* ஊரக வளர்ச்சி என்பது மக்களின் பொருளாதார மேம்பாடு மற்றும் பெரிய சமூக மாற்றம் ஆகிய இரண்டையும் குறிக்கிறது. ஊரக வளர்ச்சி திட்டங்களில் பங்கேற்கும் மக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது, திட்டமிடல் விரிவுபடுத்துதல், நில சீர்திருத்தங்களை சிறப்பாகஅமல்படுத்துதல் மற்றும் கடனுக்கான அதிக வாய்ப்புகள் ஆகிய நல்ல வாய்ப்புகள் ஊரகப் பகுதி மக்களுக்கு சிறந்த முறையில் வழங்கப்படுகின்றன.
* ஆரம்பத்தில், வளர்ச்சிக்கு பிரதான உந்துதலானது விவசாயம், தொழில், தகவல்தொடர்பு, கல்வி, சுகாதாரம் மற்றும்அனைத்து துறைகளிலும் அமைக்கப்பட்டது. பின்னர், அடிமட்டத்தில் இருந்து மக்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஈடுபடுவதன் மூலம் அரசாங்க முயற்சிகள் போதுமானதாக வழங்கப்பட்டால் விரைவான வளர்ச்சி ஏற்படலாம் என்பதை உணர்ந்து, உந்துதல் மாறிவிட்டது.
* 2017-18-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், ஊரக, விவசாயம் மற்றும் துணை துறைகளுக்கு மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி ரூ. 1,87,223 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவித்தார்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம் (MGNREGA)
* மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்தின் (MGNREGA) நோக்கமானது, நாட்டின் ஊரகங்களில் உள்ள குடும்பங்களின் வாழ்வாதார பாதுகாப்பை விரிவுபடுத்து வதாகும். இத்திட்டத்தின்படி, ஒரு நிதியாண்டில், 100 நாட்களுக்கு குறையாமல், அனைத்து குடும்பங்களிலும் ஊதிய வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. 2016-17 நிதியாண்டில் ஙஏசதஊஏஆ-இல் முன்னெப்போதும் இல்லாத அளவிலான நீர்ப்பாசனம் தொடர்பான நீடித்தஉந்துதலைக் கண்டன. ஊரக வேலைவாய்ப்புத் திட்டம், ஏழை பிராந்தியங்களில் வாழ்வாதாரபாதுகாப்புக்காக நீடித்த சொத்துக் களை உருவாக்கி, தேவைக்கேற்ப வேலைவாய்ப்பை வழங்குவதன் மூலம், நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட திட்டமாக தன்னை நிறுவியது. ஆதார்எண் இணைக்கப்பட்ட 82 சதவீதத்துக்கும் மேற்பட்ட செயல் பணியாளர்கள் (9.1கோடி), ஆதார் தொடர்புடைய பரிவர்த்தனை அமைப்புடன் இணைக்கப் பட்ட 4.6 கோடிபணியாளர்கள் இத்திட்டத் தில் உள்ளனர். அவர்களுக்கு 96 சதவீதம் வங்கி, தபால் கணக்குகள் மூலம் மின்னணு பரிவர்த்தனையில் ஊதியம் வழங்கப்பட்டுள்ளது. 89 லட்சம் சொத்துக்கள் பூகோள குறிச்சொல், 93 லட்சம் வேலைவாய்ப்புகள் முறையான சரிபார்ப்பு மூலம் இதுவரை நீக்கப் பட்டது.மழையளவு குறைவான பகுதிகளில் வறட்சி நீர்ப்பாசன நீர் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
பிரதான மந்திரி கிராம் சடக் யோஜனா (பி.எம்.ஜி.எஸ்.எஸ்)
* பிரதான மந்திரி கிராம் சடக் யோஜனா (பி.எம்.ஜி.எஸ்.எஸ்) என்ற கிராம சாலைதிட்டம் மூலம் 2016-17-ஆம் ஆண்டில் 47,350 கி.மீ. தொலைவுக்கு ஊரக சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் கீழ் கடந்த 7 ஆண்டுகளில், ஒரே வருடத்தில் அமைக்கப்பட்ட அதிகபட்சமான சாலை கட்டுமானப் பணிகள் இதுவாகும்.
