உலகை உலுக்கும் கொரோனா வைரஸ்

/idhalgal/general-knowledge/corona-virus-shakes-world
  • கொரோனா வைரஸ். நோய் வருவதும் அதை குணப்படுத்தவோ அல்லது கட்டுக்குள் வைப்பதோ எப்போதும் நிகழ்வுதான். ஆனால் நோய்க்கான காரணம் அறிந்து அதை குணப்படுத்து வதற்கான மருந்தை கண்டுபிடிப்பதற்குள் ஓராயிரம் உயிர்களாவது பலியாகி விடுகிறது. இப்படி உலகில் எந்த மூலையில் எந்த நோய் பரவினாலும் உலக நாடுகள் அனைத்துமே கைகோர்த்து அந்த நோயை கட்டுப்படுத்தவும், அதற்கு தீர்வுகாணவும் முழுவீச்சில் இறங்குவதுண்டு. கடந்த சில மாதங்களில் மருத்துவத்துறையை படுவேகமாக செயல்பட வைத்தி ருக்கிறது இந்த கொரோனா வைரஸ். சாதாரண வைரஸ் தொற்றுதான் இது என்று கடந்துவிட முடியாமல் ஆளை கொல்லும் இந்த வைரஸை கண்டு தான் உலக நாடுகள் அச்சத்தில் உறைந்திருக்கின்றன.
  • சென்ற வருடம் டிசம்பர் மாதத்தில் சீனாவில் வுஹான் மாநிலத்தில் ஒரு நோயாளி மருத்துவரிடம் சென்றார்.
  • அதிகப்படியான காய்ச்சல் அதை தொடர்ந்து மூச்சுத்திணறல் அடிக்கடி உண்டாவதாக தெரிவித்திருக்கிறார். தொடர்ந்து அவருடைய உடல் பலவீனம் அடைந்திருக்கிறது. இதே போன்று மக்கள் தொடர்ந்து மருத்துவரிடம் வரும் போது மருத்துவர்கள் இது புதிய வைரஸால் ஒரு தொற்று பரவி இருப்பதை உணர்ந்து கண்டறிந்தார்கள். இது டிசம்பர் 31-ஆம் தேதி நடந்தது.
  • இந்த தொற்றுக்கு 90 சதவீதம் இந்த கொரோனா வைரஸ் குடும்பம் தான் என்பதை உறுதி செய்திருக்கிறது.
  • ஏற்கனவே கொரோனா குடும்பத்தில் 6 வைரஸ் தொற்று இருக்கும் நிலையில் இவை 7-வது வைரஸாக அறிவிக்கப் பட்டுள்ளது. இதற்கு 2019- nCoV (new strain of coronavirus) என்று அறிவிக்கப் பட்டுள்ளது. 2019-ஆம் கண்டறிந் ததற்காக 2019 என்ற ஆண்டையும் ய் என்பது புதிய என்றும், ஈர்ய என்பது கொரோனாவையும் குறிக்கிறது.
  • 2002-இல் சார்ஸ் நஆதந- ஈர்ய என்னும் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் சீனாவில் தான் முதன் முதலில் கண்டறியப்பட்டது. இது வௌவால் மற்றும் காட்டுப்பூனையால் மனிதனுக்கு பரவியது. இந்த வைரஸ் தொற்றுக்கு 744 மக்கள் பலியானார்கள்.
  • இந்த வைரஸ் தடுப்புக்கு ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடந்தாலும் இன்றுவரை இந்த கொரோனா வைரஸ்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.
  • அதனால்தான் வைரஸ் தொற்று விலங்குகளிடமிருந்து மனிதனுக்கு பரவும் போது மருத்துவத்துறையும் உலக மக்கள் அனைவரும் பீதிக்கு உள்ளாகிறார்கள்.
