இந்திரதனுஷ் திட்டம்

இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி வழங்கும் திட்டம் இந்திரதனுஷ் திட்டம் ஆகும்.

மத்திய அரசின் இந்திரதனுஷ் திட்டத்தின் கீழ் இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு காசநோய், மஞ்சள் காமாலை, தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், ரணஜன்னி, நிமோனியா காய்ச்சல், தட்டம்மை, மூளைக்காய்ச்சல் ஆகிய நோய்களுக்கான தடுப்பூசி, தடுப்பு மருந்துகள் வழங்கப்படும்.

தமிழகத்தில் காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருச்சி, மதுரை, விருதுநகர், திருநெல்வேலி-, கோவை ஆகிய எட்டு மாவட்டங்களில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

Advertisment

gg

உழவர் பாதுகாப்புத் திட்டம்

விவசாயத் தொழிலில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு வாழ்நாள் முழுவதும் உறுதுணையாக இருக்கும் வகையில் புதிய விரிவுபடுத்தப்பட்ட சமூக பாதுகாப்பு திட்டத்தில் ஒன்று தான் உழவர் பாதுகாப்புத் திட்டம்.

2.5 ஏக்கருக்கு மேற்படாத நன்செய் நிலம் அல்லது 5 ஏக்கருக்கு மேற்படாத புன்செய் நிலம் முதலியவற்றை உடைமையாகக் கொண்டு அந்த நிலத்தில் நேரடியாக பயிர் செய்யும் 18 வயது முதல் 65 வயதிற்குற்பட்ட குறு மற்றும் சிறு விவசாயிகள் இத்திட்டத்தின் மூலம் பயனடையலாம்.

விவசாயம் சார்ந்த தொழிலில் ஊதியத்திற்காகவோ அல்லது குத்தகை அடிப்படையிலோ ஈடுபட்டுள்ள 18 வயது முதல் 65 வயது வரையுள்ள அனைத்து விவசாய குத்தகைதாரர்கள், தொழிலாளர்கள் மற்றும் இவர்களைச் சார்ந்து வாழும் குடும்ப உறுப்பினர்கள் ஆகியோர் பயனடைவர். இதனடிப் படையில் இக்குடும்ப உறுப்பினர்கள் கல்லூரி கல்வி உள்ளிட்ட உயர்கல்வி கற்பதை ஊக்குவிக்கும் வகையில் இவர்கள் வேறு எந்தக் கல்வி உதவித் திட்டத்தின் கீழ் உதவி பெற்றாலும் இத்திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு வழிவகை உள்ளது.

சமூக நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திருமண உதவித் திட்டத்தின் கீழ் உதவித்தொகையை பெற தகுதி உள்ளவர்கள் அத்திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெறுவர். அவ்வாறு திருமண உதவித் திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற இயலாதவர்களுக்கு இத்திட்டத்தின் கீழ் உதவித்தொகை வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் திருமண உதவித்தொகையாக ஆணுக்கு ரூ. 8000 மற்றும் பெண்ணுக்கு ரூ. 10,000 வழங்கப்படும்.

60 வயதுக்கு மேற்பட்ட ஆதரவற்ற விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் மாதம் ஒன்றுக்கு ரூ. 1000 ஓய்வூதியமாக இத்திட்டத்தின் மூலம் பெறலாம்.

தேசிய சமூக உதவித் திட்டம்

15.08.1995 முதல் அமலுக்கு வந்த தேசிய சமூக உதவித் திட்டமானது அரசியலமைப்பின் செய்முறைக் கொள்கை ஆணை (உண்ழ்ங்ஸ்ரீற்ண்ஸ்ங் டழ்ண்ய்ஸ்ரீண்ல்ப்ங்ள்) - சட்டம் 41 மற்றும் 42ஐ நோக்கி ஒரு குறிப்பிடத் தகுந்த அடியினை எடுத்து வைத்துள்ளது. முதுமை, குடும்பத் தலைவரின் மரணம் மற்றும் பேறுகாலம் போன்ற சமயங்களில், ஏழ்மை நிலையி லிருப்பவர்களுக்கு உதவுவதற்காக ஒரு தேசிய சமுதாய நல உதவித் திட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

