்டுப் போவாங்க.

அப்பல்லாம் சிலேட்டுக்கு பல்பம் வாங்குறதுக்கு நான் அம்மாகிட்ட அடிக்கடி காசு கேட்பேன். அதுக்கு அம்மா சொல்லும், என்னடா முந்தா நாளுதான பல்பம் வாங்கக் காசு கொடுத்தேன், திரும்பத் திரும்பக் கேக்கிறியேன்னு கேக்கும்.

ஏன் பல்பத்துக்கு அடிக்கடி காசு கேட்பேன்னா, சில பேரு அந்த சிலேட்டு குச்சியை கடிச்சுத் தின்னுடுவாங்க. திடீர்ன்னு பாத்தா என்னோட ஜாமென்றி பாக்ஸ்ல சிலேட்டுக் குச்சி காணாமப் போயிடும். பாத்தா பக்கத்துல இருக்குற பையன் அத நாக்குல வெச்சு நக்கிக்கிட்டு இருப்பான்.

அந்த சுண்ணாம்பு வைத்துக்குள்ள போச்சுன்னா கட்டியா ஆயிடும். அது கடைசில ஆபத்துல போய்தான் முடியும்.

அம்மா அதைச் சொல்லிச் சொல்லி பயமுறுத்தும். இந்த பல்பத்த தின்னாலே சோகை விழுந்துடும் வேற.

உங்களுக்கு நாமக்கட்டின்னா தெரியுமா? சில பசங்க, அந்த நாமக்கட்டியத் திம்பாங்க. சில பேரு செங்காமட்டையைக் கல்லுல தேச்சு தேச்சு, நக்கி நக்கித் திம்பாங்க. சில பேரு அடுப்புச் சாம்பலை உப்புமா மாதிரி மடியில அள்ளி வெச்சிக்கிட்டு திம்பாங்க.

அந்த காலத்துல இப்பமாதிரி சோறு கிடைக்காதே. அதுல நொறுக்குத் தீனிக்கு எங்க போறது? அதனாலதான் பசங்க இப்படி கண்டதையும் திங்கிறது.

அந்தக் காலத்துல சிகரெட் பிடிக்கிறவங்க, வெத்தலை பாக்கு போடுறவங்க அப்படின்னு, இப்படி ஒரு சிலபேரு இருக்குற மாதிரி... இந்தக் கெட்ட பழக்கத்தைப் பழகி வச்சிருந்தாங்க.

சனி, ஞாயிறுகள்ல ஆடுமாடு மேய்க்கிறத்துக்குப் போவோம்.

அதுல பாத்தீங்கன்னா நம்ம வீட்டு ஆடு மாடு மட்டும் இல்லாம, பக்கத்து வீட்டுல உள்ள ஆடு மாடு எல்லாத்தையும் சேர்த்து ஓட்டிகிட்டு போக வப்பாங்க. ஓட்டிகிட்டு போற ஆடு மாடு எல்லாம் தரிசு வயலுல, கொல்லைக் காட்டுல, வாய்க்கா வரப்புல மேயும். அதுல என்னன்னா, பக்கத்து வீட்டுக்காரவங்க ஒரு ஆட்டுக்கு அஞ்சு பைசா, மாட்டுக்கு பத்து பைசான்னு கொடுப்பாங்க. இதெல்லாம் உபரி வருமானம்.

அதைச் சேர்த்து வச்சு, சேர்த்து வச்சு உண்டியல ரொப்புவோம்.

அதுக்குப்பேரு செருவாட்டுக் காசு சேர்க்கிறது. இல்லைன்னா அதை எடுத்துட்டுப் போய் எங்க ஊரு மளிகைக் கடைல, பத்து காசு சீட்டு போடுறது. இப்படி அந்தக் காசை செலவழிக்காம சேத்து சேத்து வைப்போம்.

அந்த சீட்டு போடுகிற அட்ட மஞ்சள் கலர்ல 30 கட்டம் போட்டு இருக்கும். ஒரு நாளைக்கு பத்து காசுன்னா மாசம் 3 ரூபாய் கிடைக்கும். அதையும் கொண்டு வந்து நான் அம்மா கிட்டதான் குடுப்பேன்.