  • சீனாவில் இருக்கும் மத்திய நகரம் வுஹான் மாநிலம். இங்கு 1 கோடியே 10 லட்சம் மக்கள் வசித்து வருகிறார்கள். இங்கிருக்கும் மக்களுக்குத்தான் இந்த வைரஸ் தொற்று தொடங்கியுள்ளது. குறிப்பிட்ட இந்நகரத்திலிருந்து தொடங்கிய இந்த
  • கொரோனா வைரஸ். நோய் வருவதும் அதை குணப்படுத்தவோ அல்லது கட்டுக்குள் வைப்பதோ எப்போதும் நிகழ்வுதான். ஆனால் நோய்க்கான காரணம் அறிந்து அதை குணப்படுத்து வதற்கான மருந்தை கண்டுபிடிப்பதற்குள் ஓராயிரம் உயிர்களாவது பலியாகி விடுகிறது. இப்படி உலகில் எந்த மூலையில் எந்த நோய் பரவினாலும் உலக நாடுகள் அனைத்துமே கைகோர்த்து அந்த நோயை கட்டுப்படுத்தவும், அதற்கு தீர்வுகாணவும் முழுவீச்சில் இறங்குவதுண்டு. கடந்த சில மாதங்களில் மருத்துவத்துறையை படுவேகமாக செயல்பட வைத்தி ருக்கிறது இந்த கொரோனா வைரஸ். சாதாரண வைரஸ் தொற்றுதான் இது என்று கடந்துவிட முடியாமல் ஆளை கொல்லும் இந்த வைரஸை கண்டு தான் உலக நாடுகள் அச்சத்தில் உறைந்திருக்கின்றன.
  • சென்ற வருடம் டிசம்பர் மாதத்தில் சீனாவில் வுஹான் மாநிலத்தில் ஒரு நோயாளி மருத்துவரிடம் சென்றார்.
  • அதிகப்படியான காய்ச்சல் அதை தொடர்ந்து மூச்சுத்திணறல் அடிக்கடி உண்டாவதாக தெரிவித்திருக்கிறார். தொடர்ந்து அவருடைய உடல் பலவீனம் அடைந்திருக்கிறது. இதே போன்று மக்கள் தொடர்ந்து மருத்துவரிடம் வரும் போது மருத்துவர்கள் இது புதிய வைரஸால் ஒரு தொற்று பரவி இருப்பதை உணர்ந்து கண்டறிந்தார்கள். இது டிசம்பர் 31-ஆம் தேதி நடந்தது.
  • இந்த தொற்றுக்கு 90 சதவீதம் இந்த கொரோனா வைரஸ் குடும்பம் தான் என்பதை உறுதி செய்திருக்கிறது.
  • ஏற்கனவே கொரோனா குடும்பத்தில் 6 வைரஸ் தொற்று இருக்கும் நிலையில் இவை 7-வது வைரஸாக அறிவிக்கப் பட்டுள்ளது. இதற்கு 2019- nCoV (new strain of coronavirus) என்று அறிவிக்கப் பட்டுள்ளது. 2019-ஆம் கண்டறிந் ததற்காக 2019 என்ற ஆண்டையும் ய் என்பது புதிய என்றும், ஈர்ய என்பது கொரோனாவையும் குறிக்கிறது.
  • 2002-இல் சார்ஸ் நஆதந- ஈர்ய என்னும் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் சீனாவில் தான் முதன் முதலில் கண்டறியப்பட்டது. இது வௌவால் மற்றும் காட்டுப்பூனையால் மனிதனுக்கு பரவியது. இந்த வைரஸ் தொற்றுக்கு 744 மக்கள் பலியானார்கள்.
  • இந்த வைரஸ் தடுப்புக்கு ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடந்தாலும் இன்றுவரை இந்த கொரோனா வைரஸ்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.
  • அதனால்தான் வைரஸ் தொற்று விலங்குகளிடமிருந்து மனிதனுக்கு பரவும் போது மருத்துவத்துறையும் உலக மக்கள் அனைவரும் பீதிக்கு உள்ளாகிறார்கள்.
