ந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) நிலவை ஆய்வு செய்ய 2008-இல் சந்திரயான்-1 விண்கலத்தை அனுப்பியது. அது நிலவில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்களை உறுதி செய்தது. இதையடுத்து, நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்யும் நோக்கில் சந்திரயான்-2 திட்டத்தை செயல்படுத்த இஸ்ரோ முடிவு செய்தது. இதற்காக நவீன வசதிகளுடன் சந்திரயான்-2 விண்கலம் உருவாக்கப்பட்டது.

இந்த விண்கலம் ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் 2019 ஜூலை 22-ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. 2019 செப்டம்பர் மாதம் நிலவின் சுற்றுப்பாதையை சென்றடைந்தது. எனினும், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக திட்டமிட்டபடி லேண்டர் கலன் தரையிறங்காமல் நிலவில் மோதி செயலி-ழந்தது. அதேநேரம், விண்கலத்தின் மற்றொரு பகுதியானஆர்பிட்டர் நிலவின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. இந்நிலையில் சந்திரயான்-3 திட்டத்தை சுமார் ரூ.615 கோடியில் செயல்படுத்த இஸ்ரோ முடிவு செய்தது.

இந்த விண்கலம் ஜூலை 12-ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியதாவது: நிலவு பற்றிய ஆய்வுக்கு தென்துருவத்தில் தரையிறங்க வேண்டியது அவசியம்.

அதைக் கருத்தில் கொண்டு, மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் லேண்டர், ரோவர்கலன்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்தமுறை விண்கலத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

Advertisment

சந்திரயான்-3 விண்கலம் ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. சந்திரயான்-2 போல அல்லாமல் 42 நாட்கள் பயணத்துக்கு பின்னர் லேண்டர் கலன் ஆகஸ்ட் 22-ம் தேதி விண்ணில் தரையிறக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த திட்டம் வெற்றி பெற்றால் நிலவை பற்றிய பல்வேறு ரகசியகங்கள் வெளியுலகுக்கு தெரியவரும். இதற்கிடையே என்விஎஸ்-2 எனும் வழிகாட்டுதல் செயற்கைக்கோளும் ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் மே 29-ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்டது.

cc

Advertisment

சந்திரயான்-3 விண்கலம்

சந்திரயான்-3 விண்கலத்தை ரூ.615 கோடியில் இஸ்ரோ வடிவமைத்தது. இந்த விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் மையத்தின் 2-வது ஏவுதளத்தில் இருந்து எல்விஎம்-3 (ஜிஎஸ்எல்வி மார்க்-3) ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது.

சந்திரயான்-3 விண்கலம் 3,895 கிலோ எடை கொண்டது. ஏற்கெனவே ஆர்பிட்டர், நிலவை சுற்றி வருவதால், இந்த முறை லேண்டர், ரோவர் கலன்கள் மட்டும் அனுப்பப்படுகின்றன. இவை 14 நாட்கள் நிலவில் ஆய்வு மேற்கொள்ளும். இந்தத் திட்டம் வெற்றியடைந்தால், அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளுக்கு பிறகு, நிலவில் விண்கலத்தை தரையிறக்கிய 4-வது நாடு என்ற பெருமை இந்தியாவுக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தத் திட்டத்தில் பணியாற்றியவர்கள் 54 பேர் பெண்கள் என்பது இப்போது தெரியவந்துள்ளது. இவர்கள் பொறியாளார்கள், விஞ்ஞானிகள் பதவியில் இருப்பவர்களாவர். மேலும் சந்திரயான் 3 திட்டத்தில் இணை இயக்குநர்கள், திட்ட மேலாளர்களாக பணி புரிந்துள்ளனர். சந்திரயான் 3 திட்டத்தின் இயக்குநர் மோகன் குமார்.

cc

ராக்கெட் இயக்குநர் பிஜு சி தாமஸ்.

விண்கல இயக்குநர் டாக்டர் பி.வீரமுத்துவேல். இவர்களுடன் சேர்த்து 54 பெண்கள் இந்தத் திட்டத்தில் முக்கியப் பணியாற்றியுள்ளனர். இவர்களில் ஸ்ரீஹரிகோட்ட ராக்கெட் தளத்தில் வர்ணனையாளராக இருக்கும் பி.மாதுரி தான் வெளிப்படையாக அனைவருக்கும் தெரிந்த பெண்ணாக இருக்கிறார். மற்றவர்கள் திட்டத்தின் பின்னணியில் செயல்பட்டவர்கள் ஆவர்.

ரித்து கரிதால் ஸ்ரீவஸ்தவா சந்திரயான் - 3 திட்டத்தின் முக்கிய முகமாக இருக்கிறார். இவர் இஸ்ரோவின் மூத்த விஞ்ஞானிகளில் ஒருவர். இவர் செவ்வாய்க்கு அனுப்பப்பட்ட மங்கள்யான் விண்வெளித் திட்டத்திலும் முக்கியப் பங்காற்றியவராவார். ரிது கரிதால் லக்னோ பல்கலைக்கழகத்தில் 1996-ஆம் ஆண்டு இயற்பியல் பயின்றார்.

