மத்திய கலாச்சாரம்
- மத்திய கலாச்சார அமைச்சகம், நாட்டின் வளமிக்க கலை, கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கு உறுதிபூண்டுள்ளது.
- மகாத்மா காந்தியடிகளின் 150-வது பிறந்த ஆண்டு கொண்டாட்டம், கும்பமேளாவில் கலாச்சாரக் கும்பவிழா எனப்படும் 29 நாள் விழா, 10-வது தேசிய கலாச்சாரப் பெருவிழா, ஆசாத் ஹிந்த் எனப்படும் சுதந்திர இந்திய அரசு அமைக்கப்பட்டதன் 76-வது ஆண்டு நினைவு நிகழ்ச்சி, மகாராஷ்டிராவில் மாரக்கண்டேஸ்வரர் கோவிலின் கலைநயமிக்க கட்டடக்கலை மீட்புப்பணி, ஒரே பாரதம் உன்னத பாரதம் தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை.
- பிரயாக்ராஜ் கும்பமேளாவின்போது, 29 நாள் கலாச்சாரக் கும்ப விழா.
- பிரதமர் பெற்ற பரிசுகளின் ஏலம் 2 தொகுதிகளாக நடைபெற்றது. ஏலத்தில் கிடைத்த தொகை முழுவதும் நமாமி கங்கா திட்டத்திற்கு அளிக்கப்பட்டது.
- கும்பமேளா குறித்து சிறப்பு
- தபால்தலையை ரயில்வே மற்றும் தொலைத்தொடர்புத் துறை இணையமைச்சர் மனோஜ் சின்ஹா, 2019 பிப்ரவரி 2-ஆம் தேதி வெளியிட்டார். 5 ரூபாய் மதிப்புள்ள சிறப்பு தபால் உறையும் வெளியிடப் பட்டது.
- வாரணாசியில் தசாஸ்வமேத் துறைக்கு அருகே, கங்கை நதிக்கரையில் அமைந் துள்ள மான்-மஹாலில் இந்திய தொல்லியல் ஆய்வு நிறுவனம் அமைத்துள்ள, மத்திய அரசு பாதுகாப்புக்கு உட்பட்ட நினைவுச் சின்னத்தில், மெய்நிகர் அனுபவ அருங்காட்சியகத்தை பிரதமர் தொடங்கி வைத்தார். தேசிய அறிவியல் அருங்காட்சியக சபை, இதனை உருவாக்கியுள்ளது.
- தேசிய அறிவியல் அருங்காட்சியக சபை, கூகுள் கலை மற்றும் கலாச்சாரப் பிரிவுடன் ஒரு காலத்தில் ஒரு முயற்சி என்ற ஆன்லைன் கண்காட்சியில் ஒத்துழைக்க முடிவு செய்துள்ளது.
- இந்திய சுதந்திரப் போராட்ட தியாகிகளின் அகராதியை பிரதமர் புதுதில்லியில் லோக் கல்யாண் மார்க் என்ற இடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 2019 மார்ச் 7-ஆம் தேதி வெளியிட்டார்.
- நொய்டாவில் புதிதாக அமைக்கப் பட்டுள்ள பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா கட்டடக் கலை நிறுவனத்தை பிரதமர் நரேந்திர மோடி 2019 மார்ச் 9-ஆம் தேதி தொடங்கி வைத்தார்.
- அமர்நாத் யாத்திரை செல்லும் வழியில், பல்ட்டால் என்னுமிடத்தில் 103.7 மெகாஹெட்ஸ் அலைவரிசை யில் பண்பலை வானொலி டிரான்ஸ் மிட்டரை கலாச்சார அமைச்சகத்தின் வேண்டுகோளின்பேரில், முதல்முறையாக தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் அமைத்துள்ளது.
- ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூர் நகரத்தை உலகப் பாரம்பரிய இடங்களின் பட்டியலில் சேர்க்க, இந்தியா செய்திருந்த விண்ணப்பம், யுனெஸ்கோ பாரம்பரிய இடங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டது.