இப்படி நான் கொஞ்ச கொஞ்சமா குடுக்குற பணத்தை சேத்து வச்சு, சேத்து வச்சு பொங்கல், தீபாவளி மாதிரி நல்ல நாளுக்கோ, பள்ளிக் கூடத்துக்கு சிலேட்டு, பை, இதுமாதிரி மொத்தமாத் தேவை படும்போதோ, அதை எல்லாம் சேத்து வச்சு, அந்தப் பணத்த கொண்டு போய் அப்பாகிட்ட அம்மா குடுக்கும்.

இதையெல்லாம் இப்ப நெனைச்சு பாக்கும்போது என்னோட குருநாதர் அடிக்கடி பாடுற "பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்" பாட்டுத்தான் ஞாபகத்துக்கு வருது.

’சேத்த பணத்த சிக்கனமா

செலவு பண்ண பக்குவமா

அம்மா கையில கொடுத்து போடு சின்னக்கண்ணு -

உங்க அம்மா கையில கொடுத்து போடு சின்னக்கண்ணு.

அவங்க ஆற நூறு ஆக்குவாங்க செல்லக்கண்ணு

அவங்க ஆற நூறு ஆக்குவாங்க செல்லக்கண்ணு’

மத்யானம் உச்சி வெயில் நேரத்துல, ஆடு மாடுகளை தண்ணி காட்டுறதுக்கு குட்டைக்கு ஓட்டிக்கிட்டுப் போவோம். மாடு தண்ணி குடிச்சத்துக்கு அப்புறம் குட்டையில தண்ணி கலங்கி போய்க் கெடக்கும்.

எங்களுக்கும் ஒரே தண்ணி தாகமா இருக்கும். கலங்கிப் போன தண்ணிய எப்படி குடிக்கிறது?

அந்த தண்ணிய தெளிய வைக்கிறதுக்கு, எங்க ஆத்தா ஒரு வழி சொன்னுச்சி. அதாவது, ஆவாரம் பூவை பறிச்சுகிட்டு வந்து தண்ணியில போட்டோம்னா, அந்த கலங்குன தண்ணியில உள்ள மண்ணு எல்லாம், அப்படியே கீழ செட்டிலு ஆயிடுமாம்.

அதே மாதிரி நாங்க செஞ்சோமுன்னா தண்ணி தெளிவாயிடும்.

அப்புறம் நாங்க கால மண்டி போட்டு, தண்ணியில வாய வச்சு, மடக்கு மடக்குன்னு தாகம் தீரக் குடிப்போம்.

அப்படி எல்லாம் மண்ணோட மண்ணா வாழ்ந் ததுனாலதான், இன்னக்கி நம்ம வாழ்க்கையில ஒரு ஊசி போட்டதில்ல, ஒரு மாத்திரை தின்னதில்லை. ஜுரம், காய்ச்சல்ன்னு வந்துதுன்னாக்கூட ரெண்டு நாளைக் குச் சும்மா இருந்தால், அதுவா சரியாப் போயிடுது.

மாடு ஓட்டிட்டு போகும்போதே கையில புத்தகத் தையும் எடுத்துட்டுப் போயிடுவோம். அங்கே ஏதாவது கருவேல மரம், வேலிக்கருவ மரம், முந்திரி மரம், இது மாதிரி மரத்தோட நெழலு கிடைச்சுதுன்னா, அந்த மரத்தடியில் ஒக்காந்து வீட்டுப் பாடத்தையும் எழுதுவோம்.

நம்மளும் வாயில்லா ஜீவனுக்கு வயித்து பசிய போக்குனா மாதிரி ஆயிடுச்சி. நமக்கும் வீட்டுப்பாடம் செஞ்ச மாதிரி ஆயிடும்.