சட்டம் 41: குறிப்பிட்ட சில நிலைகளில் வேலை, கல்வி மற்றும் பொது உதவிகளுக்கான உரிமை மாநில அரசானது, அதனுடைய பொருளாதார வளம் மற்றும் மேம்பாட்டினைப் பொறுத்து வேலை செய்ய உரிமை, கல்வி கற்க உரிமைக்கான உதவிகளைச் செய்கிறது. மேலும் வேலைவாய்ப்பின்மை, முதுமை, நோய், இயலாமை போன்ற இன்ன பிற தேவைகளுக்கான உதவியையும் செய்கிறது.

சட்டம் 42: நீதி மற்றும் மனிதாபிமான வேலையும் பேறுகால உதவியும் கிடைக்கப்பெறுதல் நீதியும், மனிதாபிமான அடிப்படையில் வேலை மற்றும் பேறுகால உதவியும் கிடைக்க மாநில அரசு வழிவகை செய்யவேண்டும்.

நோக்கங்கள்

தேசிய சமூக உதவித் திட்டமானது முழுமையாக 100 சதவிகிதம் மத்திய அரசால் பொறுப்பேற்று நடத்தப் படுகிறது. குறைந்தபட்ச சமுதாய உதவியை, மாநில மற்றும் யூனியன் பிரதேசங்கள் தரும் அல்லது தரக்கூடிய உதவியோடு மத்திய அரசும் தருகிறது. நாடு முழுவதும் சமமான சீரான சமுதாயப் பாதுகாப்பும் நல உதவியும் மக்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் மத்திய அரசு உதவுகிறது.

மாநில அரசு செய்யும் உதவிக்குப் பதிலாக மத்திய அரசு சமுதாயப் பாதுகாப்பு நல உதவிகளைச் செய்வதில்லை. எனவே மாநில மற்றும் யூனியன் பிரதேசங்கள் தாங்கள் செய்ய எண்ணும் உதவிகளை சுதந்திரமாக மக்களுக்கு எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். தேசிய சமுதாய நல உதவித் திட்டம், சமுதாய நல உதவித் திட்டங்களை ஒன்றோடு ஒன்றிணைத்து வறுமையை ஒழிக்கவும், அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் வாய்ப்பளிக்கிறது. உதாரணமாக, பேறுகால நல உதவியை தாய் - சேய் நல உதவித் திட்டத்தோடு இணைக்கலாம். இத்திட்டத்திலுள்ள தேசிய முதியோர் உதவித்தொகை திட்டத்திற்கு மத்திய அரசின் உதவியும் உள்ளது.

இந்திரா ஆவாஸ் யோஜனா

மனித வாழ்விற்கு வீடு மிகவும் இன்றியமையாததாகும். வசிப்பதற்கு இடமில்லாத துன்ப நிலையை நீக்கி பாதுகாப்பான மனநிலையும், ஒரு அடையாளத்தையும் அது மக்களுக்குத் தருகிறது. வீடில்லா நிலையை நீக்குவதை, இந்திய நாட்டின் வறுமையை ஒழிக்கும் ஒரு முக்கிய திட்டமாகக் கருதலாம்.

கிராம மக்களுக்கான வீடுகள் எனும் திட்டம் கிராம வளர்ச்சி அமைச்சகத்தால் இந்திரா ஆவாஸ் யோஜனா திட்டத்தின் மூலம் நடத்தப்பட்டது. மத்திய அரசாங்கத்தால் பொறுப்பேற்கப்பட்ட இத்திட்டத்தின் செலவுகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் 75:25 என்ற விகிதத்தில் பகிர்ந்து கொள்கின்றன.