- சமீபத்தில் இந்திய தொல்லியல் ஆய்வுத்துறை மகாராஷ்ட்ரா மாநிலம், புப்கோவன் என்ற இடத்தில் நடத்திய அகழ்வாய்வில் விதர்பா பகுதியில் உலோக கால குடியிருப்புகள் இருந்ததற்கான தடயங்கள் கிடைத்துள்ளன. இந்த இடத்தில் அகழ்வாய்வுப் பணிகள் 2018, டிசம்பர் முதல் 2019 மார்ச் வரை நடைபெற்றன.
- காந்தியின் நாட்குறிப்பு (1943-44) ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழக அச்சு நிறுவனத்தின் உதவியுடன் இந்திய தேசிய ஆவணக் காப்பக நிறுவனத் தினால் மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த ஆண்டையொட்டி வெளியிடப் பட்டது. இதற்கான நிகழ்ச்சி புதுதில்லியில் நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்த
மத்திய கலாச்சாரம்
- மத்திய கலாச்சார அமைச்சகம், நாட்டின் வளமிக்க கலை, கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கு உறுதிபூண்டுள்ளது.
- மகாத்மா காந்தியடிகளின் 150-வது பிறந்த ஆண்டு கொண்டாட்டம், கும்பமேளாவில் கலாச்சாரக் கும்பவிழா எனப்படும் 29 நாள் விழா, 10-வது தேசிய கலாச்சாரப் பெருவிழா, ஆசாத் ஹிந்த் எனப்படும் சுதந்திர இந்திய அரசு அமைக்கப்பட்டதன் 76-வது ஆண்டு நினைவு நிகழ்ச்சி, மகாராஷ்டிராவில் மாரக்கண்டேஸ்வரர் கோவிலின் கலைநயமிக்க கட்டடக்கலை மீட்புப்பணி, ஒரே பாரதம் உன்னத பாரதம் தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை.
- பிரயாக்ராஜ் கும்பமேளாவின்போது, 29 நாள் கலாச்சாரக் கும்ப விழா.
- பிரதமர் பெற்ற பரிசுகளின் ஏலம் 2 தொகுதிகளாக நடைபெற்றது. ஏலத்தில் கிடைத்த தொகை முழுவதும் நமாமி கங்கா திட்டத்திற்கு அளிக்கப்பட்டது.
- கும்பமேளா குறித்து சிறப்பு
- தபால்தலையை ரயில்வே மற்றும் தொலைத்தொடர்புத் துறை இணையமைச்சர் மனோஜ் சின்ஹா, 2019 பிப்ரவரி 2-ஆம் தேதி வெளியிட்டார். 5 ரூபாய் மதிப்புள்ள சிறப்பு தபால் உறையும் வெளியிடப் பட்டது.
- வாரணாசியில் தசாஸ்வமேத் துறைக்கு அருகே, கங்கை நதிக்கரையில் அமைந் துள்ள மான்-மஹாலில் இந்திய தொல்லியல் ஆய்வு நிறுவனம் அமைத்துள்ள, மத்திய அரசு பாதுகாப்புக்கு உட்பட்ட நினைவுச் சின்னத்தில், மெய்நிகர் அனுபவ அருங்காட்சியகத்தை பிரதமர் தொடங்கி வைத்தார். தேசிய அறிவியல் அருங்காட்சியக சபை, இதனை உருவாக்கியுள்ளது.
- தேசிய அறிவியல் அருங்காட்சியக சபை, கூகுள் கலை மற்றும் கலாச்சாரப் பிரிவுடன் ஒரு காலத்தில் ஒரு முயற்சி என்ற ஆன்லைன் கண்காட்சியில் ஒத்துழைக்க முடிவு செய்துள்ளது.
- இந்திய சுதந்திரப் போராட்ட தியாகிகளின் அகராதியை பிரதமர் புதுதில்லியில் லோக் கல்யாண் மார்க் என்ற இடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 2019 மார்ச் 7-ஆம் தேதி வெளியிட்டார்.
- நொய்டாவில் புதிதாக அமைக்கப் பட்டுள்ள பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா கட்டடக் கலை நிறுவனத்தை பிரதமர் நரேந்திர மோடி 2019 மார்ச் 9-ஆம் தேதி தொடங்கி வைத்தார்.