* 2011-14 காலப்பகுதியில், டஙஏநவ சாலைகளின் சராசரி வீதம் 73 கி.மீ ஆகும். 2014-15 மற்றும் 2015-16 ஆண்டுகளில் இது, நாள் ஒன்றுக்கு, 100 கி.மீ. அதிகரிக்கப்பட்டுள்ளது, 2016-17 ஆண்டில், ஒருநாளைக்கு 130 கி.மீ. என்ற அளவில் கட்டுமான பணி அதிகரித்துள்ளது. இதுவே கடந்த 7 ஆண்டுகளில் அதிகப்படியான சராசரி வருடாந்த கட்டுமான விகிதமாகும்.
* ஊரக சாலைகளில் ""கார்பன் கால்தடம்'' குறைக்கும் நோக்கில், சுற்றுச்சூழல் மாசுபாடு குறைக்க, வேலை பருவத்தை அதிகரிக்கவும் மற்றும் செலவு செயல் திறனை கொண்டு செயல்படுத்தப்படுகிறது. டஙஏநவ சாலைகளில் ""பசுமை தொழில்நுட்பங்கள்'' மற்றும் கழிவு பிளாஸ்டிக், குளிர் கலவை, ஜியோ போன்றவழக்கமாக அல்லாத பொருட்கள்பயன்பாடு மிக தீவிரமாக ஊக்குவிக்கப்பட்டுள்ளது. 2016-17-ஆம் ஆண்டுகளில்பசுமைதொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி 4,113.13 கி.மீஅமைக்கப்பட்டுள்ளது.
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா-கிராமின் (பிஎம்ஏ-ஜி)
* ஊரக ஏழைகளின் தங்குமிட தேவைகளை நிறைவேற்ற 2016-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20-ஆம் தேதி பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா-கிராமின் (பிஎம்ஏ-ஜி) திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி அறிமுகப்படுத்தினார். புதிய ஊரக வீட்டு வேலைத்திட்டம் குடும்பங்களின் தேவை களையும் விருப்பங்களையும் நிறைவேற்ற வடிவமைக்கப்பட்டுள்ளது. அது, அதிக அலகு செலவில், உள்ளூர் பொருட்கள் மற்றும் உள்ளூர் வீட்டு வடிவமைப்புகளை பயன்படுத்தி கட்டுமானங்களை அனுமதிக்கிறது. வீடுகள், சமையல் அறை, கழிப்பறை, எல்.பி.ஜி. இணைப்பு, மின் இணைப்பு மற்றும் நீர் வழங்கல் ஆகியவை அதிகரித்து, பயனாளிகள் தங்கள் தேவைக்கேற்ப தங்கள் வீடுகளை திட்டமிடலாம். தரமான கட்டுமானத்திற்கான திறன்வாய்ந்த தேவைகளை பூர்த்தி செய்ய ஊரக கொத்தனார்களுக்கு பயிற்சி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. ஓட்டு கூரையுடன் கூடிய 0, 1, 2 கூரை அறைகள் கொண்டவர்கள் சமூக பொருளாதார மக்கள்தொகை (எஸ்.இ.சி.சி.) கணக்கெடுப்பின் மூலம் அடையாளம் காணப்பட்டு, கடுமையான செயல்முறை மூலமே பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகின்றனர்.
இந்திரா ஆவாஸ் யோஜனா திட்டம்
* இந்திரா ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ், 1 முதல் 4 ஆண்டு இடைவெளியில் நிலுவையில் இருக்கும் 36 லட்சம் வீடுகளின் கட்டுமான பணிகளை முடிக்கவேண்டும் என்பதாகும். மாநிலங்களில் இருந்து பெறப்பட்ட அறிக்கையின்படி, 2016-17-ஆம் ஆண்டில் மொத்தம் 32.14 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
* மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், கர்நாடகா, அசாம் போன்ற மாநிலங்கள் பி.எம்.ஏ.ஏ.ஜி.திட்டத்தின் செயல்பாட்டில் முன்னணியில் உள்ளன. பீகார், மேற்குவங்காளம், உத்தரப் பிரதேசம்,மத்தியப்பிரதேசம், அசாம், ஜார்க்கண்ட்,ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்கள், முடிவடையாமல் இருந்த ஏராளமான இந்திரா ஆவாஸ் யோஜனா வீடுகளை நிறைவு செய்துள்ளன.
* 2017-18-ஆம் ஆண்டில் 51 லட்சம் வீடுகளை நிறைவு செய்ய ஊரக வளர்ச்சித் துறைதிட்டமிட்டுள்ளது. கூடுதலாக 33 லட்சம் வீடுகள் விரைவில் 2017-18-இல் அனுமதிக்கப்படும். இதேபோன்ற எண்ணிக்கையிலான வீடுகளை 2018-19-ஆம் ஆண்டில் முடிக்கவும், 2016-19 காலகட்டத்தில் 1.35 கோடி வீடுகளை கட்டி முடிக்கப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது 2022-க்குள் வீட்டுவசதிக்கான வழிவகுக்கும்.
