முப்படைகளின் தலைமைத் தளபதி என்ற பதவி முதன்முதலாக பா.ஜ.க ஆட்சியில் உருவாக்கப்பட்டு, முதல் தலைமைத் தளபதியாக 2020-ஆம் ஆண்டு, ஜனவரி 1-ஆம் தேதி பிபின் ராவத் நியமிக்கப்பட்டார். அதற்கு முன்னதாக, 2016-ஆம் ஆண்டு, டிசம்பர் 31-ஆம் தேதி முதல் ராணுவத் தளபதியாக அவர் பதவி வகித்துவந்தார். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, 62 வயதை அடைவதற்கு முன்பாகவே ராணுவத் தளபதி பதவியி-லிருந்து விலகி, முப்படைகளின் தலைமைத் தளபதியாகப் பொறுப்பேற்றார்.
இவருக்கு 2023-ஆம் ஆண்டு, மார்ச் மாதம் வரை தலைமைத் தளபதி பதவிக்காலம் இருந்தது பிபின் ராவத் தலைமைத் தளபதியாக இருந்த காலகட்டத்தில், இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான எல்லைப் பிரச்சினை தீவிரமாக இருந்தது. எல்லையில் ஏற்பட்ட பிரச்சினைகளை பிபின் ராவத் திறமையாகக் கையாண்டதாக பாதுகாப்புத்துறை வட்டாரத்தில் புகழப்பட்டது. சீனாவு டனான எல்லைப் பிரச்னை இன்னும் முடிவுக்கு வரவில்லை. அதுபோல, பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்ந்துகொண்டிருக்கின்றன. ஆப்கான
முப்படைகளின் தலைமைத் தளபதி என்ற பதவி முதன்முதலாக பா.ஜ.க ஆட்சியில் உருவாக்கப்பட்டு, முதல் தலைமைத் தளபதியாக 2020-ஆம் ஆண்டு, ஜனவரி 1-ஆம் தேதி பிபின் ராவத் நியமிக்கப்பட்டார். அதற்கு முன்னதாக, 2016-ஆம் ஆண்டு, டிசம்பர் 31-ஆம் தேதி முதல் ராணுவத் தளபதியாக அவர் பதவி வகித்துவந்தார். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, 62 வயதை அடைவதற்கு முன்பாகவே ராணுவத் தளபதி பதவியி-லிருந்து விலகி, முப்படைகளின் தலைமைத் தளபதியாகப் பொறுப்பேற்றார்.
இவருக்கு 2023-ஆம் ஆண்டு, மார்ச் மாதம் வரை தலைமைத் தளபதி பதவிக்காலம் இருந்தது பிபின் ராவத் தலைமைத் தளபதியாக இருந்த காலகட்டத்தில், இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான எல்லைப் பிரச்சினை தீவிரமாக இருந்தது. எல்லையில் ஏற்பட்ட பிரச்சினைகளை பிபின் ராவத் திறமையாகக் கையாண்டதாக பாதுகாப்புத்துறை வட்டாரத்தில் புகழப்பட்டது. சீனாவு டனான எல்லைப் பிரச்னை இன்னும் முடிவுக்கு வரவில்லை. அதுபோல, பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்ந்துகொண்டிருக்கின்றன. ஆப்கானிஸ்தானில் ஆட்சியதிகாரத்தை தாலிபன்கள் கைப்பற்றிய பிறகு, இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக அச்சம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இத்தகைய சூழ-லில், பிபின் ராவத்தின் திடீர் மரணம் இந்தியாவில் அனைவருக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
முப்படைகளின் தலைமைத் தளபதி என்கிற பதவி மிக முக்கியமான பல பொறுப்புகளைக்கொண்டது. குறிப்பாக, ராணுவ விவகாரங்கள் துறையின் செயலாளர், பாதுகாப்பு அமைச்சகத்தின் முதன்மை ஆலோசகர் உள்ளிட்ட பொறுப்புகளை முப்படைத் தலைமைத் தளபதி கவனிப்பார். முப்படைகளின் தலைமைத் தளபதி நியமனத்துக்குப் பிறகு, ராணுவ விவகாரங்கள் துறையின் கீழ் ஆயுதப்படைகள் கொண்டுவரப்பட்டன. ஆபரேஷன், ஆயுதங்கள் மற்றும் தளவாடங்கள், பயிற்சி, தகவல் தொடர்பு, பழுதுபார்த்தல் மற்றும் பராமரிப்பு ஆகியவற்றில் ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவது தலைமைத் தளபதியின் முக்கியப் பணி. முப்படைத் தளபதிகள் இடையே ஒருமித்த கருத்தை ஏற்படுத்துவதில் பிபின் ராவத் முக்கியப் பங்கு வகித்தார்.