- அமர்நாத் யாத்திரை செல்லும் வழியில், பல்ட்டால் என்னுமிடத்தில் 103.7 மெகாஹெட்ஸ் அலைவரிசை யில் பண்பலை வானொலி டிரான்ஸ் மிட்டரை கலாச்சார அமைச்சகத்தின் வேண்டுகோளின்பேரில், முதல்முறையாக தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் அமைத்துள்ளது.
- ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூர் நகரத்தை உலகப் பாரம்பரிய இடங்களின் பட்டியலில் சேர்க்க, இந்தியா செய்திருந்த விண்ணப்பம், யுனெஸ்கோ பாரம்பரிய இடங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டது.
- சமீபத்தில் இந்திய தொல்லியல் ஆய்வுத்துறை மகாராஷ்ட்ரா மாநிலம், புப்கோவன் என்ற இடத்தில் நடத்திய அகழ்வாய்வில் விதர்பா பகுதியில் உலோக கால குடியிருப்புகள் இருந்ததற்கான தடயங்கள் கிடைத்துள்ளன. இந்த இடத்தில் அகழ்வாய்வுப் பணிகள் 2018, டிசம்பர் முதல் 2019 மார்ச் வரை நடைபெற்றன.
- காந்தியின் நாட்குறிப்பு (1943-44) ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழக அச்சு நிறுவனத்தின் உதவியுடன் இந்திய தேசிய ஆவணக் காப்பக நிறுவனத் தினால் மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த ஆண்டையொட்டி வெளியிடப் பட்டது. இதற்கான நிகழ்ச்சி புதுதில்லியில் நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தில் நடைபெற்றது.
- மத்தியப்பிரதேசத்தில் 10-வது தேசிய கலாச்சாரப் பெருவிழாவை, பிரதமர் 2019 அக்டோபர் மாதம் தொடங்கி வைத்தார்.
- ஜாலியன் வாலாபாக் தேசிய நினைவுச்சின்ன திருத்தச் சட்டம் 2019 நாடாளுமன்றத்தில் நிறைவேறியது.
- நேதாஜி சுபாஷ்சந்திர போஸ் மற்றும் அவரது ஆஸாத் ஹிந்த் ஃபவுஜ் இயக்கம் குறித்த அனைத்து ஆவணங் களும் ரகசியப் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டு, இந்திய தேசிய ஆவணக் காப்பகத்தில் பொதுமக்கள் பார்வைக் காக வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு வைக்கப்பட்டுள்ள 304 ஆவணங்கள்/ கோப்புகளில் 303 ஏற்கனவே நேதாஜி வலைதளமான www.netajipapers.gov.in என்பதில் பதிவேற்றம் செய்யப் பட்டுள்ளது.
- ஜாலியன் வாலாபாக் மண்ணைக் கொண்ட கலசம் தேசிய அருங்காட்சி யகத்தில் உயிர்நீத்த தியாகிகளின் மண் என்ற பெயரில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
- ஆயுஷ் அமைச்சகம்
- ஆயுஷ் அமைச்சகம் தொடங்கப்பட்டு ஐந்தாண்டுகள் ஆகும் நிலையில், மாற்று மருத்துவ முறையை பிரபலப்படுத்துவதிலும், வலுவான மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய மருத்துவக் கட்டமைப்பை உருவாக்கும் வகையிலும் அது செயல்பட்டு வருகிறது.
- 2019 ஆம் ஆண்டு முழுவதும் ஆயுஷ் மருத்துவ முறைகளை முக்கிய மருத்துவ முறையாக்க தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, இதில் குறிப்பிடத்தக்க வெற்றியும் எட்டப்பட்டுள்ளது.
- ஆயுஷ் சுகாதார சேவைகள் எளிதில் கிடைக்கச் செய்தல், ஆயுஷ் ஆராய்ச்சி களை ஊக்குவித்தல், ஆயுஷ் கல்வி, ஆயுஷ் மருந்துகள் மற்றும் அது சார்ந்த அம்சங்கள், விழிப்புணர்வு ஏற்படுத்துதல், ஆயுஷ் மருத்துவ முறையை உலகமயமாக்கல் மற்றும் ஆயுஷ் துறையில் தகவல் தொழில்நுட்பத்தை புகுத்துதல் ஆகிய 7 பெரும் அம்சங்களில் வெற்றி காணப்பட்டுள்ளது.