  • சீனாவில் இருக்கும் மத்திய நகரம் வுஹான் மாநிலம். இங்கு 1 கோடியே 10 லட்சம் மக்கள் வசித்து வருகிறார்கள். இங்கிருக்கும் மக்களுக்குத்தான் இந்த வைரஸ் தொற்று தொடங்கியுள்ளது. குறிப்பிட்ட இந்நகரத்திலிருந்து தொடங்கிய இந்த வைரஸ் தொற்றுக்கு காரணம் இந்த மாநிலத்தில் இருக்கும் மிகப்பெரிய இறைச்சி மற்றும் கடல் உணவுகள் கொண்ட சந்தைபகுதி என்று கண்டறிந்தார்கள்.
  • கொரோனா வைரஸ் அறிகுறிகள்
  • கொரோனா வைரஸ் உங்களை தாக்க தொடங்கியிருந்தால் என்ன மாதிரியான அறிகுறிகள் இருக்கும் என்பதையும் சீனாவின் தேசிய சுகாதார மருத்துவம் தெரிவித்துள்ளது. முதலில் காய்ச்சலில் தொடங்கும். அதாவது உடல் வெப்பத்தை காட்டிலும் அதிக வெப்பநிலையை கொண்டிருக்கும். தொடர்ந்து இருமலும் அதிகரிக்க தொடங்கும். சுவாசக்கோளாறு உண்டாகும். அதைத் தொடர்ந்து மூச்சுத்திணறலும் உண்டாகும்.
  • இவை காற்றில் பரவும் தன்மை கொண்டது, இத்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இருமும் போதும், தும்மும் போதும், சளியை உமிழும் போதும் இந்தக் கிருமிகள் காற்று வழியாக கலந்து விடும். இதை சுவாசிப்பவர்களுக்கும் தொற்றிக்கொள்ளும்.
  • கொரோனா வைரஸ் மருந்து
  • உலக சுகாதார நிறுவனம் உலகில் எங்கு வைரஸ் தொற்று இருந்தாலும் அது குறித்த விழிப்புணர்வையும், தடுப்பு மருந்துகளையும் பரிந்துரை செய்கிறது.
  • இந்த வைரஸை முழுமையாக குணப் படுத்த முடியாது. ஆனால் இதன் அறிகுறிகளை ஆரம்பத்தில் கண்டால் இதற்கு தடுப்பு மருந்துகள் உண்டு என்றும் கூறுகிறது மருத்துவத்துறை.
  • சீனாவில் தானே இந்த கொரோனா வைரஸ் தொற்று என்று அலட்சியம் கொள்ளாமல் சுகாதாரத்தில் அதிக கவனம் எடுத்துகொள்வது நல்லது.
  • முதலில், கொரோனா வைரஸ் ஒன்றும் இந்த உலகத்துக்குப் புதிதல்ல. ஏற்கெனவே இருக்கும் ஒரு வகை வைரஸ்தான். ஆனால், சமீபத்தில் அந்த வைரஸில் நடந்த மரபணு மாற்றத்தால், அது வீரியமடைந்து உலகத்தையே பாதிக்கும் பெருந்தொற்றுக் கிருமியாக உருவெடுத்திருக்கிறது. வரலாறு பல பெரும் தொற்றுநோய்களைப் பார்த்துள்ளது. ஆனால், இந்த கொரோனா நோய் இதுவரை நாம் கண்ட தொற்றுகளிலேயே மிகப் பெரிய தாக உருவெடுக்கவும் வாய்ப்புள்ளது.
  • covid
  • அதற்கு முக்கியமான காரணங்கள் இரண்டு. ஒன்று, இதுவரை இந்த நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கப்படாதது. இரண்டாவது, மக்கள்தொகை அதிக முள்ள சீனாவைப் பாதித்திருப்பது.
  • தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா பெருந்தொற்றால் ஏற்கெனவே நலிவடைந்துள்ள உலகப் பொருளாதாரம் மேலும் பாதிப்படையக்கூடும். உலக சுகாதார நிறுவனம் இதை உலக சுகாதார நெருக்கடிநிலை என அறிவித்துள்ளது.
