சந்திரயான்-2 : விண்வெளியில் மகத்தான சாதனை

/idhalgal/general-knowledge/chandrayaan-2-great-achievement-space

நிலா, கவிஞர்களுக்கும் காதலர்களுக்கும் மட்டும் தினம் தினம் புதிதாகவும், புதிராகவும் இருப்பதில்லை, காலம் காலமாய் உலக அறிவியலாளர்களையும் அந்த கண்ணாமூச்சி விளையாட்டில் இழுத்து விட்டிருக்கிறது. ஒரு காலத்தில் தமக்குள் யாரின் வலிமை பெரியது என்ற நீயா? நானா? போட்டியில் அமெரிக்கா மற்றும் ரஷ்யாவின் அறிவியலாளர்களால் முன்னிறுத்தப்பட்டது நிலா.

ssஅறுபத்தொன்பது முறை நிலவிற்கான பயணத்தை மேற்கொண்டபின், 100 கிலோவிற்கு மேல் அங்கிருந்து கல்லையும் மண்ணையும் கொண்டு வந்து பலப் பல ஆராய்ச்சிகளுக்குப் பின், நிலவு ஒரு பாலைவனம் என்ற முடிவிற்கு வந்து நிலவு பயணத்தை ஒதுக்கி விட்டு செவ்வாய்க்கிரகத்தை நோக்கி தங்கள் கவனத்தைத் திருப்பி விட்டார்கள். இந்த சமயத்தில் இந்தியாவின் விண்வெளி அறிவியலாளர் குழு, 386 கோடி ரூபாய் செலவில் நிலவுப் பயணத்தை 2008-ஆம் ஆண்டு சந்திரயான்-1 மூலம் மேற்கொண்டது. நிலவின் 100 கி.மீ சுற்று வட்டப்பாதையில் நுழைந்தபின் சந்திரயான்-1 இன் அறிவியல் கருவிகள் அனுப்பிய சமிக்ஞைகள் மூலம் நிலவின் வளிமண்டலத்திலும், தரையிலும், தரையின் ஆழத்திலும் நீர் இருப்பதை அறிவியலாளர்கள் கண்டறிந்தனர்.

நிலவை ஒதுக்கி வைத்திருந்த அமெரிக்கா 2009-இல் திரும்ப ஒரு கலனை நிலவுக்கு அனுப்பி சந்திரயான்-1 நீர் கண்டறிந்த இடங்களில் ஒன்றில் மோத வைத்துப் பீச்சியடித்ததை, நிலவைச் சுற்றி வரும் தாய்

நிலா, கவிஞர்களுக்கும் காதலர்களுக்கும் மட்டும் தினம் தினம் புதிதாகவும், புதிராகவும் இருப்பதில்லை, காலம் காலமாய் உலக அறிவியலாளர்களையும் அந்த கண்ணாமூச்சி விளையாட்டில் இழுத்து விட்டிருக்கிறது. ஒரு காலத்தில் தமக்குள் யாரின் வலிமை பெரியது என்ற நீயா? நானா? போட்டியில் அமெரிக்கா மற்றும் ரஷ்யாவின் அறிவியலாளர்களால் முன்னிறுத்தப்பட்டது நிலா.

ssஅறுபத்தொன்பது முறை நிலவிற்கான பயணத்தை மேற்கொண்டபின், 100 கிலோவிற்கு மேல் அங்கிருந்து கல்லையும் மண்ணையும் கொண்டு வந்து பலப் பல ஆராய்ச்சிகளுக்குப் பின், நிலவு ஒரு பாலைவனம் என்ற முடிவிற்கு வந்து நிலவு பயணத்தை ஒதுக்கி விட்டு செவ்வாய்க்கிரகத்தை நோக்கி தங்கள் கவனத்தைத் திருப்பி விட்டார்கள். இந்த சமயத்தில் இந்தியாவின் விண்வெளி அறிவியலாளர் குழு, 386 கோடி ரூபாய் செலவில் நிலவுப் பயணத்தை 2008-ஆம் ஆண்டு சந்திரயான்-1 மூலம் மேற்கொண்டது. நிலவின் 100 கி.மீ சுற்று வட்டப்பாதையில் நுழைந்தபின் சந்திரயான்-1 இன் அறிவியல் கருவிகள் அனுப்பிய சமிக்ஞைகள் மூலம் நிலவின் வளிமண்டலத்திலும், தரையிலும், தரையின் ஆழத்திலும் நீர் இருப்பதை அறிவியலாளர்கள் கண்டறிந்தனர்.