மாநிலம் / யூனியன் பிரதேசம் அதிக அளவு வீடில்லா மக்கள் இருக்கும் மாநிலத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. 75% வீடில்லா நிலைக்கும் 25% மாநில அளவிலான திட்டக்குழு பரிந்துரை செய்த வறுமை விகிதத்திற்கும் பயன்பாடு தரப்படுகிறது.

மாவட்ட அளவிலான ஒதுக்கீடு

வறுமைக் கோட்டிற்குக் கீழே வசிப்பவர்களின் முன்னேற்றத்தைக் குறியாகக் கொண்டு இத்திட்டம் செயல்படுகிறது. இத்திட்டத்தால் பயன்பெறுபவர்களில் 60 சதவிகிதத்தினர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி யினராக இருத்தல் வேண்டும் என்பது மிகவும் இன்றியமையாதது. மூளை மற்றும் உடல் திறன் குறைந்தோர், முன்னாள் இராணுவ வீரர்கள், விதவைகள் மற்றும் கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்பட்டோர் போன்றவர்களுக்கும் இத்திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம்

சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தின் மூலம் 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளின் மகிழ்ச்சியான எதிர்காலத்துக்காக புதிதாக ஒரு வங்கிக் கணக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பிறந்த பெண் குழந்தை முதல் 10 வயது வரையிலான பெண் குழந்தைகள் வரை யார் வேண்டுமானாலும் வங்கி அல்லது அஞ்சலகத்தில் இந்தக் கணக்கைத் தொடங்கலாம். இதில் ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் 250 ரூபாய் துவங்கி 1.5 லட்சம் ரூபாய் வரை அந்தக் குழந்தையின் பெயரில் சேமிக்கலாம். இப்படி 14 ஆண்டுகள் வரை இந்தக் கணக்கில் முதலீடு செய்ய வேண்டும்.

இந்தக் கணக்கை துவங்கிய பின் அந்தக் குழந்தையின் 18-வது வயது வரை கணக்கில் செலுத்தியுள்ள பணத்தை எடுக்க முடியாது. அதன்பின் 50 சதவிகிதம் மட்டுமே எடுக்க அனுமதிக்கப்படும். இந்தக் கணக்கு 21 வருடங்கள் வரை செயல்பாட்டில் இருக்கும்.

ஒருவேளை இடையே திருமணம் நடந்தால், அந்த வருடத்தோடு இந்தக் கணக்கு முடிந்துவிடும். அதற்குப் பின் இந்தக் கணக்கை தொடர முடியாது. 21 வருடங்கள் கழித்து மீதமுள்ள தொகையையும் அதற்கான ஆண்டுக் கூட்டு வட்டியையும் பெறலாம்.

ஒரு பெண் குழந்தைக்கு அதிகபட்சமாக 10 வயதில் இந்தக் கணக்கைத் துவங்கினால் 31 வயது வரை அதன் கல்வி, திருமணம் உள்ளிட்ட அனைத்துத் தேவைகளுக்கும் உதவும் நோக்கில் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வைப்பு நிதிக்கு அரசு 8.1 சதவிகித கூட்டு வட்டியையும், முதலீட்டில் வருமான வரி விலக்கும் அளித்துள்ளது.

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம்

தமிழ்நாட்டில், வறுமைக் கோட்டி லிருக்கும் ஏழை பெண்கள் கருவுற்றி ருக்கும் காலத்தில் அவர்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பினை ஈடு செய்து, சத்தான உணவு கிடைக்கச் செய்திட 2006-2007-ஆம் ஆண்டு முதல் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் ஏழை கர்ப்பிணிப் பெண்ணுக்கு வழங்கப் படும் உதவித்தொகை ரூபாய் ஆறாயிரத்திலிருந்து ரூபாய் பன்னிரெண் டாயிரமாக உயர்த்தி வழங்கப்படுகிறது.