- ஆயுஷ் சுகாதார சேவைகளை மேம்படுத்த, தேசிய ஆயுஷ் இயக்கம் எனப்படும் மத்திய அரசு உதவியுடன் கூடிய திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஆயுஷ் துறையின் வளர்ச்சிக்கு மாநில / யூனியன் பிரதேச அரசுகள் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு இந்த திட்டம் உறுதுணை யாக உள்ளது.
- பிரதமரின் ஜன் ஆரோக்கியா திட்டத்தின்கீழ், ஆயுஷ் மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களை சேர்ப்பதற்கு, 19 ஆயுர்வேத, சித்தா & யுனானி மற்றும் 14 யோகா & இயற்கை முறை சிகிச்சை தொகுப்புகள் தேசிய சுகாதார ஆணையத்திற்கு பரிந்துரைக்கப் பட்டுள்ளது.
- இமயமலை பிராந்தியத்தின் பாரம்பரிய மருத்துவ முறையாக கருதப்படும், சோவா-ரிக்பா முறையை மீண்டும் அறிமுகப்படுத்தும் நடவடிக்கையின் முக்கிய அம்சமாக, லே பகுதியில் சோவா-ரிக்பா தேசிய நிறுவனத்தை அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
- நிடி ஆயோக் மற்றும் இந்தியாவில் முதலீடு (ஆஏசஒ) ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் ஒருங்கிணைந்த சுகாதார ஆராய்ச்சி (நஒஐத) திட்டம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு இரண்டாண்டுகளில் ரூ.490 கோடி செலவிடப்படவுள்ளது.
- வளர்ச்சி மற்றும் நவீனமயமாக்கல் திட்டத்துடன் இணைந்து ஆயுஷ் கல்வி முறை ஊக்குவிக்கப்பட்டது. ஆயுர்வேதா, யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி மருத்துவ கல்வி நிலையங்களில் சேர்ந்து இளநிலை பட்டப்படிப்புகளை படிக்க, தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (சஊஊப) அறிமுகப்படுத்தப்பட்டது.
- சென்னையில் உள்ள தேசிய சித்த மருத்துவ நிறுவனம் (சஒந), பண்டைக்கால பாரம்பரிய முறையான வர்மக் கலையை உயிர்ப்பித்து அதனை மேம்படுத்து வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
- மும்பையைச் சேர்ந்த அமர் சித்ர கதா பதிப்பகத்துடன் இணைந்து, புரஃபசர் ஆயுஷ்மான்: மருத்துவ தாவரங்கள் & மருத்துவ குணங்கள் குறித்த குழந்தைகளுக்கான காமிக் புத்தகம் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.
- ஆயுர்வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்திற்கான பிம்ஸ்டெக் பல்கலைக்கழகம் ஒன்றை இந்தியாவில் ஏற்படுத்தவும், பிம்ஸ்டெக் நாடுகள் ஒப்புக் கொண்டுள்ளன.
- பொதுமக்கள் தங்களது வசிப்பிடங் களுக்கு அருகில் உள்ள யோகா பயிற்சி மையத்தை கண்டறிய ஏதுவாக, யோகா லொகேட்டர் என்ற செல்போன் செயலியும் தொடங்கப்பட்டுள்ளது.
- பெருந்தொழில்கள் அமைச்சகம்
- இந்தியப் பொருளாதாரத்தின் முக்கிய சக்திகளில் ஒன்றாக ஆட்டோமொபைல் தொழில் உள்ளது. தற்போது உலகில் உள்ள பெரும்பாலான ஆட்டோ மொபைல் தொழில் துறையினர் இந்தியாவில் உள்ளனர்.
- இரண்டு சக்கர, மூன்று சக்கர வண்டிகள், பயணியர் பேருந்துகள், இலகு ரக வணிக வாகனங்கள், டிரக்குகள், டிராக்டர்கள், கனரக வணிக வாகனங்கள் போன்ற அனைத்து வகையான வாகனங்களும் நாட்டில் தயாரிக்கப் படுகின்றன.