நிலவை ஒதுக்கி வைத்திருந்த அமெரிக்கா 2009-இல் திரும்ப ஒரு கலனை நிலவுக்கு அனுப்பி சந்திரயான்-1 நீர் கண்டறிந்த இடங்களில் ஒன்றில் மோத வைத்துப் பீச்சியடித்ததை, நிலவைச் சுற்றி வரும் தாய்க்களத்திலிருந்தும், பூமியில் தான் வைத்திருந்த சக்திவாய்ந்த பெரிய தொலைநோக்கிகளைக் கொண்டும் பார்த்துப் படம் பிடித்து சந்திரயான்-1 கண்டறிந்ததை உறுதிப்படுத்தி, தனது கவனத்தைத் திரும்ப நிலவின் பக்கம் திருப்பியது. சீனாவும், ஜப்பானும், ரஷ்யாவும், இஸ்ரேலும் இந்த அணியில் சேர்ந்தன.

உலக அறிவியலாளர்களின் கவனத்தை நிலவின் பக்கம் திரும்ப வைத்த இந்தியா, தான் சந்திரயான்-1-இல், நிலவின் தரையிலிருந்து 100 கி.மீ தூரத்திலிருந்துதான் கண்டுபிடித்தவைகளை நிலவில் ஒரு கலனை மெதுவாக இறக்கி உறுதிப்படுத்தும் வகையில் சந்திரயான்-2 திட்டத்தைக் கையிலெடுத்தது. பல நூறு இந்திய அறிவியலாளர்களின் இரவு பகல் பார்க்காத அயராத உழைப்பால் உருவாகிய நிலவைச் சுற்றும் செயற்கை துணைக்கோள், விக்ரம் என்ற நிலவை மெதுவாய்த் தொட்டிறங்கும் கலன் மற்றும் நிலவின் தரையில் பயணிக்க வல்ல பிரக்யான் என்று பெயரிடப்பட்ட ஆறு சக்கர எந்திர வண்டி என்று மூன்று சகோதரர்கள் பலப்பல சோதனைகளுக்குப் பின் ஒன்றாய் இணைக்கப்பட்டு சந்திரயான்-2 என்ற முழு வடிவில், கட்டுரை எழுதப்படும் இந்தத் தருணத்தில் ஜி.எஸ்.எல்.வி எம் 3 விண்கலத்தின் மூக்கில் பொருத்தப்பட்டு பயணித்துக் கொண்டிருக்கும்.

aa

ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஜி.எஸ்.எல்.வி-யின் மூக்கில், சூரியத்தடுப்புத் தகட்டினுள் பத்திரமாய் உட்கார்ந்து நிலவுப் பயணத்திற்கு புறப்படும் சந்திரயான்-2 அடுத்த சில நிமிடங்களில் பூமியைச் சுற்றிய 200 கி.மீ.க்கு 36,000 கி.மீ. என்ற நீள்வட்டப் பாதையில் தனித்து விடப்படும்.

அந்தத் தருணம் 2008-லும், 2013-லும் புறப்பட்டு இன்றும் நிலவைச் சுற்றிக் கொண்டிருக்கும் தனது மூத்த சகோதரன் சந்திரயான்-1-ம் செவ்வாயைச் சுற்றிக் கொண்டிருக்கும் மங்கள்யானும் பயணித்தபடி நிலவுப் பயணத்தை தொடரும். அதன்படி முதலில் தனது சூரியத்தகடுகளை விரித்து தனக்கான மின்சக்தியைத் தானே தயாரிக்க ஆரம்பிக்கும், அடுத்துவரும் நாட்களில் தனது மற்ற உறுப்புகளைச் சரிபார்த்துக் கொண்டு தனது மூத்த சகோதரர்கள் செய்தது போல் பூமியைச் சுற்றி வரும் தனது நீள்வட்டப் பாதையை அடையும். பின் மெதுவாக இந்த நீள்வட்டப் பாதையைக் குறைத்து நிலவைச் சுற்றிய 100 கி.மீ. துருவ வட்டப் பாதையாக மாற்றி நிலவைச் சுற்றிய தனது பயணத்தைத் தொடரும்.

நூறு கி.மீ தூரத்திலிருந்து தனது அவயங்களை மீண்டும் ஒரு முறை பரிசோதித்துப் பார்த்துக் கொண்டும், தனது இளைய சகோதரர்களான விக்ரமும், பிரக்யானும் நிலவில் இறங்கி தமது பணிகளை ஆரம்பிக்கப் போகும் இடத்தின் தன்மையைத் துல்லியமாக படம் பிடித்துத் தரைக்கட்டுப்பாட்டு நிலையத்துக்கு அனுப்பும். சரியான இடம் கண்டுபிடிக்கப்பட்டு அந்த இடத்தின் படங்களை விக்ரமின் மூளையில் கூகுள் வரைபடம் போல் ஏற்றுவார்கள்.

