கொரோனா வைரஸ் தடுப்பூசி முழுமையான விவரம்

/idhalgal/general-knowledge/complete-description-corona-virus-vaccine

கொரோனா வைரஸால் பல உலக நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவுகிறது. இதன் தொற்றால் பாதிக்கப்படும் அபாயத்தில் பல கோடி மக்கள் உள்ளனர். இதற்கான தடுப்பு மருந்து உண்டாக்கப்பட்டால், அவர்களுக்கு ஒருவேளை கோவிட்-19 ஏற்பட்டால், அப்போது அவர்களது உடலுக்கு கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடும் திறன் கிடைக்கும். இதன்மூலம் அவர்கள் உடல்நலம் குன்றுவது, மரணிப்பது ஆகியவை தடுக்கப்படும்.

தடுப்பு மருந்து ஒன்று கண்டுபிடிக்கப் பட்டால் சமூக இடைவெளி மற்றும் ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும். அது பொருளாதார நடவடிக்கைகளை மீண்டும் முழு வீச்சில் தொடங்கவும், இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பவும் உதவும்.

yes

வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை தீங்கற்ற முறையில் உடலின் நோய் எதிர்ப்பு அமைப்புக்கு அடையாளம் காட்டும் பணியை தடுப்பு மருந்துகள் செய்கின்றன. அதன் மூலம் நோய் எதிர்ப்பு அமைப்பு அதை படையெடுப் பாளர்களாக அடையாளம் கண்டு அதனுடன் எப்படிப் போராடுவது என்பதைக் கற்கும்.

உண்மையான நோய்க் கிருமிகள் எப்போதாவது உடலைத் தாக்கும்போது, அந்த தொற்றினை எப்படி எதிர்த்துப் போராடுவது என்பது உடலுக்கு ஏற்கெனவே தெரிந்திருக்கும்.

நோய்க்குக் காரணமாகும் வைரசைக் கொண்டே தடுப்பு மருந்துகளை உருவாக்கும் முறையே பல பத்தாண்டுகளாக நடைமுறையில் உள்ளது.

தட்டம்மை, பொன்னுக்குவீங்கி, மணல்வாரி (மீசல்ஸ், மம்ப்ஸ், ரூபெல்லா) போன்ற நோய்களுக்கான தடுப்பு மருந்துகள், அவற்றுக்கு காரணமான வைரஸ்களின் வீரியம் குறைந்த வடிவத்தைக் கொண்டே தயாரிக்கப்பட்டன.

ஃப்ளூ காய்ச்சலுக்கான தடுப்பு மருந்துகள், அந்த நோய்க்கிருமிகளின் பரவலாக தாக்கும் வகைகளை எடுத்துக் கொண்டு அவற்றை முற்றிலும் செயலிழக்க வைத்து உருவாக்கப் படுகின்றன.

ஆனால் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து தயாரிப்பில் புதிய மற்றும் அதிகம் ஆராயப்படாத ப்ளக் அண்ட் ப்ளே தடுப்பு மருந்துகள் பயன்படுத்தப் படவுள்ளன. ஏனென்றால் கொரோனா வின் மரபணுக் குறியீடு, சார்ஸ்-கோவ்-2, நமக்குத் தெரியும். தற்போது அந்த வைரஸ் உருவாகும் முறை நமக்குத் தெரிந்திருக்கிறது.

இதனால் சில ஆராய்ச்சியாளர்கள் கொரோனாவைரஸின் மரபணுக் குறியீட்டை எடுத்து பாதிப்பு இல்லாத மற்ற வைரஸ்களுக்குள் செலுத்து கின்றனர்.

அப்படி செய்தால் ஒருவரை நாம் பாதிப்பு எதுவும் இல்லாத வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாக்கலாம். அதை எதிர்ப்பு சக்தி எளிதில் வென்றுவிடும்.

வேறு சிலர் டிஎன்ஏ அல்லது ஆர்என்ஏ-வில் சிறிது சிறிதாக கொரோனாவின் மரபணுக் குறியீட்டை ஏற்றி அதற்கான தடுப்பு திறனை நம் உடலின் நோய் எதிர்ப்பு அமைப் பிலேயே உருவாக்குகிறார்கள்.