- தற்போது இந்தியா காற்று மாசு நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. உலகில் மிகவும் மாசுபாடுள்ள 20 நகரங்களில் 14 இந்தியாவில் உள்ளன. இந்த சவால்களை சந்திக்க அரசின் பல்வேறு துறைகள் உத்திகளை வகுத்துள்ளன. பிஎஸ்-4 லிருந்து பிஎஸ்-6 க்கு நேரடியாக செல்லுதல், கனரக வர்த்தக வாகனங்களில் எரிபொருள் சிக்கனத்திற்கான வழிகள் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
- ஃபேம் இந்தியா திட்டத்தின் அனுபவ அடிப்படையில், இரண்டாம் கட்ட திட்டம் மத்திய அமைச்சரவை ஒப்புதலுடன் 2019 மார்ச் 8 அன்று அறிவிக்கை செய்யப்பட்டது.
- பேட்டரியால் இயங்கும் வர்த்தக வாகனங் களுக்குப் பர்மிட் பெறுவதில் இலக்கு அளிப்பது தொடர்பான அறிவிக்கையை மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
- மின்சார வாகனங்களுக்கான பாகங்கள் உற்பத்தியை உள்நாட்டில் அதிகரிக்க சுங்கத் தீர்வையை நிதியமைச்சகம் மாற்றியமைத்துள்ளது.
- நீர்வளத்துறை அமைச்சகம்
- தேசிய கங்கைக்குழுவின் முதலாவது கூட்டம், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் டிசம்பர் 14-ஆம் தேதியன்று நடைபெற்றது.
- கங்கை மற்றும் அதன் கிளை நதிகளைப் புனரமைத்தல் மாசு தடுப்பு ஆகியவற்றைக் கண்காணிக்கும் ஒட்டுமொத்த பொறுப்பு இந்தக்குழுவுக்கு வழங்கப்பட்டது.
- நீர்வள மேம்பாட்டுத் திட்டம்:
- இந்தியாவில் தண்ணீர்ப் பற்றாக்குறை உள்ள வட்டங்கள் மற்றும் மாவட்டங் களில் நீர் சேமிப்புக்கான செயல்பாடு களின் முன்னேற்றத்தை வேகப்படுத்த மத்திய மாநில அரசுகள் கலந்தாய்வு செய்வதே நீர்வள மேம்பாட்டுத் திட்டமாகும்.
- நீர் சேமிப்புக்கான நீர்வள திட்டம் தொடக்கம்:
- மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் ஜூலை ஒன்றாம் தேதி நீர்வள மேம்பாட்டுத் திட்ட முகாம் தொடங்கப்பட்டிருப்பதை அறிவித்தார். நீர் சேமிப்புத் திட்டம், நீர் பாதுகாப்புக்கான முகாமாகும் நாடு முழுவதும் மிகவும் தண்ணீர் பற்றாக்குறை உள்ள 256 மாவட்டங்களுக்கு மத்திய அரசின் 1,100 அலுவலர்கள் கள ஆய்வுக்காக சென்றிருந்ததைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் மேற்கொண்ட இரண்டாவது பயணமாகும்.
- தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு
- தொழிலாளர் ஒவ்வொருவரின் பாதுகாப்பு, பந்தோபஸ்து, சுகாதாரம், சமூகப் பாதுகாப்பு ஆகியவற்றை வலுப்படுத்துதல், வேலைவாய்ப்புகள் அதிகரிப்பதை ஊக்கப்படுத்தி தொழில்நிறுவனங்களில் சுமூகமான செயல்பாட்டைக் கொண்டுவருதல் எனும் நோக்கத்துடன் தொழிலாளர் நலச் சட்டங்களில் திருத்தங்கள் மற்றும் அமலாக்கத்தில் வெளிப்படைத் தன்மையைக் கொண்டுவர பல நடவடிக்கைகளை தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் மேற்கொண்டுள்ளது.