சனி, ஞாயிறு அப்படின்னாலே ஆட்டு மாட்டோட, காட்டு கரம்பையோடதான் வாழ்க்கை போச்சு. ஆடு மாடு மேய்க்கிறதுக்கு அவ்வளவு சந்தோசமா இருக்கும். மாடு ஓட்டிக்கிட்டு வரும்போது உச்சி வெயிலுல களப்பா இருந்துச்சுன்னா தலையில துண்டச் சுத்திக்கிட்டு, எருமை மாட்டு மேல ஏறி உக்காந்துகிட்டு வருவோம். அது ஆடி ஆடிக்கிட்டு நம்மல வீட்டுக்கு கொண்டுவந்து சேர்த்துடும்.

அந்த சுகம் இன்னைக்கு நாடு நாடா ஏரோ பிளேன்ல போனாக்கூட கிடைக்கமாட்டேங்குது.

சாய்வு நாற்காலியில படுத்துக்கிட்டு, வானத்தை பார்த்துக்கிட்டு இப்படி பழையதை அசைபோடுற சுகம் இருக்கே, இது பைவ் ஸ்டார் ஓட்டலுல போயி, கிளப் டான்ஸ் பாத்துக்கிட்டு, வகை வகையா சாப்பிட்டாக் கூட கெடைக்காது.

"ஆடு வயித்துக்கு மேஞ்சிடுச்சி

மாடு வயித்துக்கு மேஞ்சிடிச்சி

இந்த ஆட்டையும் மாட்டையும் மேய்ச்சவன் வயிறு

ஆல இலை போல காஞ்சிருச்சி"- ன்னு

பாட்டுக்கு மட்டும் எப்பவுமே குறை இருந்தது இல்ல.

வீட்டுக்கு வந்தாதான் கஞ்சி. ஆடு மாடு மேய்க்கிறப்ப பசி வந்துதுன்னா ஊமத்தம் பிஞ்சு, பலாக்கா பிஞ்சு, இதெல்லாம் மரத்துலேயே வெம்பி போய் இருக்கும். அதை ஒடிச்சுதான் சாப்பிடுவோம்.

அப்புறம் ரெண்டு முந்திரிப் பழத்தை சாப்பிடுறது. அப்புறம் ஆத்துக் கரை ஓரத்துக்கு போனோம்னா, ஏதாவது கெளாக்கா. மாங்கா. மாம்பழம். காரக்கா, காரப்பழம், குருவிப் பழம், ஈச்சம் பழம்னு ஏதாவது கிடைச்சுதுன்னா, கிடைக்கிறத சாப்பிட்டு பசியாத்திக் கிறது.

vv

அப்புறம் முந்திரிக்கொட்டை கிடைச்சதுன்னா அந்தக் கொட்டைய கீனி திங்கிறது. இப்படி தெரிஞ்சோ, தெரியாமலோ சத்துள்ள பழங்களும், காய்களும் சாப்பிட்டது இப்ப நெனைச்சாக்கூட உடம்புக்கு தெம்பா இருக்கு.

அதிகாலை நேரத்துல காட்டுக்குப் போகும் போது, ஈச்சம்பழத்துல தேனு சுரந்து இருக்கும். ஈச்சம்பழம்ன்னா, பேரீச்சம்பழம் கிடையாது. சின்ன ஈச்சம்பழம். அதை பறிக்கும்போது பாத்துப் பாத்து பறிக்கனும். ஏன்னா ஈச்சம் மரத்து அடியில, முள்ளு கோணி ஊசி மாதிரி நீட்ட நீட்டமா இருக்கும்.

அந்த ஈச்சம் பழத்தைப் பறிச்சு, அதுல சுரந்து இருக்கிற தேனை நாக்குல வெச்சு நக்குனா… ஆகா ”தேன் அமிர்தமுன்னு சொல்லுவாங்களே அது இதுதானா!” அப்படின்னு நெனைக்கிற அளவுக்கு ஒரு அலாதியான இனிப்பா இருக்கும்.

தேன் எடுத்தவன் புறங்கையை நக்காம இருப்பானா அப்படின்னு ஒரு பழமொழி சொல்லுவாங்க.