ஆராய்ச்சியாளர்கள் தடுப்பு மருந்து உருவாக்கிவிட்டனர். அதை விலங்குகள் மேல் பரிசோதிக்கவும் தொடங்கிவிட்டார்கள். அது வெற்றி பெற்றால் இந்த ஆண்டு இறுதிக்குள் மனிதர்களிடம் பரிசோதனை நடத்துவது தொடங்கும். இந்த ஆண்டு கிறிஸ்துமஸுக்குள் ஆராய்ச்சியாளர்கள் இதை உருவாக்கிவிட்டாலும் அதன் பிறகு அதை பெருமளவில் தயாரிக்கும் பெரிய பணி இருக்கிறது. அதாவது அடுத்த ஆண்டு பாதியில்தான் மருந்து தயார் நிலையில் இருக்கும்.

இவை எல்லாம் எதிர்பார்ப்புகள் மட்டுமே. இந்த தடுப்பு மருந்துகளை உருவாக்க புதிய செயல்முறையை பின்பற்றுவதால் அனைத்தும் சரியானதாக செல்லும் எனக் கூற முடியாது.

கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்கும் சாத்தியமுள்ள தடுப்பு மருந்துகளை எண்ணற்ற ஆராய்ச்சி குழுக்கள் ஏற்கனவே உருவாக்கிவிட்டன. ஆனால், அதோடு இந்த பணி நின்றுவிடாது. இன்னும் நிறைய செய்ய வேண்டியுள்ளது. பரிசோதனையில் தடுப்பு மருந்து பாதுகாப்பானது என்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும். ஏனெனில், புதிதாக உருவாக்கப்படும் கொரோனா தடுப்பு மருந்து அந்த நோய்த்

கொரோனா வைரஸால் பல உலக நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவுகிறது. இதன் தொற்றால் பாதிக்கப்படும் அபாயத்தில் பல கோடி மக்கள் உள்ளனர். இதற்கான தடுப்பு மருந்து உண்டாக்கப்பட்டால், அவர்களுக்கு ஒருவேளை கோவிட்-19 ஏற்பட்டால், அப்போது அவர்களது உடலுக்கு கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடும் திறன் கிடைக்கும். இதன்மூலம் அவர்கள் உடல்நலம் குன்றுவது, மரணிப்பது ஆகியவை தடுக்கப்படும்.

தடுப்பு மருந்து ஒன்று கண்டுபிடிக்கப் பட்டால் சமூக இடைவெளி மற்றும் ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும். அது பொருளாதார நடவடிக்கைகளை மீண்டும் முழு வீச்சில் தொடங்கவும், இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பவும் உதவும்.

yes

வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை தீங்கற்ற முறையில் உடலின் நோய் எதிர்ப்பு அமைப்புக்கு அடையாளம் காட்டும் பணியை தடுப்பு மருந்துகள் செய்கின்றன. அதன் மூலம் நோய் எதிர்ப்பு அமைப்பு அதை படையெடுப் பாளர்களாக அடையாளம் கண்டு அதனுடன் எப்படிப் போராடுவது என்பதைக் கற்கும்.

உண்மையான நோய்க் கிருமிகள் எப்போதாவது உடலைத் தாக்கும்போது, அந்த தொற்றினை எப்படி எதிர்த்துப் போராடுவது என்பது உடலுக்கு ஏற்கெனவே தெரிந்திருக்கும்.

நோய்க்குக் காரணமாகும் வைரசைக் கொண்டே தடுப்பு மருந்துகளை உருவாக்கும் முறையே பல பத்தாண்டுகளாக நடைமுறையில் உள்ளது.

தட்டம்மை, பொன்னுக்குவீங்கி, மணல்வாரி (மீசல்ஸ், மம்ப்ஸ், ரூபெல்லா) போன்ற நோய்களுக்கான தடுப்பு மருந்துகள், அவற்றுக்கு காரணமான வைரஸ்களின் வீரியம் குறைந்த வடிவத்தைக் கொண்டே தயாரிக்கப்பட்டன.