- தொழிலாளர் நலச் சட்ட சீர்திருத்தங்கள்:
- ஊதியங்கள் குறித்த தொழிலாளர் சட்டம்: குறைந்தபட்ச ஊதியச் சட்டம் 1948, ஊதியம் வழங்கல் சட்டம் 1936, போனஸ் வழங்கல் சட்டம் 1965, சமஊதியச் சட்டம் 1976 ஆகியவை இணைக்கப்பட்டு, ஊதியங்கள் சட்டம் 2019 கொண்டுவரப்பட்டது. இது நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரால் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
- தொழிற்சங்கச் சட்டம் 1926, தொழில்துறை வேலைவாய்ப்பு (நிலை ஆணைகள்) சட்டம் 1946, தொழில் தகராறுகள் சட்டம் 1947 ஆகியவை இணைக்கப்பட்டு, தொழிலுறவுகள் திருத்தச் சட்ட மசோதா உருவாக்கப்பட்டது.
- தொழிலாளர் இழப்பீட்டுச் சட்டம் 1923, பேறு கால பயன் சட்டம் 1961, பணிக்கொடை வழங்குதல் சட்டம் 1972, முறைசாரா தொழிலாளர்கள் சமூகப்பாதுகாப்புச் சட்டம் 2008 உள்ளிட்ட 9 சட்டங்கள் இணைக்கப் பட்டு, சமூகப் பாதுகாப்பு சட்ட மசோதா உருவாக்கப்பட்டது. இது 2019 டிசம்பர் 11 அன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
- தொழிற்சாலைகள் சட்டம் 1948, தோட்டத் தொழிலாளர் சட்டம் 1951, சுரங்கங்கள் சட்டம் 1952, கட்டிடங்கள் மற்றும் பிற கட்டுமானத் தொழிலாளர்கள் (வேலைவாய்ப்பை முறைப்படுத்துதல் மற்றும் சேவை நிலைமைகள்) சட்டம் 1996 உள்ளிட்ட 13 தொழிலாளர் சட்டங்கள் இணைக்கப் பட்டு, பணியிடத்தில் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணிநிலைமைகள் குறித்த தொழிலாளர் சட்ட மசோதா உருவாக்கப்பட்டது. இது 23.07.2019 அன்று மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டது.
- ஷ்ரம் சுவிதா இணையப்பக்கம் மூலம் மாநிலங்களை ஒருங்கிணைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
- 2024-ஆம் ஆண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்குடன் இந்தியப் பொருளாதாரம் உலகிலேயே முன்னணி பொருளாதார நாடுகளில் ஒன்றாக உருவாக உள்ளது.
- நாடு முழுவதும் மாவட்ட உதயம் சமாகம்ஸ் திட்டமிடப்பட்டு 731 மாவட்டங்களில் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
- யு.கே.சின்ஹா தலைமையின் கீழ் இந்திய ரிசர்வ் வங்கியின் நிபுணர் குழு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு 37 பரிந்துரைகளை செய்திருந்தது.
- ரயில்வே துறை
- இதுவரை இல்லாத வகையில் மூலதனச் செலவு: 2019-20 பட்ஜெட் மதிப்பீட்டில் ரூ.1,60,176 கோடி 2030 வரை ரூ.50 லட்சம் கோடி முதலீடு செய்ய திட்டமிடப்பட்டு, 2019 நிதிநிலை அறிக்கையில், ரயில்வேத் துறையை நாட்டின் வளர்ச்சிக்கான எந்திரமாக மாற்ற வழிவகை காணப்பட்டுள்ளது.
- பயணிகள் ரயில்களின் சராசரி வேகம் 60% வரை அதிகரிப்பு ராஜ்தானி ரயில் பயணம் ஒரே இரவு கொண்டதாக மாற்றப்பட்டுள்ளது பசுமை மின்மயமாக்கப்பட்ட ரயில் பாதை சுற்றுச்சூழல் மேலாண்மை முறைகளை கடைபிடித்ததற்காக, நடப்பாண்டில் 85 ரயில் நிலையங்களுக்கு ஐஎஸ்ஓ:14001 சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
- ஐஆர்சிடிசியின் சமையல் பிரிவுகளை சிசிடிவி மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யும் வசதி, 18 சமையல் பிரிவுகளிலிருந்து (மே 2019) 40 சமையல் பிரிவுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
- இந்திய ரயில்வே 44 வந்தே பாரத் ரயில்களை தயாரிக்க உள்ளது.