இந்த உதவித்தொகையில், முதல் தவணையாக ரூ. 4000 கருவுற்ற ஏழாவது மாதத்திலும், இரண்டாவது தவணையாக ரூ. 3000 குழந்தை பிறந்த பின்பும், பிரசவத்துக்குப் பின்னர் முத்தடுப்பு ஊசி செலுத்தியதும் மூன்றாவது தவணையாக ரூ. 4 ஆயிரமும் உதவித்தொகையாக வழங்கப்படுகிறது.

பயனாளி 19 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். இரண்டு பிரசவங்களுக்கு மட்டும் வழங்கப்படும்.

நலிந்தோர் குடும்ப நல உதவித் திட்டம்

வறுமையில் வாழும் ஏழை குடும்பத்தில் உழைத்து பொருளீட்டும் நபர் இறந்து போய் விட்டால் அந்த குடும்பத்துக்கு உதவும் வகையில் நிதியுதவி அளிக்கும் இத்திட்டத்தை செயல்படுத்தியுள்ளது.

நிபந்தனைகள்இத்திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற கீழ்காணும் நிபந்தனைகளுக்குட்பட்டிருக்க வேண்டும்:

இயற்கையான மரணமாக இருக்க வேண்டும். விபத்து அல்லது தற்கொலை செய்து கொண்டவர் குடும்பம் இந்த உதவியைக் கோர முடியாது. மரணமடைந்தவர் குடும்பத் தலைவராக, அவர் மட்டுமே குடும்பத்தில் வருமானம் தேடித் தரும் நபராக இருந்திருக்க வேண்டும். மரணமடைந்தவரின் வயது 60க்குள் இருக்க வேண்டும். சாதி, மதம் போன்ற பிற கட்டுப்பாடுகள் இல்லை.

விபத்து நிவாரணத் திட்டம்

தமிழ்நாட்டில் விபத்தில் மரணமடையும் கூலித் தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு இரு வழியிலான விபத்து நிவாரணத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

விபத்து நிவாரணத் திட்டம்-1

இந்த விபத்து நிவாரணத் திட்டம்-1 கீழ் மரணமடையும் நபர்களின் வாரிசுகளுக்கு இந்திய அரசின் உதவித் தொகை ரூ. 10000 மற்றும் மாநில அரசின் உதவித் தொகை ரூ. 5000 ஆகியவை சேர்த்து மொத்தம் ரூ. 15000 வழங்கப்படும்.

பள்ளி மாணவர் புதிய மருத்துவத் திட்டம்

பள்ளி மாணவர் புதிய மருத்துவத் திட்டம் அல்லது ராஷ்ட்ரீய பால்சுவத்ஸ்திய காரிய கிராம் என்பது அரசு மற்றும் அரசு உதவி பெறும் அங்கன்வாடி முதல் மேல்நிலைப்பள்ளி வரை படிக்கும் பள்ளி மாணவர்களுக்கான புதிய இலவச மருத்துவத் திட்டம்.

இத்திட்டம் இந்திய அரசின் நிதி உதவியுடன் தமிழ்நாடு அரசு, 01 ஏப்ரல் 2015 முதல் செயல்படுத்தி உள்ளது.

இத்திட்டப்படி பள்ளிக் குழந்தைகளுக்கு இலவசமாக உடல் பரிசோதனை செய்யப்பட்டு மருத்துவ சிகிச்சை வழங்கப்படும்.

புதிய மருத்துவத் திட்டத்திற்காக தமிழ்நாடு மாநில அளவில் தனி இயக்குநரும், மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் தலைமையில் வட்டார மருத்துவக் குழுக்களும் செயல்படும்.

தமிழ்நாட்டில் உள்ள 385 ஊராட்சி ஒன்றியங்களில் தலா 2 மருத்துவக் குழு வீதம் மொத்தம் 770 மருத்துவக் குழுக்கள் செயல்படும்.