ஃப்ளூ காய்ச்சலுக்கான தடுப்பு மருந்துகள், அந்த நோய்க்கிருமிகளின் பரவலாக தாக்கும் வகைகளை எடுத்துக் கொண்டு அவற்றை முற்றிலும் செயலிழக்க வைத்து உருவாக்கப் படுகின்றன.

ஆனால் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து தயாரிப்பில் புதிய மற்றும் அதிகம் ஆராயப்படாத ப்ளக் அண்ட் ப்ளே தடுப்பு மருந்துகள் பயன்படுத்தப் படவுள்ளன. ஏனென்றால் கொரோனா வின் மரபணுக் குறியீடு, சார்ஸ்-கோவ்-2, நமக்குத் தெரியும். தற்போது அந்த வைரஸ் உருவாகும் முறை நமக்குத் தெரிந்திருக்கிறது.

இதனால் சில ஆராய்ச்சியாளர்கள் கொரோனாவைரஸின் மரபணுக் குறியீட்டை எடுத்து பாதிப்பு இல்லாத மற்ற வைரஸ்களுக்குள் செலுத்து கின்றனர்.

அப்படி செய்தால் ஒருவரை நாம் பாதிப்பு எதுவும் இல்லாத வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாக்கலாம். அதை எதிர்ப்பு சக்தி எளிதில் வென்றுவிடும்.

வேறு சிலர் டிஎன்ஏ அல்லது ஆர்என்ஏ-வில் சிறிது சிறிதாக கொரோனாவின் மரபணுக் குறியீட்டை ஏற்றி அதற்கான தடுப்பு திறனை நம் உடலின் நோய் எதிர்ப்பு அமைப் பிலேயே உருவாக்குகிறார்கள்.

ஆராய்ச்சியாளர்கள் தடுப்பு மருந்து உருவாக்கிவிட்டனர். அதை விலங்குகள் மேல் பரிசோதிக்கவும் தொடங்கிவிட்டார்கள். அது வெற்றி பெற்றால் இந்த ஆண்டு இறுதிக்குள் மனிதர்களிடம் பரிசோதனை நடத்துவது தொடங்கும். இந்த ஆண்டு கிறிஸ்துமஸுக்குள் ஆராய்ச்சியாளர்கள் இதை உருவாக்கிவிட்டாலும் அதன் பிறகு அதை பெருமளவில் தயாரிக்கும் பெரிய பணி இருக்கிறது. அதாவது அடுத்த ஆண்டு பாதியில்தான் மருந்து தயார் நிலையில் இருக்கும்.

இவை எல்லாம் எதிர்பார்ப்புகள் மட்டுமே. இந்த தடுப்பு மருந்துகளை உருவாக்க புதிய செயல்முறையை பின்பற்றுவதால் அனைத்தும் சரியானதாக செல்லும் எனக் கூற முடியாது.

கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்கும் சாத்தியமுள்ள தடுப்பு மருந்துகளை எண்ணற்ற ஆராய்ச்சி குழுக்கள் ஏற்கனவே உருவாக்கிவிட்டன. ஆனால், அதோடு இந்த பணி நின்றுவிடாது. இன்னும் நிறைய செய்ய வேண்டியுள்ளது. பரிசோதனையில் தடுப்பு மருந்து பாதுகாப்பானது என்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும். ஏனெனில், புதிதாக உருவாக்கப்படும் கொரோனா தடுப்பு மருந்து அந்த நோய்த்தொற்றை விட மோசமான பக்கவிளைவுகளை ஏற்படுத்திவிட கூடாது.

கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பாதிப்பு ஏற்படாதவாறு மக்களின் நோயெதிர்ப்பு சக்தியை தடுப்பு மருந்து அதிகரித்து அவர்களை பாதுகாப்பது மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட வேண்டும்.

கோடிக்கணக்கான மக்களுக்கு தேவை யான தடுப்பு மருந்தை உற்பத்தி செய்வதற்கான கட்டமைப்பை உருவாக்க வேண்டும்.

தடுப்பு மருந்து உருவாக்கப்பட்டாலும் அதை மக்களுக்கு அளிப்பதற்கு முன்னர், ஒவ்வொரு நாட்டிலும் உள்ள மருந்து கட்டுப்பாட்டு அமைப்புகள் அதற்கு முறைப்படி ஒப்புதல் அளிக்க வேண்டும்.