  • 2,000-க்கும் மேற்பட்ட இறப்புகள்; 75,000-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப் பட்டுள்ளனர். இந்த நோயை சீனா விவேகத்துடனும் உறுதியுடனும் எதிர்கொண்டு வருகிறது. உலக வரலாற்றி லேயே மிகப்பெரிய தனிமைப்படுத்தும் முயற்சியாக 1.1 கோடி மக்கள்தொகை கொண்ட வுஹான் நகரத்தை சீனா சீல் வைத்துள்ளது. அந்த மாகாணம் மட்டுமல்லாமல் மற்ற மாகாணங்களுக்கும் இப்போது நோய் பரவியுள்ளது.
  • சீன மருத்துவ அறிவியலாளர்கள் இந்தப் புதிய வகை கொரோனா வைரஸின் பல லட்ச மரபணு மூலக்கூறுகளைக் கண்டுபிடித்து, மிகக் குறுகிய காலத்தில் அதன் மரபணுவை வரிசைப்படுத்தி யுள்ளனர். இதனால், அதற்கு மருந்து, தடுப்பூசி கண்டுபிடிக்க வாய்ப்புள்ளது. ஏற்கெனவே உள்ள வைரஸ் எதிர்ப்பு மருந்துகளைக் கொண்டும் நோயாளி களிடம் சோதனை செய்துவருகின்றனர்.
  • இந்தியாவில் கேரள மாநிலத்தில் இதுவரை இரண்டு பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம், கடந்த ஆண்டு வௌவால் மூலம் பரவும் நிபா வைரஸ் நோயை மிக ஸ்திரத்துடன் கையாண்டு, அந்த நோயைக் கட்டுப்படுத்தியது. அதில் நோய்த்தொற்று ஏற்பட்டு ஒரு பெண் செவிலியர் உயிரிழந்தார். மருத்துவர்களும் மருத்துவம் சார்ந்த ஊழியர்களும்தான் எப்போதுமே அதிக நோய்த்தொற்று ஆபத்தில் உள்ளனர். ஆகவே, உரிய தற்காப்பு உபகரணங்களைக் கொடுத்து அவர்களை அரசு காக்க வேண்டும்.
  • அதற்கு என்95 மாஸ்க், கவுன், கையுறை, கண்ணாடி, தலையுறை, காலணிகள் அதிக அளவில் தேவை. இதை அரசு உறுதிசெய்ய வேண்டும்.
  • என்னதான் தற்காப்புக் கருவிகள் இருந்தாலும், அது நூறு சதவீதம் பாதுகாப்பானது அல்ல. ஆகவே, மருத்துவர்களும் செவிலியர்களும் தங்கள் உயிரைப் பணயம் வைத்துத்தான் நோயாளிகளைப் பார்க்கின்றனர்.
  • ஏர் இந்தியா விமானங்கள் மூலம் 300-க்கும் மேற்பட்ட காய்ச்சல் இல்லாத இந்தியர்கள் சீனாவிலிருந்து அழைத்து வரப்பட்டு, ஹரியானாவில் உள்ள ராணுவ மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுக் கண்காணிப்பில் உள்ளனர். இதற்கு மட்டும் அரசு நிறுவனமான ஏர் இந்தியா தேவைப்படுகிறது? எந்தத் தனியார் விமான நிறுவனமும் இதற்கு முன்வரவில்லை.
  • இந்தியா, சீனாவுக்கு நேபாளத்தின் வழியாகத் திறந்த எல்லையுடன் இருப்பதால், எல்லைக் கட்டுப்பாடின்றி நோய் உள்ளே வர வாய்ப்புள்ளது. மேலும், பல இந்தியர்கள் சீனாவில் இருப்பதால் இன்னும் பலர் இந்தியாவுக்குத் திரும்பிவர வாய்ப்புள்ளது.
