ரசின் சேவைகள் பொதுமக்களை விரைவாகவும், எளிதாகவும் சென்று சேர்ந்திட “மக்களுடன் முதல்வர்” என்ற புதிய திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவையில் தொடங்கி வைத்தார்.

மக்கள் அடிக்கடி அணுகுகின்ற துறைகளான,வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, ஊரக வளர்ச்சித்துறை, நகராட்சி நிர்வாகத்துறை, ஆதி திராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர்- மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, கூட்டுறவு துறை, சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமை துறை, எரிசக்தித் துறை ஆகிய இந்த 13 அரசுத் துறைகள் மூலம், மக்களுக்குப் பல்வேறு சேவைகள் வழங்கப்படுகிறது.

cm

இந்தச் சேவைகளைப் பெறுவதில் அடித்தட்டு மக்கள் சில சிரமங்களை எதிர்கொள்வார்கள் என்று அரசுக்குத் தெரிய வந்தது. இந்தச் சேவைகளை இணைய தளங்களில் பதிவேற்றம் செய்வதில், தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் மக்களுக்குச் சில சிரமங்கள் இருந்தது. இந்த சிரமங்களை போக்கி; மக்களுக்கு உதவுகிற வகையில் உருவாக்கி இருக்கக்கூடிய ஒரு புதிய திட்டமாகத்தான், இந்த “மக்களுடன் முதல்வர்” திட்டம். முதல்வரின் முகவரித் துறையால் தொடங்கி வைக்கப் பட்டுள்ளது. அரசினுடைய சேவைகளை மக்களுக்கு நெருக்கமாக கொண்டு சென்று, அனைத்து பொதுமக்களுக்கும், அனைத்து சேவைகளும் எளிதாக கிடைக்கச் செய்வதுதான் இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம். அதாவது, செயல்முறையை விரைவுபடுத்துவது, தாமதங்களை குறைப்பது, சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்களைக் குறைப்பது என்று விரைவாகவும், எளிதாகவும் சேவைகளை வழங்குகின்ற நோக்கத்தில்தான் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

Advertisment

மாற்றுத் திறனாளிகள், முதியோர் போன்றவர்களின் சிரமங்களை முன்கூட்டியே கண்டறிந்து, அதையெல்லாம் தீர்த்து வைப்பதில் இந்தத் திட்டம் தனிக்கவனம் செலுத்தும். அனைத்து நகர்ப்புற மற்றும் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளில் வார்டு மற்றும் கிராம ஊராட்சி அளவில் அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த முகாம்களில் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் எல்லோரும் ஒரே குடையின்கீழ் கூடி, மக்களுடைய கோரிக்கைகளை பெற்று பதிவு செய்வார்கள்.

முகாம்களில் பெறப்படுகின்ற மனுக்கள் எல்லாம், சம்பந்தப்பட்ட துறைகளால் 30 நாட்களுக்குள்ளாக உரிய முறையில் பரிசீலனை செய்யப்பட்டு, தகுதியின் அடிப்படையில் உரிய சேவைகள் மக்களுக்கு வழங்கப்படும். இந்தத் திட்டம் முதல்வரின் நேரடி கண்காணிப்பில் இருக்கும். இந்த முகாம்கள் இரண்டு கட்டங்களாக நடைபெறும். முதல் கட்டமாக, புயல் பாதித்த சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களை தவிர, பிற மாவட்டங்களில் இருக்கின்ற அனைத்து நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் நகர்ப்புறங்களை ஒட்டியிருக்கின்ற கிராம ஊராட்சிகளிலும் ஏறத்தாழ 1745 முகாம்கள் நடத்தப்படும்.

cm

Advertisment

கோவையில், இந்தத் திட்டம் தொடங்கி வைக்கப்பட்ட அதே சமயத்தில், அமைச்சர்கள் அவர்களுடைய மாவட்டங்களிலும், பொறுப்பு அமைச்சர்கள் அவர்களுக்கு ஒதுக்கப் பட்ட மாவட்டங்களிலும், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர் களும் இந்த முகாம்களை தொடங்கி வைத்தார்கள். சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண உதவித்தொகை வழங்குவது முடிந்ததும், ஜனவரி மாதம் முதல் வாரத்தில் இருந்து ஜனவரி 31-ஆம் தேதி வரைக்கும் இந்தச் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.

இரண்டாம் கட்டமாக, அனைத்து மாவட்டங்களிலும் இருக்கின்ற ஊரகப் பகுதிகளில் இந்த முகாம்கள் நடத்தப்பட இருக்கின்றது. இந்த முகாம்களில் பெறப்படுகின்ற அனைத்து கோரிக்கை களும் அரசால் பரிசீலிக்கப்பட்டு, முறையான கோரிக்கையாக இருந்தால் நிறைவேற்றித் தரப்படும் என்று முதல்வர் உறுதி அளித்தார். பொதுமக்கள் கொடுக்கின்ற கோரிக்கைகள் அனைத்தும் "மக்களுடன் முதல்வர்' இணையத் தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். தொடர்புடைய துறை அலுவலர்கள் சேவை வழங்குவதற்குத் தேவையான அனைத்து ஆவணங் களையும் முகாம்களிலேயே பெற்று பரிசீலிப்பார்கள்.

“மக்களுடன் முதல்வர்” திட்டம் ஒரு சிறப்புத் திட்டம். பெறப்படும் விண்ணப்பங்களை சரியாக பரிசீலனை செய்து, பயனுள்ள வகையில், இறுதியான பதில்களை வழங்கவேண்டும் என்று அனைத்துத் துறை அலுவலர்களையும், மீண்டும் மீண்டும் நான் கேட்டுக் கொண்டு, “மக்களுடன் முதல்வர்” திட்டம் முழுமையான வெற்றி பெறவேண்டும். என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.