இறுதியாக, உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு தேவையான தடுப்பு மருந்தை தயாரித்து கொண்டு சேர்ப்பது என்பது சவாலான காரியமாக இருக்கும்.

ஏற்கனவே நான்கு வகையான கொரோனா வைரஸ்கள் உள்ளன. அவை அனைத்தும் சாதாரண சளியைதான் உருவாக்கும். ஆனால் இவை எதற்கும் தடுப்பு மருந்து இல்லை. பெரும்பாலான மக்களுக்கு கொரோனா வைரசின் பாதிப்பு லேசானதாக மட்டுமே இருக்கும். வைரஸ் தொற்றை குணப்படுத்துவதற்கான சில மருந்துகள் நோயாளிகளுக்கு கொடுத்து பரிசோதிக்கப்பட்டு வருகின்றன.

அத்தகைய மருந்துகள் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு வேலை செய்யும் என்று உறுதியாகக் கூற முடியாது.

இந்தியாவின் தடுப்பூசி

கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பு மருந்தை உள்நாட்டிலேயே உருவாக்கும் பணியில் ஹைதராபாத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பாரத் பயோடெக் என்னும் நிறுவனமும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகமும் இணைந்து செயல்பட்டு வருகின்றன. தற்போது உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் "கோவாக்சின்' எனும் கொரோனா தடுப்பு மருந்தை மருத்துவ சோதனைக்கு உட்படுத்தி அதில் வெற்றிகண்டால் அதை உடனே பயன்பாட்டுக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் கூறியிருந்தது. இதைத்தொடர்ந்து, மருத்துவ வல்லுநர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தடுப்பு மருந்தை இவ்வளவு குறுகிய காலக்கட்டத்தில் கண்டறிவது சாத்தியமில்லை என்று கேள்வி எழுப்பவே, இந்தியாவில் ஆராய்ச்சி நிலையில் உள்ள எந்த கொரோனா தடுப்பு மருந்தும் 2021லிஆம் ஆண்டுக்கு முன்பு நடைமுறைக்கு வருவது சாத்தியமில்லை என்று மத்திய அரசு விளக்கம் அளித்தது.

இதற்கிடையே கொரோனா வைரஸ் தடுப்புக்காக இந்தியாவில் கண்டறியப்பட்ட கோவாக்சின் மருந்தை, மனிதர்கள் மீது செலுத்தும் சோதனை ஜூலை 21 சென்னையில் எஸ்ஆர்எம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தொடங்கப்பட்டது. இந்திய அளவில் நான்கு இடங்களில் மனிதர்கள் மீதான கொரோனா தடுப்பு மருந்து சோதனை நடைபெறும் இடங்களில், தமிழகமும் இடம் பெற்றுள்ளது. ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் என்ற நிறுவனம் தயாரித்துள்ள இந்த தடுப்பு மருந்து சோதனை, ஏற்கனவே மற்ற மூன்று இடங்களில் தொடங்கி விட்டது. பாட்னாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை, ஹரியானாவில் உள்ள பண்டிட் பகவத் தயாள் ஷர்மா முதுநிலை மருத்துவ அறிவியல் நிறுவனம், ஹைதராபாத்தில் உள்ள நிஜாம் நிறுவனம் உள்ளிட்ட இடங்களில் முதல் முறை சோதனைக்கான மருந்து செலுத்தப்பட்டுவிட்டது என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக, சோதனைக்கு தயாராக உள்ளவர்களின் உடல்நிலை ஆராயப்பட்டு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு, மருந்தை செலுத்தவுள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளது. முதல் பரிசோதனை முடிவடைய 14 நாட்கள் ஆகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் உருவாக்கிய கொரோனா தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி மேற்கொள்ளும் பரிசோதனையின் முதல் கட்டம் முடிவடைந்து அதில் கிடைத்த தரவுகள் லேன்செட் மருத்துவ சஞ்சிகையில் வெளியாகி உள்ளன. இந்தியாவின் புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா என்ற நிறுவனம் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் உருவாக்கிய தடுப்பூசி இறுதியாக வெற்றி பெற்றால் அதனை பெருமளவில் உற்பத்தி செய்ய முயன்று வருகிறது.

