* காமன்வெல்த் விளையாட்டுகள் (Commonwealth Games) என்பது ஒரு பன்னாட்டு, பல-விளையாட்டுப் போட்டிகள் கொண்ட நிகழ்வாகும். ஒவ்வொரு நான்காண்டுகளுக்கொருமுறை நடத்தப்படும் அவை காமன்வெல்த் நாடுகளின் உயர் மட்ட விளையாட்டு வீரர்களுக்கான போட்டிகளாகும்.
* காமன்வெல்த் விளையாட்டுகளில் பங்கேற்கும் வீரர்களின் எண்ணிக்கை வழக்கமாக ஏறத்தாழ 5,000 மாக இருக்கும்.
* காமன்வெல்த் விளையாட்டுகளின் கூட்டமைப்பு (CGF) இந்த விளையாட்டு களை நடத்துகிறது.
* பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்த நாடுகள் மற்றும் இங்கிலாந்தின் அதிகாரத்திற்கு கட்டுப்பட்ட நாடுகள் ஒன்றிணைந்து பங்கேற்கும் விளையாட்டு போட்டி தான் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் ஆகும்.
* 1930-ஆம் ஆண்டு கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தின் ஹாமில்டன் நகரில் முதன்முதலில் இந்த போட்டிகள் தொடங்கின. இதில் 11 நாடுகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர். தற்போது 71 அணிகள் பங்கேற்கின்றன.
* கடந்த 1978-ஆம் ஆண்டு முதல் காமன்வெல்த் போட்டி என்று அழைக்கப்படுகின்றது. இதற்கு முன்பு பிரிட்டிஷ் பேரரச விளையாட்டு போட்டி, பிரிட்டிஷ் காமன்வெல்த் போட்டி என்று அழைக்கப்பட்டு வந்தன.
* 1930-ஆம் ஆண்டு விளையாட்டில் பெண்கள் நீச்சல் போட்டிகளில் மட்டுமே போட்டியிட்டனர். 1934-ஆம் ஆண்டு முதல், பெண்கள் சில தடகள விளையாட்டுகளிலும் போட்டியிட்டனர்.
* 2002-ஆம் ஆண்டு மான்செஸ்டரில் நடைபெற்ற போட்டியில் இந்தியா 69 பதக்கங்களை வென்றிருந்தது.
* இந்தியாவில் 2010-ஆம் ஆண்டு இந்த போட்டி நடைபெற்றது. இதில் இந்திய அணி 38 தங்கம், 27 வெள்ளி மற்றும் 36 வெண்கலம் என மொத்தம் 101 பதக்கங்கள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தது.
* 2014-ஆம் ஆண்டு கிளாஸ்கோவில் போட்டியில் 15 தங்கம், 30 வெள்ளி, 19 வெண்கலத்துடன் 5-வது இடத்தை பெற்றிருந்தது. 21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள்
* 21-வது காமென்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் கோல்ட்கோஸ்ட் நகரில் கடந்த ஏப்ரல் 5-ஆம் தேதி தொடங்கி 15-ஆம் தேதி வரை 11 நாட்கள் நடைபெற்றது.
* இதில் 71 நாடுகளைச் சேர்ந்த 4500 வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்தியா சார்பில் 256 வீரர், வீராங்கனைகள் கொண்ட குழுவினர் பங்கேற்றனர்.
* பெண்களுக்கான பளு தூக்குதல் பிரிவில் மீராபாய் சானு இந்தியாவுக்கான முதல் தங்கப்பதக்கத்தை வென்றார். மணிப்பூரைச் சேர்ந்த 23 வயதான சானு 48 கிலோ எடை பிரிவில், தங்கப்பதக்கத்தைப் பெற்றுத் தந்ததுடன் காமன்வெல்த் போட்டியில் தனது புதிய சாதனையும் படைத்திருக்கிறார்.
