மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனை கூட்டத்தை தொடங் கினார். தனது முதலாவது கூட்டத்தில் வேளாண் துறையைச் சேர்ந்த பிரதிநிதி கள் மற்றும் கிராமப்புற மேம்பாட்டுத் துறையைச் சேர்ந்தவர்களுடன் அவர் விரிவாக ஆலோசனை நடத்தினார்.
இந்தக் கூட்டத்தில் பேசிய நிர்மலா சீதாராமன், பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதோடு கிராமப்புறங்களில் சமூகக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதன் மூலம் வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிக்க முடியும் என்றார்.
வேளாண்மை துறை
குறிப்பாக வேளாண் அல்லாத பிற துறைகளையும் ஊக்குவிப்பது கிராமப்பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்றார்.
விவசாயம், மீன் வளத்துறை, கடல்சார் வளம் உள்ளிட்ட துறைகளைச் சார்ந்த பிரதிநிதிகளுடன் விவாதித்தார்.
வேளாண் துறையிலும் ஸ்டார்ட் அப்-கள் உருவாவதன் மூலம் சந்தை வாய்ப்புகள் விவசாயத்துறைக்கு பெருகும். மேலும் வேளாண் பொருட்கள் நுகர்வோரிடம் எளிதில் சென்றடையும்.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனை கூட்டத்தை தொடங் கினார். தனது முதலாவது கூட்டத்தில் வேளாண் துறையைச் சேர்ந்த பிரதிநிதி கள் மற்றும் கிராமப்புற மேம்பாட்டுத் துறையைச் சேர்ந்தவர்களுடன் அவர் விரிவாக ஆலோசனை நடத்தினார்.
இந்தக் கூட்டத்தில் பேசிய நிர்மலா சீதாராமன், பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதோடு கிராமப்புறங்களில் சமூகக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதன் மூலம் வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிக்க முடியும் என்றார்.
வேளாண்மை துறை
குறிப்பாக வேளாண் அல்லாத பிற துறைகளையும் ஊக்குவிப்பது கிராமப்பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்றார்.
விவசாயம், மீன் வளத்துறை, கடல்சார் வளம் உள்ளிட்ட துறைகளைச் சார்ந்த பிரதிநிதிகளுடன் விவாதித்தார்.
வேளாண் துறையிலும் ஸ்டார்ட் அப்-கள் உருவாவதன் மூலம் சந்தை வாய்ப்புகள் விவசாயத்துறைக்கு பெருகும். மேலும் வேளாண் பொருட்கள் நுகர்வோரிடம் எளிதில் சென்றடையும். இதற்கென உருவாகும் ஸ்டார்ட் அப்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
சேவைத் துறை, கிராமப்புற மேம்பாடு, வேளாண் அல்லாத பிற துறைகள், தோட்டக்கலைத்துறை, உணவு பதனிடல், கால்நடை வளர்ப்பு, மீன்வளம் மற்றும் விவசாயத்தில் ஸ்டார்ட் அப் குறித்தும் அவர் ஆலோசனை நடத்தினார்.
இந்தக் கூட்டத்தில் மத்திய நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாகுர், நிடி ஆயோக் உறுப்பினர் ரமேஷ் சந்திரா, நிதி செயலர் சுபாஷ் சந்திர கார்க், செலவுகள் துறை செயலர் கிரிஷ் சந்திர முர்மு, வருவாய்த்துறைச் செயலர் அஜய் நாராயண் பாண்டே உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் வேளாண் துறை பிரதிநிதிகள் தங்கள் துறை வளர்ச்சிக்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த பல்வேறு கருத்துகளை அமைச்சரிடம் கூறினர். சூரிய மின்னுற் பத்தி திட்டம் விவசாயிகளுக்கு வருமானம் தரும் திட்டமாக இருக்கும் என்ற ஆலோசனையும் இக்கூட்டத்தில் வழங்கப்பட்டது.
உரமில்லா விவசாயத்தை ஊக்குவிப்பது, ஜிஎஸ்டி பிரச்சினைகளை நீக்குவது, வேளாண் பதனிடும் அமைப்புகளுக்கு வரிச் சலுகை, வேளாண் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மையங்களுக்கான முதலீடுகளை அதிகரிப்பது, நுண்நீர் பாசனம், சூரிய ஆற்றல் மோட்டார் பம்ப், வேளாண் சந்தை சீர்திருத்தம், கைத்தறி மேம்பாடு உள்ளிட்ட விஷயங்களும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.