இந்நிலையில், அவ்வாறு தயாரிக்கப் படும் தடுப்பூசிகளில் 50 சதவீதம் இந்தியாவுக்கு அளிக்கப்படும் என்று சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியாவின் தலைமை இயக்க அதிகாரி அதர் பூனாவாலா தெரிவித்துள்ளார்.

test

ரஷ்ய கொரோனா தடுப்பூசி

தாங்கள் உருவாக்கிய கொரோனா தடுப்பூசி குறித்த முதல் ஆய்வு அறிக்கையை ரஷ்ய ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ளனர். ஆரம்ப சோதனைகள் நோய் எதிர்ப்பு சக்தி தூண்டப்படுவதைக் காட்டின என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மருத்துவ சஞ்சிகையான தி லான்செட் -ல் வெளியாகி உள்ள அந்த அறிக்கையில், தடுப்பூசி பரிசோதனையில் பங்கேற்ற ஒவ்வொருவருக்கும் உடலில் நோயெதிர்ப்பான்கள் உருவானதாகவும், கடுமையான பக்க விளைவுகள் எதுவும் இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தடுப்பூசி பயன்பாட்டுக்கு ஆகஸ்ட் மாதம் அனுமதி வழங்கியது ரஷ்யா.

உலகிலேயே கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு அனுமதி அளித்த முதல் நாடு ரஷ்யாதான்.

தரவுகள் வெளியாகும் முன்னே அனுமதி அளித்த நாடும் ரஷ்யாதான்.

இந்த பரிசோதனைகள் சிறிய அளவில் நடத்தப்பட்டுள்ளதாகவும், இதனை வைத்து இதன் திறன் மற்றும் பாதுகாப்பை மதிப்பிட முடியாது என்றும் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

ஆனால், இந்த சோதனை முடிவுகளை ரஷ்ய அரசு கொண்டாடுகிறது. விமர்சகர்களுக்கான பதிலாக இந்த அறிக்கையை பார்க்கிறது.

முன்னதாக பல மேற்கத்திய ஆய்வாளர்கள் ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி உருவாக்கப்பட்ட வேகம் குறித்து தங்களது கவலையை வெளிப்படுத்தினர். நுட்பமான சில விஷயங்களை பரிசோதனை செய்யாமல் இதனை பயன்பாடுக்கு கொண்டு வருவதாக அவர்கள் தெரிவித்து இருந்தனர்.

இந்த நிலையில் இந்த அறிக்கையை அந்த மேற்கத்திய வல்லுநர்களுக்கான பதிலாக ரஷ்யா பார்க்கிறது.

இந்த தடுப்பூசி தேவையான அனைத்து சோதனைகளிலும் வெற்றி கண்டுவிட்டதாக கடந்த மாதம் விளாதிமிர் புதின் தெரிவித்து இருந்தார். தனது மகள்களில் ஒருவருக்குக் கூட அந்த தடுப்பூசி போடப்பட்டதாக அவர் கூறி இருந்தார்.

ஸ்புட்னிக் வி என்ற அந்த தடுப்பூசிக்கு இரண்டு பரிசோதனைகள் ஜூன் மற்றும் ஜூலை மாதம் நடந்ததாக அந்த மருத்துவ சஞ்சிகை தெரிவிக்கிறது.

தலா 38 மருத்துவ தன்னார்வலர் களுக்கு அந்த தடுப்பூசி முதலில் செலுத்தப்பட்டதாகவும், அதன் பின் மூன்று வாரங்கள் கழித்து கூடுதல் தடுப்பூசி செலுத்தப்பட்டதாகவும் அந்த சஞ்சிகை கூறுகிறது. 18 வயது முதல் 60 வயது வரை உடைய அந்த தன்னார்வலர்கள் 42 நாட்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டதாக கூறும் ரஷ்யா மருத்துவ அறிக்கை, அனைவரது உடலிலும் ஆண்டிபாடிஸ் எனப்படும் எதிர்ப்பான்கள் மூன்று வாரங்களில் வளர்ந்ததாக அந்த சஞ்சிகை கூறுகிறது. மிகவும் பொதுவான பக்க விளைவுகளாக தலைவலி மற்றும் மூட்டு வலி ஆகியவை இருந்தன.