  • பெருந்தொற்று நோயை எதிர்கொள் வதில் இந்தியாவுக்குப் பல சிக்கல்கள் உள்ளன. அவை பெரிய பரப்பளவு, மக்கள்தொகை நெருக்கம், மருத்துவர்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த ஊழியர்கள் பற்றாக்குறை, நிதிப் பற்றாக்குறை, பாதுகாப்புக் கருவிகளின் தேவை மற்றும் அரசின் உறுதிப்பாடு என்று இந்தப் பட்டியல் மிகவும் நீண்டது. இந்நிலையில், மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தின் சார்பில் வெளியிடப் பட்ட ஓர் அறிவிப்பில், ஹோமியோபதி மற்றும் யுனானியில் கொரோனா நோய்க்கிருமிக்கு எதிராகத் தடுப்பு மருந்து உள்ளது எனக் கூறப்பட்டுள்ளது. இது மிகவும் கண்டனத்துக்கு உரியது. உலகமே கொரோனா வைரஸுக்கு எதிராக மருந்து கண்டுபிடிக்கப் பாடுபட்டுவரும்போது, எந்த ஆதாரமும் இல்லாமல் இப்படி மாற்று மருத்துவத்தை முன்னிறுத்துவது சரியல்ல. உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் இது புரளிகளுக்கான நேர மில்லை, அறிவியலுக்கான நேரம் என தெரிவித்துள்ளார்.
  • தமிழ்நாடு
  • தமிழகத்தைப் பொறுத்தவரையில் மருத்துவத் துறையில் நல்ல கட்டமைப்பு உள்ளது. பெரும்பாலும் மாவட்டந்தோறும் மருத்துவக் கல்லூரிகள் உள்ளதால், ஆங்காங்கே தனிமை வார்டுகள் அமைக்கவும் தீவிர சிகிச்சை அளிக்கவும் ஏதுவாக இருக்கும். கொரோனா வைரஸ் பரிசோதனை செய்வதற்கு நமக்கு வரப்பிரசாதமாக "கிங் இன்ஸ்டிடியூட் ஆஃப் வைராலஜி' என்று சென்னை கிண்டியில் ஓர் அரசு ஆராய்ச்சி நிறுவனம் உள்ளது.
  • ஆனால், பெரும் தொற்றுநோய்களில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகும்போது அதற்கேற்ப பரிசோதனைத் திறனையும் அதிகரிக்க வேண்டும். போதுமான பாதுகாப்புக் கவசங்களை அரசு முன்கூட்டியே திட்டமிட்டு வாங்க வேண்டும். மருத்துவ அதிகாரிகளும் நிலைமையின் முக்கியத்துவம் கருதிப் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்.
  • இவ்வாறு சீனாவில் இருந்து திரும்பு பவர்கள், ஒருவேளை பாதிக்கப்பட்டிருந் தால், அவர்களுக்கு உடனடி சிகிச்சைக் கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது.
  • தமிழகத்திலும் கொரோனா வைரஸ் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு அளிக்கப்படுவதாக தமிழக அரசின் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. மேலும், இந்த வைரஸ் பாதிப்புக்கு யாராவது ஆளானால் அவர்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்க மருத்துவ வசதிகள் தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • காய்ச்சலுக்கு மூலக் காரணம் ஒரு நுண்கிருமி. பன்றிக்காய்ச்சல், பறவைக் காய்ச்சல் போன்ற காய்ச்சலுக்கு காரணமான நுண்கிருமி எது என்றும் எந்த விலங்கில் இருந்து நோய்த்தொற்று ஏற்படுகிறது என்றும் கண்டறியப் பட்டுவிட்டது. ஆனால், கொரோனா வைரஸ் நுண்கிருமி எந்த விலங்கில் இருந்து பரவுகிறது என தற்போதுவரை தெரியவில்லை.
  • மற்றபடி, இந்த காய்ச்சல் பிற வைரஸ் காய்ச்சல் போன்றதுதான். பெரிய வித்தியாசங்கள் இல்லை. இதுவரை மூலம் தெரியாததால், தடுப்பு மருந்து உருவாக்க முடியவில்லை.
  • இது பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கலாம். ஆனால் கொரோனா வைரஸ் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு, அந்த நோயாளியின் நோய் எதிர்ப்புத் திறன் குறைந்த நிலையில் இருந்தால், உயிர்பிழைக்கும் வாய்ப்பு குறைவுதான்.