மதிய உணவுத் திட்டம்

மதிய உணவுத் திட்டம் என்ற கருத்து இந்தியாவிற்கு புதிதல்ல, ஒடுக்கப்பட்ட குழந்தைகளுக்காக 1925-இல், சுதந்திரத்திற்கு முன்பே சென்னை மாநகராட்சி நிர்வாகத்தால் தொடங்கப்பட்டது. இதே போன்று மற்ற மாநிலங்களிலும் இத்திட்டங்கள் தொடங்கப்பட்டது.

இந்தியாவிலேயே, தமிழகம் தான் முதன் முதலில் மதிய உணவு திட்டத்தை ஆரம்பப் பள்ளிகளில் அறிமுகப் படுத்தியது. இத்திட்டம் குஜராத்தில் 1984-இல் அறிமுகப்படுத்தப்பட்டது. நாளடைவில் இத்திட்டம் பல்வேறு மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டது. பின்னர், இத்திட்டம் தேசிய திட்டமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

ஆரம்பப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்காக, ஆகஸ்டு 15, 1995-இல் மதிய உணவு வழங்கும் பொருட்டு, இந்திய அரசு, ஆரம்ப கல்விக்கான தேசிய ஊட்டச்சத்து ஆதரவு திட்டத்தை தொடங்கி வைத்தது. 2002-இல் உச்சநீதி மன்றம், மதிய உணவுகளை அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் ஆரம்ப பள்ளிகளுக்கு அரசே வழங்க வழிவகுத்தது. இத்திட்டம் செப்டம்பர் 2004, 2006-இல் திருத்தி அமைக்கப்பட்டது.

உள்ளூர் குழுக்கள், அரசு உதவி பெறும் பள்ளிகள், கல்வி உத்திரவாத திட்டங்கள், சர்வ சிக்ஷ அபியான் ஆதரவின் கீழ் உள்ள அனைத்தும் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்துகின்றன.

ஏழை எளிய குழந்தைகளும், ஒதுக்கப்பட்ட குழந்தைகளும், பள்ளிக்கு அனுதினம் செல்ல அவர்களின் வகுப்பறை செயல்பாட்டில் கவனம் செலுத்த ஊக்கப்படுத்துகின்றன.

கோடை விடுமுறையில், வறட்சியால் பாதிக்கப்பட்ட இடங்களில் உள்ள ஆரம்ப பள்ளிகளில் உள்ள குழந்தை களுக்கு ஊட்டச்சத்து வழங்கப் படுகின்றன.

மதிய உணவு திட்டம், மாநில அரசின் முயற்சியால் தொடங்கப்பட்டது. இந்தியாவில், தமிழகம் மதிய உணவு திட்டத்தை அறிமுகப்படுத்தியதில் முன்னோடியாக திகழ்கிறது. தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த காமராஜர் சென்னையில் இத்திட்டத்தை முதன்முதலில் அறிமுகப்படுத்தினார். பின்னர், இத்திட்டம் தமிழ்நாட்டின் மற்ற மாவட்டங்களுக்கும் நீட்டிக்கப் பட்டது. ஊட்டச்சத்து குறைபாட்டால், பாதிக்கப்பட்ட 68 லட்சம் குழந்தை களுக்காக 1982, ஜூலை 1-இல் அப்போதைய தமிழ்நாட்டு முதலமைச்சர், எம்,ஜி.ராமச்சந்திரன் அவர்கள் மேம்படுத்தப்பட்ட மதிய உணவு திட்டத்தை சத்துணவு திட்டமாக மாற்றினார்.

பசி மற்றும் ஊட்டச்சத்து குறைவின் உடனடி தாக்கத்தால், மதிய உணவுத் திட்டம், பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதை ஊக்குவிக்கிறது.

பள்ளிகளில் குழந்தைகளின் சேர்க்கையை, குறிப்பாக பெண் குழந்தைகளின் சேர்க்கையை மதிய உணவுத் திட்டம் அதிகரிக்கச் செய்கிறது, என ஆய்வுகள் கூறுகின்றன.