இந்த பரிசோதனைகள் திறந்த முறையில் நடத்தப்பட்டன என்றும், பரவல் முறையில் நடத்தப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இதன் பொருள் வழக்கமான சோதனைகளில் செய்யப்படுவதைப் போல ஒரு சில நோயாளிகளுக்கு பொய்யான திரவம் செலுத்தப்படவில்லை. தன்னார்வலர்களுக்கு தங்களுக்கு செலுத்தப்பட்டது தடுப்பு மருந்துதான் என்று தெரியும் என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

இது போன்ற தடுப்பூசி பரிசோதனையின்போது சிலருக்கு மருந்து போலவே தோன்றும் பொய்யான திரவம் செலுத்துவார்கள். சிலருக்கு மருந்து செலுத்துவார்கள். தங்களுக்கு செலுத்தப்பட்டது எது என்று நோயாளிகளுக்குத் தெரியாது. பிறகு இரு குழுக்களின் முடிவுகளையும் ஒப்பிட்டுப் பார்ப்பார்கள்.

இதைப் போன்ற ஒப்பீடு ரஷ்ய தடுப்பூசிக்குத் தேவை என்றும், இந்த சோதனைகளைப் பெரிய அளவில், நீண்ட காலத்துக்கு நடத்தவேண்டும் என்றும் மேலதிக கண்காணிப்பு தேவை என்றும் இந்த லான்செட் அறிக்கை கூறுகிறது. இந்த தடுப்பூசி போட்டுக்கொள்வோரின் நீண்டகாலப் பாதுகாப்பு, கோவிட்-19 தொற்று நீண்டகாலம் ஏற்படாமல் தடுப்பதற்கான இத் தடுப்பூசியின் திறன் ஆகியவற்றை அப்போதுதான் நிறுவ முடியும் என்கிறது அந்த அறிக்கை.

இந்த தடுப்பூசியின் மூன்றாவது கட்ட பரிசோதனையில், பலதரப்பட்ட வயது வரம்பும், இடர் வாய்ப்பும் உள்ள 40 ஆயிரம் தன்னார்வலர்கள் பங்கேற்பாளர்கள் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ரஷ்ய தடுப்பூசியை காரணமே இல்லாமல் விமர்சித்தவர்களுக்கான பதில் இதுவென இந்த தடுப்பூசிக்கு பின்னால் உள்ள ரஷ்ய முதலீட்டு நிதியத்தை சேர்ந்த கிரில் டிமிட்ரிவ் தெரிவித்துள்ளார்.

அடுத்தக்கட்ட பரிசோதனைக்கு

இதுவரை 3000 பேர் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர் என்றும் அவர் கூறி உள்ளார்.

ரஷ்ய சுகாதார அமைச்சர் மிகைல் முராஷ்கோ, அதிக தொற்று ஆபத்துள்ள வர்களுக்கு நவம்பர் அல்லது டிசம்பர் மாதங்களில் ரஷ்யா இந்த தடுப்பூசியை செலுத்தும் என கூறி உள்ளார். ஆனால் ஒரு தடுப்பூசி சந்தைக்கு வருவதற்கு இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியிருக்கிறது என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

ஆக்ஸ்ஃபோர்டு - ஆஸ்ட்ராசெனிகா தடுப்பூசி

ஆக்ஸ்ஃபோர்டு - ஆஸ்ட்ராசெனிகா தடுப்பூசி முதல் மற்றும் இரண்டாம் கட்ட பரிசோதனைகள் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில், சந்தைக்கு வரக்கூடிய முதல் கொரோனா தடுப்பூசி இதுவாக இருக்கலாம் என கருதப்பட்டது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு மூன்றாம் கட்ட பரிசோதனை தொடங்கப்பட்டதில், அமெரிக்காவில் சுமார் 30,000 பேர், அதோடு பிரிட்டன், பிரேசில், மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் இருந்தும் மக்கள் பலர் இதில் கலந்துகொண்டனர்.

தடுப்பூசியின் மூன்றாம் கட்ட பரிசோதனை என்பது பொதுவாக பல ஆண்டு காலம் ஆயிரக்கணக்கான பேர் மீது செய்யப்படும்.