  • சாதாரண காய்ச்சல் போலதான் இந்த கொரோனா வைரஸ் காய்ச்சல் தொடங்கும். சளி, தொடர் இருமல், உடல்வலி என தொடங்கி, மூச்சுத்திணறல் அதிகரிக்கும்.
  • இந்த காய்ச்சலின் தாக்குதல் இந்தியாவில் இதுவரை பரவவில்லை. சீனாவில் கூட, வுஹான் மாகாணத்தில் உள்ளவர் களுக்குத்தான் ஏற்பட்டுள்ளது. மக்கள் பீதியடைய வேண்டாம். உடலில் எதிர்ப்புச் சக்தி இருந்தால் எந்தவிதமான கிருமியாக இருந்தாலும், அது பாதிப்பதை நம் உடலே கட்டுப்படுத்திவிடும்.
  • இந்த வைரசுக்கு தடுப்பு மருந்துகள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்பது முக்கியம். பாதிக்கப்பட்டவர் முகமூடி அணியவேண்டும்.
  • அவருக்கு ஐவி ஃப்லூய்ட்ஸ் (ஒய ச்ப்ன்ண்க்ள்) என்று சொல்லப்படும் நரம்பு மூலமாக உடலுக்கு வலுசேர்க்க மருந்து செலுத்தப்படும். ஆனால் மூச்சுத்திணறல் அதிகரித்து, காய்ச்சல் தொடர்ந்து நீடித்தால், செயற்கை சுவாசக் கருவியைப் பொருத்த வேண்டும்.
  • உறுப்புக்கள் செயல்படுவது குறைந்து கொண்டே வந்தால், அவர் உயிர் பிழைப்பது சிரமமாக இருக்கும். நோயாளியின் நோய் எதிர்ப்புத் திறனைப் பொறுத்துதான் அவரை காப்பாற்றமுடியும்.
  • முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கொரோனா காய்ச்சல் இருப்பதாக ஒருவர் அனுமதிக்கப்பட்டால், முதலில் அவரது சளி துகளை சோதனைக்கு அனுப்பப்படும். அவர் சீனாவுக்கு சமீபத்தில் பயணம் செய்தவரா என்றும் சீனாவில் வுஹான் மாகாணத்தில் வசித்தவரா என விசாரிக்கப்படும்.
  • அவர் பாதிக்கப்பட்டவர்களோடு தொடர்பில் இருந்தாரா என்றும் தெரியவேண்டும். சளி துகளில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பதை அறிவியல் ரீதியாக கண்டறிய முடியும்.
  • பாதிக்கப்பட்டவர்களோடு மற்றவர்கள் தொடர்பில் இருக்க கூடாது. பாதிக்கப்பட்டவர் இருமல், தும்மல் ஏற்படும்போது கைகளை வைத்து மூடி சளி வெளியில் படாதவாறு செய்யலாம்.
  • அவரின் சளியின் துளி ஏதாவது உங்களுக்கு தெரியாமல் உங்கள் மீது பட்டால், நோய் தொற்று ஏற்பட வாய்ப்புண்டு. இதுவரை நோயின் மூலக் காரணம் தெரியவில்லை என்பதால், இதன் பரவலைத் தடுக்க, கூட்டமாக இருக்கும் இடங்களுக்குச் செல்வதை பாதிக்கப்பட்டவர்கள் தவிர்க்கவேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் தொட்ட பொருட்களை நீங்கள் தொடக்கூடாது.
  • கைகளை எப்போதும் தூய்மையாக வைத்திருக்கவேண்டும் என்பதுதான் முக்கியம். பாதிக்கப்பட்டவரோடு நேரடியாக தொடுவதோ, அவருடைய எச்சில் படும்படி அருகில் இருப்பதைத் தவிர்க்கவேண்டும். பாதிக்கப்பட்ட வர்களுக்கு அருகில் இருந்தால் முகமூடி அணிந்து கொள்ளவேண்டும்.

gk010320
இதையும் படியுங்கள்
Subscribe