அதன் பின்னர் பெங்களூரு இந்திய அறிவியல் மையத்தில் எம்.டெக் பயின்றார். 1997-இல் இஸ்ரோவில் இணைந்த இவர் பல்வேறு திட்டங் களிலும் தனது பங்களிப்பை செலுத்தியுள்ளார். 20-க்கும் மேற்பட்ட சர்வதேச இதழ்களில் இவரது ஆராய்ச்சிக் கட்டுரைகளை பிரசுரமாகியுள்ளன.

முன்னதாக, சந்திரயான்-3 விண்கலத்தின் பயணம் வெற்றியடைய பிரார்த்தனை செய்து, திருப்பதி மாவட்டம் சூலூர்பேட்டை அருகே உள்ள செங்காளம்ம பரமேஸ்வரி கோயிலி-ல் இஸ்ரோ தலைவர் சோமநாத் சிறப்பு வழிபாடுகள் செய்தது குறிப்பிடத்தக்கது.

நிலாவை நோக்கி சுற்றுப்பாதை நிலாவை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் சந்திரயான்-3 விண்கலத்தை 3-ஆவது சுற்றுப்பாதைக்கு உயர்த்தும் பணி வெற்றி அடைந்து உள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

பூமியின் அடுத்த சுற்றுப் பாதைக்கு உயர்த்தும் பணி ஜூலை 20-ஆம் தேதி நடக்க இருப்பதாகவும் இஸ்ரோ கூறியிருக்கிறது.

நிர்ணயிக்கப்பட்ட 179 கிலோமீட்டர் தொலைவை அடைந்ததும் சந்திரயான்-3 விண்கலத்தை வெற்றிகரமாக பூமியின் வட்டப்பாதையில் கொண்டு சேர்த்தது.

இரண்டாவது சுற்றுப்பாதைக்கு விண்கலம் உயர்த்தும் பணி முடிந்த பிறகு விண்கலம் 41,603 கி.மீ. ஷ் 226 கி.மீ. வட்டப் பாதையில் பூமியைச் சுற்றத் தொடங்கியிருக்கிறது.

மேலும் படிப்படியாக உயர்த்தப்பட்டு பின்னர் நிலாவை நோக்கி பயணிக்கத் தொடங்கும். வரும் ஆகஸ்ட் மாதம் 23-ஆம் தேதி நிலாவின் வட்டப்பாதையை அடையும். சந்திரயான்-3 விண்கலம் புவியின் நீள்வட்டப் பாதையில் சுற்றி வரும்போதெல்லாம், கொஞ்சம் கொஞ்சமாகத் தூரத்தை அதிகரித்து தொலைவாகச் செல்கிறது.

ஒவ்வொரு முறை சுற்றுவட்டப் பாதையில் புவிக்கு நெருக்கமான தொலைவுக்கு வரும்போதும் ராக்கெட்டை தொடர்ந்து எரித்து உந்துவிசை கொடுத்துக் கொண்டேயிருக்க வேண்டும். பின்னர் அங்கிருந்து உந்துவிசை கொடுத்து விண்கலத்தை தள்ளிவிட்டால், அதுவரைக்கும் புவியின் ஈர்ப்புவிசைப் பிடியிலி-ருந்து விடுபட்டு, நிலவின் ஈர்ப்புவிசை வட்டத்திற்குள் சென்றுவிடும்.

இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேசுகையில், சந்திரயான் திட்டத்தின் பின்னணியில் உள்ள இஸ்ரோ குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துத் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய சோம்நாத், 'எல்விஎம் 3-எம்4 ராக்கெட் சந்திரயான்-3 விண்கலத்தை துல்-லிய மான சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.

எல்விஎம் 3-எம்4 ராக்கெட்டின் மூன்று அடுக்குகள் வெற்றிகரமாக பிரிந்ததையடுத்து, நிலவை நோக்கிய பயணத்தை சந்திரயான்-3 வெற்றிகரமாகத் தொடங்கியது.

ddமுக்கிய பங்காற்றிய தமிழர் இஸ்ரோவின் பெங்களூரு கண்காணிப்பு மையத்தி-லிருந்து விண்கலத்தைக் கூர்ந்து கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் போவதாக வீர முத்துவேல் கூறினார். சந்திரயான்-3 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதும் பேசிய வீரமுத்துவேல், விண்கலம் மிக நுணுக்கமான சுற்றுவட்டப் பாதையில் சரியாக செலுத்தப்பட்டிருப்பதாகக் கூறினார்.