பிரிட்டனின் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்ட்ராசெனிகா நிறுவனம் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பூசியின் பரிசோதனை நிறுத்தப்பட்டுள்ளது.

தடுப்பூசி பரிசோதனை செய்யப்பட்ட ஒருவருக்கு அது மோசமான விளைவு களை ஏற்படுத்தியதே இதற்கு காரணம்.

""விவரிக்க முடியாத அளவிற்கான உடல்நலக்குறைவு” ஏற்பட்டதால் பரிசோதனை நிறுத்திவைக்கப் பட்டதாக ஆஸ்ட்ராசெனகா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், ஆக்ஸ்ஃபோர்டு ஆய்வுக்குழுவுடன் சேர்ந்து இந்தியாவில் கொரோனா தடுப்பூசி பரிசோதனை தயாரிப்புக்கு ஒப்பந்தம் செய்துள்ள சீரம் இன்ஸ்டிட்யூட், அஸ்ட்ராசெனிகா பரிசோதனை நடவடிக்கையை நிறுத்தியதாக வெளியாகும் தகவல் பற்றி கருத்து கூற முடியாது என்றும், அந்த நிறுவனம் பரிசோதனையை மறுஆய்வுக்காகவே அவ்வாறு செய்திருக்க வேண்டும் என்றும் விரைவில் பரிசோதனை மீண்டும் தொடங்கும் என்றும் கூறியுள்ளது.

இந்தியாவை பொருத்தவரை, எந்த பிரச்சினையையும் எதிர்கொள்ள வில்லை என்பதால், தொடர்ந்து இந்தியாவில் பரிசோதனை தொடரும் என்றும் சீரம் இன்ஸ்டிட்யூட் தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பூசி பரிசோதனை முன்னேற்றங் களை உலகம் கூர்ந்து கவனித்துவரும் நிலையில், ஆஸ்ட்ராசெனிகா மற்றும் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் இணைந்து தயாரித்த இந்த தடுப்பூசி மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.

பெரிய அளவில் பரிசோதனை செய்யப்படும்போது இது நடக்கக்கூடிய ஒன்றுதான் என்றும், பரிசோதனை செய்யப்படும் நபருக்கு உடனடியாக எந்த உடல்நலக்குறைவு ஏற்படாமல் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப் படுவது எந்நேரத்திலும் நடக்கலாம். எனினும் இன்னும் சில நாட்களில் பரிசோதனை மீண்டும் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த செய்தியை முதல்முறையாக வெளியிட்ட ஸ்டாட் நியூஸ் என்ற சுகாதார வலைதளம் கூறுகையில், தடுப்பூசி செலுத்தப்பட்ட பிரிட்டன் நபர் ஒருவருக்கு பாதகமான விளைவு எப்படி ஏற்பட்டது என்று உடனடியாக தெரியவரவில்லை என்றும், ஆனால் அவர் அதில் இருந்து மீண்டு வருவார் என்று தகவல்கள் தெரிவிப்பதாகவும் குறிப்பிடப்பட்டது.

கொரோனாவுக்கான தடுப்பூசி தயாரிப்பதில் அறிவியல்பூர்வமான தரநிலை மற்றும் நெறிமுறைகள் கடைபிடிப்போம் என ""வரலாற்று உறுதிமொழி” ஒன்றை ஒன்பது தடுப்பூசி தயாரிப்பாளர்கள் குழுவினர் எடுத்துள்ளனர். இதில் ஆஸ்ட்ராசெனிகா நிறுவனமும் ஒன்று. மூன்று கட்ட முறையான மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே ஒழுங்காற்று ஆணையத்தின் அனுமதிக்காக விண்ணப்பிக்கப்படும் என்ற உறுதிமொழியை அந்நிறுவனம் எடுத்துள்ளது.

ஜான்சன் அண்ட் ஜான்சன், பையோ என் டெக், கிளாக்ஸோஸ்மித் க்ளைன், டச்ண்க்ஷ்ங்ழ், மெர்க், மாடர்னா, சனோஃபி, மற்றம் நோவாநாக்ஸ் நிறுவனங்களும் இதில் கையெழுத்திட்டுள்ளன.