அதுமாதிரி அந்த ஈச்சம்பழத்தை பறிச்சோமுன் னா, கைவிரல்களோட இடுக்கு வழியா பின்னாடி தேன் வடியும். வடியுற தேனை கீழ விடமுடியுமா? அப்படியே புறங்கையை நக்கிட்டு மறுபடியும் பழத்தைப் பறிச்சு அதை ஒரு குண்டானுல போட்டுக்குவோம்.

அப்புறம் வீட்டுக்குப் போயி, அந்த ஈச்சம்பழத்தை அம்மா, அப்பா, அக்கா, அண்ணன், தம்பிக்கெல்லாம் குடுப்போம். அந்த ஈச்சம்பழத்தை சாப்பிட்டா அது ஒரு ஏகாந்தமான இனிப்பா இருக்கும்.

அதை இப்ப நெனைச்சாக்கூட நாக்கெல்லாம் எச்சில் ஊறுது. இந்த இயற்கையை, எவ்வளவு அற்புதமா இந்தக் கடவுளு படைச்சி இருக்காரு அப்படின்னு ஆச்சரியமா நினைக்க தோனுது.

ஈச்சம் மரத்தை பாதியில வெட்டுனா, அது உள்ள ஈச்சஞ்சோறு அப்படின்னு ஒன்னு இருக்கும். அய்யோ! அதை எப்படிச் சொல்றது. அதைச் சாப்பிடும்போது அப்படி ஒரு அலாதியான சுவையா இருக்கும். இப்படி நாங்க வாழ்ந்தது எல்லாமே ஆடு மாடுங்களோடும், செடி கொடிங்களோடும், மரம் மட்டைகளோடும்தான்.

வீட்டுக்கு வரும்போது வாய்க்கா வரப்புல, தோட்டம் தொரவுல, மாட்டுக்குப் புல்லு பறிக்கிறது, ஆட்டுக்குத் தழை ஒடிக்கிறது, அப்புறம் வீட்டுக்குத் தேவையான காய்கறிங்க ஏதாவது பறிச்சுக்கிட்டு வர்றது, அப்படின்னு மாடு மேய்ச்சிட்டு வரும்போதே இதெல்லாம் பீராஞ்சிக்கிட்டு வந்துருவோம்.

வீடு கூட்டுறதுக்கு பூந்தொடப்பம், வாசல் கூட்டுறத்துக்கு பனந் தொடப்பம், தென்னம் தொடப்பமுன்னு கொண்டுக்கிட்டு வந்துடுவோம். நெறைய நேரங்கள்ல காய், கறி இல்லாத நேரத்துலயும், காய்கறி வாங்க காசு இல்லாதப்பவும், அன்னைக்கு குழம்பு வைக்கமாட்டாங்க. சில நாட்கள்ல பக்கத்து வீட்டுல கொஞ்சம் கொழம்பு வாங்கி அன்னையப் பொழப்ப ஓட்டுவாங்க.

அந்த கொழம்பும் கெடைக்கலன்னா, வீட்ல அம்மா ஏதாவது கஞ்சி வைக்கும் . அதை, வெங்காயத் தையோ, இல்லைன்னா பச்சை மிளகாயையோ கடிச்சி கிட்டு கஞ்சியைக் குடிப்போம். அது ஒரு தனி சுவை.

பச்சை மிளகாயை ஒரு வாய் கடிச்சோம்னா, அந்த உரப்புலயே நாலு வாயி சோறோ, கஞ்சியோ குடிச்சுடலாம். ஆகா! என்ன வாழ்க்கை. அதை இப்ப நெனைச்சாக்கூட ஏதோ சொர்க்கலோகத்துல வாழ்ந்தா மாதிரி தோணுது.

சில நாட்கள்ல புளி, வெங்காயம், கொஞ்சம் உப்பு வச்சு அரைச்சு, அதை அந்த கஞ்சிக்கு ஊறுகாயா அம்மா கொடுக்கும். அது அவ்வளவு ருசியா இருக்கும். அந்த புளி அரைச்ச அம்மிலயே கொஞ்சம் சோத்தைப் போட்டு பொரட்டி, அதுல ஆளுக்கு ஒரு உருண்டையா உருட்டி உள்ளங்கையில அம்மா கொடுக்கும்.