சான்சாத் ஆதர்ஷ் கிராம் யோஜனா (எஸ்.ஏ.ஜி.ஒய்.)
* சான்சாத் ஆதர்ஷ் கிராம் யோஜனா (எஸ்.ஏ.ஜி.ஒய்.) என்று அழைக்கப்படும் மற்றொரு முக்கிய திட்டம், தேசப் பிதாவான மகாத்மா காந்தியின் பரந்த மற்றும் இயற்கை உணவு தொலைநோக்கு பார்வையை ஊரக வளர்ச்சியில் யதார்த்தத்தில் கொண்டு வரும் முயற்சியாகும். இந்த திட்டத்தின் குறிக்கோள், புதுமை மூலம் மாடல் கிராமங்களை உருவாக்குவதோடு அண்டை கிராம பஞ்சாயத்துகளை ஊக்குவிப்பதும் ஆகும். 2019-ஆம்ஆண்டு மார்ச் மாதத்திற்குள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் 3 ஆதர்ஷ் கிராம பஞ்சாயத்துகளையும், 2016-இல், ஒரு ஆதர்ஷ் கிராம பஞ்சாயத்தையும், 2019-ஆம் ஆண்டுக்குள் மேலும் 2 ஆதர்ஷ் கிராம பஞ்சாயத்துக்களையும் உருவாக்க வேண்டும். அதன் பிறகு, 2024-ஆம் ஆண்டுக்குள், 5 ஆதர்ஷ் கிராமங்கள் (வருடத்திற்கு ஒன்று என்ற ரீதியில்) உருவாக்கப்பட வேண்டும்.
* ஒரு கிராம பஞ்சாயத்தின் அடிப்படை அலகானது, வெற்று பகுதிகளில்மக்கள்தொகை 3000 முதல் 5000 என்ற அளவிலும், பழங்குடி, கடினமான மற்றும் மலைப்பகுதிகளில் 1000 முதல் 3000 என்ற அளவிலும் இருக்க வேண்டும். எம்பிக்கள், ஆதர்ஷ் கிராமங்களாக மேம்படுத்த உள்ள கிராமங்களை சுதந்திரமாக தேர்வு செய்து கொள்ளலாம். அது அவர்களின் சொந்த கிராமமாகவும், மனைவி அல்லது கணவரின் சொந்த கிராமமாக கூட இருக்கலாம். இத்திட்டத்தின் கீழ், கிராமங்களின் ஒட்டுமொத்த வளர்ச்சியும் ஏற்றுக் கொள்ளப்படும்.
பிரதமரின் ஜன் தன் திட்டம்
* பிரதமரின் ஜன் தன் திட்டம். பொருளாதார ரீதியில் நலிவடைந்த பிரிவினருக்கும் வங்கிக் கணக்கு வசதி கிடைப்பதை உறுதி செய்வதன் மூலம் நிதி தீண்டாமைக்கு முடிவு கட்டும் மிகவும் குறிப்பிடத்தக்க திட்டம் இது.
* சமூகப் பாதுகாப்பு வரம்பை விரிவாக்குதல். பிரதமரின் சுரக்சா பீமா திட்டம்(விபத்துக் காப்பீடு), அட்டல்ஓய்வூதியத் திட்டம் (அமைப்புசாரா தொழிலாளர்களுக்கானது) மற்றும் பிரதமரின் ஜீவன்ஜோதி திட்டம் (ஆயுள்காப்பீடு)ஆகியவை மூலம் இது எட்டப்படுகிறது. சமூகத்தில்விளிம்புநிலையில் உள்ள மக்களுக்கு சமூக மற்றும் பொருளாதார பாதுகாப்பை இந்தத் திட்டங்கள்அளிக்கின்றன.
முத்ரா வங்கி
* இரண்டாம் நிலை தொழில்முனைவோருக்கு நிறுவன ஆதரவு. முத்ரா வங்கி மூலம் இது எட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவின் கிராமப்புற தொழில்முனைவோருக்கு நுண்கடன் அளிக்கப்படுகிறது. விளிம்புநிலை சமுதாயங்களில் இருந்து வரக்கூடிய தொழில்முனைவோருக்கு ஆதரவு அளிப்பதற்காக நஈ/நப தொழில்முனைவோருக்கான தேசிய மையம் தொடங்கப் பட்டுள்ளது.