""தடுப்பூசி பரிசோதனை செய்யப்படும் நபர்களின் பாதுகாப்புக்கே முதல் முன்னுரிமை அளிக்கப்படும்” என்று அவர்கள் உறுதிமொழி ஏற்றுள்ளனர்.

உலகளவில் சுமார் 180 தடுப்பூசி தயாரிப்பாளர்கள், தங்கள் தடுப்பூசியை பரிசோதனை செய்துவருவதாகவும், ஆனால், இதில் யாரும் இன்னும் மருத்துவ பரிசோதனை கட்டத்தை முடிக்கவில்லை என்றும் உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. தடுப்பூசியை பாதுகாப்பாக பரிசோதிக்க அதிக காலம் எடுக்கும் என்பதால், செயல்திறன் மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதல் அனைத்தையும் பூர்த்தி செய்யும் ஒரு தடுப்பூசி இந்தாண்டு கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை என்றும் உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது.

இந்நிலையில், சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளை செலுத்த தொடங்கிவிட்டன. ஆனால், இந்த தடுப்பூசிகள் மருத்துவ பரிசோதனை நிலையில் இருப்பதாகவே உலக சுகாதார நிறுவனம் பட்டியலிட் டுள்ளது.

சீனாவின் கொரோனா வைரஸ் தடுப்பூசி

சீன அரசுக்கு சொந்தமான சீனோ ஃபார்ம் எனும் மருந்து தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ள இந்த தடுப்பு மருந்தின் மூன்றாம் கட்ட பரிசோதனை ஜூலை மாதம் தொடங்கியது. இந்த பரிசோதனை இன்னும் முற்றுப்பெறவில்லை. ஐக்கிய அரபு அமீரகம் கொரோனா வைரஸ் தடுப்பூசி ஒன்றுக்கு அவசர அனுமதி வழங்கியுள்ளது.

மனிதர்கள் உடலில் செலுத்தப்பட்டு, ஆறு வார கால பரிசோதனை செய்யப்பட்ட பிறகு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

31 ஆயிரம் தன்னார்வலர்களுக்கு பரிசோதனை செய்த பிறகு தடுப்பூசியின் அவசர பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அந்த முகமை தெரிவித்துள்ளது.

தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களுக்கு சிறிய அளவில் பக்கவிளைவுகள் இருந்தன. ஆனால், பெரிய அளவில் எந்த பிரச்சனையும் இல்லை என அந்த முகமை தெரிவித்துள்ளது.

ஆனால், என்ன பக்கவிளைவுகள் என குறிப்பிடப்படவில்லை. இவர்களில் பிற நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட ஆயிரம் பேருக்கு இந்த தடுப்பூசி வழங்கப்பட்டது. அவர்களுக்கு எந்த சிக்கலும் ஏற்படவில்லை. கடந்த ஜூன் மாதம் சினோஃபார்ம் நிறுவனத் துக்கு பரிசோதனைக்கான அனுமதி வழங்கப்பட்டது.

இந்த தடுப்பூசி முதல் இரண்டு கட்ட பரிசோதனைகளில் வெற்றி பெற்றுள்ளது. 28 நாட்களில் இரண்டு டோஸ்களாக செலுத்தப்பட்ட இந்தத் தடுப்பூசி, இந்த பரிசோதனையில் பங்கேற்ற 100% தன்னார்வலர்கள் உடல்களிலும் நோய் எதிர்ப்பு அணுக்களை உருவாகியுள்ளதாக ஜூலை மாதம் அபுதாபி அரசு தெரிவித் திருந்தது.

இறந்த வைரஸ்கள் அல்லது வைரஸ் களில் இருந்து எடுக்கப்படும் புரதம் ஆகியவற்றிலிருந்து தயாரிக்கப் படும் இந்த வகை தடுப்பூசிகள் (inactivated vaccines) இன்ஃப்ளூயென்சா காய்ச்சல், தட்டம்மை உள்ளிட்ட நோய்களுக்கு எதிராகப் பயன் படுத்தப்பட்டுள்ளன என ஐக்கிய அரபு அமீரகத்தின் நோய் கட்டுப்பாட்டு மையம் கூறுகிறது.

gk011020
இதையும் படியுங்கள்
Subscribe