ந்தியாவின் நிலவை நோக்கிய பயணம் என்கிற லட்சிய திட்டத்தின் ஒரு பகுதியான சந்திரயான்-2 கடந்த ஜூலை 22ஆம் தேதி வெற்றிகரமாக ஜி.எஸ்..எல். வி. மார்க்-3 மூலம் ஏவப்பட்டது.

சந்திரயான்-2 -இல் மூன்று முக்கிய கலன்கள் உள்ளன. முதலாவதாக, சுற்றுவட்டக்கலன் நிலவின் சுற்றுவட்டப் பாதையில் சுற்றிவரும். இரண்டாவதாக, நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கும் கலன். மூன்றாவதாக, இந்த தரையிறங்கிய கலனில் இருந்து விக்ரம் ரோவர் ஊர்தி வெளியேறும்.

இந்நிலையில் செப்டம்பர் 7-ஆம் தேதி அதிகாலை 1:30 - 2:30 மணி அளவில் லேண்டர் நிலவின் மேற்பரப்பை சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டது.

விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கு வதில் தாமதம் ஏற்பட்டுள்ள நிலையில், சந்திரயான்-2 விண்கலத்தின் சிக்னல் துண்டிக்கப்பட்டுவிட்டதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார்.

Advertisment

முதல் கட்டத்தில் அதன் செயல்பாடு சிறப்பாக இருந்ததாக கூறிய அவர், பின்னர் லேண்டரில் இருந்து தரை கட்டுப்பாட்டு நிலையத்துடனான தொடர்பு இழந்துவிட்டதாக கூறினார்.

இது குறித்த காரணங்களை இஸ்ரோ ஆராய்ந்து வருவதாக சிவன் மேலும் கூறினார்.

சந்திரயான்-2 விண்கலத்தில் இருந்து வந்த தகவல் துண்டிக்கப்பட்டதை அடுத்து, இது குறித்து கவலைப்பட வேண்டாம் என்று பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரோ அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

Advertisment

நிலவின் தரையில்

நிலவில் தரையிறங்குவதை எதிர்நோக்கி இஸ்ரோ விஞ்ஞானிகள் உள்ளிட்ட, இந்தியாவின் விண்வெளி ஆய்வு சமூகம் ஆர்வத்தோடு காத்திருந்தது.

நிலவில் தரையிறங்குவது என்பது கடினமானது என்பது உண்மை.

நிலவில் வளிமண்டலம் கிடையாது. இதனால் லேண்டரை மெதுவாக தரையிறக்க பாராசூட்டை பயன்படுத்த முடியாது.

அதனால் இந்த எரிபொருளை பயன்படுத்தி சமநிலையில் தரையிறங்கு வதுதான் ஒரே வழி.

ii

அதாவது, லேண்டர் அதனுடைய சொந்த ராக்கெட் இன்ஜின்களை பயன்படுத்தி அதன் வேகத்தை சீராக குறைக்கும்.

நிலவின் மேற்பரப்பை நெருங்க நெருங்க, கிடைமட்டமாக லேண்டர் நகர்ந்து கொண்டே இருக்கும்.

நிலவில் லேண்டர் தரையிறங்கும் அந்த தருணத்தில், ராக்கெட் இன்ஜின்கள் நகர்வை நிறுத்தி, அதே சமயத்தில், இறக்கத்தின் வேகத்தையும் கட்டுப்படுத்த வேண்டும். இதற்கு பெயர்தான் ""சாஃப்ட் லேண்டிங்''.

இறுதி கட்டத்திற்கு முன்பு சுற்றுவட்டப் பாதை கலனும், லேண்டரும், நிலவில் பாறைகள் அல்லது பள்ளங்கள் இல்லாத எந்த இடத்தில் தரையிறங்கலாம் என்பதை ஆய்வு செய்திருக்கும். லேண்டர் தரையிறங்கிய பின் சந்திர மண்டலத்தில் ஏதேனும் தூசிகள் எழலாம். அப்படி இருந்தால், அந்த தூசிகள் மறைந்த பின்பு ரோவர் மெதுவாக ஊர்ந்து வெளியே செல்லும்.