உத்தரகாண்ட் மாநிலம் பவுரியில் இந்து கர்வாலி ராஜ்புத் குடும்பத்தில் பிறந்தவர் ராவத். இவரது குடும்பம் பல தலைமுறைகளாக இந்திய ராணுவத்தில் பணியாற்றி வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. டேராடூனில் உள்ள கேம்பிரியன் ஹால் பள்ளி, சிம்லாவில் உள்ள செயிண்ட் எட்வர்ட்ஸ் பள்ளி ஆகியவற்றில் ராவத் பயின்றார். தனது குடும்பத்தினரை போலவே தானும் ராணுவத்தில் பணியாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் அது சார்ந்த கல்வி மற்றும் பல்வேறு பயிற்சிகளை முடித்தார். தமிழகத்தில் உள்ள வெலி-ங்டனில் பாதுகாப்பு பிரிவு உயர் அதிகாரிகளுக்கான பயிற்சி கல்லூரியில் (உநநஈ) பட்டப்படிப்பு முடித்தார். தேசிய பாதுகாப்பு கல்லூரியில் பல்வேறு பிரிவுகளில் தேர்ச்சி பெற்றார்.
அமெரிக்காவின் கன்சாஸ் அடுத்த போர்ட் லீவென்வொர்த்தில் உள்ள ராணுவக் கல்லூரியில் ராணுவத் தளபதிகளுக்கான பயிற்சி வகுப்பில் பங்கேற்றார்.
பின்னர் கடக்வாஸ்லாவில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமியில் சேர்ந்து பயிற்சி பெற்றார். இதையடுத்து டேராடூனில் உள்ள இந்திய மி-லிட்டரி அகாடமியில் பயின்றார். 1978-ஆம் ஆண்டு டிசம்பர் 16-இல் இந்திய ராணுவத்தில் தனது தந்தை பணியாற்றிய அதே 11 கூர்கா ரைஃபிள்ஸ் பிரிவின் 5-வது பட்டாலி-யனில் சேர்ந்தார். மிக உயர்ந்த போர் தளவாடங்களில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர்.
அதிரடியான பதில் தாக்குதல் நடத்தும் போர் யுக்தியில் 10 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் உள்ள உரி பகுதியில் கம்பெனி படைக்கு மேஜராக செயல் பட்டுள்ளார்.
தான் பணியாற்றிய 11 கூர்கா ரைஃபிள்ஸ் பிரிவின் 5-வது பட்டா-லியனுக்கு கொலினெல்லாக இருந்தார். மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு பெற்ற பின், உரியில் உள்ள ஜெனரல் ஆபிசர் கமாண்டிங் 19-வது இன்ஃபாண்டரி டிவிஷனுக்கு தலைமை வகித்தார். லெப்டினன்ட் ஜெனரலாக மூன்றாம் கார்ப்ஸ் பிரிவிற்கு தலைமை வகித்தார். ராணுவ போர்த்திறன் குறித்து ஆய்விற்காக 2011-இல் மீரட் சௌத்ரி சரண் சிங் பல்கலைக்கழகத்தின் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.
2015-ஆம் ஆண்டு மியான்மரில் நாகா பயங்கரவாத குழுவினர் தாக்குதலுக்கு எல்லை தாண்டி சென்று பதிலடி கொடுத்ததில் பிபின் ராவத்தின் தலைமை முக்கியத்துவம் வாய்ந்தது.
மேலும் 2016-இல் பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தியது, 2019-இல் பாலகோட் விமானப் படை தாக்குதல், 2017-இல் இந்தியா - சீனா இடையிலான டோக்லாம் எல்லை பிரச்சினையை கையாண்டது உள்ளிட்டவற்றில் பிபின் ராவத்தின் செயல்பாடுகள் குறிப்பிடத்தக்கவை. பல்வேறு ராணுவ உயர் பொறுப்புகளை வகித்த ராவத், செப்டம்பர் 1, 2016-இல் இந்திய ராணுவத்தின் துணைத் தளபதி யாக நியமிக்கப்பட்டார். இதையடுத்து டிசம்பர் 31, 2016-இல் இந்திய ராணுவத்தின் 27-வது தளபதியாக பதவியேற்றுக் கொண்டார்.
டிசம்பர் 30, 2019-இல் முப்படைகளின் தலைமை தளபதியாக நியமிக்கப்பட்டார். இதையடுத்து ஜனவரி 1, 2020-இல் பிபின் ராவத் பொறுப்பேற்றுக் கொண்டார். 40 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய ராணுவத்தில் பணியாற்றி வந்த பிபின் ராவத், பரம் விஷிஸ்ட் சேவா, உத்தம் யுத் சேவா, அதி விஷிஸ்ட் சேவா, யுத் சேவா, சேனா, விஷிஸ்ட் சேவா என ஏராளமான உயரிய விருதுகளை பெற்றுள்ளார். அண்மையில் முப்படைத் தளபதிகள் குழு தலைவராக ராணுவத் தளபதி ஜெனரல் எம்.எம். நரவானே நியமிக்கப்பட்டுள்ளார்.