வகுப்பறை பசியை, மதிய உணவு வழங்கும் திட்டம் முடிவுக்கு கொண்டு வந்தது.

சமூகமயமாக்கல், சாதி, ஒடுக்கப்பட்ட சமூக வர்க்கம் இவற்றில் மதிய உணவுத் திட்டம் முக்கிய பங்கு வகிக்கிறது. பொதுவாக, இத்திட்டத்தில் உணவு வகைகள், பகிரப்படுவதால் சாதிய பாராபட்சமும், வர்க்க ஏற்றத் தாழ்வுகளும் குறிப்பாக அகற்றப் பட்டது. பள்ளியிலிருந்து குழந்தைகளின் இடை நிற்றல் விகிதம் சரிந்தது.

மதிய உணவுத் திட்டத்தை செயல்படுத்துவதில், உண்மையில், தமிழகம் மற்ற மாநிலங்களின் எளிய செயல்பாடுகளுக்கு முன் மாதிரியாகத் திகழ்கிறது. மேலும் தமிழகம், சிறப்பான சமையலறை உள்கட்டமைப்புகளை வழங்குவதோடு மட்டுமல்லாது, 92 சதவீதத்திற்கும் மேலாக, சேர்க்கை உள்ள பள்ளிகளுக்கு சமையல் எரிவாயு வசதியை வழங்கியுள்ளது. குறைகளை நிவர்த்தி செய்வதற்காக ஒவ்வொரு பள்ளிகளிலும், பி.டி.ஓ அலுவலகங்களிலும், மாவட்ட மாநில அலுவலகங்களிலும், புகார் பெட்டிகளை பொருத்தியுள்ளது. மதிய உணவுத் திட்டத்தின் கீழ் உயர்நிலைப் பள்ளிகளையும் தமிழ்நாடு அரசு சேர்த்துள்ளது. ஆரம்ப, இடைநிலை பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே மதிய உணவுத் திட்டத்தின் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மற்ற மாநிலங் களை ஒப்பிடுகையில், மதிய உணவுத் திட்டத்திற்கு தமிழகம் கூடுதல் நிதி வழங்குகிறது. இத்திட்டத்தில் தமிழகம் மாணவர்களின் சேர்க்கையை 80 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இதற்காக, மாநில நிதிக் கருவூலம், ஏறக்குறைய ஆண்டிற்கு 1500 கோடி ரூபாயை உயர்த்தியுள்ளது.

பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம்

ஏழைக் குடும்பங்களில் உள்ள பெண் குழந்தைகள் பயன்பெறுவதற்கென இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் வழங்கப்படும் உதவித் தொகை நிலை வைப்புத் தொகையின் 20-ஆம் ஆண்டின் முடிவில் வட்டியுடன் சேர்த்து முதிர்வுத் தொகை அப்பெண் குழந்தைக்கு வழங்கப்படும்.

இத்திட்டத்தின்கீழ் குடும்பத்தில் ஒரே ஒரு பெண் குழந்தை மட்டும் இருப்பின் அப்பெண் குழந்தையின் பெயரில் ரூ.22,200 தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் இருபது ஆண்டுகளுக்கு முதலீடு செய்யப்படுகிறது. தற்போது இந்தத் தொகையானது 01.08.2011 அன்றோ அதற்கு பிறகோ பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு ரூ. 50,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின்கீழ் குடும்பத்தில் இரண்டு பெண் குழந்தைகள் மட்டுமே இருப்பின் ஒவ்வொரு பெண் குழந்தையின் பெயரிலும் ரூ.15,200 தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் இருபது ஆண்டுகளுக்கு முதலீடு செய்யப்படுகிறது. தற்போது இந்தத் தொகையானது 01.08.2011 அன்றோ அதற்கு பிறகோ பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு ரூ.25,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