* ஆண்களுக்கான 74 கிலோ பிரீஸ்டைல் மல்யுத்த பிரிவின் இறுதிப்போட்டியில் இந்திய வீரர் சுசில் குமார், தென்ஆப்ரிக்க வீரர் ஜொகன்னஸ் போத்தாவை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை தட்டிச்சென்றார். இது காமன்வெல்த் மல்யுத்த போட்டிகளில் அவர் தொடர்ச்சியாக வெல்லும் மூன்றாவது பதக்கமாகும்.
* காமன்வெல்த் விளையாட்டு போட்டி துப்பாக்கி சுடுதலில் இந்திய வீரர் அனிஷ் பன்வாலா 15 வயதில் தங்கப் பதக்கம் வென்றார். இதன் மூலம் குறைந்த வயதில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.
* குறிப்பாக டேபிள் டென்னிஸில் இதுவரை இல்லாத வகையில் அபாரமான ஆட்டத்தை இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் வெளிப்படுத்தி 3 தங்கம் உள்ளிட்ட 8 பதக்கங்களை வென்றனர்.
* அதேபோல் பேட்மிண்டன், துப்பாக்கி சுடுதல், மல்யுத்தம், பளுதூக்குதல் போன்றவற்றிலும் பதக்கத்தை அள்ளினார்கள். அதிகபட்சமாக துப்பாக்கி சுடுதலில் இந்தியா 16 பதக்கங்களை வென்றது. இதில் 7 தங்கம், 4 வெள்ளி, 5 வெண்கலப்பதக்கங்கள் அடங்கும்.
* மல்யுத்தப்பிரிவில் 12 பதக்கங்களைவென்றது. இதில் 5 தங்கம், 3 வெள்ளி,4 வெண்கலப்பதக்கங்கள் அடங்கும்.
* பாட்மிண்டன் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் பி.வி.சிந்துவை வீழ்த்திசாய்னா நெவால் தங்கம் வென்றார். சாய்னா காமென்வெல்த் போட்டியில் வெல்லும் 2-வது தங்கம் இதுவாகும். இதற்குமுன் 2010-ஆம் ஆண்டில் காமென்வெல்த் போட்டியில் தங்கம் வென்றுள்ளார்.
* 21-வது காமென்வெல்த் போட்டியில் இந்தியா 26 தங்கம், 20 வெள்ளி, 20 வெண்கலம் என மொத்தம் 66 பதக்கங்களுடன் மூன்றாம் இடம் பிடித்தது.
* முதலிடத்தை 80 தங்கப்பதக்கம், 58 வெள்ளி, 59 வெண்கலம் உள்ளிட்ட 197 பதக்கங்களுடன் ஆஸ்திரேலியா முதலிடத் திலும், 45 தங்கம், 45 வெள்ளி, 46 வெண்கலம் உள்ளிட்ட 137 பதக்கங்களுடன் இங்கிலாந்து 2-ஆம் இடத்தையும் பிடித்தன.
* காமென்வெல்த் போட்டிகளில் இந்தியாவின் 2-வது சிறப்பான செயல்பாடு இதுவாகும். இதற்கு முன் கடந்த 2010-ஆம் ஆண்டு டெல்லியில் நடந்த காமென்வெல்த் போட்டியில் 38 தங்கம் உள்பட 101 பதக்கங்களை இந்தியா வென்று இருந்தது.
* மேலும் இந்திய வீரர்களுக்கு கிட்டதட்ட இணையாக சாதித்துள்ளார்கள் இந்திய வீராங்கனைகள். இந்திய அணி வென்ற 26 தங்கங்களில் 13-ஐ ஆண்களும், 12-ஐ பெண்களும் பெற்று இந்திய அணிக்கு பெருமை சேர்த்துள்ளார்கள்.
* காமன்வெல்த் போட்டிகளின் நிறைவுவிழாகோல்ட் கோஸ்ட் நகரில் வண்ணமயமான வாணவேடிக்கை, இசைநிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக நிறைவடைந்தது.
* அடுத்த காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் வரும் 2022-இல்இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் நகரில் நடைபெறவுள்ளது.