அதை நாங்க கொஞ்சம் கொஞ்சமா ரசிச்சு, ருசிச்சு சாப்பிடுவோம். அத நெனைச்சா,உடம்புல உள்ள எல்லா சுரப்பியில இருந்தும் எச்சில் ஊறுது.

இப்படி எல்லாம் சாப்பிட்டவங்கதான் அந்த காலத்துல நூறு வயசு வரைக்கும் வாழ்ந்தாங்க. 16 பிள்ளைய பெத்தாங்க. இப்ப ரெண்டு பிள்ளைய பெத்துக்குறதுக்கே என்னமோ சலிச்சிகிறாக.

இப்பல்லாம் ஆஸ்பத்திரி போறாங்க... என்ன என்னமோ டெஸ்டு இஸ்டுன்னு பண்றாங்க. அப்பல்லாம் வவுத்து வலி வரும். ரெண்டு ஆயாளுவ சேர்ந்து, வயித்த நாலு அமுக்கு அமுக்குவாங்க. முடிஞ்சு போச்சு. குவா குவான்னு புள்ள பொறந்துரும்.

இந்தப் புள்ள வளர்றதுக்குள்ள ஏற்கனவே பொறந்த புள்ள வளர்ந்திடும். அது இப்ப பொறந்த புள்ளைய பாத்துக்கும். ஒரு பிரச்சனை கிடையாது. அப்ப எல்லாம் அது அது தெருவுலயும், வாய்க்கா வரப்பிலயும் நடந்துக்கிட்டு திரியும். அப்பல்லாம் யாரு வளத்தா. ஏதோ இருக்குறத குடிச்சுப்புட்டுத் தானே வளந்தோம்.

தானா வளர்றது ஒரு பக்கம் இருந்தாலும், அப்பல்லாம் சொந்த பந்தங்கள் நிறைய இருந்துச்சு... பாத்துக்குறதுக்கு. இப்பல்லாம் முதியோர் இல்லம் அப்படி இப்படின்னு ஆயிப்போச்சு. அப்பல்லாம் ஆயா, தாத்தா எல்லாரும் கூடவே இருந்தாங்க.

வீடுகள்ல ஆளுங்களுக்குப் பஞ்சமே இல்ல.

இப்பல்லாம் ரெண்டு பேருமே வேலையில இருக்கிறோம். குழந்தைகளை பாத்துக்குறதுக்குதான் ஆளு வேணும்.

”படிச்சுப் படிச்சி பாழாப் போறத வுட்டுட்டு, ஆடு மாடு மேச்சு ஆளா போங்கடான்னு” அப்ப ஒரு பழமொழி சொல்லுவாங்க.

சனி ஞாயிறு மட்டுமில்ல. அன்னைக்கு வீட்டுல ஆளுங்க யாரும் இல்லைன்னா நாமதான் பள்ளிக் கூடத்துக்கு லீவு போட்டுட்டு ஆடு மாடு மேய்க்க போகணும். பள்ளிக்கூடம் போனதைவிட ஆடு மாடு மேய்ச்ச காலங்கள்தான் அதிகம்.

மாடு எப்ப புல்லு மேயும், எப்ப தண்ணி குடிக்கும், எப்ப சாணி போடும், மாடு செனையா இருந்தா, எந்த பக்கம் கருப்பையி, எந்தப் பக்கம் உணவுப்பையி, எந்த பக்கம் படுத்தா பசு கன்னு போடும், எந்த பக்கம் படுத்தா காளக் கன்னு போடும், இப்படி இது எல்லாமே எங்களுக்கு தெரியும்.

இந்த நேரத்துல வைரமுத்து ஐயா எழுதிய மாடு பத்திய ஒரு கவிதை நெனைப்புக்கு வருது. சொல்லட்டுமா?

(வண்டி ஓடும்)

uday010324
இதையும் படியுங்கள்
Subscribe