Advertisment

________________

தமிழக அரசின் ஓராண்டு சாதனைகள்

தமிழக பேரவைத் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தது. 2021 மே 7-ஆம் தேதி ஆளுநர் மாளிகையில் உள்ள திறந்தவெளி மைதானத்தில் தமிழ்நாட்டின் முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்டார். அன்றைய தினமே தலைமைச் செயலகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு இரண்டு தவணைகளாக தலா ரூ.2,000 நிவாரணம், 14 மளிகைப் பொருள்கள் தொகுப்பு 2.07 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப் பட்டது. முகாம்களில் வாழும் இலங்கைத் தமிழர் குடும்பங்களுக்கு ரூ.4,000 நிவாரண நிதி வழங்கப் பட்டது.

ஆவின் பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டது.

பெண்கள், திருநங்கையர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு கட்டண மில்லா பேருந்து பயணம் அரசுப் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை, வன்னியர்கள், சீர்மரபினர் மற்றும் இதர மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 10.5 சதவீதம் சிறப்பு ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு அங்கீகாரம்.

தொழிற்கல்வி படிப்புகளில் பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்களின் சேர்க்கை விகிதத்தை அதிகரிக்க 7.5 சதவீத ஒதுக்கீடு கடந்த 10 ஆண்டுகளாக அகல பாதாளத்திற்குள் சென்ற தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கத் தலைசிறந்த பொருளாதார வல்லுநர்களை கொண்ட குழு அமைக்கப்பட்டது.

அனைத்து தரப்பு மக்களின் குறைகளைப் போக்க உங்கள் தொகுதியில் முதல்வர் தனித்துறை உருவாக்கப்பட்டது. இந்த துறையின் மூலம் லட்சக்கணக்கான மக்களின் குறைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

தலைமை செயலகத்திற்கு நேரடியாக வந்து மக்கள் காத்துக்கிடப்பதற்கு பதிலாக இணைய வாயிலாக புகார்கள் பெறப்பட்டு அது உரிய துறைக்கு அனுப்பப்பட்டு அதன் மூலம் தீர்வு காணப்பட்டது. இதனால், கன்னியாகுமரியில் இருக்கும் ஒரு நபரும் நேரடியாக தலைமை செயலகத்திற்கு வந்து காத்துக்கிடந்து தனிப்பிரிவில் மனு அளிப்பது தவிர்க்கப்பட்டது.

காவல்துறையில் பெண் காவலர்களின் உடல்நிலை மற்றும் நலனை கருத்தில் கொண்டு நீண்ட நேரம் நிற்கும் பாதுகாப்பு பணியில் இருந்து விடுவித்தது மதுரையில் 2 லட்சம் சதுர அடி பரப்பளவில், நவீன வசதிகளுடன் கூடிய கலைஞர் நூலகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

தமிழ் இலக்கியத்திற்கு வலுசேர்க்கும் படைப்புக்களை தரும் எழுத்தாளர் களுக்கு இலக்கிய மாமணி விருது மற்றும் கனவு இல்லம் அமைக்க உத்தரவிட்டுள்ளது.

சென்னை கிங்ஸ் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் ரூ. 250 கோடியில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கும் திட்டம் நீட் தேர்வின் பாதிப்பு குறித்து ஆராய ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் உயர்நிலைக் குழு ஒன்று அமைக்கப்பட்டு அந்தக் குழுவின் அறிக்கையின்படி, நீட் தேர்வு விலக்கு மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. இந்த மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பிய நிலையில் மீண்டும் சிறப்பு சட்டமன்றம் கூட்டி, நீட் தேர்வுக்கு எதிராக மசோதா நிறைவேற்றப்பட்டு அது ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக நீட் தேர்வை ரத்து செய்ய அரசு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்தியாவிலேயே முதல்முறையாக தனியார் மருத்துவமனைகளில் இலவச கொரோனா தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்கியது.

மின்துறை சம்பந்தப்பட்ட புகார்களை அளிக்க 24 மணி நேரமும் இயங்கும் மின்னகம் என்னும் புதிய மின் நுகர்வோர் சேவை மையம் தொடங்கப்பட்டது.

ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற வீரர்களுக்கு ரூ. 5 லட்சம் ஊக்கத் தொகை வழங்கும் திட்டம், கோவில் அர்ச்சகர்கள் மற்றும் ஊழியர்களின் வாழ்வாதாரம் காக்க ரூ.4 ஆயிரம் கொரோனா நிவாரணத் தொகை வழங்கப்பட்டது உள்ளிட்டவைகள் பொதுமக்களிடம் மிகுந்த பாராட்டை பெற்றுள்ளது.

கொரோனா காலத்தில் இழந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்க தமிழ்நாட்டை நோக்கி முதலீட்டாளர்களை வரவழைக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அந்தவகையில், பல முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி பல்வேறு புரிந்துணர்வு கையொப்பங்களும் போடப்பட்டுள்ளது. இதன் மூலம் உலகின் முக்கிய நிறுவனங்களும் தங்களின் தொழிற்சாலைகளை தமிழ்நாட்டில் நிறுவ உள்ளது. இதன்வாயிலாக தமிழகத்தில் படித்த லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. மேலும், துபாய் அபுதாபி போன்ற அரபு நாடுகளுக்கு முதல்வரே நேரடியாக சென்று தொழில் முதலீட்டை ஈர்க்கும் நடவடிக்கை களில் ஈடுபட்டார்.

அனைத்து துறைகளிலும் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கப் பட்டுள்ளது. தமிழ் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியவர்களை பெருமைப்படுத்த தகைசால் தமிழர் புதிய விருது வழங்கப்பட்டது.

இந்தியாவிலேயே முதல்முறையாக மக்களின் வீடுகளுக்கே நேரடியாகச் சென்று மருத்துவம் பார்க்கும் மக்களைத் தேடி மருத்துவம் என்ற புதிய திட்டமும் அறிமுகம் செய்யப் பட்டு இதுவரை 67 லட்சத்திற்கும் மேற்பட்ட பயனாளிகள் இதன் மூலம் பயனடைந்துள்ளனர்.

தமிழர்கள் வழிபடும் தமிழ்நாட்டுக் கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்யும் அன்னைத் தமிழில் அர்ச்சனை திட்டத்தையும் அரசு கொண்டு வந்தது.

மருத்துவம் போன்றே பிற இளநிலைத் தொழிற்கல்விப் படிப்புகளுக்கான சேர்க்கையிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் முன்னுரிமையின் அடிப்படையில் ஒதுக்கீடு வழங்கப்பட்டது.

சமூக நீதிக் காவலர் தந்தை பெரியாரின் பிறந்தநாளான செப்டம்பர் 17-ஆம் தேதியை சமூக நீதி நாளாக அறிவித்தது. அம்பேத்கர் பிறந்த நாளை சமத்துவ நாளாகவும் அரசு அறிவித்தது. இதுமட்டும் இல்லாமல் சமூக நீதிக் கண்காணிப்புக் குழுவையும் இந்த அரசு அமைத்தது.

இலங்கை அகதிகள் முகாம் என்பது இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு மறுவாழ்வு முகாமில் வாழும் தமிழர்களுக்காக ரூ.225 கோடி மதிப்பில் புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டது.

செக்கிழுத்த செம்மல் வ.உ. சிதம்பரனாரின் 150-வது ஆண்டு விழா அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என அறிவித்ததோடு, கோவையில் வ.உ.சிக்குச் சிலை, தூத்துக்குடியில் முதன்மைச் சாலைக்கு அவரது பெயர், அவர் எழுதிய புத்தகங்கள் மின்னாக்கம் உள்ளிட்ட 14 அறிவிப்பு களை இந்த அரசு வெளியிட்டது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை யிலான அரசின் ஓராண்டு சாதனைகள் என்பது அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை பெற்ற சாதனையாகவே பார்க்கப்படுகிறது.