தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளி களில் படிக்கும் ஏழைக் குழந்தைகளின் படிப்பினை ஊக்குவிக்கவும், ஊட்டச் சத்துக் குறைபாட்டினை போக்கவும், கற்றல் இடைநிற்றலைத் தவிர்க்கவும் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலக்கூடிய தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு அனைத்துப் பள்ளி நாட்களிலும் காலை வேளையில் சத்தான சிற்றுண்டி வழங்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் 7.5.2022 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண். 110-ன் கீழ் அறிவிப்பினை வெளியிட்டார்.
இந்த அறிவிப்பினைச் செயல்படுத்தும் பொருட்டு மாநகராட்சி, நகராட்சி, ஊரக (கிராம ஊராட்சி) மற்றும் மலைப்பகுதிகளில் உள்ள 1545 அரசு தொடக்கப் பள்ளிகளில் (1 முதல் 5-ஆம் வகுப்பு வரை) பயிலும் 114095 தொடக்கப் பள்ளி மாணவ மாணவியருக்கு முதற்கட்டமாகக் காலை உணவு வழங்கும் திட்டம் ரூ. 33.56 கோடி செலவினத்தில் தொடங்கப்பட்டது.
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் நோக்கம், சிற்றுண்டியின் வகைகள், பொதுவான நடைமுறைகள், கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு ஆகியவற்றை உள்ளடக்கிய பொதுவான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
குறிக்கோள்கள்
மாணவ / மாணவியர்கள் பசியின்றி பள்ளிக்கு வருவதை உறுதி செய்தல்
மாணவ / மாணவியர்கள் ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்படா ம-லிருத்தலை உறுதி செய்தல்
மாணவ / மாணவியரின் ஊட்டச்சத்து நிலையை உயர்த்துதல், குறிப்பாக இரத்த சோகை குறைபாட்டினை நீக்குதல்
பள்ளிகளில் மாணவ / மாணவியர்களின் வருகையை அதிகரித்தல் / தக்க வைத்துக் கொள்ளுதல்
வேலைக்குச் செல்லும் தாய்மார்களின் பணிச்சுமையை குறைத்தல்
காலை உணவு வகைகள்
பின்வரும் பல்வேறு விதமான சிற்றுண்டி வகைகளில் ஏதேனும் ஒன்றை குறிப்பிட்டுள்ள நாட்களில் வழங்க வேண்டும். திங்கட்கிழமை உப்புமா வகை; செவ்வாய்கிழமை கிச்சடி வகை ; புதன்கிழமை பொங்கல் வகை ; வியாழக்கிழமை உப்புமா வகை ; வெள்ளிக்கிழமை கிச்சடியுடன் இனிப்பு ஒரு குழந்தைக்கு ஒரு நாளைக்கு வழங்கப்படும் காலை உணவுக்கான மூலப் பொருட்களின் அளவு 50 கிராம் அரிசி/ரவை/கோதுமை ரவை/ சேமியா/உள்ளூரில் அந்தந்த இடங் களில் விளையும் சிறுதானியங்கள்/ மற்றும் சாம்பாருக்கான பருப்பு 15 கிராம் மற்றும் உள்ளூரில் கிடைக்கக் கூடிய காய்கறிகள் (சமைத்த பின் 150 - 200 கிராம் உணவு மற்றும் 60 மி.கி. காய்கறியுடன் கூடிய சாம்பார்). ஒரு வாரத்தில் குறைந்தது 2 நாட்களாவது உள்ளூரில் கிடைக்கக் கூடிய சிறுதானியங்களால் தயாரிக்கப்பட்ட காலை உணவை வழங்கலாம்.
பொதுவான வழிமுறைகள்
காலை உணவு தயாரிக்க பயன்படுத்தப் படும் மூலப் பொருட்களின் தரம் எநநஆஒ நெறிமுறைகளுக்கு உகந்தவாறு இருக்க வேண்டும். நகரப்புறப் பகுதிகளில், உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் மையப்படுத்தப்பட்ட சமையலறை அல்லது வேறு ஏதேனும் தகுதி வாய்ந்த அமைப்பின் மூலம் தரமான காலை உணவு வழங்குதலை உறுதிப்படுத்த வேண்டும். ஊரக பகுதிகளில் கிராம ஊராட்சி மற்றும் பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்பின் மூலம் தரமான காலை உணவு வழங்குதலை உறுதிப்படுத்த வேண்டும்.
காலை உணவு தயாரிக்க பயன்படுத்தப் படும் மூலப் பொருட்கள் இயல்பான நிறம், மணம் உடையதாகவும், வேறு வெளிப் பொருட்கள் (ங்ஷ்ற்ழ்ஹய்ங்ர்ன்ள் ள்ன்க்ஷள்ற்ஹய்ஸ்ரீங்) கலக்காமலும் சுத்தமாக இருக்க வேண்டும். உள்ளூரில் சமைக்கப் பயன்படுத்தப்படும் சமையல் எண்ணெய் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். ஒரு முறை பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயைக் கண்டிப்பாக மீண்டும் பயன்படுத்தக் கூடாது. உணவு சமைக்கப் பயன்படுத்தப்படும் மசாலா பொருட்கள் தரமானதாகவும், சுத்தமானதாகவும் இருக்க வேண்டும்.
காய்கறிகளின் தரத்தை உறுதி செய்வதுடன் அவற்றை சமைப்பதற்கு முன் தண்ணீரில் நன்கு கழுவி பயன்படுத்தப்பட வேண்டும். தயார் செய்யப்பட்ட உணவினை குழந்தை களுக்கு வழங்கும் முன்பு பள்ளி மேலாண்மைக் குழு ஒவ்வொரு நாளும் தரத்தினை உறுதி செய்யும் பொருட்டு உணவினை ருசி பார்த்தல் வேண்டும்.
உணவுப் பாதுகாப்புத் துறை
அலுவலர்கள் அவ்வப்போது பள்ளி களை ஆய்வு செய்து உணவின் தரத்தினை உறுதி செய்ய வேண்டும். உணவு தயாரிக்கப்படும் இடத்தைத் தேர்வு செய்து, அந்த குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே உணவு தயாரிக்கப்பட வேண்டும். உணவு தயாரித்தல் மற்றும் விநியோகிக்கும் பணிகளில் ஈடுபடும் சமையலர் மற்றும் உதவியாளர்கள் தன் சுத்தத்தைப் பராமரித்தல் வேண்டும்.
காலை உணவு வழங்கும் திட்டத்தினை திறம்பட செயல்படுத்துவதற்குக் கீழ்கண்ட துறை அலுவலர்களை கொண்ட மாநில, மாவட்ட மற்றும் பள்ளி அளவிலான கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும்.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை, ஊரக வளர்ச்சி, நகர்ப்புற நிர்வாகம், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், பள்ளிக் கல்வி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள், உணவுப் பாதுகாப்பு மதிப்பீடு திட்டம் செம்மையாக செயல்படுத்தப் பட்டுள்ளதா என்பதை மதிப்பீடு செய்ய ஏதுவாக அடிப்படை மற்றும் இறுதி நிலை ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும். சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையினால் தகுதி வாய்ந்த வெளி முகமை நிறுவனங்களின் வாயிலாக இப்பணிகள் மேற்கொள்ளப்படும்.
தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவர் களுக்கு காலைச் சிற்றுண்டி அளிக்கும் திட்டமே, காலை உணவுத் திட்டம் என அழைக்கப்படுகிறது. நகரப் பகுதிகளிலும், கிராமப் பகுதிகளிலும் பள்ளிக்கு செல்லக்கூடிய குழந்தைகள் காலையிலேயே புறப்பட்டு விடுவதால், பெரும்பாலான குழந்தைகள் காலை உணவு சாப்பிடுவது இல்லை என்ற தகவல் அரசுக்கு கிடைத்திருக்கிறது. பள்ளிகள் மிகத் தூரமாக இருப்பது மட்டுமல்ல, சிலருடைய குடும்ப சூழலும் இதற்குக் காரணமாக இருக்கிறது.
அதன் படி இந்தத் திட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ஆம் தேதி துவக்கிவைக்கப்பட்டது. முதற்கட்டமாக சில மாநகராட்சிகள், நகராட்சிகள், சில தொலைதூரக் கிராமங்களில் இந்தத் திட்டம் அமல்படுத்தப்பட்டது. ஒரு லட்சத்து 14 ஆயிரம் குழந்தைகளுக்கு முதற்கட்டமாக இந்தத் திட்டத்தில் உணவு வழங்கப்பட்டது.
மதிய உணவுத் திட்டம்
தமிழ்நாட்டில் மதிய உணவுத் திட்டத்திற்கென ஒரு நீண்ட வரலாறு உண்டு. முதன் முதலில் சென்னை மாநகராட்சியின் கீழ் உள்ள பள்ளிக்கூடங்களில்தான் இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. 1920-ஆம் ஆண்டு நவம்பர் 17-ஆம் தேதி சென்னை மாநகராட்சியில் நீதிக் கட்சியின் தலைவராக சர். பிட்டி. தியாகராயர் இருந்தபோது ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள மாநகராட்சிப் பள்ளிக்கூடங்களில் மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்க முடிவுசெய்யப்பட்டது. அப்போது அந்தப் பள்ளிக்கூடத்தில் 165 மாணவர்கள் படித்துவந்தனர். ஒரு மாணவருக்கு ஒரு அணாவரை செலவழிக்கலாம் என முடிவெடுக்கப்பட்டது.
பிறகு, மேலும் நான்கு பள்ளிக்கூடங்கள் இந்தத் திட்டத்தின் கீழ் கொண்டுவரப் பட்டன. இதையடுத்து, இந்த ஐந்து பள்ளிக்கூடங்களிலும் மாணவர் சேர்க்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்தது. ஆனால், ஆரம்பக் கல்விக்கான நிதியி-லிருந்து இந்தத் திட்டத்திற்கு செல்வுசெய்வதை பிரிட்டிஷ் அரசு ஏற்கவில்லை. ஆகவே, 1925-ஆம் ஆண்டுடன் இந்தத் திட்டம் நிறுத்தப்பட்டது. இதற்குப் பிறகு, சில பள்ளிகளில் மட்டும் மதிய உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டது.
1956-இல் காமராஜர் முதலமைச்சராக இருந்தபோது, சென்னை மாநகராட்சியின் சில பள்ளிகளில் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தால் பள்ளிகளுக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதை உணர்ந்து அதனை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்த உத்தரவிட்டார். ஆகவே, இந்தத் திட்டம் மாகாணத் திட்டமாக விரிவுபடுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின்படி சுமார் 65 ஆயிரம் குழந்தைகளுக்கு வருடத்திற்கு சுமார் 200 நாட்களுக்கு உணவு அளிக்கப்பட்டது. இதற்காகும் செலவில் 60 சதவீதத்தை மாநில அரசும் மீதமுள்ள தொகையை உள்ளூர் மட்டத்தில் நன்கொடைகளாகப் பெற்றும் நிறைவேற்றப்பட்டது.
சத்துணவு வழங்கும் திட்டம்
1982-ஆம் ஆண்டு ஜூலை மாதம் எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோது, மாநிலம் முழுவதும் உள்ள அங்கன்வாடிகள், கிராமப்புற பகுதிகளில் உள்ள ஆரம்பப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு சத்துணவு வழங்கும் திட்டம் உருவாக்கப்பட்டது. பிறகு நகர்ப்புறப் பகுதிகளுக்கும் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. 1984 செப்டம்பரில் இருந்து இந்தத் திட்டம் 15 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு உணவு வழங்கும் திட்டமாக மாற்றப் பட்டது.
1989-இல் கருணாநிதி முதலமைச்சரானபோது 15 நாட்களுக்கு ஒரு முறை மதிய உணவோடு அவித்த முட்டை வழங்கும் திட்டம் துவங்கப்பட்டது. 1998-இல் இது வாரம் ஒரு முறை முட்டையாகவும் 2010-ஆம் ஆண்டில் எல்லா நாட்களிலும் முட்டை வழங்கும் திட்டமாகவும் இது மாற்றப்பட்டது.
2014-ஆம் ஆண்டில் வெறும் அவித்த முட்டை வழங்குவதற்குப் பதிலாக, மசாலா முட்டை வழங்கும் திட்டமாக இது மாற்றப்பட்டது. பலவகை கலவை சாதங்களும் மதிய உணவில் அறிமுகப்படுத்தப்பட்டன. தமிழ்நாடு அரசு வழங்கும் புள்ளிவிவரங்களின்படி, 46,70,458 மாணவர்கள் தற்போது இந்தத் திட்டத்தின் கீழ் மதிய உணவைப் பெற்றுவருகின்றனர்.
நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞரான அமர்தியா சென்னும் ஷான் த்ரேவும் இணைந்து எழுதிய ஆய் மய்ஸ்ரீங்ழ்ற்ஹண்ய் ஏப்ர்ழ்ஹ் - ஒய்க்ண்ஹ ஹய்க் ண்ற்ள் ஈர்ய்ற்ழ்ஹக்ண்ஸ்ரீற்ண்ர்ய்ள் நூலில் இந்த மதிய உணவுத் திட்டத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது, “பொருளாதார அறிஞர்களுக்கு அச்சம் தரும் வகையில் ஆரம்பப் பள்ளியில் பயிலும் அனைத்துக் குழந்தைகளுக்கும் மதிய உணவு அளிக்கும் சமூக நலத் திட்டங்கள் துணிச்சலுடன் துவங்கப்பட்டன, ஆரம்பப் பள்ளிகளில் அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவச மதிய உணவு வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்திய முதல் மாநிலம் தமிழ்நாடு. தொடங்கப் பட்ட சமயத்தில் கவர்ச்சித் திட்டம் என விமர்சிக்கப்பட்டாலும் இதுவே பின்னர் தேசிய மதிய உணவுத் திட்டத்திற்கான முன்னோடியாக அமைந்தது” என்று குறிப்பிடுகின்றனர்.
மாநிலத் திட்டக்குழுவின் துணைத் தலைவரான டாக்டர் ஜெயரஞ்சன். “இந்தத் திட்டத்தை செயல்படுத்திய பிறகு சம்பந்தப்பட்ட பள்ளிக்கூடங்களில் மற்ற பள்ளிக்கூடங்களைவிட வருகைப் பதிவு அதிகரித்திருக்கிறது. அதேபோல, அந்தப் பள்ளிக்கூடங்களிலேயே முன்பிருந்ததைவிட வருகைப் பதிவு சதவீதம் அதிகமாகியிருக்கிறது. இந்த இரண்டையும் சேர்த்துப் பார்க்கும்போது, இந்தத் திட்டம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதை உணர முடிகிறது.” என்கிறார்.
இந்தத் திட்டத்தின் மூலம் இரண்டு, மூன்று குறிக்கோள்களை அடைய நினைக்கிறது அரசு. “இலவச பேருந்துத் திட்டத்தின் மூலம் வேலைக்குச் செல்லும் பெண்களின் செலவுச் சுமை குறைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இந்த காலை உணவுத் திட்டத்தின் மூலம் பெண்களின் வேலைச் சுமை குறையும்.
குழந்தைகளின் காலை உணவைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை என்பதால், பெண்களால் தங்கள் வேலைகளில் கவனம் செலுத்த முடியும். குழந்தைகளிடமிருக்கும் ஊட்டச்சத்து குறைபாடு நீங்கும். அதேபோல, குழந்தைகள் பசியில்லாமல் பள்ளிக்கு வருவதால், பாடங்களைக் கவனிப்பது அதிகரிக்கும். இது அவர்களது எதிர்காலக் கல்விக்கு வெகுவாகப் பயனளிக்கும்.
நாட்டிலேயே முன்னோடி திட்டமான முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை மதுரை, ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் மாணவர்களுக்கு காலை உணவினை பரிமாறி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டா-லின் தொடங்கி வைத்து, மாணவர்களுடன் உணவருந்தினார்.
தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங் களில், இத்திட்டத்தினை செயல்படுத்தும் வகையில் ரூ.33.56 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 417 மாநகராட்சி பள்ளிகளில் 43,681 மாணவர்கள், 163 நகராட்சி பள்ளிகளில் 17,427 மாணவர்கள், 728 வட்டாரம் மற்றும் கிராம ஊராட்சி பள்ளிகளில் 42,826 மாணவர்கள், 237 தொலைதூர, மலைபிரதேச பள்ளிகளில் 10,161 மாணவர்கள், என மொத்தம் 1,545 பள்ளிகளில் தொடங்கப்பட்டு, 1,14,095 மாணவர்கள் பயன்பெறுவார்கள்.
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்திட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, ஊரக வளர்ச்சித் துறை, நகர்ப்புற நிர்வாகம், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், பள்ளிக்கல்வித் துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறை ஆகிய துறைகளின் அலுவலர்களை கொண்ட மாநில, மாவட்ட மற்றும் பள்ளி அளவிலான கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு, இத்திட்டம் கண்காணிக்கப்படும்.
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத் தொடக்க விழாவில், கோயம்புத்தூர், வடிவேலம்பாளையத்தில் கடந்த 30 ஆண்டு காலமாக ஏழை எளியவர்களுக்கு ஒரு ரூபாய்க்கு இட்-லி வழங்கும் சமூக சேவகி திருமதி. கமலாத்தாளுக்கு பொன்னாடை அணிவித்து, முதலமைச்சர் சிறப்பு செய்தார்.