- இந்திய ரயில்வே அல்லாமல், ஐஆர்சிடிசி-யால் இயக்கப்படும் முதலாவது தேஜஸ் ரயில், தில்லி-லக்னோ இடையே இயக்கப்படுகிறது.
- 2-வது வந்தேபாரத் எக்ஸ்பிரஸ், புதுதில்லி - கத்ரா இடையே வழக்கமான சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
- உலகிலேயே மிக அதிக அளவில் பணியாளர்களை வேலைக்கு அமர்த்திய நிறுவனங்களில் ஒன்றாக இந்திய ரயில்வே உருவெடுத்துள்ளது.
- உதவி லோகோ பைலட்டுகள் & டெக்னீஷியன் பதவிகளுக்கான 64,000 இடங்களுக்கு இதுவரை இல்லாத வகையில் 47.45 லட்சம் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித் துள்ளனர்.
- நிலை 1(முந்தைய குருப்-டி) பணியில் காலியாக உள்ள 63,000 இடங்களுக்கு சுமார் 1.17 கோடி விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுதினர்.
- 13,500 இளநிலை பொறியாளர் பதவிகளுக்கு சுமார் 24.75 லட்சம் விண்ணப்பதாரர்கள் விண்ணப் பித்தனர்.
- கப்பல் துறை
- கப்பல் துறையின் ஒட்டுமொத்த வளர்ச்சியை விரைவுபடுத்தும் நோக்கில், 2019-ஆம் ஆண்டில், பல்வேறு முன்னேற்றகரமான கொள்கை களை புகுத்திய மத்திய அரசு, புதிய முன்முயற்சிகளையும் மேற்கொண்டது.
- வரலாற்றுச் சிறப்புமிக்க கப்பல் மறுசுழற்சிச் சட்டம் 2019 நிறைவேற்றப் பட்டது.
- கடல் சிப்பந்திகளுக்கான பயோ-மெட்ரிக் அடையாள ஆவணம் கடல் சிப்பந்தி களுக்கு, அவர்களது முகப்பதிவுடன் கூடிய பயோமெட்ரிக் அடையாள ஆவணம் வழங்கிய உலகின் முதல் நாடாக இந்தியா மாறியுள்ளது. நம்நாட்டு கடல் சிப்பந்திகள், பல்வேறு நாடுகளை கடந்து செல்லும் போது, அவர்களுக்கு, பாதுகாப்பான அடையாள ஆவணமாக இந்த புதிய ஆவணம் திகழும்.
- சாகர்மாலா திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில், தீன்தயாள் உபாத்யாயா கிராமின் கவுசல் யோஜனா திட்டம், துறைமுக மற்றும் கடல்சார் பணிகளுக் கான திறன் மேம்பாட்டு திட்டமாக மாற்றப் பட்டு, குஜராத், மகாராஷ்டிரா, கேரளா, ஆந்திரா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் தொடங்கப் பட்டுள்ளது.
- ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் சாகிப்கஞ்ச் பல்வகை போக்குவரத்து முனையத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டிற்கு அர்ப்பணித்து வைத்தார்.
- தமிழ்நாடு, கேரளா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் பிரத்யேக பயிற்சி மையங் களும் அமைக்கப்பட்டுள்ளன. கடல்சார் போக்குவரத்துக்கான பல்திறன் மேம்பாட்டு மையம் ஒன்று ஜவஹர்லால் நேரு துறைமுகத்தில் 2019-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
- முதலாவது பிம்ஸ்டெக் துறைமுகங்கள் மாநாடு, 2019-இல் இந்தியாவில் நடைபெற்றது.
- சாகர்மாலா திட்டத்தில் கடலோர கப்பல் போக்குவரத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படுவதால், கடலோர கப்பல் போக்குவரத்தை மேம்படுத்த, கப்பல் துறை பல்வேறு முன்முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
- சர்வதேச கடல்சார் அமைப்பான ஐஎம்ஓ-வின் பி-பிரிவு உறுப்பினராக இந்தியா மீண்டும் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது.