"தமிழர் திருநாளான பொங்கல் விழா அடிப்படையில் தை மாதத்தின் முதல் நாளிலிருந்து தமிழ்புத்தாண்டு தொடங்குவதே முறையாகும். வானியியல் ரீதியாகவும், தமிழ் மரபுரீதியாகவும் தை முதல்நாளே தமிழ் புத்தாண்டு' என முன்னாள் முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி அறிவித்தார்.

அதன்படி "தமிழ்நாடு தமிழ்புத்தாண்டு சட்டத்தினை 29-1-2008-இல் அரசாணையாக வெளியிட்டு அமுலாக்கப்பட்டது. அடுத்து ஆட்சிக்கு வந்த ஜெ. ஜெயலலிதா 23-8-2011-இல் மீண்டும் சித்திரை 1-ஆம் தேதியை தமிழ் புத்தாண்டாக அறிவித்தார். அதன்படி 13-4-2012 அன்று முதல் சித்திரைத் திருநாள் தமிழ்ப்புத்தாண்டு விழாவாக பின்பற்றப் பட்டு வருகிறது.

tamilawards

Advertisment

 சித்திரைத் திருநாள் தமிழ்புத்தாண்டு விழாவில் சிறந்த தமிழ் அமைப்புகளுக்கும், சிறந்த சமூகத் தொண்டாற்றிய மகளிர் ஒருவருக்கும், சிறந்த தமிழறிஞர்களுக்கும் விருதுகள் வழங்கப் படுகின்றன. அதன்படி சிறந்த தமிழ் அமைப் பிற்குத் தமிழ்த்தாய் விருது ரூ. 5 லட்சமும், கேடயமும், தகுதியுரையும்; பிற விருதுகளுக்கு ரூ. 1 லட்சமும் ஒரு சவரன் தங்கப்பதக்கமும், தகுதியுரையும் வழங்கப்படுகின்றன.

 சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டை கொண்டாடும் வகையில் சிறந்த தமிழ் அமைப்புக்கும் தமிழறிஞர்களுக்கு பின்வரும் விருதுகள் வழங்கப்படுகின்றன.

1. தமிழ்த்தாய் விருது (2012 முதல்)

Advertisment

2. கபிலர் விருது (2012 முதல்)

3. உ.வே.சா. விருது (2012 முதல்)

4. கம்பர் விருது (2013 முதல்)v 5. சொல்லின் செல்வர் விருது (2013 முதல்)

தமிழ்த்தாய் விருது

தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் வாழும் தமிழர்கள், தங்களது பண்பாட்டு வேர்களைக் காப்பதற்காகப் பல்வேறு அமைப்புகளை உருவாக்கி மொழி, இலக்கியம், கலை ஆகிய பணிகளை மேற்கொண்டு வரும் சிறந்த அமைப்பிற்குத்தமிழ்த்தாயின் பெயரில் விருது வழங்க 2012-ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. இவ்விருது பெறும் சங்கத்திற்கு விருதுத் தொகையாக ரூபாய் ஐந்து லட்சமும் பாராட்டு கேடயமும், சான்றிதழும் வழங்கிச் சிறப்பிக்கப்படுகிறது.

விருது பெற்ற அமைப்புகள்

 2012 - மதுரைத் தமிழ்ச் சங்கம்

 2013 - டெல்லி தமிழ்ச் சங்கம்

 2014 - நவிமும்பை தமிழ்ச் சங்கம்,

 2015 - திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கம்

 2016 - மாணவர் மன்றம்

 2017 - பெங்களூரு தமிழ்ச் சங்கம்

கபிலர் விருது

பழந்தமிழர், தொன்மை, வரலாறு, நாகரிகம், பண்பாடு முதலியன புலப்படும் வகையிலும் தமிழுக்கு அணிசேர்க்கும் வகையிலும் மரபுச் செய்யுள்/கவிதைப் படைப்புகளைப் புனைந்து வழங்கும் தமிழறிஞர் ஒருவருக்குக் கபிலர் பெயரில் விருது வழங்க 2012- ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப் பட்டது. இவ்விருது பெறும் ஒருவருக்கு விருதுத் தொகையாக ஒரு லட்சம் ரூபாயும், ஒரு சவரன் தங்கப் பதக்கமும், தகுதியுரையும் அளித்து பொன்னாடை அணிவித்துச் சிறப்பிக்கப்படுகிறது.

இதுவரை கபிலர் விருது பெற்றவர்கள்

 2012 - பேராசிரியர் மணவாளன்

 2013 - கவிஞர் முத்துலிங்கம்

 2014 - ஆ. லலிதா சுந்தரம்

 2015 - கவிஞர் பிறைசூடன்

 2016 - முனைவர் இல. அக்னிபுத்திரன்

 2017 - முனைவர் கு.வெ. பாலசுப்பிரமணியன்

உ.வே.சா. விருது

கல்வெட்டுகள், அகழாய்வு, ஓலைச் சுவடிகள், அரிய கையெழுத்துப்படிகள், கிடைத்தற்கரிய நூல்கள் முதலியவற்றை அரும்பெரும் முயற்சியால் காணக்கிடைத்து வெளிக்கொணர்ந்தும், தமிழுக்கு வளம் சேர்க்கும் வகையில் பதிப்புப் பணிகளையும் மேற்கொண்டுவரும் அறிஞர் ஒருவருக்கு உ.வே.சா. பெயரில் விருது வழங்க 2012-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இவ்விருது பெறும் ஒருவருக்கு விருதுத் தொகையாக ஒரு லட்சம் ரூபாயும், ஒரு சவரன் தங்கப்பதக்கமும், தகுதியுரையும் அளித்து, பொன்னாடை அணிவித்துச் சிறப்பிக்கப்படுகிறது.

இதுவரை உ.வே.சா. விருது பெற்றவர்கள்:

 2012 - புலவர் செ. இராசு

 2013 - பேராசிரியர் ம. வே. பசுபதி

 2014 - மருது அழகுராஜூ

 2015 - குடவாயில் மு. பாலசுப்ரமணியன்

 2016 - முனைவர் ம. அ, வேங்கடகிருஷ்ணன்

 2017 - ச. கிருஷ்ணமூர்த்தி

சொல்லின் செல்வர் விருது

சிறந்த இலக்கியப் பேச்சாளருக்கு சொல்லின் செல்வர் விருது வழங்கப்படுகிறது. இவ்விருது 2013-ஆம் ஆண்டில் துவக்கப்பட்டது. அதன்படி 2013-ஆம் ஆண்டு சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு அன்று முதன்முதலாக வழங்கப்பட்டது.

 2013- ஆம் ஆண்டுக்கான சொல்லின் செல்வர் விருதினை பேராசிரியர் ம. லோகநாயகி பெற்றார். இவர் பேராசிரியர், எழுத்தாளர், கவிஞர், ஆய்வாளர் என பன்முகம் கொண்டவர்.

 2014 - மருத்துவர் சுதா சேஷய்யன்

 2015 - சோ. சத்தியசீலன்

 2016 - பி. மணிகண்டன்

 2017 - முனைவர் வைகைச்செல்வன்

கம்பர் விருது

கம்பராமாயணத்தின் உயரிய கருத்துகளை பரப்பும் சிறந்த அறிஞருக்கு கம்பர் விருது வழங்கப்படுகிறது. இவ்விருது 2013-ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. கடந்த ஆண்டு தமிழ்ப்புத்தாண்டு அன்று முதன் முதலாக வழங்கப்பட்டது.

 2013 - பால இரமணி

 2014 - செ. வை. சண்முகம்

 2015 - கோ. செல்வம்

 2016 - இலங்கை ஜெயராஜ்

 2017 - சுகி.சிவம்

ஜி. யு. போப் விருது

 2014 - ஜெ. நாராயணசாமி

 2015 - மை. ஆரோக்கியசாமி (எ) மதுரை இளங்கவின்

 2016 - திருமதி. வைதேகி ஹெர்பர்ட்

 2017 - கோ. ராஜேஸ்வரி கோதண்டம்

உமறுப்புலவர் விருது

 2014 - முனைவர் சேமு.மு. முகமதலி

 2015 - பேராசிரியர் சாயுபு மரைக்காயர்

 2016 - முனைவர் தி. மு. அப்துல் காதர்

 2017 - ஹாஜி எம். முகமது யூசுப்

இளங்கோவடிகள் விருது

இவ்விருது 2015-ஆம் ஆண்டு புதிதாக தோற்றுவிக்கப்பட்டது.

 2015 - முனைவர் நிர்மலா மோகன்

 2016 - நா. நஞ்சுண்டன்

 2017 - முனைவர் வெ. நல்லதம்பி

முதலமைச்சர் கணினித் தமிழ் விருது

கணினி வழித் தமிழ்மொழி பரவிட வகை செய்யும் வகையில் கணினித் தமிழ் வளர்ச்சிக்காக சிறந்த தமிழ் மென்பொருள் உருவாக்குபவர்களை ஊக்குவிக்கும் வகையில், "முதலமைச்சர் கணினித் தமிழ் விருது' என்ற பெயரில் ஒரு விருது வழங்கப்படுகிறது. விருது பெறுபவருக்கு விருதுத் தொகையாக ரூபாய் 1 லட்சமும் 1 சவரன் தங்கப் பதக்கமும் வழங்கப்படுகிறது. இவ்விருது சித்திரைத் தமிழ்ப்புத்தாண்டு அன்று வழங்கப்படுகிறது.

 2013 - முனைவர் ந. தெய்வசுந்தரம்

 2014 - து. குமரேசன்

 2015 - செ. முரளி

 2016- அல்டிமேட் மென்பொருள் தீர்வகம்