நிலவில் தரையிறங்கிய இடத்தில் இருந்து 500 மீட்டர் தூரம் ரோவரால் பயணிக்க முடியும்.

இஸ்ரோவின் சந்திரயான்-2, 7-ஆம் தேதி நிலவில் தரையிறங்கும் போது, தொழில்நுட்ப கோளாறு காரணமாக சமிக்ஞையை இழந்தது. இதனால் இஸ்ரோ முற்றிலுமாக அமைதியாகி விட்டது. லேண்டர் விக்ரம் நிலவின் மேற்பரப்பில் தரையிறங்க தேவையான வேகத்தை விட அதிக வேகத்தில் கீழிறங்கியது. நிலவின் மேற்பரப்பில் சுமார் 2.1 கி.மீ தூரத்தில் சந்திரயான்-2 தரையிறங்கும் போது சிக்னல் துண்டிக்கப்பட்டது. ""இந்த மிசனில் 90% ஆராய்ச்சிகள் முழுமையாக ஆர்பிட்டரே மேற்கொள்ளும்'' என்று சிவன் கூறியது குறிப்பிடத்தக்கது.

சந்திரயான்-2 தோல்வியா?

நிச்சயமாக இல்லை. இந்த விண்கலத்தில் லேண்டர் மட்டுமல்லாமல், ஆர்பிட்டர் மற்றும் ரோவர் ஆகிய கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. ஆர்பிட்டர் நிலவின் சுற்றுவட்டப்பாதையில் சீராக இயங்கி நமக்கு தேவையான செய்திகளை அனுப்பிக் கொண்டே இருக்கும். லேண்டரும் ரோவரும் வெறும் 14 நாட்களுக்கு மட்டுமே செயல்படும் வகையில் தான் வடிவமைக்கப்படுள்ளது. ஆராய்ச்சியில் எந்த மாற்றமும் இல்லாமல் வெற்றிகரமாக ஆர்பிட்டர் மூலமாக துவங்கும்.

வெறும் முன்முடிவுகள் மூலமாக விக்ரம் முற்றிலும் சேதமடைந்துவிட்டது என்று ஏற்றுக் கொள்ள இயலாது. எதனால் இந்த இழப்பு என்பதை அறிந்து கொள்ள, லேண்டர் இருக்கும் இடம் மற்றும் அதன் மீதான சோதனைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முடிந்த வரை லேண்டரின் சிக்னல் பெற முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

ஏற்கனவே ஆர்பிட்டர் மூலமாக லேண்டரின் இருப்பிடம் கண்டறியப் பட்டுள்ளது. சூரிய வெளிச்சம் மிகவும் குறைவாக இருக்கும் பகுதி என்பதால் தெர்மல் இமேஜ் கிடைத்துள்ளது. நிலவின் தரைப்பகுதிக்கு வருவதற்கு சிறிது இடைவெளி இருக்கும்போதே சிக்னல் இழந்தால் திட்டமிட்ட பகுதி யில் இருந்து கொஞ்சம் விலகி தான் தரையிறங்கியிருக்கும் என்று யூகித்தோம்.

அப்படியே நடந்தும் உள்ளது. சமிக்ஞை களை தொடர்ந்து பெற முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

ii

ஆனாலும் லேண்டரில் மீண்டும் தொலைத்தொடர்பு சிக்னல்களைப் பெறுவது சற்று சவாலான காரியம் தான். நமக்கு லேண்டர் எந்த அளவுக்கு பாதிப்பை சந்தித்திருக்கிறது என்று தெரியாது. அதே போன்று கம்யூனிகேசன் ஏரியா முற்றிலுமாக சேதமடைந்துள்ளதா என்றும் தெரியாது. ஆனால் லேண்டரில் பொருத்தப்பட்டிருக்கும் சில முக்கிய கருவிகள் தானாகவே சிக்னல்கள் அனுப்பக் கூடியவை. அவை, அதற்கு அருகில் இருக்கும் விண்வெளி மையம் அல்லது செயற்கைக்கோள்களால் பெற இயலும். 14 நாட்களுக்கு மட்டுமே வேலை செய்யும் வகையில் அவை உருவாக்கப்பட்டிருப்பதால் வரும் இரண்டு வாரங்களில் முழுமையாக சிக்னல்களைப் பெற முயற்சிகள் மேற்கொள்ளப்படும். அதன் பின்பு நிலவில் நிலவும் அசாதாரண குளிர் காரணமாக வேலை செய்யாமல் போகும் நிலை உருவாகும்.

ஒரு முறை நமக்கு சிக்னல்கள் கிடைக்கத் துவங்கினாலும் க்ரௌண்ட் ஸ்டேசனில் இருந்து டூ வே கம்யூனிகேசனில் நாம் அங்கிருந்து டேட்டாக்களை பெற்றுக் கொள்ள இயலும். லேண்டர் நாம் நினைத்தது போலவே வெர்ட்டிக்கிளா கவே தரையிறங்கியுள்ளது. அதன் நான்கு புறமும் சில கருவிகள் பொருத்தப் பட்டுள்ளன. அவை நிலவின் நான்கு பக்கத்தையும் ஆய்ந்து தகவல்களை அனுப்பும். அந்த சிக்னல்கள் நமக்கு கிடைத்தாலும் சந்திரயான்-2 100% வெற்றிதான். அந்த நான்கு புறமும் பொருத்தப்பட்டிருக்கும் கருவிகளில் ஒன்று நாசாவால் உருவாக்கப்பட்ட Laser Retroreflector Array ஆகும்.

கண்ணாடிகளில் உருவாக்கப்பட்ட இந்த கருவியின் முழு கட்டுப்பாடும் க்ரௌண்ட் ஸ்டேசனில் உள்ளது. இவை நிலவில் இருந்து வரும் சிக்னல்களை ரிஃப்லக்ட் செய்யும் வகையில் அமைக்கப் பட்டிருக்கிறது.

விண்வெளி ஆராய்ச்சியில் மற்ற ஆராய்ச்சி மையங்கள் போன்றே இஸ்ரோவும் சில இழப்புகளை சந்தித்துள்ளது. ஆனாலும் கற்றுக் கொள்ள நிறையவே கொடுத்துள்ளது. 2008-ஆம் ஆண்டு நிலவுக்கு அனுப்பிய சந்திரயான்-1ம் கூட பாதி வெற்றி தான். இரண்டு வருடங்கள் ஆராய்ச்சி பணியை மேற்கொள்ளா அனுப்பினோம்.

ஆனால் 9 மாதங்களிலேயே செயல் இழந்தது. வெப்பத்தை கடத்தாமல் வைக்கும் ஷீல்டில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக, சுற்றுவட்டப்பாதையில் அது பொருத்தப்பட்ட போதே சில கருவிகள் செயல் இழந்துவிட்டன.

மே 2009, விண்ணில் ஏவப்பட்டு 8 மாதங்கள் கழித்து சுற்றுவட்டப்பாதையை 100 கி.மீ-ல் இருந்து 200 கி.மீ ஆக அதிகரிக்க வேண்டும். ஆனால் அதுவும் நடைபெறவில்லை. தற்போது அனைத்து தொலைத்தொடர்பும் துண்டிக்கப்பட்டு வெறுமனே நிலவை வலம் வந்து கொண்டிருக்கிறது சந்திரயான்-1. ஆனாலும் அதற்கு கொடுக்கப்பட்ட பணியை அது மிகவும் சிறப்பாக செய்து நிலவில் நீர் இருப்பதை ஆதாரத்தோடு வெளியிட்டது என்பது மகிழ்ச்சிக்குரியது.

சந்திரயான்-2: முக்கிய தகவல்கள்

இந்தியாவின் நிலவை நோக்கிய பயணம் என்கிற லட்சிய திட்டத்தின் ஒரு பகுதியான சந்திரயான்-2 விண்கலனை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) 2019-ஆம் ஆண்டு ஜூலை 15-ஆம் தேதி அதிகாலை 2.30 மணிக்கு விண்ணில் ஏவுவதாக முதலில் திட்டமிடப்பட்டது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கடைசி நேரத்தில் இத்திட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

சந்திரயான்-2 விண்கலன் நிலவிற்கு சென்று அதன் மேற்பரப்பில் தரையிறங்கும்.