அடுத்து வரும் நாட்களில் இந்தப் படத்தின் துணையுடன் தான் நிலவில் பத்திரமாக இறங்க விக்ரமிற்கு இந்தப் படங்கள் உதவும். இப்படி விக்ரமைத் தயார் செய்த பின் சந்திரயான்-2 என்ற மூன்று சகோதரர்களில் மூத்த சகோதரன் தன்னை 100 கி.மீ தூரத்திலேயே நிலை நிறுத்திக் கொண்டு, விக்ரமைத் தன்னிடமிருந்து விடுவிக்கும். இப்போது விக்ரம் தனது அவயங்களை நிலவின் தரை நோக்கிய பயணத்திற்குத் தயார்படுத்தும். முதல் கட்டமாய் தனது நிலவைச் சுற்றிய 100 கி.மீ. துருவ வட்டப் பாதையை 18 கி.மீ.க்கு 100 கி.மீ என்று மாற்றும். இப்படி மாற்றி அமைக்கப்பட்ட பாதையின் துல்லியம் கணிக்கப்பட்டு நிலவின் தரை நோக்கிய தனது பயணத்தின் திட்டத்தைச் சரிபார்த்து உறுதிப்படுத்தும்.

சரியான நேரங்களில் சரியான இடங்களில் சரியாக தனது வேகத்தை அடையும் வண்ணம் தன்னிடமுள்ள ஐந்து 800 நியூட்டன் விசை கொண்ட திரவ எந்திரங்களை இயக்கினால் மட்டுமே தான் பத்திரமாக இறங்க வேண்டிய இடத்தை அடைய இந்தத் துல்லியமான திட்டமிடலும் அதன் சரிபார்ப்பும் மிகவும் முக்கியம்.

விக்ரம், இப்படித்தான் மேற்கொள்ள வேண்டிய அந்த மிகத் துல்லியமான பயணத்தைத் தானியங்கி முறையில் தன்னிடமுள்ள ஐந்து 800 நியூட்டன் விசைகொண்ட திரவ எந்திரங்களை தனது தேவைக்கேற்ப இயக்கி, செப்டம்பர் முதல் வாரத்தில் மேற்கொள்ளும். தான் தரையிறங்க வேண்டிய இடத்தை முன்னே தனது மூளையில் ஏற்றப் பட்டிருக்கும் படங்களின் துணையுடன் அடையும். பின் அந்த இடத்தில் தன்னை நிலைநிறுத்தி, தான் அந்த இடத்தின் பாதுகாப்புத் தன்மையை மீண்டும் ஒரு முறை சரிபார்த்துக் கொண்டு, பின் மெதுவாக இறங்கி தனது நான்கு கால்களையும் நிலவின் தரையில் பதிக்கும்.

cc

நிலவின் தரையை விக்ரம் தொடும்போது, தரை யிலிருந்து தூசுப்படலம் எழ வாய்ப்புள்ளதால், சில மணிநேரம் கழித்து, தன்னிடமுள்ள நிழல்படக் கருவிகளை (கேமரா) இயக்கி தான் இறங்கிய இடத்தைப் படம் பிடித்துப் பார்த்து, தூசிப்படலம் குறைந்து தற்போது ஏதும் இல்லை என்று தெரிந்த பின் தன்னுடன் பயணித்த கடைசித் தம்பி பிரக்யானை நிலவின் தரையில் இறங்கும்படியாக தனது சூரியப்பலகைகளில் ஒன்றைத் திறக்கும். அதுவரை அந்தச் சூரியப்பலகையின் பின்புறம் பத்திரமாக அமர்ந்து பயணித்த பிரக்யான் தனக்கும் விக்ரமிற்கும் இடையில் இருக்கும் தொப்புள் கொடியறுத்து தனது பயணத்தை நிலவின் தரை நோக்கி மேற்கொள்ளும்.

எல்லாம் சரியாக இருக்கும் பட்சத்தில் நிலவில் இறங்கிய பின்னர் அடுத்துவரும் இரு வாரங்கள் நிலவின் தரையில் பலப் பல சோதனைகளை விக்ரமும், பிரக்யானும் மேற்கொள்ளும். அதே சமயம் அடுத்த ஒருவருடம் நிலவைச் சுற்றி 100 கி.மீ தூரத்தில் துருவ வட்டப் பாதையில் மூவரில் மூத்த சகோதரன் சந்திரயான்-2 செயற்கைத் துணைக்கலன் தனது பணியைத் தொடர்ந்து கொண்டிருக்கும்.

- டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை,

துணைத்தலைவர்,

தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம்

gk010819
இதையும் படியுங்கள்
Subscribe