* 2015 - 16 நிதியாண்டுக்கான முத்ரா கடன் மைக்ரோ யூனிட்களுக்கு அனுமதி அளிக்கப் பட்ட முத்ரா கடன்கள் எண்ணிக்கை- 3,48, 80,924 (3.48 கோடி)
அனுமதிக்கப்பட்ட தொகை : ரூ. 1, 37,449 கோடி
வழங்கப்பட்ட தொகை : ரூ. 1, 32,954 கோடி
அட்டவணை வகுப்பினர் தொழில் முனைவோருக்கான பங்கு முதலீட்டு நிதி ய் அட்டவணை வகுப்பினர் தொழில்முனை வோருக்கான பங்கு முதலீட்டு நிதி'. அட்டவணை வகுப்பினர்களில் தொழில்முனைவோரை ஊக்குவித்து, சலுகைகளுடன் அவர்களுக்கு நிதி கிடைக்கச் செய்வது இந்தத் திட்டத்தின் நோக்கம். இந்தத் திட்டத்தை இந்திய தொழில் நிதிகார்ப்பரேசன் (ஒஎஈஒ) அமல்படுத்தும். இதற்காக ரூ.200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
அட்டவணை வகுப்பினருக்கு கடன் மேம்பாட்டு உத்தரவாதத் திட்டம் :
* அட்டவணை வகுப்பினர்களுக்கு கடன் மேம்பாட்டு உத்தரவாதத் திட்டம் ஆதிதிராவிடர்களில் தொழில் முனைவோரை ஊக்குவித்து, சலுகை களுடன் அவர்களுக்கு நிதி கிடைக்கச் செய்வது இந்தத் திட்டத்தின் நோக்கம். இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக ஒஎஈஒ-க்கு ரூ.200 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஸ்வச்டா உத்யாமி திட்டம் :
* பிரதமரால் 2 அக்டோபர் 2014-இல் தொடங்கப்பட்ட "தூய்மையான பாரதம் திட்டத்தின்' இணைந்த திட்டம் இது. தேசிய சபாய் கர்மாச்சாரி நிதி & மேம்பாட்டு கார்ப்பரேசன் (சநஎஉஈ), ஷஸ்வச்டா உத்யாமி திட்டம்' என்ற புதிய திட்டத்தை தொடங்கியுள்ளது. சமுதாய கழிப்பறைத் திட்டங்களுக்கும், குப்பைகளை சேகரிப்பதற்கு கழிவு அகற்றுதல் தொடர்பான வாகனங்களுக்கும் தேவையான நிதி அளிப்பதற்காக இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது.
பசுமை தொழில் திட்டம் :
* அட்டவணை வகுப்பினர் மற்றும் துப்புரவு பணியாளர்களின் நீடித்த வாழ்வுநிலை மேம்பாட்டுக்கு ஆதரவு அளிப்பதற்கு பசுமை தொழிலை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் சநஎஉஈ-ஆல் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. பருவநிலை மாற்றத் தின் சவால்களை எதிர்கொள்ளக் கூடிய இ-ஆட்டோ ரிக்சா, சூரியசக்தி பம்புகள் மற்றும் சூரிய சக்தியால் செயல்படும் இதர உபகரணங்கள் போன்ற பொருளாதார செயல்பாடுகளுக்கு நிதி உதவிகள் அளிக்கப்படும்.
சானிட்டரி மார்ட் திட்டம் :
* 2014-15-இல் தொடங்கப்பட்டது. கழிப்பறைகள்/உயிரி-சிதைவுறு கழிவறைகள் கட்டுவதற்காக துப்புரவு பணியாளர்களுக்கு ரூ. 15 லட்சம் வரையில் இத்திட்டத்தில் கடன்கள் அளிக்கப்படும்.
ஸ்டாண்ட் அப் இந்தியா
* ஸ்டாண்ட் அப் இந்தியா - சமூகத்தில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள குழுக்களில் தொழில்நுனைவோர் சிந்தனையை ஊக்குவிப்பதற்காக சமீபத்தில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. அட்டவணை வகுப்பினர், பழங்குடியினர் மற்றும் பெண்கள் இதில் இலக்கான குழுக்களாக உள்ளன. இந்தத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பொதுத் துறை வங்கிக் கிளையும் பெண் மற்றும் நஈ/நப பிரிவில் ஒரு தொழில் முனைவோருக்கு கடன் வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.