விண்கலம் சுமூகமாக, மெதுவாக ஒரு கிரகத்தில் தரையிறங்குவது என்பது அனுப்பப்படும் கலன் சேதமடையாமல் இருப்பதை குறிக்கிறது. இதன் மூலம் நிலவில் விண்கலனை சுமூகமாக தரையிறக்குகின்ற தொழில்நுட்பத்தை கொண்டுள்ள நான்காவது நாடாக இந்தியா மாறும்.

சந்திரயான்-2 -இல் மூன்று முக்கிய கலன்கள் உள்ளன. முதலாவதாக, சுற்றுவட்டக்கலன் நிலவின் சுற்றுவட்டப் பாதையில் சுற்றிவரும். இரண்டாவதாக, நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கும் கலன். மூன்றாவதாக, இந்த தரையிறங்கிய கலனில் இருந்து ரோவர் ஊர்தி வெளியேறும். இந்த ரோபோ ஊர்தி நிலவின் மேற்பரப்பில் ஊர்ந்து சென்று தகவல்களை தரையிறங்கிய கலனுக்கு அனுப்பும். இந்த தரையிறங்கிய கலன் இந்த தகவல்களை நிலவின் சுற்றுவட்ட பாதையில் சுற்றி வந்துகொண்டிருக்கும் கலனுக்கு அனுப்பும். இந்த சுற்றுவட்ட கலன் பூமிக்கு தகவல்களை அனுப்பி வைக்கும்.

இந்த விண்கலத்தில் 13 கருவிகளை இந்தியா பொருத்தியுள்ளது. இவற்றை தவிர நாசாவின் இன்னொரு கருவியை இந்தியா கட்டணம் எதுவும் பெறாமல் அனுப்பி வைக்க உள்ளது. இவை அனைத்தும் நிலவின் தென்துருவத் திலுள்ள இடத்தை மிகவும் நெருங்கி செல்கின்றன. இதற்கு முன்னர் நடைபெற்ற நிலவுப் பயணத் திட்டங்கள் அனைத்தும் நிலவின் மத்தியரேகை பிரதேசத்தையே அடைந்துள்ளன. தென் துருவத்திற்கு அருகில் எந்தவொரு விண்கலனும் தரையிறக்கப்படவில்லை. எனவே, தென்துருவத்தில் தரையிறங்கும் சந்திரயான்-2 புதிய தகவல்களை அனுப்பும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

முன்னதாக, சந்திரயான்-1 விண்கலனை அனுப்பி இந்தியா பெருமை பெற்றது. இந்தியா நிலவுக்கு அனுப்பிய முதல் விண்கலன் இதுவாகும். செலவு குறைந்த, பெரும் திருப்புமுனை ஏற்படுத்திய இந்த நிலவுப் பயணத் திட்டத்தால் இந்தியா புகழ்பெற்றது. இந்தியாவின் தலைமையில் நடைபெற்ற இந்த நிலவுப் பயணத் திட்டத்தில் நாசா, ஐரோப்பிய விண்வெளி நிறுவனம், பிரிட்டன் ஆகியவை பங்காற்றியிருந்தன. இரண்டு ஆண்டுகள் சந்திரயான்-1 செயல்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், 10 மாதங்களில் இந்த விண்கலனில் ஒரு பாகம் செயலிழந்து விட்டது. இந்த காலத்திற்குள் நிலவில் தண்ணீர் மூலக்கூறுகள் இருப்பதை கண்டுபிடித்து சந்திரயான்-1 வரலாறு படைத்தது.