வங்கி துறை
தொய்வுநிலையில் உள்ள பொருளா தாரத்தை மேம்படுத்துவதற்காக வங்கித் துறையில் செய்யப்பட வேண்டிய அதிரடி மாற்றங்கள் குறித்த அறிவிப்புகளை பட்ஜெட் தாக்கல் அறிக்கையின்போது நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட உள்ளார்.
இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, விஜயா வங்கி மற்றும் தேனா வங்கி ஆகியவை பாங்க் ஆப் பரோடாவுடன் இணைக்கப் பட்டன. இதன் மூலம் ஏப்ரல் 1 முதல் இவ்வங்கி நாட்டின் மிகப்பெரிய மூன்றாவது வங்கியாக உருவெடுத்தது.
சிறிய கடன் வழங்குபவர்களிடமிருந்து கடன்பெறும் பயனாளிகளுக்கு சில மூலதன ஆதரவுடன் பஞ்சாப் நேஷனல் வங்கி, கனரா வங்கி, பாங்க் ஆப் இந்தியா மற்றும் யூனியன் பாங்க் ஆப் இந்தியா ஆகியவை ஆதரவளிக்கும்.
அரசாங்கம் ரூ. 5,042 கோடி முதலீடு வைத்து பாங்க் ஆப் பரோடாவை தொடங்கியது. கூடுதல் செலவை ஈடுகட்டவேண்டுமெனில் வங்கியின் மூலதன அடித்தளத்தை அதிகரிக்க வேண்டும். இதற்காகத்தான் பாங்க் ஆப் பரோடாவுடன் இன்னும் இரண்டு வங்கிகள் தேனா வங்கி மற்றும் விஜயா வங்கி ஆகிய வங்கிகள் இணைக்கப் பட்டன.
இம்முறையை நரசிம்மம் கமிட்டி அறிக்கை 1991-இல் பரிந்துரைத்தது. இந்த இணைப்பு மூலம், அரசாங்கம் உலகளாவிய ஒரு நிறுவனத்தை உருவாக்கியுள்ளது. இதனால் அனைத்து பங்குதாரர்களுக்கு குறிப்பிடத்தக்க நன்மை கிடைக்கும்.
கல்வி மற்றும் வேலைவாய்ப்பு
கல்வித் தரத்தை உயர்த்துவதன் மூலம் சர்வதேச அளவிலான போட்டிகளை சந்திக்கும் திறன்மிக்க மாணவர் சமுதாயம் உருவாகும். வேலைவாய்ப்பு உருவாக்கத்துக்கு புதிய தொழில்களை ஊக்குவிக்க வேண்டிய அவசியம் உள்ளது. அதேசமயம் வேலை இல்லாத திண்டாடத்தை போக்க வேண்டிய கடமையும் அரசுக்கு உள்ளது. இவை அனைத்துக்கும் அரசு முன்னுரிமை அளிக்கும்.
சுகாதாரம்
நோயற்ற சமுதாயத்தை உருவாக்குவதற்கு சுகாதாரத்துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கவும் அரசு தயங்காது என்றார். மேலும் ஒருங்கிணைந்த வளர்ச்சியை எட்ட வேண்டுமெனில் பெண்களுக்கு அதிகாரம், பெண் தொழில் முனைவோர் உருவாக்கம் ஆகியன ஒருங்கிணைந்த சமூக வளர்ச்சிக்கு அடித்தளமிடும்.
எனவே இவற்றில் அரசு தீவிர கவனம் செலுத்தும் என்றார்.
____________
பட்ஜெட் தகவல்கள்
கடந்த 1860-ஆம் வருடம் ஏப்ரல் 7-ஆம் தேதி இந்தியாவில் முதன்முதலில் பட்ஜெட் அறிமுகப்படுத்தப்பட்டது.
சுதந்திர இந்தியாவின் முதல் நிதி அமைச்சராக இருந்தவர் சண்முகம் செட்டி. இவர் 1947 நவம்பர் மாதம் இந்தியாவின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
1955-ஆம் வருடத்தில் இருந்துதான் பட்ஜெட் ஹிந்தியில் அச்சிடப்பட்டது.
பவ்கெட்டி என்னும் பிரெஞ்ச் மொழியில் இருந்தே பட்ஜெட் என்ற வார்த்தை வந்தது.