மேலும் பேசிய அவர், விண்கலம் ஆரோக்கியமாக இருப்பதாகத் தெரிவித்தார். “நிலவுக்கு நமது பயணம் இப்போது துவங்கியுள்ளது,” என்றார். இஸ்ரோவின் பெங்களூரு கண்காணிப்பு மையத்தி-லிருந்து விண்கலத்தைக் கூர்ந்து கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் போவதாகக் கூறினார். “திட்டத்தின் மிக முக்கியமான கட்டங்கள் அடுத்து வரவிருக்கின்றன. விண்கலம் நிலவில் தரையிறங்குவதற்காக ஆர்வமாகக் காத்திருக்கிறோம்,” என்றார்.

சந்திரயான்-3 திட்டத்தின் சிறப்பு

சந்திரயான் திட்டத்தின் மிக முக்கியமான நோக்கம் இந்தத் தொழில்நுட்பத்தை நிகழ்த்திப் பார்ப்பது. இது மிகப் புதிய தொழில்நுட்பம். நாம் இஸ்ரோவைத் துவங்கியபோது நம்மிடம் இருந்த தொழில்நுட்பம் மிகச் சிறியது. ஆனால், தற்போது நிறைய தொழில்நுட்பங்களை உருவாக்கியிருக்கிறோம். சந்திரயான் திட்டத்தின் முக்கிய நோக்கம், நிலவில் போய் தரையிறங்கக்கூடிய தொழில்நுட்பத்தை உருவாக்கி, அதைச் செயல்படுத்திப் பார்ப்பதுதான்.

சந்திரயான்-3, இரண்டு முக்கிய கூறுகளைக் கொண்டுள்ளது. நிலவின் சுற்றுப்பாதையில் லேண்டர் மற்றும் ரோவர் வைக்கப்பட்டிருக்கும் அலகை எடுத்துச் செல்வது ஒரு கூறு. பின்னர் நிலவின் மேற்பரப்பில் லேண்டர் மற்றும் ரோவர் தொகுதியை பாதுகாப்பாக தரையிறக்கப் பயன்படும் ஒருங்கிணைந்த தொகுதி மற்றொரு கூறு.

லேண்டர் தொகுதி, அதிலி-ருந்து பிரிந்து நிலவின் மேற்பரப்பில் இறங்கும். அது பாதுகாப்பாக இறங்கிய பின், ரோவர் வெளியேறுவதற்கான சாய்வான அமைப்பு மெதுவாக வெளியேறும்.

அதன் பின் ரோவர் (உலவி) வெளியே வரும்.

இந்த ரோவர் நிலவின் நிலப்பரப்பில் சுற்றி, அதை பகுப்பாய்வு செய்யும்.

இதில் கிடைக்கும் தகவல்கள் ரோவரி-லிருந்து லேண்டருக்கு அனுப்பிவைக்கப்படும். இந்தத் தரவுகள் நிலவிலி-ருந்து சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் சுற்றிக்கொண்டிருக்கும் சந்திரயான்-3 ஆர்பிட்டருக்கு அனுப்பப்படும். அங்கிருந்து தரையிலுள்ள இஸ்ரோவுக்கு இந்தத் தரவுகள் வந்தடையும்.

சந்திரயான்-3 சவால்கள்

சந்திரயான் -3 இல் அனுப்பி வைக்கப்படும் லேண்டரும் ரோவரும் நிறைய பரிசோதனைகளைச் செய்து சில குறிப்பிட்ட முக்கிய தரவுகளைப் பெறவேண்டும்.

அவற்றுள், நிலவின் மேற்புற ஆராய்ச்சி, நிலவின் மேற்பரப்பில் உள்ள தாதுக்களைக் கண்டுபிடிப்பது, அங்கு தனிமங்கள் உள்ளதா எனத் தேடுதல், நிலவின் வளிமண்டலத்தைக் கண்காணிப்பது, நீர் மற்றும் பனி வடிவில் தண்ணீர் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்துவது, நிலவின் மேற்பரப்பை படம்பிடித்து அனுப்புவது, மேற்பரப்பின் வேதிப்பகுப்பாய்வு மற்றும் அவற்றில் உள்ள தனிமங்களின் அடிப்படையில் நிலா எப்படி உருவானது என்ற ரகசியத்தைக் கண்டறிய முயற்சிப்பது, அதன் அடிப்படையில் 3உ வரைபடங்களை உருவாக்குதல் என ஏராளமான பணிகளை இவை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.

சந்திரயான்-3 இல், நிலவில் தரையிறங்கும் லேண்டரில் இருந்து வெளிவரும் ரோவரில் இரண்டு முக்கிய சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

அவற்றில் ஒன்று லேசர் கதிர்களைப் பயன்படுத்தி நிலவின் மேற்பரப்பில் உள்ள தாதுக்கள் மற்றும் தனிமங்கள் பற்றி ஆராய்வது. இந்த உபகரணம் சுருக்கமாக லிப்ஸ் (கஒஇ - கஹள்ங்ழ் ஒய்க்ன்ஸ்ரீங்க் இழ்ங்ஹந்க்ர்ஜ்ய் நல்ங்ஸ்ரீற்ழ்ர்ள்ஸ்ரீர்ல்ஹ்) என அழைக்கப்படுகிறது. நிலவின் மேற்பரப்பில் ரோவர் தரையிறங்கிய பின், இந்த சாதனத்தில் பொருத்தப்பட்டுள்ள லேசர் கதிர்கள் நிலவின் மேற்பரப்பில் பாய்ச்சப்படுகின்றன.

இதனால் அங்குள்ள மண் அதிக வெப்பநிலைக்கு உள்ளாகி பற்றி எரியும். இதையடுத்து அந்த மண்ணிலி-ருந்து வாயுக்கள் வெளியேறும். அந்த வாயுக்களை நிறமாலை பகுப்பாய்வு செய்வதன் மூலம், நிலவின் மேற்பரப்பில் உள்ள தனிமங்கள் குறித்த விவரங்கள் கிடைக்கும்.

இது போன்ற நிலவரங்களை அறிந்து, எதிர்காலத்தில் நிலவில் மனிதர்கள் வசிக்க ஏற்ற சூழ்நிலைகள் குறித்து ஆய்வு நடத்துவது மட்டுமின்றி, நிலவின் பிறப்பு குறித்த விவரங்களையும் தெரிந்து கொள்ள முடியும் என இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் தெரிவித்தார்.

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்பட்ட சந்திரயான்-3 விண்கலம் நிலவை சென்றடைய 40 நாட்கள் ஆகும். ஜூலை 14-ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான் 3, சூழலைப் பொறுத்து ஆகஸ்ட் 23-ஆம் தேதியோ அல்லது ஆகஸ்ட் 24-ஆம் தேதியோ நிலவில் லேண்டரை செலுத்தும் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்திருந்தார்.

நிலவில் தரையிறங்குவதற்கு சாதகமான சூழல் இருந்தால் மட்டுமே ஆகஸ்ட் 23-ஆம் தேதி தரையிறக்கப்படும் என்றும் இல்லையென்றால் ஒரு மாதம் கழித்து தரையிறக்க முயற்சி செய்வோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஏனெனில் நிலவில் இறங்கி ஆராய்ச்சி செய்யும் லேண்டர் மற்றும் ரோவர் ஆகியவை வேலை செய்ய மின்சாரம் தேவை.

லேண்டர்கள் மற்றும் ரோவர்கள் அந்த மின்சாரத்தை சூரிய ஒளித் தகடுகளில் இருந்து மட்டுமே பெற முடியும். அதாவது லேண்டர் தரையிறங்கும் நேரத்தில் சூரிய ஒளி இருக்க வேண்டும். நிலவில் பகல் நேரத்தில் தரையிறக்கம் நடக்க வேண்டும் என்பதே இதன் பொருள்.

நிலவில் சந்திரயான்-3 விண்கலத்தை தரையிறக்குவதற்கு வெறும் 15 நிமிடங்கள் மட்டுமே ஆகும். ஆனால், அந்தப் பதினைந்து நிமிடங்களில்தான் இந்த முழு திட்டமும் வெற்றி பெறுமா இல்லையா என்பதே அடங்கியுள்ளது.

இருப்பதிலேயே மிகவும் கடினமான அம்சம் இதுதான். கடந்த முறை சந்திரயான்-2 திட்டம் தோல்வி யடைந்ததும் இந்த இடத்தில்தான்.இதற்காக, தரையிறங்கி கலத்தின் கீழே நான்கு குட்டி ராக்கெட்டுகள் உள்ளன.

அந்த ராக்கெட்டுகளை எரித்து, தரையிறங்கி கலத்தை மெல்ல மெல்லத் தரையிறக்க வேண்டும்.

இந்தத் திட்டத்தின் இறுதிக்கட்டமாக, தரையிறங்கி கலத்தின் வயிற்றுக்குள் இருக்கும் ஊர்திக்கலத்தை வெளியே எடுத்து நிலாவின் தரையில் இயக்கவேண்டும். அதற்கு, தரையிறங்கி கலம் நிலவின் தரையில் இறங்கியதும், அதைச் சுற்றி அமைக்கப்பட்டிருக்கும் சுவர்களில் ஒன்று சாய்வுப் பலகையைப் போல் திறந்து கீழ்நோக்கி இறங்கும். அந்த சாய்வுப் பலகையின் வழியே உருண்டு இறங்கி நிலவின் தரையில் தடம் பதிக்கும் ஊர்திக்கலம், தனது வேலையைத் தொடங்கும்.