சந்திரயான்-1 விண்கலன் நிலவுக்கு அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து சந்திரயான்-2 இப்போது அனுப்பப் படுகிறது. இந்தியாவின் கொடியை இது கொண்டு சென்று நிலவில் இறங்குவதால் சிறப்பு பெறுகிறது. இந்தியாவின் பெருமையாகவும் இது கருதப்படுகிறது. செவ்வாய் கிரகம், சிறு கிரகங்களில் விண்கலனை தரையிறங்க செய்கின்ற மற்றும் நிலவுக்கு மனிதனை அனுப்புகிற வாய்ப்புகளையும் இது வழங்கும். இந்தியா நிபுணத்துவம் பெற விரும்புகிற முக்கிய தொழில்நுட்பம் இதுவாகும்.

ஆனால், இது எளிதல்ல. இது ராக்கெட் அறிவியல். நிலவு பூமியில் இருந்து 3.84 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. அங்கு ஈர்ப்பு விசை மிகக் குறைவு. காற்று மண்டலம் கிடையாது. நிலவில் தரையிறங்கும் முதல் முயற்சி இந்தியாவால் மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு தரையிறங்குவதற்கு பாராசூட்டுகளை பயன்படுத்தமுடியாது. எனவே, நிலவில் தரையிறங்குவது, ஆய்வு ஊர்தி கொண்டு ஆய்வு மேற்கோள்வது மிகவும் கடின மானவை. இதற்கு முன்னர் முயற்சித்த பாதி திட்டங்கள் தோல்வியில் முடிந்துள்ளன. அனைத்து பணிகளும் கணினியால் கட்டுப்படுத்தப்படும். நிலவில் தரை யிறங்கும் கலனும், ரோவர் ஊர்தியும், சுற்றுவட்ட கலனில் இருந்து பிரிகிற 15 நிமிடங்கள் மிகவும் முக்கியமானவை.

இந்த பணித்திட்டம் மிகவும் தாமதமாக நிறைவேற்றப்படுகிறது. சந்திரயான்-1 விண்ணில் செலுத்தப்பட்டபோது, சந்திரயான்-2 விண்கலன் 2014-ஆம் ஆண்டு விண்ணில் ஏவப்படும் என்று தெரிவிக்கப் பட்டது. பின்னர், ரஷ்யா இதில் ஒத்துழைத்து நிலவில் இறங்கும் கலனை வழங்குமென எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ரஷ்ய விண்வெளி நிறுவனத் தோடு ஏற்பட்ட சில பிரச்சனைகளின் காரணமாக இது நடைபெறவில்லை. எனவே, நிலவில் தரையிறங்கும் கலனை இந்தியாவே உருவாக்க முடிவு செய்ததால் இந்த தாமதம் ஏற்பட்டது.

""பேலோடு"" என்ற சொல்லை நீங்கள் கேட்டிருக்கலாம். ராக்கெட் சுமந்து செல்லுகிற, சுற்றுவட்ட கலன், தரை யிறங்கும் கலன், ரோவர் ஊர்தி மற்றும் கொண்டு செல்கின்ற அறிவியல் கருவிகளை இது குறிக்கிறது. சுற்றுவட்ட கலனில் மிகவும் உயர் ரக கேமரா பொருத்தப்பட்டுள்ளது. நிலவிலுள்ள மெல்லிய காற்று மண்டலத்தை ஆய்வு செய்கின்ற கருவி ஒன்றும் உள்ளது. பூமியில் நிலநடுக்கம் ஏற்படுவதுபோல நிலவில் நிலவு நடுக்கம் நிகழ்வது ஆய்வு செய்யப்படும். நிலவின் மேற்பரப்பில் நுழைத்து (சொருகி) வைக்கப்படும் கருவி நிலவிலுள்ள தட்பவெப்பம் பற்றி தகவல் அளிக்கும். நிலவிலுள்ள மண்ணை ஆராய்வதற்கு ரோவர் ஊர்தியில் கருவியுள்ளது.

சந்திரயான்-2 நிலவுப் பயணத் திட்டம் இரண்டு பெண்களின் தலைமையில் நடைபெற்றிருப்பதாலும் அதிக முக்கியத்துவம் பெறுகிறது. இந்த நிலவு பயணத்திட்டத்தின் இயக்குநராக ரித்து கரிதாலும், பணித்திட்டத்தின் இயக்குநராக முத்தையா வனிதாவும் பணியாற்றியுள்ளனர்.